பக்கங்கள்

02 பிப்ரவரி 2011

கவிஞர் தாமரையின் ஆலோசனைக்கு செந்தமிழன் சீமான் பதில்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். திரைப்பட பாடலாசியர் தாமரை இது குறித்து கடுமையாக விமர்சித்து சீமானுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தாமரையின் இந்த கடிதம் குறித்த கேள்விக்கு சீமான் பதிலளித்தார். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் பிரச்சனைக்காக நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் சீமான் அறந்தாங்கியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ‘’தாமரை தங்களுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் ஜெயலலிதாவை தாங்கள் ஆதரிப்பது பற்றியும், கருணாநிதியை எதிர்ப்பது பற்றியும் விமர்சித்திருக்கிறாரே? என்ற கேள்விக்கு,
‘’ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆலோசனைகள் சொல்வது இயல்பு. மூத்த அரசியல்வாதிகள், அரசியல் சிந்தனையாளர்கள் சொல்வது வழக்கம். அந்த வகையில் சகோதரி தாமரையும் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இன்னும் அந்த கடிதம் என் கைக்கு வந்து கிடைக்கவில்லை. அவர்கள் சொல்லும் கருத்தையெல்லாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் இல்லை. தேவையானதை ஏற்றுக்கொள்ளலாம்’’ என்று பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.