பக்கங்கள்

19 மார்ச் 2011

மன்னிப்புச்சபையால் ஸ்ரீலங்காவிற்கு பாதிப்பு!

அனைத்துலக மன்னிப்புச்சபை சிறீலங்கா அரசின் நற்பெயரை கெடுத்து வருவதாக அமெரிக்காவுக்கான சிறீலங்கா தூதுவர் ஜாலியா விக்கிரமசூரியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அனைத்துலக மன்னிப்புச்சபையின் அமெரிக்காவுக்கான பிரதிநிதி ஜேம்ஸ் மக்டோனால்ட் இற்கு எழுதிய கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சிறீலங்கா அரசுக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவுகள் தேவைப்படும் சமயத்தில் அதற்கு எதிரான பிரச்சாரங்களை அனைத்துலக மன்னிப்புச்சபை மேற்கொண்டு வருகின்றது.
அனைத்துலக மன்னிப்புச்சபையின் இந்த நடவடிக்கையால் சிறீலங்கா அரசுக்கு பல பாதிப்புக்கள் ஏற்பட்டு வருகின்றது. சிறீலங்கா அரசு அமைத்துள்ள இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் குழுவின் முன் சாட்சியமளிப்பதற்கும் மன்னிப்புச்சபை மறுத்துவிட்டதாக அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.