பக்கங்கள்

25 ஜூன் 2014

அனந்தி,கஜதீபன்,சுகிர்தன் ஆகியோரது பாதுகாப்பு வாபஸ்!

வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்படுவதாக வடக்கு மாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை உறுப்பினர்களது மெய்ப்பாதுகாவலர்களை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று தெரிவித்து றொஹான் டயஸ் கடிதம் ஒன்றை வடக்கு மாகாண சபையின் மூன்று உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- தங்களது பாதுகாப்புக்காக மெய்ப் பாதுகாவல் உத்தியோகத்தர்களைப் பெற்றுத் தருவதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பந்தமான அமைச்சின் மூலம் அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது பதவி நிலைக்குரிய அதிகார எல்லையின் பிரகாரம் தங்களுக்கு நெருங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பெற்றுத்தர போதுமான அதிகாரம் எனக்கு இல்லை. மேற்குறிப்பிடப்பட்ட அனுமதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். இது சம்பந்தமாக தங்களுக்கு இடையூறுகள் ஏற்படின் அதற்காக எனது மனவருத்தத்தைத் தெரிவித்துகொள்கிறேன் - என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், ச.சுகிர்தன், அனந்தி சசிதரன் ஆகியோரது பொலிஸ் பாதுகாப்பே இவ்வாறு திரும்பப்பெறப்பட்டுள்ளன. இது குறித்து தமக்கு கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று சுகிர்தன், கஜதீபன் ஆகியோர் உறுதிப்படுத்தினர். எனினும் தனக்கு இதுவரை உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைக்கப்பெறவில்லை என்றும்,ஆனால் விடயம் சரியானதுதான் என்றும் அனந்தி தெரிவித்தார் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.