பக்கங்கள்

26 ஜூன் 2014

தமிழர் நிலங்கள் சிங்கள மயமாக்கப்படுவதை நேரில் பாருங்கள்!

"தமிழர் பாரம்பரிய நிலங்கள் இராணுவத்தினரின் பங்களிப்புடன் எவ்வாறு சிங்கள மயமாக்கப்படுகின்றது என்பதை முல்லைத்தீவின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிடுமாறு சுவிற்சர்லாந்தின் தூதுவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்." - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த சுவிற்சர்லாந்து தூதுவர் தோமஸ் லிப்ரென் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார் இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து இராணுவம் இருப்பதால் பொதுமக்களின் வாழ்க்கைக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இராணுவத்தினரால் பொருளாதார, சமூக விருத்திகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பவை தொடர்பிலும் முதலமைச்சரால் தூதுவருக்கு எடுத்துக் கூறப்பட்டது. அத்துடன் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் பிரதேசங்களில் 450 சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டிருப்பது தொடர்பிலும் அவர்களால் இரணுவத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.