பக்கங்கள்

04 பிப்ரவரி 2011

யாழ்,மாவட்டத்தில் சிறுவர்களின் இன்றைய நிலை!

யாழ் மாவட்டத்தில் 247 சிறுமிகள் கர்ப்பம் அடைந்து உள்ளார்கள். திருமணம் ஆகாமல் 14 சிறுமிகள் சேர்ந்து வாழ்கின்றனர்.
அரச அதிபர் இமேல்டா சுகுமார் யாழ்ப்பாணத்து சிறுவர்கள் நிலை தொடர்பாக கிடைக்கப் பெற்ற பிந்திய புள்ளிவிபரங்களை ஊடகவியலாளர்களுக்கு வெளிப்படுத்தி உள்ளார்.
முக்கியமான விபரங்கள் வருமாறு:
6110 பிள்ளைகள் தகப்பனை இழந்தவர்கள்.
2009 பிள்ளைகள் தாயை இழந்தவர்கள்.
421 பிள்ளைகள் பெற்றோரை இழந்தவர்கள்.
363 பிள்ளைகள் சிறுவர் இல்லங்களில் வாழ்பவர்கள்
959 பிள்ளைகள் யுத்தத்தால் அங்கவீனம் அடைந்தவர்கள்
190 பிள்ளைகள் பிறப்பத்தாட்சிப் பத்திரம் இல்லாதவர்கள்.
414 பிள்ளைகள் பாடசாலை செல்லாதவர்கள்.
264 பிள்ளைகள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்.
227 பிள்ளைகள் தீராத வருத்தத்தால் பீடிக்கப்பட்டு இருப்பவர்கள்.
82 பிள்ளைகள் சிறுவர் தொழிலாளர்கள்.
347 பிள்ளைகள் பாடசாலைக் கல்வியை இடையில் விட்டவர்கள்.
54 பெண் பிள்ளைகள் மீது வைத்தியசாலை தரவுகளின்படி பாலியல் துஸ்பிரயோகம். இவர்கள் தவிர உடல்இ உள ரீதியாக பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருக்கும் இருபாலாரதும் எண்ணிக்கை 17.
03 பிள்ளைகள் கடத்தப்பட்டு இருப்பவர்கள்..
03 பெண் பிள்ளைகள் சிறுவயதில் திருமணம் செய்து இருப்பவர்கள்
247 பெண் பிள்ளைகள் கர்ப்பம் அடைந்து இருப்பவர்கள்..
14 பெண் பிள்ளைகள் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்பவர்கள்.
13 பிள்ளைகள் தற்கொலைக்கு முயற்சித்து இருப்பவர்கள்.
01 பிள்ளை தற்கொலை செய்து இருப்பவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.