பக்கங்கள்

05 பிப்ரவரி 2011

வதந்திகளை நம்பாதீர்கள் என்கிறார் வவுனியா நகர சபைத்தலைவர்!

பிசாசாக இருந்தாலும் அபிவிருத்திக்கு வரும் உதவிகளை பெற்றேயாக வேண்டுமென்பதனாலேயே அரசாங்கத்தால் தரப்பட்ட உதவிகளைப் பெற்றுக்கொண்டேனே தவிர நான் அரசாங்கத்தினதோ அல்லது ஆளுனரதோ ஆள் அல்ல நான். சிலர் பரப்பும் வதந்திகளுக்கு தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டுமென வவுனியா நகரசபைத்தலைவர் எஸ்.என்.ஜி.நாதன் தெரிவித்தார். வவுனியா அபிவிருத்தியும் இன்றைய நிலைமையும் என்ற தலைப்பில் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
வவுனியாவில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க எண்ணியுள்ளோம். பல வீதிகள் புனரமைக்கப்படவுள்ளது. அத்துடன் பூந்தோட்டம் மயானத்தை புனரமைத்து எரிவாயு மூலம் சடலங்களை எரிப்பதற்கு ஏற்றவாறு அமைக்கவுள்ளோம். அதற்கான ஒப்பந்தங்களும் வழங்கப்பட்டுவிட்டது.
இதேவேளை பல நிறுவனங்கள் எமது நகரசபைக்கு உதவிகளை செய்வதற்கு முன்வந்துள்ளனர். கடந்த வருடம் 16 கோடி ரூபாவுக்கு அபிவிருத்தி வேலைகளை நகரசபையின் மூலம் ஏற்படுத்தி உள்ளோம்.
எதிர்வரும் வருடம் 15.5 கோடிக்கு பாதீடு செய்துள்ளபோதிலும் எமது உறுப்பினர்கள் சிலர் சுயலாபம் தேடுவதற்காக பாதீட்டினை ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் தொடர்ச்சியாக குழப்பம் விளைவிப்பார்களே தவிர மக்களுக்கு தேவையானதை செய்துமுடிக்க எண்ணாதவர்கள். அவர்களின் மூலமே வவுனியாவின் அபிவிருத்தி பாதிப்படைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.