பக்கங்கள்

04 டிசம்பர் 2011

மாவீரர் தினம் சோபிக்கவில்லையாம் கண்ணீர் விடுகிறது லக்பிம!

விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வுகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தோல்வியைக் கண்டிருப்பதாகவும், இதனால் விடுதலைப்புலிகளின் மூன்று முக்கிய தலைவர்களுக்கிடையில் பாரியளவில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது
என சிங்களப் பத்திரிகையான லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் தோல்வியடைந்துள்ளமையினால் மூன்று முக்கிய விடுதலைப் புலித் தலைவர்களுக்கு இடையில் பாரியளவில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(ஆமாம் வந்து சமாதானம் செய்து வைக்கலாமே)
இது மோதலாக உருவெடுத்துள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பு தலைவர்களுக்கு இடையிலான மோதல்களினால் இம்முறை மாவீரர் தின நிகழ்வுகள் விசேடமாக இடம்பெறவில்லை என்றும் புலனாய்வுத்துறையினர் குறிப்பிட்டுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(உங்கிட புலனாய்வுத்துறை கண்டு பிடிக்கிறதில சமத்தர்கள் ஆச்சே)
நெடியவன், விநாயகம் மற்றும் ருத்ரகுமார் ஆகியோருக்கு இடையில் மோதல் வெடித்துள்ளது என்றும் இலங்கை புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர் எனவும் எனினும், இந்த செய்தித்தொடர்பாக விடுதலைப்புலிகளின் தரப்பில் இருந்து தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (அய்யய்யோ பெரும் ஆவலா இருக்கிறீங்களோ?)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.