பக்கங்கள்

07 பிப்ரவரி 2011

ஈழ ஏதிலிகள் மீது கருணாநிதி அக்கறை!

தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வந்த திடீர் கரிசனை காரணமாக தமிழ்நாட்டி லுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் நலன் பேணல் மற்றும் மேம்பாட்டிற்கு நூறு கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இடைக்கால வரவு – செலவுத்திட்டம் தமிழ்நாடு மாநில சட்டப்பேரவையில் நேற்றுத் தாக்கல் செய்யப்பட்டது. அதன்போது மாநில நிதியமைச்சர் அன்பழகன் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துப் பேசும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களின் வசதிகளை மேம்படுத்த நூறு கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் முதல்கட்டமாக முப்பது கோடி ரூபா பெறுமதியான பணிகள் தற்போது முடியும் தறுவாயில் உள்ளன.
அதனையடுத்து தமிழக மக்களுக்கு மட்டும் இதுவரை செயற்படுத்தப்பட்ட இலவச தொலைக்காட்சி மற்றும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், திருமண உதவித்திட்டம் என்பனவும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.
தற்போதைக்கு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நாற்பது கோடி ருபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.