பக்கங்கள்

15 மார்ச் 2011

ஸ்ரீலங்கா ஊடகங்கள் நேர்மையுடன் செயற்படவேண்டும்!

சிறீலங்கா ஊடகங்கள் பொய்யான செய்திகளை வெளியிடாது நேர்மையுடன் நடத்துகொள்ள வேண்டும் என முன்னாள் அமெரிக்க தூதுவரும், அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக ஹவாட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான நிக்கொலஸ் பேர்ன் தெரிவித்துள்ளார்.
ஹவாட் பல்கலைக்கழத்தில் இடம்பெற்ற கருத்தரங்கை விடுதலைப்புலிகள் தடுத்துள்ளனர் என்ற தலைப்பில் சிறீலங்கா அரச ஆதரவு ஊடகமான த நேசன் வாரஏடு கடந்த 6 அம் நாள் வெளியிட்ட தகவல் குறித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 11 ஆம் நாள் த நேசன் வாரஏட்டுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது:
கடந்த 1 ஆம் நாள் ஹவாட் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற “போரும், சமாதானமும், நல்லிணக்கமும்” என்ற தலைப்பிலான கருத்தரங்கின் தகவல்களை தவறான முறையில் த நேசன் வாரஏடு பிரசுரம் செய்துள்ளது.
வெளியிடப்பட்ட தகவல்களில் பல தவறானவை. ஊடகவியலாளர் எஸ் திஸ்ஸநாயகம் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்ட தகவல் பொய்யானது. அவர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.
பெருமளவான இருக்கைகளை விடுதலைப்புலிகளே நிரப்பியதாக தெரிவிக்கப்பட்ட தகவலும் பொய்யானது. அங்கு விடுதலைப்புலிகளை காணவில்லை. எமது கருத்தரங்கில் பேசப்பட்ட பல விடயங்களை த நேசன் வாஏடு இருட்டடிப்பு செய்துள்ளது என அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.