பக்கங்கள்

05 ஜூன் 2010

தமிழ் மக்களின் போராட்டத்துக்கு பயந்து அமிதாப் குடும்பம் வராமல் விடவில்லை-நிகில் ட்டேவி.


மூன்று தினங்களாக கொழும்பில் நடந்துவருகின்ற சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் கடைசி நாள் இன்றாகும். இத்திரைப்படவிழாவில் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவாகும் 'ராவண்' திரைப்படம் திரையிடப்படும் என முன்னர் கூறப்பட்டாலும் பின்னர் அந்த எண்ணம் கைவிடப்பட்டதோடு அப்படத்தில் நடித்துள்ள அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் திரைப்பட விழாவைப் புறக்கணித்தனர். ஆனால் அவ்விழாவுக்குச் சென்றுள்ள நிகில் ட்விடேவி, "தமிழ் மக்களின் போராட்டங்கள் காரணமாகத் தான் அபிஷேக், மணிரத்தினம், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் வரவில்லை என்பது பொய். அவர்கள் வேலைப்பளு காரணமாகவே வரவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.இந்த நிகில் என்பவர்தான் ராவண் படத்தில் அபிஷேக்கின் தம்பியாக நடித்துள்ளவர் ஆவார். எனவேதான் தமது படக்குழுவினர் வேலைப்பளு காரணமாகத் தான் விழாவுக்கு வரவில்லை. தமிழர் போராட்டத்துக்கு அஞ்சித்தான் அவர்கள் இலங்கை வரவில்லை என்ற செய்தி பொய்யானது எனத் தெரிவித்துள்ளார். தமிழிலும் இந்தியிலும் தயாராகிவரும் ராவண் படன் நவீன கால ராமாயணம் எனக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.