பக்கங்கள்

24 ஜூன் 2014

சதாமுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி சுட்டுக்கொலை!

சதாமுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி போராளிகளால் சுட்டுக்கொலை!ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான் புரட்சிப் போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. சதாம் ஹுசைனின் ஆதரவாளர்களான சுனி முஸ்லிம்கள் அல் - குவைதா தீவிரவாதிகளுடன் இணைந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முக்கிய நகரங்கள் பல அவர்களிடம் வீழந்துள்ளன. தற்போது அவர்கள் பாக்தாத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சதாம் ஹுசைனின் உதவியாளர் இசாத் இப்ராஹிம்-அல்-நூரி என்பவர் தனது 'பேஸ்புக்' மூலமாக வெளியிட்ட செய்தியில், "இரசாயன குண்டுகள் பயன்படுத்தியதற்காக கடந்த 2006 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான், ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது". எனத் தெரிவித்திருந்தார். எனினும் இத்தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான், குர்தீஸ் இனத்தைச் சேர்ந்தவர். தீர்ப்பு அளித்த அடுத்த ஆண்டே - 2007 இல் - தனதும், தனது குடும்பத்தினரதும் உயிருக்கு ஆபத்து நேரலாம் எனக் குறிப்பிட்டு அதனால் தங்களுக்கு அடைக்கலம் தருமாறு பிரிட்டன் அரசிடம் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஜோர்தான் நாட்டு எம்.பியான கலீல் அட்டியே தனது 'பேஸ்புக்'கில் எழுதியுள்ள கருத்துக்களின்படி புரட்சியாளர்களை எல்லாம் கைது செய்த காரணத்தாலும் சதாமுக்கு மரண தண்டனை விதித்தமையால் பதிலடியாகயும் இச்சம்பவம் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்றார். மேலும் ரவூப் அப்துல் ரஹ்மான், நடன கோலத்தில் மாறுவேடமிட்டு பாக்தாத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.