பக்கங்கள்

14 மார்ச் 2013

தமிழினத்திற்கு எதிராக இந்தியாவும் சிறிலங்காவும் கூட்டு ஒப்பந்தம்!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, சிறிலங்காவுடன் ஏற்படுத்தியிருந்த உடன்பாடு ஒன்றை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. பூநகரியை, மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தலைமையிலான சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் கைப்பற்றுவதற்கு சில வாரங்கள் முன்னதாக, இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் சிறிலங்காவுடன் ஏற்படுத்தப்பட்ட இந்த இணக்கப்பாடு, தமிழ்நாட்டுக்கும் சிறிலங்காவின் வடமேற்குப் பகுதிக்கும் இடையிலான விடுதலைப் புலிகளின் வழக்கல் பாதையை துண்டிக்கும் நோக்கத்தைக் கொண்டே ஏற்படுத்தப்பட்டது. இதனடிப்படையில், சிறிலங்கா அரசாங்கத்தினால் குறிப்பிடப்பட்ட பிரதேசங்களுக்குள், தமது நாட்டு மீன்பிடிப் படகுகளை அனுமதிக்கப் போவதில்லை என்று இந்திய அரசாங்கம் சிறிலங்காவுக்கு உறுதியளித்துள்ளது. இந்தத் தகவலை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி இந்திய நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளார். இந்தியாவுடன் சிறிலங்கா ஏற்படுத்திக் கொண்ட இந்த இணக்கப்பாட்டின் மூலம், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் வழங்கல் நடவடிக்கையை சிறிலங்கா கடற்படை துண்டிப்பது இலகுவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.