பக்கங்கள்

25 மார்ச் 2013

தமிழகம் எங்கும் வீசுகிறது தமிழீழ ஆதரவு அலை!

ஏப்ரல் 2ஆம் திகதி திரையுலகம் சார்பில் நடத்தப்படவுள்ள இலங்கை அரசுக்கு எதிரான உண்ணா விரதப் போராட்டத் தில் தமிழ் சினிமா வின் உச்ச நட்சத் திரங்களான கமல், ரஜனி ஆகியோரும் தங்கள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு கலந்து கொள்ளவுள்ளனர். தமிழீழத் தனியரசுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை தமது போராட்டம் ஓயாது என தமிழக மாணவர்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், ஈழத் தமிழருக்கு ஆதரவாக இலங்கை அரசைக் கண்டித்து தென்னிந்தியத் திரையுலகமும் கொதித் தெழுந்துள்ளது. தமிழக மாணவர்கள் தொடர்ந்து முன்னெடுக்கும் ஈழத் தமிழருக்கான போராட்டத்தை ஆதரித்து தமிழக இயக்குநர் சங்கத்தினர், சின்னத்திரையினர் களத்தில் குதித்துள்ள நிலையில், இலங்கை அர_க்கு எதிராக தென்னிந்திய நடிகர் \ங்கமும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2 ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கவுள்ளது. இலங்கை இறுதிக்கட்டப் போரில் விடுதலைப்புலிகளின் இளைய மகன் பாலச்சந்திரன் உயிரோடு பிடிக்கப்பட்டு பின்னர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஒளிப்படங்கள் வெளியாகி உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து தமிழக மாணவர்கள் தமிழருக்கு தனி ஈழம் வேண்டும் என பொங்கியெழுந்து குமுறி வெடித்தனர். சென்னை மாணவர்கள் ஆரம்பித்து வைத்த இந்தப் போராட்டம் இன்று தமிழகத்தையும் தாண்டி புலம்பெயர் தேசமெங்கி காட்டுத் தீ போல் பரவியுள்ளது. நேற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களின் அகிம்சை ரீதியான போராட்டங்கள் தொடர்ந்தன. மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டு இன்று பல்கலைக்கழக விடுதிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டபோதும் அதனை மாணவர் தரப்பு மறுத்துள்ளது. ஈழத் தமிழர்களை கொன்றுகுவித்த இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேசம் உறுதிமொழி வழங்கும்வரை தமது போராட்டம் ஓயாது என்று மாணவர்கள் அறிவித்துள்ளனர். இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அடுத்த கட்டமாக, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக கடந்த வியாழக்கிழமை ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில், அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இந்தியா உள்ளிட்ட பெருவாரியான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது. இதையடுத்து, இலங்கையின் அட்டூழியங்களுக்கு எதிராகத் தமிழ்த் திரையுலகமும் கொதித்தெழுந்திருக்கிறது. தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசைக் கண்டித்து தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் \ங்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி), சின்னத்திரை கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள். இதைத்தொடர்ந்து, இலங்கை அரசுக்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. சென்னை தியாகராயநகர் அபிபுல்லா வீதியில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில், 2 ஆம் திகதி காலை 9 மணி தொடங்கி மாலை 6 மணிவரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற இருக்கிறது. இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட அனைத்து நடிகர் நடிகைகளும் பங்கேற்கிறார்கள். உண்ணாவிரதத்தையொட்டி, அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுகின்றன. வெளியூர்களில் நடைபெறும் படப்பிடிப்புகளையும் இரத்துச் செய்துவிட்டு, சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளும்படி நடிகர்நடிகைகளை நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.