பக்கங்கள்

01 பிப்ரவரி 2011

வல்வெட்டித்துறை இளைஞரை காணவில்லை!

வல்வெட்டித்துறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பருத்தித்துறை காவல்துறையில் குடும்பத்தவர்கள் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.25 வயதுடைய அ.துளசிமாறன் எனப்படும் இளம் குடும்பஸ்தரே காணாமல் போயுள்ளார்.
இவர் ஒரு குழந்தையின் தந்தையாவர். கொழும்பிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் சிப்பந்தியாக பணியாற்றுவதற்காக அவர் புறப்பட்டுச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுருந்து புறப்பட்டுச் சென்றவர் வவுனியாவிலிருந்து ரெயில் மூலம் பயணிக்கவிருந்ததாக அவரது தந்தையார் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இறுதியாக நண்பகல் வேளை கைத்தொலைபேசி மூலம் தம்முடன் தொடர்பு கொண்ட மகன் தொடர்பான தகவல்கள் எவையும் அற்றிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே திருகோணமலையிலுள்ள உறவினர் வீட்டுக்கு அவர் சென்றிருக்கலாம் என தாங்கள் சந்தேகித்திருந்ததாகவும் தாங்கள் நேரடியாக திருகோணமலைக்கு சென்று விசாரித்ததாகவும் எனினும் அவர் பற்றி தகவல்கள் எவையும் இல்லாமல் இருப்பதாகவும் தந்தை கூறியுள்ளார்.
கடந்த காலங்களி;ல் யாழ்ப்பாணத்தி;ல் இருந்து கொழும்பு நோக்கிச் சென்றவர்கள் வவுனியாவில் உள்ள சோதனைச் சாவடிகளில் அல்லது வவுனியா நகரப் பகுதிகளில் காணாமல் போகும் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ள நிலையில் இந்தச் சம்பவம் தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக குடும்பத்தவர்கள் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.