புலனாய்வாளர்கள், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் காணாமல்போரின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகத் திரண்டு தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தனர். இன்று காலை 8 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த வந்தவர்கள் முள்ளிவளை மற்றும் கேப்பாபிலவுப் பகுதிகளில் இடைமறிக்கப்பட்டனர். மாவட்டச் செயலகதை வந்தடைந்தவர்களையும் பஸ்ஸிலிருந்து இறங்கவிடாது சிலர் தடுத்ததுடன் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு எதிராகக் கோஷங்களையும் எழுப்பினர். இவ்வாறான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் உறவுகள் தமது கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண உறுப்பினர்களான து.ரவிகாரன், அன்ரனி ஜெகநாதன், மேரி கமலா குணசீலன், அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
05 ஜூன் 2014
முல்லையில் போராட்டத்தில் காணாமற் போனோரின் உறவுகள்!
புலனாய்வாளர்கள், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் காணாமல்போரின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகத் திரண்டு தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்தனர். இன்று காலை 8 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காணாமல் போனோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த வந்தவர்கள் முள்ளிவளை மற்றும் கேப்பாபிலவுப் பகுதிகளில் இடைமறிக்கப்பட்டனர். மாவட்டச் செயலகதை வந்தடைந்தவர்களையும் பஸ்ஸிலிருந்து இறங்கவிடாது சிலர் தடுத்ததுடன் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு எதிராகக் கோஷங்களையும் எழுப்பினர். இவ்வாறான எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் உறவுகள் தமது கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண உறுப்பினர்களான து.ரவிகாரன், அன்ரனி ஜெகநாதன், மேரி கமலா குணசீலன், அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.