பக்கங்கள்

04 ஜூன் 2010

சனல் போர் வெளியிட்ட புகைப்படத்தில் இருந்து தந்தையொருவர் தனது மகனை அடையாளம் கண்டுள்ளார்!


வன்னிச் சமரில் கைது செய்யப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்டும், பதுங்குகுழிக்குள் தடுத்து வைக்கப்பட்டும் இருந்த இளைஞர்களின் புகைப்படங்களை சனல் 4 தொலைக்காட்சியானது அண்மையில் வெளியிட்டிருந்தது. இவர்களில் பலர் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எனக் கூறப்படுகிறது. இந்தப் புகைப்படங்களில் இருந்து தனது மகனை தந்தையொருவர் அடையாளம் கண்டுள்ளார். அவர் தமிழ்நெட் இணையத்துக்கு வழங்கிய பேட்டியில், விடுதலைப் புலி உறுப்பினரான தனது மகனைத் தாம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி சந்தித்ததாகவும், அப்போது தங்கள் எல்லோரையும் போர் நடக்கும் இடத்திலிருந்து வெளியேறிப் போகுமாறும் அவர் கெஞ்சிக் கேட்டிருந்தார் எனவும் கூறியுள்ளார்.புகைப்படத்திலுள்ள இளைஞர்கள் ஏப்ரல் மாதத்தில் கைது செய்யப்பட்டவர்கள் என ஊடக அறிக்கைகள் கூறுவது குறித்து அவரிடம் கேட்டபோது, அந்த அறிக்கைகள் உண்மை எனக் கூற முடியாது என்றார். ஏனெனில் தாம் தமது மகனை மே மாதம் 11 ஆம் திகதி சந்தித்ததாக அவர் வலியுறுத்துகிறார். தனது மகனை ராணுவம் மே மாதம் 18 அல்லது 19 ஆம் திகதி கைது செய்திருக்கலாமென அவர் சந்தேகிக்கிறார்.ஆனால் தனதும், தனது மகனதும் பாதுகாப்புக் கருதி அவர் இவற்றை ஊடகங்களுக்கு தெரிவிக்க விரும்பவில்லை. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து மனிக் பார்ம் முகாமில் இருந்த அவர், தற்போது யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு உறவினருடன் தங்கியுள்ளார். மேற்படி புகைப்படங்களில் இருந்து தனது தந்தையாரை 7 வயதுச் சிறுமி ஒருவர் அடையாளம் கண்டுள்ளமை தெரிந்ததே. அடையாளம் காணப்பட்ட அந்த நபர் 40 வயதான துரைச்சாமி ஹரிகிருஷ்ணன் ஆவார். இவரின் மனைவி, மகள் ஆகியோர் யாழ்ப்பாணத்திலுள்ள அனாதை இல்லத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.