பக்கங்கள்

02 ஜனவரி 2011

கடத்தப்பட்ட இளைஞர் எஸ்,எம்.எஸ் செய்தியால் காப்பாற்றப்பட்டார்!

வன்னியில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட 20 வயதான இளைஞரையும் மேலும் நான்கு பேரையும் கையடக்க தொலைபேசியின் மூலமான குறுஞ்செய்தி காப்பாற்றியுள்ளது.
நேற்று காலை 5.30 அளவில் மாணவனான கஜீவன் பவனீதரன், பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்று வரும் போது கிளிநொச்சி நகரில் வைத்து பச்சை நிறை ஆடை அணிந்தவர்களால், பஸ் போன்ற வாகனம் ஒன்றில் கடத்திச்செல்லப்பட்டார்.
ஏ 9 வீதியின் ஊடாக அவரை கடத்திச்செல்லும் போது பவனீதரன் தமது கையடக்க தொலைபேசியின் மூலம் தாம் கடத்திச்செல்லப்படுவதை தமது பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் எஸ்.எம்.எஸ் மூலம் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவரும் அவருடன் கடத்திச்செல்லப்பட்ட ஏனைய நான்கு பேரும் வவுனியாவில் வைத்து காப்பாற்றப்பட்டனர்.
எனினும் அவர்களை கடத்தியவர்கள் யார், கடத்தப்பட்ட ஏனைய நான்கு பேரும் யார் என்ற விடயங்களை வவுனியா பொலிஸார் தர மறுத்து விட்டனர்.
இந்தநிலையில் இலங்கைப் படையினருடன் இணைந்து இயங்கும் புலனாய்வு பிரிவினரே அவர்களை தென்னிலங்கைக்கு கடத்திச்சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச செஞ்சிலுவை சங்கம், மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன தமது நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்ட நிலையில் வடக்கின் தமிழ்ப் பிரதேசங்களில் கடத்தல்களும் கொலைகளும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.