பக்கங்கள்

07 டிசம்பர் 2011

சிங்களவர்கள் பொறுமை காக்கிறார்கள் என்கிறார் சம்பிக்க.

சிங்களவர்களின் பொறுமையை அவர்களின் கோழைத்தனமாக கருதிவிடக் கூடாது என்று சிங்கள எதிர்ப்பு சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க.
ஜாதிக ஹெல உறுமயவினால், ஏற்பாடு செய்யப்பட்ட கங்கொடவில சோம தேரரின் 8வது நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“எத்தகைய எதிர்ப்புகள் இருந்தாலும் வடக்கில் சிங்களவர்கள் மீளவும் குடியேற்றப்பட வேண்டும்.
1981இல் யாழ்ப்பாணத்தில் 21,000 சிங்களவர்கள் வசித்ததுடன் புத்த மதமும் அங்கிருந்தது.
சிறிலங்கா பாதுகாப்புப் படையில் சிங்கள இளைஞர்களால் தான், விடுதலைப் புலிகளிடம் இருந்து உயிர் தப்பி ஆனந்தசங்கரியால் உயிர்வாழ முடிகிறது என்பதை அவர் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
சம்பந்தனுக்கு கொழும்பில் வாழும் உரிமை உள்ளது. அதுபோலவே பொறுமையை சிங்களவர்கள் வடக்கில் வாழ்வதற்கும் உரிமை வழங்கப்பட வேண்டும்.
தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் எமது நாட்டில் வாழ்வதற்கான எமது உரிமை மறுக்கப்படுகிறது.
எமது மக்களை கொன்ற தீவிரவாத சந்தேகநபர்கள் 11 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். இவர்களை விடுதலை செய்வதற்கு எந்தவொரு சிங்களவராவது எதிர்ப்புத் தெரிவித்தாரா?
பழி கூறுவதற்கு சிங்களவர்கள் எவரும் வெளிநாடு சென்றதில்லை. ஆனால் சம்பந்தன் அதையே செய்கிறார்“ என்றும் சம்பிக்க ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.