பக்கங்கள்

10 செப்டம்பர் 2010

நாஸிகளின் யுகத்தில் கனடா!

நாட்டுக்கு வருகின்ற அகதிக் கப்பல்களைத் தடுத்து நிறுத்த கனேடிய அரசினால் எடுக்கப்பட இருக்கின்ற கடும்போக்கான நடவடிக்கைகள் நாஸிகளின் யுகத்துக்கு உரியன என்று அந்நாட்டின் லிபரல் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.
அக்கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரும் பிரித்தானிய- கொலம்பிய தீவின் லிபரல் ரைடிங் அசோஸியேசன்ஸின் தலைவருமான ரோன் மெக்கின்னன் தெரிவித்துள்ளார்.
நாஸிகள் யூதர்களின் விமானங்களை வானத்தில் பறக்க விடாமல் தடுத்து நிறுத்த எடுத்திருந்த இறுக்கமான நடவடிக்கைகளையே அகதிக் கப்பல்களைத் தடுத்து நிறுத்த கனேடிய அரசு எடுக்க உள்ள இறுக்கமான நடவடிக்கைகள் நினைவுபடுத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச கடற்பரப்பில் வைத்து சட்டவிரோத படகுகளையும், கப்பல்களையும் தடுத்து நிறுத்துவதற்கான சட்ட அதிகாரத்தை கனடா பெற்றுக் கொள்ளுதல் , சட்டவிரோத பயணிகளை படகுகள், கப்பல்கள் போன்றவற்றில் ஏற்றி வருகின்ற கப்டன்மார், மாலுமிகள், சிப்பந்திகள் போன்றோருக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்குதல், படகுகளும், கப்பல்களும் பாரிய கடல்களை அடையும் முன்பாகவே இடைமறிக்கும் வகையில் இலங்கை போன்ற நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளுதல் என்று கனேடிய அரசினால் மேற்கொள்ளப்பட இருக்கின்ற இந்நடவடிக்கைகளை அவர் வன்மையாகக் கண்டித்துள்ளார். கன்சேர்வேட்டிவ் கட்சியின் இக்கடும்போக்கான திட்டங்கள் நாட்டில் கலவரங்களையே தோற்றுவிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இலங்கை குறித்து இந்தியாவிடம் அறிக்கை கோரியுள்ள அமெரிக்கா.

இலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் நடவடிக்கைகள் ஆசியா கண்டத்தைப் பாதிக்கும் முறைமை குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இந்திய அரசாங்கத்திடம் விசேட அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளது.
இலங்கையின் யுத்தத்தின் பின்னரான நடவடிக்கைகள், வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் அரசியலமைப்பு திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டினை அறியும் முகமாகவே இந்த அறிக்கையினை அமெரிக்கா கோறியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் கோரிக்கையினைக் கருத்தில் கொண்டுள்ள இந்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, மேற்படி அறிக்கையினைத் தயாரிக்கும் நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

09 செப்டம்பர் 2010

பாக். தீவிரவாதிகளுக்கு கொழும்பில் பயிற்சி முகாம்.

பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொழும்பில் இராணுவ பயிற்சி முகாம் ஒன்றை நடத்தி வருகின்றார்கள் என்று பரபரப்புத் தகவல் ஒன்று கசிந்துள்ளது.
இந்தியாவின் மராட்டிய மாநில பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கும் தீவிரவாதி ஒருவர் அவரது வாக்குமூலத்தில் இவ்வதிரடித் தகவலை வழங்கி உள்ளார்.
மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள பேக்கரி ஒன்றில் கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இதில் 17 பேர் உயிர் இழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர்.இது தொடர்பாக மராட்டிய பொலிஸார் விசாரணை நடத்தி குண்டு வைத்தவர்களைக் கண்டு பிடித்துள்ளார்கள்.
இவர்களில் ஒருவர் ஹிமாயத் பெய்க் . இவர் பாகிஸ்தானின் லஹ்கர் -இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர். இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு வந்து அங்குள்ள லஹ்கர்-இ-தொய்பா இராணுவ பயிற்சி முகாமில் பயிற்சிகள் பெற்றார் என பெய்க் இப்பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இலங்கையில் முகாம் அமைத்துச் செயற்படுகின்றார்கள் என்பது இப்போதுதான் முதல் தடவையாக வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் கொழும்புக்கு சுற்றுலா பயணிகள் போல செல்கின்றனர் என்றும் இரு வகையான இராணுவ பயிற்சிகளை இங்கு பெறுகின்றனர் என்றும் அவரும் அவ்வாறே பயிற்சிகளைப் பெற்றார் என்றும் பெய்க் தெரிவித்துள்ளார்.
இப்பயிற்சி முகாம் பற்றிய தகவல்கள் இந்தியாவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ஆயினும் கொழும்பில் எந்த இடத்தில் இப்பயிற்சி முகாம் உள்ளது? எத்தனை பேருக்கு அங்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன போன்ற விவரங்களை பெய்க் இன்னும் தெரிவிக்கவில்லை.

மீண்டும் அலெக்ஸ் கனேடிய ஊடகத்துக்கு செவ்வியளித்துள்ளார்.

கனடாவில் இருந்து 07 ஆண்டுகளுக்கு முன் நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞன் சஞ்சீவ் குஹேந்திரராஜா எனபவர் மீண்டும் கனடா வருகின்றமைக்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இரகசிய இடம் ஒன்றில் இருந்து கனேடிய ஊடகம் ஒன்றுக்கு அண்மைய நாட்களில் தொலைபேசி மூலம் வழங்கி உள்ள பேட்டி ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
குற்றச்செயல்களில் ஈடுபட்டமை, கோஷ்டி மோதல்களில் ஈடுபட்டு வந்த குழுக்களுடன் தொடர்பு ஆகியவற்றுக்காகவே நாடு கடத்தப்பட்டு இருந்தார்.
255 இலங்கையர்களுடன் கடந்த வருடம் அவுஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டுச் சென்ற அகதிக் கப்பல் ஒன்று இந்தோனேஷிய கடற்படையினரால் இடைமறிக்கப்பட்ட போது அக்கப்பலில் இவரும் பயணித்து இருந்தார். கப்பலில் புறப்பட்டு வந்திருந்த தமிழர்களின் பேச்சாளராக அலெக்ஸ் என்கிற பெயரில் செயற்பட்டார். ஆனால் அவர் பின்னர் மர்மமான முறையில் காணாமல் போய் இருந்தார் எனபது குறிப்பிடத்தக்கது.

08 செப்டம்பர் 2010

பிரபல நடிகர் முரளி மரணம்!!!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் முரளி. 47 வயதான அவர் இதயம், அதர்மம், காலமெல்லாம் காதல் வாழ்க, அள்ளித்தந்த வானம், புதுவசந்தம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
நேற்று இரவு வீட்டில் இருந்தபோது நெஞ்சுவலிப்பதாக கூறிய முரளி,சென்னை போரூரில் உள்ளதனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் சென்னை வளசரவார்க்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக முரளியின் உடல்வைக்கப்பட்டது. புகழ்பெற்ற முரளியின் மரணச் செய்தியறிந்த கோலிவுட் பிரபலங்கள் பலரும்முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.திரையுலகை சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என யார் அழைப்பிதழ் வைத்தாலும் நேரில் சென்று வாழ்த்துவதை வாடிக்கையாக கொண்டிருந்த முரளியின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவன் மீது பிள்ளையான் குழுவைச் சேர்ந்தவர்கள் தாக்குதல்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இருவரால் கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் தாக்கப்பட்டுள்ளதுடன் அந்த இளைஞனுக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிள் ஒன்றும் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.கொள்ளையிடும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து பொலிசில் முறையிடப்பட்டதைத் தொடர்ந்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

07 செப்டம்பர் 2010

கனடா நோக்கி மற்றொரு கப்பல் வருகிறதாம்.

இலங்கைத் தமிழர்களுடன் கனடா நோக்கிப் புதிய கப்பல் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருக்கின்றது என்று கனடாவின் CTV நேற்று இரவு தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுடன் கனடாவுக்கு வருகின்ற மூன்றாவது கப்பல் இதுவாகும். இதை எதிர்கொள்கின்றமைக்கு கனேடிய அதிகாரிகள் தயார்ப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்றும் இச்செய்தி தெரிவிக்கின்றது. ஆயினும் பயங்கரவாத விவகாரங்கள் சம்பந்தப்பட்ட சர்வதேச நிபுணர்களில் ஒருவரான பேராசிரியர் ரொஹான் குணரட்ண சிறிது மாறுபட்ட தகவலைக் கூறுகின்றார். கனடாவுக்கு புறப்படுகின்றமைக்கு அனைத்து ஏற்பாடுகளுமே தயாரான நிலையில் தாய்லாந்தில் கப்பல் ஒன்றை எதிர்பார்த்து இலங்கைத் தமிழர்கள் ஒரு தொகையினர் காத்து நிற்கின்றனர் என்கிறார் அவர்.

பிள்ளைகளுடன் தீக்குளிப்பேன்– மட்டு மாநகர சபை உறுப்பினரின் மனைவி.

தனது கணவன் இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பாத பட்சத்தில் பிள்ளைகளுடன் மாநகர சபைக்கு முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக, மர்மமான முறையில் காணாமல் போயுள்ள மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணியின் மனைவி தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது கணவன் விடயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து பிள்ளைகளுடன் தீக்குளிக்கவும் தயங்க மாட்டேன் என்று அவர், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் கூறியுள்ளார்.
காணாமல் போயுள்ள மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணியின் வீட்டிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவரது மனைவியை சந்தித்து ஆறுதல் கூறியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 23ஆம் திகதி முதல் குறித்த மாநகர சபை உறுப்பினர் மர்மமான முறையில் காணாமல் போனதையடுத்து, தனது கணவனை கண்டுபிடித்து தருமாறு காணாமல் போனவரின் மனைவி இதன்போது முதலமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்ததோடு தனது கணவனை கடத்தியவர்கள் யார் என்பது தனக்கு தெரியும் என்றும் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

06 செப்டம்பர் 2010

லண்டனில் தமிழ்மக்களை சந்தித்தார் டேவிட் மிலிபாண்ட்.


பிரித்தானிய தலைநகர் லண்டனில் முன்னாள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரான டேவிட் மிலிபாண்ட் தமிழ்மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
நேற்று முன்தினம் லண்டன் வெஸ்மினிஸ்டர் சென்றல் ஹோலில் நடைபெற்ற மிழ்மக்களுடனான பிரித்தானிய தொழில்கட்சியின் சந்திப்பின் போதே டேவிட் மிலிபாண்ட் கலந்துகொண்டு தமிழ்மக்களுடன் கலந்துரையாடினார்.
04-09-2010 அன்று மாலை 7:00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களான கீத்வாஸ், சிவோன் மக்டோனால், மைக் கப்ஸ், ஸ்ரெலா கிறிஸி, ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கிளவுட் மோறஸ், ஜோன் றயன் மற்றும் ஈலிங் கவுன்சிலஸ் லீடர் யூலியன் பெல், ஆகியோர் கலந்துகொண்டு அங்கு கூடியிருந்த தமிழ் மக்களுடன் உரையாடினர்.
மாலை 8:10 க்கு மண்டபத்திற்கு வருகைதந்த டேவிட் மிலிபாண்ட் அங்கிருந்த மக்களுக்கு கைவாகு கொடுத்து மகிழ்க்ச்சியோடு உள்நுளைந்தார். டேவிட் மிலிபாண்ட் இன் வருகையை தொடர்ந்து தமிழ்பிரதிநிதிகள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகள் இடம்பெற்றன.
திரு டேவிட் ஜோசப் அவர்கள் நிகழ்வை ஆரம்பித்துவைத்து அறிமுக மற்றும் வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் சார்பில் 14 வயது சிறுமியான செல்வி. சிந்து, செல்வி. கிருத்திகா, தொழில்கட்சிக்கான தமிழர்களின் அமைப்புத் தலைவர் திரு. சென் கந்தையா ஆகியோர் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து டேவிட் மிலிபாண்ட் உட்பட அங்கு வருகைதந்திருந்த முக்கிய பிரமுகர்களின் உரையும் இடம்பெற்றது.
கடந்த ஆண்டு வன்னிப்பகுதியில் மக்கள் மீது நடாத்தப்பட்ட கொடியபோரில் சிக்குண்டு இறுதி நாட்கள் வரை முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இருந்து அவலங்களையும், அழிவுகளையும் நேரில் கண்டும், அனுபவித்தும் வந்த பல மக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தமையும், அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடியதையும் காணமுடிந்தது.
குறிப்பாக வன்னிப்போரில் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்தும், அதன் பின் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்ற பின் இராணுவத்தால் மூன்று மாத காலமாக பல இன்னல்களுக்கும் உள்ளாகி அதன் பின் பிரித்தானியா வந்தடைந்த செல்வி. தமிழ்வாணி, மற்றும் மே 15 வரை முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் இருந்து பின் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுப்புமுகாம் வாழ்க்கையையும் அனுபவித்து தற்போது பிரித்தானியாவில் வந்து அகதிதஞ்சம் கோரியுள்ளவருமான கிருபா போன்றோருடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி அவர்களின் அனுபவங்களை கேட்டறிந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழ்மக்களின் பிரதிநிதிகளான நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு, ரி லாப், உட்பட பல தமிழர் அமைப்புக்களும், பொதுமக்களுமாக
சுமார் 500 க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோஷ்டி மோதலில் பல்கலை மாணவர்கள்.



கட்டுநாயக்கவில் இரு குழுக்களிடையே நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் பல்கலைக்கழக மாணவர்கள் மூவரும் ஏனைய இருவரும் காயமடைந்ததாக பொலிஸ் பேச்சாளர் பிரிஷாந்த தெரிவித்தார்.கட்டுநாயக்கவிலுள்ள பொறியியல் கல்லூரியொன்றின் முதலாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் இது தொடர்பாக மூவரை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
அதேவேளை கட்டுநாயக்கவில் இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில் இதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் ரயில்கடவையில் பலியாகியுள்ளனர்.
இச்சம்பவத்திற்கும் மேற்படி கோஷ்டி மோதலுக்கும் தொடர்பில்லை எனவும் ரயில் சமிக்ஞையை புறக்கணித்துச் சென்றதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

05 செப்டம்பர் 2010

வெள்ளை வானில் தானும் தூக்கப்படலாம் என்கிறார் சந்திரிகா!



சிறீலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் 18 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் அப்பட்டமான ஜனநாயக மீறல் என முன்னாள் சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டு தாம் முன்வைத்த அரசியல் தீர்வுபொதியில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றும் யோசனையை தாம் கொண்டிருந்த போதும் தற்போதைய வெளிநாட்டமைச்சர் ஜிஎல் பீரிஸ், இரண்டு வருடங்கள் வரை அதனை நீடிக்கலாம் என தமக்கு ஆலோசனை கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதியின் பதவிக்காலம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவீர்களா? என அவரிடம் கேட்கப்பட்டபோது தாம் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டவள் அல்ல என சந்திரிகா தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின், இரண்டு வருட ஆட்சி தொடர்பாக சந்திரிகாவிடம் வினாவிய போது அது தொடர்பாக தாம் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் பதிலளித்தால், தமக்கும் வெள்ளை வேன் அனுப்படும் என கவலை வெளயிட்டார்.
சுந்திரிக்காவின் ஆட்சியின் போது வெள்ளை வேனால் கடத்தப்பட்டு காணாமல் போன தமிழ் இளைஞர்கள் யுவதிகள் ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவத்தம்பிக்கும் தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கும் தொடர்பில்லையாம்.



சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டினை முன்னின்று நடத்துவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென்கிறார் பேராசிரியா கார்த்திகேசு சிவத்தம்பி.
இது தொடர்பில் அவர் கருத்த வெளியிடுகையில் அவுஸ்திரேலியாவில் இருந்து அவரது நண்பர் ஒருவர் அவரிடம் தொடர்பு கொண்டு இது தொடர்பாக கேட்டதாகவும் ஆயினும் இலங்கையில் நடைபெறும் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக இதனை இங்கு நடத்துவது சாத்தியமில்லையெனத் தெரிவித்ததாக சொன்னார்.
நடைபெற இருக்கும் மாநாடு பற்றி தனிப்பட்ட ரீதியாக கூட தனக்கு எதுவும் தெரியாத நிலையில் தானே முன்னின்று நடத்துவதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவையென அவர் தெரிவித்தார்.
ஊடகங்கள் செய்திகளுக்கு பதிலாக ஊகங்களின் அடிப்படையில் கருத்துக்களை வெளியிடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

04 செப்டம்பர் 2010

இத்தாலியில் சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.


அரசமைப்புத் திருத்த யோசனையை எதிர்த்து இத்தாலியில் வாழும் சிங்களவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளார்கள். இத்தாலிக்கான இலங்கைத் தூதரகம் முன்பாக எதிர்வரும் 05 ஆம் திகதி காலை 10.00 மணியில் இருந்து மதியம் 1.00 மணி வரை இவ்வார்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.
இத்தாலியைத் தளமாகக் கொண்டு செயற்படும் Movement for Democracy in Sri Lanka என்கிற சிங்கள அமைப்பு இவ்வார்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் அங்குள்ள இலங்கையர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று இவ்வமைப்பு அழைப்பு விடுத்து வருகின்றது.

லண்டன் ஹரே கிருஷ்ணா கோயில் வெடிப்பு- உயிரிழப்பு இல்லை.



லண்டன் லெசிஸ்டர் பகுதியில் அமைந்துள்ள ஹரே கிருஷ்ணா கோயிலில் நேற்றுப் பிற்பகல் 2.30 மணியளவில் பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கோயில் திருவிழா பிரசாதங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது பயன்படுத்தப்பட்ட பெரிய சமையல்வாயு கொள்கலனில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே இவ்வெடிப்பு இடம்பெற்றது. இதனால் சமையல் நடந்துகொண்டிருந்த கட்டடம் பலத்த சேதத்துக்கு உள்ளானது. ஆனால் இவ்வெடிப்புக்குச் சில செக்கன்களுக்கு முன்னர் எச்சரிக்கை கொடுக்கப்பட்டதால் அங்கிருந்த கிட்டத்தட்ட 30 பேரும் அங்கிருந்து தப்பி வெளியில் ஓடிவிட்டதால் நிகழவிருந்த பாரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டு அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.
ஏராளமான பக்தர்கள் இந்தச் சமையலில் ஈடுபட்டிருந்தனர். சமையல் முடிந்த பின்னர் சமையல் வாயுக் கொள்கலனின் குழாயை அவர்கள் அகற்றிவிட்டாலும், கொள்கலனை மூடாமல் விட்டதாலேயே இந்தக் கசிவு ஏற்பட்டது. எனினும், குழாயை நீக்கிய நபர் அங்கு நிகழப்போகும் ஆபத்தை உடனும் உணர்ந்து அங்கிருந்து தானும் வெளியேறி, மற்றவர்களையும் வெளியேற்றினார். இவர்கள் வெளியேறி 30 செக்கன்களுக்குள் அவ்வெடிப்பு நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு உடனும் வந்த தீயணைப்புப் படையினர் குறித்த கட்டடத்தில் தேடுதல் நடத்தினர். மோப்ப நாயும் கொண்டுவரப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது. அதன் பின்னரே ஒருவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் ஒருவரும் உயிரிழக்கவும் இல்லை காயப்படவும் இல்லை என்பது ஒரு அதிசயம் என்று தீயணைப்புப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் கானொளியினை பார்த்த நான்கு இளைஞர்கள் கைது.



தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான கானொளியினை பார்வையிட்ட நான்கு இளைஞர்களை கந்தளயாய் ஊரனிபிள்ளையார் பிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போர் நடைபெற்ற காலத்தில் இவர்கள் தமிழீழ புலிகளுடன் இணைந்து செயற்பட்டனரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கானொளி காட்சிகளை வழங்கிய நபரையும் கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுத்துத்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

03 செப்டம்பர் 2010

ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுகின்றனர்.



ஐக்கிய தேசியக் கட்சியின் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் அரசியல் சாசனத் திருத்தத்தை ஆதரிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
ஏர்ல் குணசேகர, லக்ஷ்மன் செனவிரத்ன மற்றும் மனுச நாணயக்கார ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு கட்சி தாவுவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள அரசாங்கம் இடதுசாரிகளின் அச்சுறுத்தல் காரணமாகவே மேலும் உறுப்பினர்களைக் கவரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சுனாமி விட்டுச்சென்ற பூவைக்கூட விட்டுவைக்கவில்லை இராணுவம்: குறும்படம்.


பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்களால் ஒரு குறும்படம் தற்போது தாரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இப் படத்தின் பெயர் : "பூவுக்குள்". இப்படமானது 1 நிமிடமே ஆகும். இருந்தாலும் ஈழத்துச் சிறுமி ஒருவரின் கண்ணீர்க் கதையாகவும், ஈழத்தில் சிறுவர்களின் நிலை என்ன என்பது தொடர்பாகவும் இப் படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. சுனாமி வந்து கொண்டுசென்ற தாய் தந்தையரை நினைத்து, அவர்களின் இழப்பை தாங்கமுடியாமல் வாடும் ஒரு சிறுமியைக்கூட இலங்கை இராணுவம் விட்டுவைக்காமல் கொலைசெய்யும் காட்சியும், ஈழத்து நிலையும் 1 நிமிடத்தில் மிக நன்றாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பரமேஸ்வரனால் நடத்தப்படும் புரட்சிகர மாணவர் அமைப்பின் சார்பாக இக் குறுந்திரைப்படம் வெளியாகி உள்ளது. கடல் தன் தாய் தந்தையரை கொண்றதால் அதனை மன்னிக்கவே முடியாது என்று சொல்லும் சிறுமி, அவரையும் கொன்றுவிட்ட இலங்கை இராணுவத்தோடு சேர்ந்து இயங்கலாம் என்று சொல்லித்திரியும் சில தமிழர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையும். காலத்தின் கட்டாயம் கருதி எடுக்கப்பட்ட இக் குறுந்திரைப்படம் தமிழ் மக்களுக்கு உரிய செய்தி ஒன்றைச் சொல்லி நிற்கிறது.

முள்ளிக்குளம் பிரதேசத்தில் நிலையான கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டதாகத் கோதபாய தெரிவித்துள்ளார்.



தேசியப் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நாட்டின் முக்கிய இடங்களில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படும் என மன்னாரில் கடற்படை முகாம் அங்குரார்ப்பண விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
பயங்கரவாதத்தை இல்லதொழித்ததன் மூலம் நாடு அடைந்துள்ள சமதானத்தை நிலைநாட்டவும், தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்திற் கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் ஓர் கட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கடத்துவதற்காக பயன்படுத்திய முள்ளிக்குளம் பிரதேசத்தில் நிலையான கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசியப் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் முக்கிய பொறுப்பு கடற்படையினருக்கு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

02 செப்டம்பர் 2010

இனப்பிரச்சினைத் தீர்வுபற்றி இலங்கையிடம் நிருபமா கேட்டுச் சொல்ல வேண்டும்.



இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட ஆக்கபூர்வமான விடயங்கள் என்ன என்பதை இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ் கொழும்பு நிர்வாகத்திடம் அறிந்து தமிழ் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். இந்திய அரசாங்கத்தை தவிர்த்துவிட்டு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வையும் போரினால் அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் மீள் குடியேற்றத்தையும் முன்னெடுக்க முடியாது என்று குறிப்பிட்ட மனோ கணேசன், இந்திய அரசு, இலங்கை அரசுடனும் தமிழ்க் கட்சிகளுடனும் தொடர்ச்சியாக பேச்சுகளை நடத்திக்கொண்டிருந்தாலும் நடைமுறையில் எதிர்பார்க்கின்ற முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதுதான் தமிழ் மக்கள் மத்தியிலே நிலவுகின்ற கருத்து என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மேலும், கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றியபோது அங்கு உடனும் மாகாணசபைத் தேர்தலை நடத்திய இலங்கை அரசு, வடமாகாணத்தைக் கைப்பற்றியபின்னர் ஏன் அவ்வாறு செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், அரசியல் தீர்வு ஒன்றைக் கொண்டுவரும் நோக்கம் இலங்கைக்கு இல்லை என்பதையும் குறிப்பிட்டார். வடமாகாண அரசு ஒன்று உருவாக்கப்பட்டால், இந்தியா வடபகுதி மக்களுக்குச் செய்யும் உதவிகளை அதனூடாகவே செய்யலாம். அதுவே சரியான முறையாகவும் இருக்கும் எனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை இரண்டாவது அமர்வினை அறிவித்துள்ளது.



நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் இரண்டாவது அமர்வினை செப்டெம்பர் மாத இறுதிப்பகுதியில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை பொதுமக்களுக்கு அறியத் தருவதில் நாம் மகிழ்வடைகிறோம்.
கடந்த மே மாதம் 17-19ஆம் நாட்களின்போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் முதலாவது அமர்வினை அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட, சுதந்திரப்பிரகனடம் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுப்புகழ்மிக்க பிலடெல்பியா மாநகரில் நாம் கூட்டியிருந்தோம். இம் முதல் அமர்வின்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனக்கான இடைக்கால நிறைவேற்றுச் சபையினை அமைத்துக் கொண்டதுடன், இடைக்கால முதன்மை நிறைவேற்றுனரையும் தெரிவு செய்து கொண்டது.
மேலும் இம் முதலமர்வு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அரசியல் அமைப்பினை உருவாக்கிக் கொள்வதற்காகவும், உடனடித் தேவைகளையொட்டிய பணிகளை முன்னெடுப்பதற்காகவும் சில செயற்பாட்டுக்குழுக்களை அடையாளம் கண்டு உருவாக்கியிருந்தது. அரசியல் அமைப்பு விவகாரக்குழு, அரசியல் அமைப்பு உபகுழு, கல்வி, பண்பாடு;, உடல்நலம்;, விளையாட்டுத் துறைகளுக்கான குழு, பொருண்மிய நலன்பேணல் மேம்பாட்டுக்கான குழு, அனைத்துலக ஆதரவு திரட்டலுக்கான குழுவிற்கான புலமையாளர் உபகுழு, ஆதரவுதிரட்டல் உபகுழு, ஊடகங்கள் உபகுழு, இனஒழிப்பு, போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கான குழு, பெண்கள், சிறுவர், மூத்தோர் நலன் பேணும் குழு, வர்த்தக மேம்பாட்டுக் குழு, மாவீரர்கள், போராளிகள் குடும்ப நலன் பேணும் குழு, போர்க்கைதிகளை விடுவிப்பதற்கான குழு, இயற்கை வளங்கள் மேம்பாட்டுக் குழு, இடம் பெயர்ந்தோர் ஏதிலிகள் பற்றிய குழு ஆகியவையே இக் குழுக்களாகும்.
நாம் அமைத்துள்ள வௌ;வேறு குழுக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக ஒவ்வொரு குழுவுக்கும் ஒருங்குகூட்டுனர் (உழnஎநழெச) நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து வேலைத்திட்டங்களுக்கான திட்டமிடல் ஆரம்பிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது.
இதேவேளையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு அரசியலமைப்புக் குழுவினால் உருவாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் அரசிலமைப்பை விவாதித்து ஏற்றுக் கொண்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்பை வடிவமைப்பதே இம்மாத இறுதிப் பகுதியில் கூட்டப்படவுள்ள அரசவையின் இரண்டாவது அமர்வின் நோக்கமாகும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது நிரந்தரக் கட்டமைப்பை உருவாக்கும்போது செயற்பாட்டுக் குழுக்கள் அமைச்சுக்களாக வடிவமைக்கப்பட்டு நிரந்தரக் கட்டமைப்புக்களாக்கப்படும். இவ் இரண்டாவது அமர்வு தொடர்பான மேலதிகத் தகவல்களை மக்களுக்கு இயன்றளவு விரைவில் அறியத் தருவோம்.
இத் தருணத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனர் என்ற நிலையில் இருந்து மக்கள் முன்னால் ஒரு சில விடயங்களைத் தெளிவு படுத்துவது எனது தலையாய கடமையெனக் கருதுகிறேன்.
நாம் எமது அரசியல் பெருவிருப்பான சுதந்திரத் தமிழீழத் தனியரசை அமைப்பதற்கான போராட்டத்தை அரசியல் இராஜதந்திரத் தளத்தில் முன்னெடுப்பதற்காகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கியுள்ளோம். தாயகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த எழுச்சி மிகுந்த விடுதலைப்போராட்டத்துக்கு உறுதுணையாக நாம் முன்னர் விடுதலைப்பணிகளை மேற்கொண்டு வந்தோம். தற்போது தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான அரசியல் வெளியெதுவும் தாயகத்தில் இல்லாதமையால் புலத்தில் வாழும் தமிழீழ மக்களாகிய நாம் உலகத் தமிழினத்தின் பங்குபற்றுதலுடன், நியாயத்துக்காகவும், ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கக்கூடிய உலக சமூகத்தின் ஆதரவுடன் எமது விடுதலைப் போராட்டத்தை அரசியல் இராஜதந்திரத் தளத்தில் முன்னெடுக்க திடசங்கற்பம் ப+ண்டுள்ளோம். நமது செயற்பாடுகள் தாயக மக்களின் அரசியல் வெளியையும் அதிகரிக்க உதவும் எனவும் நாம் உறுதியாக நம்புகிறோம்.
எம்மைப் பொறுத்த வரையில் சுதந்திரத் தமிழீழம் ஒரு தோற்கடிக்கப்பட்ட அரசியல் இலக்கு அல்ல. பல்லாயிரக்கணக்கான மாவீரர்களதும் மக்களதும் குருதியாலும் ஈகத்தாலும் உயிர்ப்ப+ட்டப்பட்ட விடுதலைத்தீ நாம் நமக்கெனத் தமிழீழத் தனியரசினை அமைக்கும்வரை எம் நெஞ்சமெல்லாம் கனன்று கொண்டுதான் இருக்கும். இவ் விடுதலைத்தீயினை அணைத்துவிடுவதற்கு எதிரி பகீரத முயற்சி செய்து வருகின்றமை நாம் அறிந்ததே. எதிரியிடம் இருந்து நம் விடுதலைத்தீயினை பாதுகாப்பதனையும், எமது விடுதலை இலக்கினை முன்னோக்கி நகர்த்துவதனையும் சவால்களாகக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது பணிகளை முன்னெடுக்க உறுதி ப+ண்டுள்ளது. எமது இரண்டாவது அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டபின்னர் நமது பணிகள் வேகம் பெறும்.
நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிரியிடமிருந்து வரும் சவால்களை முறியடித்து, நமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ள இக் காலகட்டத்தில் நாம் எமக்குள்ளேயே முரண்படுவதும், ஆளுக்காள் அவதூற்றுச்சேறு வீசுவதும் எதிரிக்குத் துணைபோகும் நடவடிக்கைகளேயன்றி நம் இலட்சியத்துக்கோ அல்லது நமது விடுதலைப்பயணத்துக்கோ எவ்விதத்திலும் உதவும் நடவடிக்கைகள் அல்ல. இந்த அவதூறுகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மீதும், அதன் இடைக்கால முதன்மை நிறைவேற்றுனராகப் பணிபுரியும் என் மீதும் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பிட்டு விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலர் தமது சொந்த நலன்கள் சார்ந்து மேற் கொள்ளும் கைங்கரியம் இது என்பதனை நாம் அறிவோம். நாம் அனைவரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஜனநாயக விழுமியங்களில் கருத்துச் சுதந்திரம் முக்கியமானது. ஆக்கப+ர்வமான விமர்சனங்கள் எமது பணியைச் செழுமைப்படுத்தும். ஆனால் உண்மைக்குப் புறம்பான அபாண்டங்களை உண்மை போல் திருப்பி திருப்பிக் கூறுவதும், மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்திக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைவதும் போராட்டத்தின் நலன் சார்ந்த அல்லது மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகள் அல்ல.
அண்மையில் தமிழீழத்துக்கு எதிராக நான் கருத்துச் சொல்லியுள்ளதாகவும், சிறீலங்கா அரசுக்காகச் செயற்படுவதாகக் கூறியுள்ளதாகவும் அபாண்டங்கள கூறி; நான் கதைத்ததாகக் கூறும் ஒலிப்பதிவு உலவ விடப்பட்டு கண்டனங்கள் எழுப்பப்;பட்டுள்ளதாக எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது குறித்து மக்களுக்கு உண்மையினைத் தெளிவுபடுத்த வேண்டியது மக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய குழப்பங்களைத் தவிர்க்க அவசியமானது என உணர்கிறோம்.
தமிழ் ஈழம் சாத்தியமானதல்ல என நான் என் வாழ்நாளில் எவருக்கும் கூறவும் இல்லை, நான் அப்படிக் கருதவும் இல்லை. தமிழ் ஈழம் சாத்தியமானது மட்டுமல்ல, அது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயம் என்ற அடிப்படையில் தான் எனது கடந்த கால, தற்போதய அரசியல் வேலைப்பாடுகள் அமைந்திருந்தன, அமைந்து வருகின்றன.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இலண்டனில் இருந்து கதைப்பதாகக்கூறி; சுரேந்திரன் எனும் பெயரில் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய இவருடன் நான் மேற்கொண்ட உரையாடல் எனக்குத் தெரியாமலே பதிவு செய்யப்பட்டு, அதனை இடையிடையே வெட்டி ஒட்டி மோசடியான முறையில் திரிபுபடுத்தப்பட்ட கதையொன்று சோடிக்கப்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். தமிழீழத்துக்கான போராட்ட வடிவம் மாறியுள்ளமை குறித்தும், எமக்கிடையே நடைபெறும் சேறுப+சும் நடவடிக்கைகள் ஊடாக சிறீலங்கா அரசு செய்யும் வேலைகளை நாமும் செய்கிறோம் என்று கண்டனம் வெளிப்படுத்தியும் நான் தெரிவித்த கருத்துக்களை, கணினி மென்பொருளைப் பயன்படுத்தி உரையாடலின் சில பகுதிகளை நீக்கி, சிலபகுதிகளை வேறு இடத்திலிருந்து வெட்டி ஒட்டி இந்த மோசடியினை இவர்கள் மேற்கொண்டுள்ளனர் என்றே நான் கருதுகிறேன். இத்தகைய ஒரு மோசடி தமிழ்த் தேசியத்தின் பேரிலும் தமிழீழ விடுதலையின் பேரிலும் இடம்பெற்றிருப்பது தமிழர் சமூகத்துக்கு பெரும் வெட்கக்கேடானது. மக்களை ஏமாற்றுவதற்காக வௌ;வேறு மோசடிகளின் ஊடாகப் பொய்க்கதைகளைச் சோடிப்பது கருத்துச் சுதந்திரத்தினையும் மக்களின் அறிவாற்றலையும் அவமதிக்கும் மிகவும் அற்பத்தனமான செயற்பாடாகும்.
நான் முன்னர் கூறியபடி எமது தற்போதய போராட்டம் ஜனநாயகத்தின் வழியில் முன்னனெடுக்கப்படுவதாகும். ஜனநாயகத்தின் முக்கிய அம்சங்களிலொன்று வெளிப்படைத்தன்மை (வசயnளியசநnஉல) என்பது. எனவே தனிப்பட்டவர்களோ அல்லது அமைப்புக்களோ தம்மை யாரென மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தித் தமது கருத்துக்களை, கண்டனங்களை வெளியிடுவதுதான் அரசியல் நாகரீகம். அதுதான் அரசியல் துணிவு மிக்க செயலாகும். இதைவிட இத்தகைய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சில இணையத்தளங்கள் கடந்த காலங்களில் நாடு கடந்த அரசாங்கம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடுகளை மக்கள் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளுகிறேன்.
செப்டெம்பர் மாத இறுதியில் நடைபெறும் இரண்டாது அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான நிரந்தரக் கட்டமைப்பின் நிர்வாகத்தை நாம் தெரிவு செய்யவுள்ளோம். இந்த நேரத்தில்; மேற்கூறிய மோசடியான அவதூறுப் பரப்புரை முயற்சிகள் இன்னும் தீவிரமடையவும் கூடும். எனினும் நாம் இந்த மோசமான நடத்தைகளைக் கடந்து ஆரோக்கியமான அரசியற் பண்பாட்டை உருவாக்கியாக வேண்டும். இதனால் இத்தகைய அவதூறுச் சேறுவீசல்களை புறம் தள்ளி ஒதுக்கிவிட்டு நாம் முன்னேறிச் செல்லவே விரும்புகிறோம். இனி வரும் காலங்களில் இத்தகைய அவதூறுகளுக்குப் பதில் அளித்துக் கொண்டிருப்பதனைத் தவிர்த்துக் கொள்ளவும் விரும்புகிறோம். மக்கள் எமது இந்த நிலைப்பாட்டைப் புரிந்து கொள்வார்கள் என நாம் திடமாக நம்புகிறோம்.
நன்றி.

விசுவநாதன் ருத்ரகுமாரன்
இடைக்கால முதன்மை நிiறேவேற்றுனர்.

01 செப்டம்பர் 2010

சிறுமி மீது பாலியல் தொல்லை! மூன்று இளைஞர் விளக்கமறியலில்.



15 வயதுச் சிறுமியை கூட்டாக பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினர் என்கிற சந்தேகத்தின் பேரில் மூன்று இளைஞர்களை எதிர்வரும் இரு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்று மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் நகரத்தில் அமைந்திருக்கும் பேரூந்து தரிப்பிடத்தில் கடந்த 29 ஆம் திகதி மாலை நேரம் பஸ்ஸிற்காக காத்திருந்த சிறுமியை அங்குள்ள மலசல கூடத்துக்குக் கொண்டு சென்று பாலியல் தொல்லை செய்தனர் என்று இம்மூவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மூவரையும் சம்பவ தினம் கைது செய்தவர்களான மன்னார் பொலிஸ் நிலையப் பொலிஸார் இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர். மன்னார் நீதிவான் கே.ஜீவராணி சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்கின்றமைக்கான உத்தரவைப் பிறப்பித்தார்.

இந்தியா மீதான கோபம் யாழ். பொது நூலகத்தில் நடந்த கூட்டத்தில் வெளிப்பட்டுள்ளது.



நேற்று வடபகுதிக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளரை யாழ். பல்கலைக்கழகம் மற்றும் பிற நிறுவனப் பிரதிநிதிகள் அனைவரும் சந்திக்கும் விதமாக யாழ். பொது நூலகத்தில் கூட்டம் ஒன்று நடந்தது. இக்கூட்டத்தில் இந்தியா மீது தமிழ்ச் சமூகம் கொண்டுள்ள அதிருப்தியும் கோபமும் வெளிப்படும் விதமாக பலரும் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா வழங்கிய ஆயுதங்களே பொது மக்கள் பெருமளவில் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாக தமிழ் மக்கள் இன்னமும் கருதுவதாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார். யுத்தத்திற்குப் பின்னராவது இந்தியா ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும் என்ற தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை எனக் குறிப்பிட்ட அவர் மேலும், இந்தியா, இந்திய-இலங்கை உடன்பாட்டை ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
யுத்தத்தின் இறுதித் தருணங்களில் இந்தியா செயற்பட்ட விதம் குறித்து மக்கள் கடும் அதிருப்தியும் ஏமாற்றமும் கொண்டுள்ளனர். இந்தியா யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும், பொது மக்களைக் காப்பாற்றும் என்றே மக்கள் நினைத்தனர். எனினும் இந்தியா அதனைச் செய்யவில்லை. இந்தியா யுத்தத்தின் இறுதித் தருணங்களில் ஆயுதங்களை வழங்கியது. பொதுமக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தது என்று தமிழ் மக்கள் இன்னமும் கருதுகின்றனர். யுத்தத்திற்குப் பின்னர் இந்தியா முக்கியத்தும் வாய்ந்த பங்களிப்புச் செய்யும், தமிழ் மக்களுக்கு நியாயபூர்வமான தீர்வொன்றை வழங்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தும் என தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். ஒருவருடத்திற்குப் பின்னர் தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. நியாயபூர்வமான தீர்வு ஒன்றை முன்வைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதில் இந்தியா தோல்வியடைந்தது. இந்தியா வெறுமனே கண்களை மூடிக் கொண்டிருக்கிறது என்று பேராசிரியர் சிற்றம்பலம் தமது உரையைத் தொடர்ந்தார்.
இவற்றைக் கேட்ட நிருபமா தாம் தமிழர்களின் இந்த ஆதங்கங்களை இந்திய அரசுக்கு எடுத்துரைப்பதாகத் தெரிவித்தார்.

31 ஆகஸ்ட் 2010

மேர்வின் சுற்றவாளியாம்?


பெருந்தெருக்கள் பிரதியமைச்சராக இருந்த மேர்வின் சில்வா குற்றம் எதையும் இழைத்து இருக்கவில்லை என்று அவரை விசாரித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று விசாரணைக் குழு அறிவித்துள்ளது.
டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தில் கலந்து கொள்ளத் தவறிய சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மேர்வின் சில்வா மாமரம் ஒன்றில் கட்டிப் போட்டார் என்கிற குற்றச்சாட்டு தொடர்பாகவே இவ்விசாரணை இடம்பெற்றது.
கட்சித் தலைவருமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தரவின் பேரிலேயே இவ்விசாரணை நடத்தப்பட்டது இவ்விசாரணையின் முடிவில் மேர்வின் நிரபராதி என்றும் சுய விருப்பின் பேரில் சமுர்த்தி உத்தியோகத்தர் சுயமாகவே மரத்தில் கயிற்றால் கட்டிக் கொண்டார் என்றும் ஒழுக்காற்றுக் குழு முடிவுக்கு வந்துள்ளது.
அச்சமுர்த்தி உத்தியோகத்தர் இவ்வாறுதான் விசாரணைக் குழுவுக்கு தெரிவித்துள்ளார் என்றும் தெரிய வருகிறது. ஒழுக்காற்றுக் குழுவின் விசாரணை அறிக்கை ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுட வேண்டாம்.... சுட வேண்டாம் என்று மகேஸ்வரன் கத்தினார் ! நேரில் கண்ட சாட்சிகளில் ஒருவர் மன்றில் தெரிவிப்பு.


ஐ.தே.க வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் படுகொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ இவ்வழக்கை விசாரித்தார். இவ்வழக்கில் அரசுத் தரப்புச் சாட்சிகளாக மூவர் ஆஜராகி சாட்சியம் வழங்கினர்.
மகேஸ்வரனின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய சார்ஜண்ட் தர்மஸ்ரீ பெரேரா, காரைநகரை சொந்த இடமாகக் கொண்டவரான சோதிலிங்கம், கொட்டாஞ்சேனையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்தவரான நவரட்ணம் தினேஸ் சுபராஜா ஆகியோரே சாட்சியம் வழங்கினர்.
சாட்சிகளை அரச சட்டவாதி குமாரரட்ணம் நெறிப்படுத்தினார். இவ்வழக்கின் எதிரி கொலின் வெலண்டன். இவரின் சார்பில் சட்டத்தரணி எஸ்.ஜெயக்குமார் ஆஜரானார்.
அவர் இச்சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்தார். சார்ஜண்ட் தர்மஸ்ரீ பெரேரா சாட்சியம் வழங்கியபோது எதிரி சம்பவ தினம் அணிந்திருந்தார் என்று கூறப்படும் மேலாடையை அடையாளம் காட்டினார்.
எதிரி இச்சட்டையைத்தான் சம்பவதினம் அணிந்திருந்தார் என்று உறுதிப்படுத்தினார்.இம்மேலாடை வழக்கின் தடயப் பொருட்களில் ஒன்றாகும்.
அவர் சாட்சியத்தில் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:-
”எதிரி மீது எனது கைத்துப்பாக்கியால் சுட்டேன். இதனால் எதிரி காயமடைந்தார் அவர் நான் கடமையின்போது கைத்துப்பாக்கியையே பாவித்து வந்துள்ளேன். அதில் ஒரே தடவையில் ஆறு ரவைகளைப் போட்டு சுட முடியும்.
சம்பவதினம் நான் 15 தடவைகள் வரை எனது கைத்துப்பாக்கியால் சுட்டிருப்பேன். எனது கைத்துப்பாக்கியால் சுட்ட குண்டின் காரணமாகவே எதிரி காயமடைந்தார் .” அப்போது குறுக்கீடு செய்த எதிரி தரப்பு சட்டத்தரணி எஸ். ஜெயக்குமார்,
கடந்த தவணை சாட்சியமளித்த போது உங்களது துப்பாக்கிக் குண்டு பட்டு எதிரி காயமடைந்தாரா? என்பது குறித்து தெரியாது என தெரிவித்தீர்கள். தற்போது உங்களது ரிவோல்வர் குண்டினாலேயே எதிரி காயமடைந்தாரென பொய் சாட்சியம் கூறுகின்றீர்கள் என்று வினவினார். இதற்கு பதிலளித்த சாட்சி இல்லை, எனது ரிவோல்வர் குண்டினாலேயே எதிரி காயமடைந்தார் என்று தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து சாட்சியம் வழங்குகையில் எதிரி எந்த ஆயுதத்தால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என்பதை கண்டிருக்கவில்லை என்றும் ஆனால்அவரது துப்பாக்கிச் சூட்டில் எதிரி கையில் காயமடைந்திருந்தமையை கண்டார் என்றும் தெரிவித்தார். எதிரியை சுடப் பயன்படுத்தினார் என்று கூறப்படும் ரிவோல்வரை சாட்சி மன்றுக்கு அடையாளம் காட்டினார். இந்த ரிவோல்வரும் தடயப் பொருட்களில் ஒன்றாகும்.
சோதிலிங்கம் அவரது சாட்சியத்தில் தெரிவித்தவை வருமாறு:-
”2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பல வானேஸ்வரர் ஆலயத்துக்கு காலை 6 மணியளவில் நான் சென்றேன். அங்கு இரண்டு மூன்று மணித்தியாலங்கள் வரை நின்றிருப்பேன். ஆலயத்துக்குள் மகேஸ்வரனும் நின்றிருந்தார். அவரது கடைசி மகள் , பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோருடன் வந்திருந்தார்.
சிறுவயதிலிருந்தே மகேஸ்வரனை நன்கு அறிவேன். எமது ஊரவர் ஆவார். ஆலயத்துக்கு அவர் வந்தால் சுற்றி கும்பிடுகின்றமை வழக்கமாகும். அதன்படி அன்றைய தினமும் அவர் ஆலயத்தைச் சுற்றி வந்தார்.
ஆலயத்தைச் சுற்றி அவர் வந்தபோது நான் அவருக்கு முன்பாக வந்து வெளிவாசலை அடைந்தேன். அப்போது அவர் என்னிலிருந்து 20 அடி தூரத்தில் நின்றிருந்தார். நான் பிரதான வாசலால் வெளியே வந்தபோது துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டன. சுட வேண்டாம்.... சுட வேண்டாம் என மகேஸ்வரன் கத்தியமை எனக்கு கேட்டது.
ஆனால் அவர் யாருடையதாவது பெயரைச் சொல்லி கத்தினாரா? என்பது எனக்கு தற்போது ஞாபகமில்லை . துப்பாக்கிச் சூட்டு சத்தத்தை அடுத்து உள்ளிருந்த பக்தர்கள் முட்டி மோதிக்கொண்டு வெளியே வந்தனர். இதன்போது நானும் வெளியே வந்தேன்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது இரத்தம் தோய்ந்த நிலையில் மகேஸ்வரன் கீழே விழுந்து கிடந்தார்.” நவரட்ணம் தினேஷ் சுபராஜா அவரது சாட்சியத்தில் கூறியவை வருமாறு:- ”10 வருடங்களாக நான் கொழும்பில் தங்கியிருக்கிறேன்.
2008 ஜனவரி மாதம் முதலாம் திகதி நான் சங்கமித்தை மாவத்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தேன். சம்பவதினம் 8 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையில் எமது கடைக்கு முன்னால் ஒருவர் விழுந்து கிடக்கிறாரென தெரிவித்தனர். அவருக்கு நீர் வழங்க வேண்டும் என்று சிலர் கூறினர். நான் தண்ணீர் எடுத்துக்கொண்டு அங்கு சென்றபோது சேட்டும், டவுசரும் அணிந்த ஒருவர் கீழே விழுந்திருந்தார்.
அவரது முகத்தின் ஒரு பக்கத்தில் இரத்தம் காணப்பட்டது. அவர் அணிந்திருந்த சேட்டின் நிறம் எனக்கு ஞாபகமில்லை. அப்போது அவ்வழியால் பொலிஸ் ஜீப் ஒன்று வந்தது. மக்கள் அந்த இடத்தில் கூடி நின்றமையினால் என்ன நடந்தது? என பொலிஸார் கேட்டனர். நாம் ஒருவர் விழுந்து கிடக்கின்றார் எனக் கூறியபோது அனைவரும் விலகிச் செல்ல வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது முச்சக்கர வண்டியில் வந்த இருவர் விழுந்து கிடப்பவர் நன்கு தெரிந்தவர் எனக் கூறி ஆட்டோவில் அவரை ஏற்றிச் சென்றனர். கோவிலில் அமைச்சர் ஒருவருக்கு வெடி வைத்து விட்டனர் என்று பின்னர் சிலர் அவ்விடத்தில் பேசிக் கொண்டனர்.
எமது கடைக்கு முன்னால் விழுந்திருந்தவரை அப்போது நான் அடையாளம் கண்டிருக்கவில்லை.” நவரட்ணம் தினேஸ் சுபராஜாவிடம் நீதிபதி கேள்விகள் கேட்டார். சுபராஜ் பதில் வழங்கினார்.
அவற்றின் தொகுப்பு வருமாறு:-
நீதிபதி: விழுந்து கிடந்தாரென நீங்கள் தெரிவித்திருக்கும் நபர் இந்த நீதிமன்றத்தில் எங்காவது இருக்கின்றாரா?
சாட்சி: (எதிரிக்கூண்டில் இருந்த எதிரியைக் காண்பித்து ) இவர்தான் அவர். நீதிபதி
கேள்வி: அவர் அணிந்திருந்த சேட்டின் நிறம் தெரியுமா?
சாட்சி: அரைக்கை சேட்டே அணிந்திருந்தார். சம்பவம் இடம் பெற்று ஓரிரு தினங்களில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் என்னிடம் விசாரணை நடத்தினர். கடைக்கு முன்னால் விழுந்திருந்த இளைஞனை அடையாளம் காட்ட முடியுமா? எனக் கேட்டனர். இதனையடுத்து குற்றப்புலனாய்வுப் பொலிஸ் தலைமையகத்துக்கு சென்ற நான் அங்கு வாக்கு மூலம் அளித்தேன். எதிரியையும் அடையாளம் காட்டினேன். அத்துடன் விழுந்து கிடந்த நபரை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற மற்றொருவரையும் நான் அங்கு அடையாளம் காட்டினேன் என்று தெரிவித்தார்.
இச்சாட்சியங்களை அடுத்து நீதிபதி இவ்வழக்கை ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். மகேஸ்வரனின் சகோதரர்களான தியாகராஜா பரமேஸ்வரன், தியாகராஜா துவாரகேஸ்வரன், ஆகியோரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

30 ஆகஸ்ட் 2010

போர் குற்றவாளிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள தயாராகின்றது தமிழ் சமூகம்.


எதிர்வரும் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கத்துடன் தனது பரிவாரங்களுடன் ஐ.நா செல்ல திட்டமிட்டுள்ளார் மகிந்தா ராஜபக்சா.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
எதிர்வரும் மாதம் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கத்துடன் தனது பரிவாரங்களுடன் ஐ.நா செல்ல திட்டமிட்டுள்ளார் மகிந்தா ராஜபக்சா.
அவருடன் வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் கொண்ட குழுவும் ஐ.நா செல்லவுள்ளது. இந்த விஜயத்தை தொடர்ந்து மெக்சிக்கோ மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் மகிந்த விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே எதிர்வரும் 22 ஆம் நாள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் மகிந்தாவின் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களை ஐ.நா அலுவலகத்திற்கு வெளியில் மேற்கொள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் மகிந்தாவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என புலம்பெயர் தமிழ் சமூகம் கோரிக்கை விடுத்து வருகின்றது.
ஆனால் மகிந்தாவுக்கு எதிராக சிங்களவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என அரச தரப்பு தெரிவித்துள்ளது.

3வது நாளில் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடை பயணம்.



ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (30.08.2010) 3வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் (28.08.2010) ஜெனீவாவிலிருந்து Nyon வரை 23km தூரம் வந்தடைந்த இவர்கள் நேற்று (29.08.2010) தொடர்ந்து Rolle, Morges ஆகிய பிரதேசங்கள் ஊடாக 42km தூரம் நடந்து Lausanne-Renens பிரதேசத்தை சென்றடைந்தனர். இன்று (30.08.2010) இங்கிருந்து நடைபயணம் தொடரும்.
இவர்கள் செல்லும் பிரதேசங்களில் பல இடங்களில் தமிழ் மக்கள் உற்சாகமளித்து சிற்றுண்டிகளையும் பானங்களையும் வழங்கி ஆதரவளித்ததுடன் பலர் இணைந்து நடந்தும் சென்றனர்.
•இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
•எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.
•மனித உரிமைகள் மதிக்கப்படு;ம் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனிதநேயன் சிவந்தன் கடந்த ஜூலை 23ஆம் திகதி பிரித்தானியாவிலிருந்து மனிதநேய நடைபயணமொன்றை ஆரம்பித்து இம்மாதம் 20ஆம் திகதி தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜெனி வாவிலுள்ள ஐ. நா. சபையிடம் கையளித்தார். அதன் தொடர்ச்சியாக ஒருவார இடைவெளியின் பின் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி மூன்று ஈழ உணர்வாளர்களின் அடுத்தகட்ட மனிதநேய நடை பயணம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர்ச்சியான மனிதநேய நடை பயணத்திற்கு ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

29 ஆகஸ்ட் 2010

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்பு: நியூசிலாந்து உயர் நீதிமன்றம்.



தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை கொண்டதுமான ஒரு அரசியல் அமைப்பாகவே செயற்பட்டுவந்ததாக நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
நியூசிலாந்தில் அடைக்கலத்தஞ்சம் கோரிய விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்ற கப்பலில் முன்னர் பணியாற்றிய ஈழத்தமிழர் ஒருவருக்கு எதிராக நியூசிலாந்து உயர் நீதிமன்றத்தில் நியூசிலாந்து அரசு மேற்கொண்ட வழக்கை நிராகரித்துள்ள நீதிமன்றம் அவருக்கு அடைக்கலத்தஞ்சம் வழங்கப்பட வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை (27) பரிந்துரை செய்துள்ளது.
மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் சுயாட்சி மற்றும் அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை கொண்ட ஒரு அரசியல் அமைப்பாகவே செயற்பட்டுவந்ததாக நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த தவறிய சிறீலங்கா அரசே விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கான பாதையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவங்கள் விடுதலைப்புலிகளை ஒரு அரசியல் அமைப்பாக கருதவே வழியேற்படுத்தியுள்ளது என அது மேலும் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பலில் பணியாற்றியதாக குற்றம் சுமத்திய நியூசிலாந்து அரசு மூன்று ஈழத்தமிழ் மக்களின் அடைக்கலத்தஞ்சக் கோரிக்கையை நிராகரித்திருந்தது. அவர்களில் இருவர் மீண்டும் சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். எனினும் கப்பலில் கப்டனாக பணியாற்றியவர் நியூசிலாந்து அரசின் முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தார்.
இவ்வாறான வழக்குகளில் இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை நியூசிலாந்து அரசு முன்வைத்தபோது அதனை ஏற்றுக்கொள்ள உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
நியூசிலாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளை தடைசெய்யும் பிரேரனைகளை 2000 ஆம் ஆண்டு நியூசிலாந்து அரசு முன்வைத்தபோது, அதற்கு எதிராக நியூசிலாந்தில் வாழும் தமிழ் மக்கள் மேற்முறையீடு செய்திருந்தனர்.
உலகின் மனித உரிமைகள் கோட்பாடுகளின் அடிப்படையில், ஒரு மனிதன் தனக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக போரடமுடியும் என்பதே இந்த மேற்முறையீட்டின் அடிப்படையாக கொள்ளப்பட்டது. அதன் பின்னர் நியூசிலாந்து அரசு விடுதலைப்புலிகளை தடைசெய்யும் தனது திட்டத்தை கைவிட்டிருந்தது.
2000 ஆம் ஆண்டு நியூசிலாந்து மக்கள் மேற்கொண்ட போராட்டத்தின் பலன் தற்போதைய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் மீண்டும் ஒலித்துள்ளதாக நியூசிலாந்தை தளமாக கொண்ட தமிழ் செயற்பாட்டாளரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியுமான திரு ஏ தேவாரஞ்சன் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.

எனது மார்பில் இராணுவத்தினர் சிகரெட்டால் சுட்டனர் - கனடா சென்றுள்ள பெண்.


கடந்த 13 ஆம் திகதி வன்கூவரை அடைந்துள்ள எம்.வி சன் சீ கப்பலில் சென்ற அகதிகளுக்கான விசாரணையை கனேடிய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இவர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட பெண்ணொருவர் இலங்கை இராணுவத்தினர் தமக்கு செய்த சித்திரவதைகளை வெளித்தெரிவித்துள்ளார். தமது கணவரை இராணுவத்தினரே சுட்டுக்கொன்றனர் எனத் தெரிவித்த அவர், தமது மார்பில் இலங்கை இராணுவத்தினர் சிகரெட்டுகளால் சூடு வைத்தனர் எனத் தெரிவித்தார். இப்பெண்மணியின் கணவர் எப்போது கொல்லப்பட்டார் என்பது பற்றியோ இச்சித்திரவதைகள் எப்போது நடந்தன என்பது பற்றியோ குறிப்பிடப்படவில்லை.
இப்பெண்மணி சார்பில் மாலினி டயொனிசியஸ் என்ற சட்டத்தரணி ஆஜராகி இருந்தார். குறித்த பெண்மணி தமக்கு நேர்ந்த அவலங்களைக் கூறியபோது, சட்டத்தரணி அவர்கள் அவற்றை மொழிபெயர்த்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். மேலும், சித்திரவதைகளுக்கு உள்ளான இப்பெண்மணி ஒரு ஆஸ்த்மா நோயாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாணவிகளிடம் காடைத்தனம் புரியும் இளைஞர்கள்.

மலேசியாவில் ஒரு வாகனத் தரிப்பிடத்தில் வைத்து இரு இளம் பெண்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி அடித்து உதைக்கும் காட்சிகள் வீடியோ மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காடைத்தனம் புரியும் இளைஞர்கள் தமிழர்கள் என்பதால்,தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

28 ஆகஸ்ட் 2010

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த நபரை அடித்துக் கொன்ற பெண்.



நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த ஆண் ஒருவரை பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்த சம்பவம் புத்தளம் மாவட்டத்தின் லுனாவில சிறியகம்பல எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி விதவைப்பெண் பொலிஸாரிடம் நேற்று காலை சரணடைந்துள்ளார்.
கணவர் இறந்தபின் இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த தனக்கு தொந்தரவு ஏற்படுத்துவதற்காக வீட்டிற்குள் வந்த இந்நபரை, தான் தாக்கியதாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

யாழில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.



யாழ் கொட்டடிப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 42 வயதுடைய தாய் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
யாழ் நகர பாடசாலையில் கல்வி கற்கும் இந்தப் பெண்ணின் சிறிய மகள் வீதியில் கிடந்த பொருள் ஒன்றை எடுத்துச் சென்று வீட்டின் அடுப்பில் போட்டதாகவும் அந்தப் பொருள் வெடித்ததனால் 42 வயதுடைய சிவரட்ணேஸ்வரி என்ற தாய் கடும் காயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்ததாக ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது யுத்தகாலத்தில் பண்ணைப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருளாக இருக்கலாம் எனத் தெரிவிக்கும் காவற்துறையினர் மேலதிக விசாரனைகளைத் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 ஆகஸ்ட் 2010

பிரிட்டன் பிரஜைகளிடம் 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரி யாழில் படுகொலை அச்சுறுத்தல்.

பிரித்தானியாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் விடுமுறையை கழிக்க வந்த தமிழ் குடும்பம் ஒன்று பெரிய பிரச்சினையில் மாட்டுப்பட்டுள்ளது. இன்றைய யுத்தம் அற்ற சூழலில் யாழ்ப்பாணத்துக்கு வந்து உறவினர்களையும் கண்டு கொள்ளலாம், நல்லை முருகனையும் தரிசித்து செல்லலாம் என்று ஏராளமான எதிர்பார்ப்புக்களுடன் சுமார் 15 வருடங்களுக்குப் பின் புறப்பட்டு வந்திருந்த வடமராட்சி- மாசனையைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் பிள்ளைகள் மூவர் கொண்ட குடும்பம் ஒன்றே இவ்வாறு பேராபத்தில் சிக்கி உள்ளது.
ஓரிரு வாரங்களுக்கு முன் கொழும்பை வந்து அடைந்த இவர்கள் யாழ்ப்பாணம் செல்கின்றமைக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற உரிய அலுவலகத்துக்குச்சென்றனர். ஆனால்அந்நடைமுறை நீக்கப்பட்டு விட்டது என அங்கு தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தை வந்து அடைந்த அவர்கள் வடமராட்சி- கற்கோவளத்தில் உள்ள உறவினர்களின் வீடு ஒன்றுக்கு சென்று தங்கி இருந்தனர்.
இவர்களை மோப்பம் பிடித்த மர்மநபர்கள் இருவர் கடந்த திங்கட்கிழமை அவ்வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறாமல் வந்திருக்கின்றனர் என்று மிரட்டினர். கடவுச்சீட்டைத் தரக் கோரினர். மறுத்தபோது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தி ஐந்து கடவுச்சீட்டுக்களையும் பறித்தெடுத்தனர்.
தொலைபேசி இலக்கம் ஒன்றைக் கொடுத்துவிட்டு சென்றனர்.தொலைபேசியில் மதியம் தொடர்பு கொண்டபோது ஐவருக்கும் தலா 10 இலட்சம் ரூபாய்ப்படி இரு நாட்களுக்குள் 50 இலட்சம் தந்து விட்டு கடவுச் சீட்டைப் பெறக் கோரினர்.தவறினால் கொல்லப்படுவர் என்றும் மிரட்டினர்.அவர்கள் கொடுத்த தவணை நேற்றுடன் முடிந்து விட்டது.
இந்நிலையில் இக்குடும்பத்தினர் கற்கோவளம் பொலிஸ் நிலையத்தில் கப்பம் கோரல், கொலை அச்சுறுத்தல் ஆகியன தொடர்பாக முறையிடச் சென்றபோது பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க முதலில் தயங்கினர்.பின் ஏற்றனர். குடும்பத் தலைவர் அத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மிரட்டல் பேர்வழிகளுடன் பேசினார்.
அப்போது பொலிஸ் நிலையத்தில் இருந்து பேசுகின்றமை தெரியும் என்றும் முறைப்பாட்டை வாபஸ் பெற்று விட்டு வந்து விட வேண்டும் என்றும் பணத்தைத் தரா விட்டால் கொல்லப்படுவார்கள் என்றும் அனைத்தையும் அருகில் இருந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் மறுமுனையில் மிரட்டல் பேர்வழி ஒருவர் கூறி இருக்கின்றார்.
பொலிஸார் தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது. தற்போது இக்குடும்பத்தினர் மரண அவஸ்தையில் அந்தரித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

பதில் சொல்லப்படாத கேள்விகள் பல உண்டு:ஹோம்ஸ்.


தனது பதவிக்காலம் முடிவடையும் தருவாயில் இருக்கும் ஐ.நாவுக்கான மனிதாபிமான தூதுவர் ஜோன் ஹோம்ஸ் அவர்கள் இறுதியாக பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை இன்று(26.08.2010) நடத்தியுள்ளார். அதில் அவர் பல நாடுகள் குறித்து தனது கருத்தைத் தெரிவித்தார். நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ஜோன் ஹோம்ஸ், இலங்கை அரசை சாடியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற போரைப் பொறுத்தவரை பல விடைகாணாத கேள்விகள் இன்னும் பாக்கியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:
தான் அதிகாரியாக கடமையாற்றிய காலகட்டத்தில், இலங்கை பிரச்சனையாலேயே தாம் பெரும் அழுத்தங்களை எதிர்நோக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போர் நடைபெற்ற காலகட்டத்தில் ஐ.நா சபை மீது உலகநாடுகள் பல அழுத்தங்களைப் பிரயோகித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகளாவியரீதியாக புலிகளும் அதன் சகோதர அமைப்புகளாலும், இலங்கை அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பரப்புரைகளால், இலங்கை அரசு மீது தாம் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைதோன்றியதாகவும் தெரிவித்த அவர், புலிகளுக்கு எதிராக இலங்கை அரசும் கடும் பரப்புரைகளை மேற்கொண்டது என்று கூறியுள்ளார்.
யுத்தத்திற்கு பின்னர் தாம் எதிர்பார்த்த அளவு நிலமை முன்னேறவில்லை என்பதே தாம் பெரிதும் ஏமாற்றம் அடைந்த விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு மக்கள் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தியது, வகைதொகையின்றி மக்கள் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது, மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ளோர், போன்றவை இன்னும் கேள்விக்குறியாகவும், விடை காணப்படாதவையாகவுமே இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மூதூரில் 17 தொண்டு நிறுவன ஊழியர்கள் கொலைசெய்யப்பட்டது தொடர்பாக இலங்கை அரசு இன்னும் சரியான விசாரணைகளை நடத்தவில்லை எனவும் அவர் தனது கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.
தனது பதவிக் காலத்தில் பல தடவைகள் இலங்கை சென்றுவந்த ஜோன் ஹோம்ஸ் அவர்கள், இறுதி யுத்தத்தின்போது, யுத்தத்தை நிறுத்த பாடுபட்டதோடு, புலித்தேவன், மற்றும் ப.நடேசன் ஆகியோரிடம் தொலைபேசியில் உரையாடியும் உள்ளார். இலங்கை அரசு பல குற்றச்செயல்களை இழைத்திருப்பதை, இவர் நன்கு அறிந்திருந்தாலும் ஐ.நாவின் அதிகாரியாக தாம் இருப்பதாலேயே, இவர் அதனை கடுமையாகச் சாடவில்லை என்பதே உண்மையாகும்.

26 ஆகஸ்ட் 2010

சிவந்தன் ஏந்திய தீ தொடர்ந்தும் எரிகிறது.



சிவந்தன் ஏந்திய தீ மீண்டும் தொடர்கிறது. முருகதாசன் திடலில் இருந்து பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம்.தமிழ் மக்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கின்ற விடுதலைத் தீ அணையாது. மீண்டும்; தொடங்குகிறது 842கி.மீற்றர் நடைப்பயணம்.
எதிர்வரும் 28.08.2010 சனிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனக்கோரி, ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் அமைந்துள்ள முருகதாசன் திடலில் இருந்து, பெல்ஜியம் ஐரோப்பியத் தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம் தொடரப்படவுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்ததிலிருந்து சிறீலங்கா அரசாங்கத்திற்கும், சிங்கள மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் ஒரு வகையில் உற்சாகம் வழங்கி உதவி புரிந்த ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகம் நோக்கிய நடைப்பயணம்.
இந்த நீதிப் பயணத்தை முதியவர் ஜெகன் (அவுஸ்திரேலியா) அவர்களும், தேவகி அவர்களும் முன்னெடுத்துள்ளனர்.
நீதிப்பயணமானது 28.08.2010 அன்று ஜெனீவாவில் ஆரம்பித்து, பிரான்ஸ், ஜேர்மன், லக்சம்பேர்க் ஊடாக 26.09.2010 தியாகதீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் நினைவு நாளன்று பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத் தலைமையக முன்றலில் நிறைவுக்கு வரவுள்ளது.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” என்றார் எங்கள் திலீபன் அண்ணா.
உலகத் தமிழ் உறவுகளே!
அனைவரும் ஒன்று திரளுவோம்!
நடைப்பயணத்தில் நம்மையும் ஒருவராக இணைத்துக் கொள்ளுவோம்.

தேசிய பாதுகாப்பு தடை சட்டம் வெறும் வாய் பேச்சுக்காக போட முடியாது – தியாகு.



சீமானை தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி நமது தரப்பு நியாயங்களை இந்த அறிவுரை கழகத்திற்கு எடுத்து வைத்திருக்கிறோம். அறிவுரை கழகம் என்பது நீதி மன்றம் அல்ல. நமது தரப்பு நியாயங்களை விசாரித்து அரசுக்கு தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தில் கைது செய்தது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதா இல்லையா என்று பரிந்துரை செய்வார்கள். தவறு என்று கூறி விடுதலை செய்ய சொல்லலாம், அல்லது உத்திரவை செயல் படுத்த சொல்லியும் சொல்லலாம். இதுவே இந்த அறிவுரை கழகத்தின் பொறுப்பு.
2009 ல் சீமானை கைது செய்யும் பொழுதும் இப்பொழுது இருக்கும் இதே மூன்று நீதியரசர்கள் தான் அன்றும் இருந்தார்கள். கடந்த ஆண்டும் இதே போல் தான் நாங்கள் அவர்களிடம் எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து கூறினோம் அதற்கு பிறகு உயர் நீதி மன்றம் அவரை விடுதலை செய்தது. அன்று உயர் நீதி மன்றம் என்ன காரணத்திற்காக விடுதலை செய்ததோ அந்த காரணத்தை சரியாக ஆராயாமல் அரசாங்கம் அதே காரணத்தின் அடிப்படையில் இந்த உத்திரவை பிறபித்து கைது செய்திருக்கிறது.
அன்று என்னென்ன குறைகளுக்காக விடுதலை செய்யப்பட்டாரோ, அதே காரணங்கள் இந்த வழக்கிலும் அப்படியே உள்ளன. மேலும் கூடுதல் மாநகர காவல் ஆய்வாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமானை கைது செய்ய சொல்லி உத்திரவு பிறபித்திருக்கிறார். அவருக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்ய சொல்லும் அதிகாரம் இல்லை. மாநகர காவல் ஆய்வாளர் அல்லது மாவட்ட நீதியரசர் மட்டுமே இந்த உத்திரவை பிறப்பிக்க முடியும். அதற்க்கு ஆதரவாக 1965 ல் பிறபிக்கப்பட்ட உச்ச நீதி மன்ற உத்திரவின் படிவத்தை கொடுத்துள்ளோம்.
தேசிய பாதுகாப்பு தடை சட்டம் வெறும் வாய் பேச்சுக்காக போட முடியாது. ஒருவேளை அவ்வாறு பேசுவதால் ஏதாவது வன்முறை நிகழ்திருந்தால் வேண்டுமானால் பாதுகாப்பு தடை சட்டம் போடலாம். ஆனால் சீமான் பேசியதால் இதுவரை எந்த வன்முறையும் நிகழவில்லை என்ற அடிப்படையிலேயே கடந்த முறையும் விடுதலை செய்தார்கள் அதன் அடிபடையிலேயே இந்த முறையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வாதிட்டோம் அதற்கு நீதியரசர்கள் சீமான் பேசியதால் கடையை மூடிவிட்டு மக்கள் அச்சமடைந்து ஓடிவிட்டார்கள் என்று அரசாங்கத்தின் தரப்பில் தெரிவித்து இருக்கிறார்களே என்று கேட்டனர். அதற்கு நாங்கள் சீமான் சிங்களவனை பற்றி மட்டும் தானே பேசினார். இதுவரை எந்த சிங்களவனும் பயந்து கடையை மூடிவிட்டு ஓடவில்லையே. எந்த சிங்கள மாணவனும் இதுவரை தாக்கப்படவில்லையே. அருகில் இருந்த நகலகம் கடை வைத்திருப்பவர் கடையை மூடி விட்டு சென்றதை ஒரு காரணமாக சொல்லமுடியாது என்ற வாதத்தை அவர்களும் ஏற்று கொண்டனர். பிறகு இந்திய அமைதி படையை பற்றி பேசியதை பற்றி கேட்டனர். அதற்க்கு சீமான் நாம் பேசியது உண்மைதானே இந்திய அமைதிப்படை ஈழ தமிழர்களை கொன்று குவித்தது உண்மை என்று முதல்வர் கருணாநிதி அவர்களே பேசியிருக்கிறார்களே என்று கூறினார். நானும் ராசீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதியரசர்கள் இந்திய அமைதி படை தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்க்காகதான் அந்த பழி வாங்கும் நடவடிக்கை அமைந்தது என்று உச்ச நீதி மன்ற தீர்ப்பிலேயே கூறியிருக்கிறார்கள் . இதற்காக தேசிய பாதுகாப்பு தடை சட்டம் போட முடியாது என்று வாதிட்டோம். இதை உயர் வழக்காடு மன்றத்தில் தெரிவித்தீர்களா என்று கேட்டனர் தெரிவித்து இருக்கிறோம் என்று சொன்னோம். பிறகு அவர்களிடம் உயர் நீதி மன்ற விசாரணை வரை நீங்கள் தாமதிக்க வேண்டாம் உங்கள் விசாரணையிலேயே நீங்கள் இவரை விடுவிக்க அரசுக்கு பரிந்துரைக்கலாமே என்று கூறினோம்.
அதற்க்கு அவர்களாலும் ஆவன செய்வதாக கூறியிருக்கிறார்கள் என்றார்.

25 ஆகஸ்ட் 2010

இந்து ஆலயத் திருவிழாவை நடத்த வேண்டாமென மிரட்டல்.


மட்டக்களப்பில் தமிழ் மக்களால் பாரம்பரியமாக திருவிழாக்கள் நடாத்தப்பட்டு வழிபட்டு வரும் ஆலயமொன்றின் திருவிழாவை நடத்த வேண்டாம் என்று கூறி பொலிஸாரும் தொல்பொருள் ஆய்வு அதிகாரியும் ஆலயத் தலைவரை அச்சுறுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கரடியனாறு குசலாந்தமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் மூன்றாம் திகதி ஆரம்பமாக இருக்கும் நிலையில் குறித்த ஆலயத்தின் தலைவரும் நிர்வாக சபையினரும் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக இந்த ஆலயத்தின் நிர்வாக சபையினர் தமிழ். சி. என். என் செய்திச் சேவைக்கு தெரிவித்த விடயங்கள் வருமாறு, வருடா வருடம் ஆலய உற்சவம் இடம் பெறுவது வழமை.
இம் முறையும் வருடாந்த தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தில் உற்சவ ஆயத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தோம். அப்போது இங்கு பொலிஸாருடன் வந்த ஒருவர் தன்னை தொல் பொருள் ஆய்வுத் திணைக்கள அதிகாரி பண்டார என்று அறிமுகம் செய்து கொண்டு வந்தார். அவர் ஆலயத்தில் உற்சவம் நடத்த முடியாது.
இங்கு தொல்பொருள் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என கட்டளையிட்டுதுடன் ஆலயத்தில் எவ்வித புனரமைப்பு வேலைகளும் செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆலயத் தலைவரான என்னை பொலிஸார் அழைத்துச் சென்று திருவிழா செய்தால் 10 வருடம் சிறையில் அடைப்போம் என்று எச்சரித்தார்கள்.
வருடா வருடம் பாரம்பரியமாக திருவிழா செய்து வரும் எம் மக்களிடையே இச் செயற்பாடானது கடும் கவலையையும் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டும் இடையூறுகள் வந்தன. இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதற்கான பதாதைகளும் அச்சடிக்கப்பட்டுவிட்டது. இத் திருவிழாவுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழமை. இவ் வேளையில் இவர்கள் இப்படிக் கூறுவதன் நோக்கம் என்ன என்று புரியவில்லை. நாங்கள் இவ் விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர். நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
அமைச்சர்கள். மாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவித்துள்ளோம். இதற்குரிய பதிலை எதிர் பார்த்துள்ளோம் . இப் பிரதேசத்தில் மக்கள் குடியேறியதிலிருந்து இந்த ஆலயத்தை மக்கள் தரிசித்து வருகின்றனர். எனவே திருவிழாவுக்கான நாட்களும் நெருங்குவதால் இந்தப் பிரச்சினைக்கு முடிவைப் பெற்றுத்தர உரிய அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்கள்.
இவ் ஆலயம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கரடியனாறு கிராமத்தில் மலை ஒன்றின் மேல் அமைந்துள்ளது. இங்கு பண்டைய கால எச்சங்கள் காணப்படுகின்றது. இந்த மலையில் முருகன் வேல் உருவமும் செதுக்கப்பட்டுள்ளதுடன், குகைகளும் கற் தூண்களும், பழமை வாய்ந்த கட்டிடங்களின் எச்சங்களும் உள்ளன. இத் தொன்மை வாய்ந்த ஆலயத்தை மக்கள் பக்தியுடன் தரிசித்து வருகின்றனர்.

பேச்சை மாற்றிய மகிந்த,அதிர்ச்சியில் ரணில்.



சிறீலங்கா ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சி தலைவர் ரணி;ல் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடந்த திங்கட்கிழமையன்று மூன்றாவது முறையாகவும் சந்திப்பு இடம்பெற்றது.
ஏற்கனவே நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டிருந்தது.
எனினும் இதற்கு ஜனாதிபதி இதற்கு இணங்கவில்லையெனவும் திங்கட் கிழமை சந்திப்பின்போது ஏற்கனவே ஏற்றுக் கொண்டதை இப்போது மாற்றியுள்ளதாகவும் தாம் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வருவதற்கு உதவவேண்டும் என ஜனாதிபதி ரணிலிடம் கோரியதாகவும் அப்போது ரணில் விக்கிரமசிங்க அதிர்ச்சிக்குள்ளானதாகவும் அவர் எந்தக்கருத்தையும் வெளியிடவில்லை என ஐக்கிய தேசியக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

24 ஆகஸ்ட் 2010

மதுபோதையில் துன்புறுத்தினார்,மனைவி தற்கொலை.


நன்றாகக் குடித்துவிட்டு மது போதையில் வீடு வந்த கணவன் அன்றைய தினம் உணவு தயாரிக்க தாமதமாகியதால் மனைவியை அடித்து துன்புறுத்தினார்.
இதனையடுத்து ஆத்திரமும் விரக்தியுமுற்ற ஒரு பிள்ளையின் தாயான இளம் மனைவி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தப் பரிதாபச் சம்பவம் கிளிநொச்சி மாவட்டம், வட்டகச்சி மாயவனூர் கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று மாலை இடம்பெற்றது இச்சம்பவத்தில் ஜெகதீபன் தயந்தினி (வயது 21) என்பவரே இவ்வாறு இறந்துள்ளார்.
இறந்தவரது மரண விசாரணையை கிளிநொச்சி திடீர் மரண விசாரணை அதிகாரி டாக்டர் கே. திருலோகமூர்த்தி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்து மேற்கொண்டார். பிரேத பரிசோதனையை வைத்திய அதிகாரி டாக்டர் இரத்தினம் சிவானந்தன் நடாத்தினார்.
மரணமான பெண்ணின் கணவர் பாலசுப்பிரமணியம் ஜெகதீபன் (வயது 26) தாயார் திருமதி தேவராசா செல்வராணி (வயது 47) மாமியாரான பாலசுப்பிரமணியம் பாலேஸ்வரி (வயது 59) ஆகியோர் மரண விசாரணையின்போது சாட்சியமளித்தனர். மரண விசாரணை அதிகாரியினால் தற்கொலை மரணம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

பஷில் ராஜபக்ஷவிற்கு எதிர்ப்பு,நாம் தமிழர் கைது.



சிங்களத்தின் சிங்கக்கொடியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் இயக்கத்தினர் கைது,போர் குற்றவாளி பசில் ராஜபக்சே இன்று இந்திய வருவதை கண்டித்து மதுரை மாவட்ட நாம் தமிழர் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது .இதில் சிங்களத்தின் கொடியும் பசில் ராஜபக்சே புகைப்படமும் தீக்கிரை ஆக்கப்பட்டது இதன் போது 15 நாம் தமிழர் இயக்கத்தோழர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் .

கைதானோர் விவரம்

1. வெற்றி குமரன், மதுரை மாவட்ட பொறுப்பாளர், நாம் தமிழர்
2. செந்தில்
3. செங்கண்ணன்
4. சிவா
5. நாகராஜன்
6. தமிழ் குமரன்
7. பிரபாகரன்
8. காந்தி
9. பாண்டியராஜன்
10. முத்தையா
11. சண்முகம்
12. முத்துகுமரன்
13. பாண்டியன்
14. சுதாகரன்
15. ராஜ் குமார்.

23 ஆகஸ்ட் 2010

யாழ். மருத்துவ பீட மாணவன் சுன்னாகத்தில் சடலமாக மீட்பு!



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பயிற்சி பெற்றுவரும் யாழ். மருத்துவபீடத்தின் 3ஆம் ஆண்டு மாணவனான சாரங்கன் சுன்னாகத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் பயிற்சிக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் 7ஆம் இலக்க நோயாளர் விடுதியில் கடமையாற்றி வருகின்றார்.
குறித்த மாணவன் தாயாருடன் வாழ்ந்து வந்ததாகவும் தாயார் கடந்த சில நாள்களுக்கு முன்னர் வெளிநாட்டில் கல்வி கற்ற மற்றுமொரு சகோதரனின் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றுள்ள நிலையில் இவர் தனித்து வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக குறித்த மாணவனின் நடமாட்டம் இல்லாததைக் கண்டு அவரது வீட்டிற்கு வந்த உறவினர்கள், வீட்டில் மின்விளக்குகள் எரிவதுடன் துர்நாற்றம் வீசுவதையும் உணர்ந்து கொண்டு வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது இவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டனர். மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தின் பணிப்புரைக்கமைய சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் கதவைத் தட்டி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் படையினர்!



மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை அந்தோனியார் புற கிராம மக்கள் அப்பகுதியில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரால் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அம் மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
மேற்படி கிராமத்தில் இதுவரை 450 குடும்பத்தினர் மீள் குடியேற்றம் செயப்பட்டுள்ளனர். அந்தக் கிராமமானது 212 வது இராணுவ படைப்பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இக்கிராமங்களில் இரவு நேரங்களில் பெண்கள் தனியாக உள்ள வீடுகளுக்குச் செல்லும் படையினர் பாலியல் சேட்டை புரிவதற்கு வீட்டுக் கதவை தட்டுதல், திடீர் சோதனை என்ற பெயரில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைதல் போன்ற செயற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதால் நிம்மதியாக இரவில் நித்திரை கொள்ள முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் விரக்தியுடன் தெரிவிக்கின்றனர்.
அந்த இடங்களுக்கு மேஜர் விஜயரட்ன என்னும் இராணுவ அதிகாரி பொறுப்பாக இருக்கிறார்.அவரிடம் இந்த விடயம் தொடர்பாக அம்மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ் வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சரத் பொன்சேகாவிற்கு எதிரான இரண்டாவது யுத்த நீதிமன்ற விசாரணைகள் இன்று ஆரம்பம்.



முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிரான இரண்டாவது யுத்த நீதிமன்ற விசாரணைகள் இராணுவத் தலைமையகத்தில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நடத்தப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.
இராணுவத்திற்காக ஆயுதங்களை கொள்வனவு செய்த போது சரத் பொன்சேகா ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊழல் மோசடி தொடர்பில் இன்றைய தினம் சிலரிடம் சாட்சியங்கள் பதியப்பட உள்ளதாக தெரியவருகிறது.
இராணுவம் யுத்த நீதிமன்றின் தலைவராக மேஜர் ஜெனரல் எம்.ஜீ.பீரிஸ் கடமையாற்றுகின்றார். இலங்கையில் தனக்கு நியாயம் கிடைக்காது என சரத் பொனசேகா அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

22 ஆகஸ்ட் 2010

மீள் குடியேற்றப்பட்ட விதவைப்பெண்கள் பெரும் அவலத்தில்.



மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய மடு ஈச்சலவக்கை கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இங்குள்ள விதவைக் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஈச்சலவக்கை கிராமத்தில் தற்போது 88 குடும்பங்கள் மீள் குடியேறியுள்ளனர்.
அவர்களில் 35 விதவைக் குடும்பங்களும் உள்ளனர். இவர்களில் பலர் தற்காலிக கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களின் வருமானத்தை தேடிக் கொள்வதில் பெரும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
நடந்து முடிந்துள்ள போரினால் கணவனை இழந்து பிள்ளைகளை இழந்து பல மாதங்களாகியும் எந்தவித மீட்சியுமில்லாமல் இன்னமும் மீள வழியில்லாமல் தவிக்கிறார்கள்.
இவர்களில் பலர் உளவியல் ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 35 விதவைக் குடும்பங்களும் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தங்களது ஒவ்வொரு நாள் வாழ்வையும் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தினமும் பட்டினியோடு நிரந்தர வருமானமும் இல்லாமல் தவிக்கும் தங்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்று குற்றம் சாட்டுகின்றார்கள். பல தரப்பில் இருந்தும் தம்மை வந்து பதிந்து கொண்டு செல்வதாகவும் ஆனால் தமக்கு எவ்வித உதவிகளும் செய்யவில்லை எனவும் அம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளமையால் தங்களது குடிசைகளும் ஒழுகுவதாக அம்மக்கள் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

தமிழகத் தமிழர்களை குழப்ப கே,பி,மூலம் சதி செய்யும் சிங்கள அரசு.



சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கே.பி.யின் மூலம் புலம்பெயர் தமிழர்களை குழப்பிய சிறீலங்கா அரசானது அடுத்தப்படியாக கேபியின் மூலம் தமிழகத்தமிழர்களை குறிவைத்துள்ளது.
இது தொடர்பாக சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கே.பி. அளித்து ள்ள பேட்டி:
தமிழகத்தின் ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வை.கோவின் நடவடிக்கைகளினால் இறுதி நேரத்தில் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போனதாக சிறீலங்காவின் கட்டுப்பாட்டிலுள்ள குமரன் பத்மநாதன் அறிவித்துள்ளார்.
இந்திய மத்திய அரசாங்கம் போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த முனைப்பு காட்டிய போதிலும், வை.கோ அந்த யோசனைத் திட்டத்தை நிராகரித்தார் என கேபி குற்றம் சாட்டினார்.
போர் உச்சக் கட்டத்தை அடைந்த சந்தர்ப்பத்தில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பானா பா.நடேசன் இந்தியாவின் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக குமரன் பத்மநாதன் மேலும் தெரிவித்தார்.
அரசியல் தீர்வினை ஏற்றுக்கொள்ளல் மற்றும் ஆயுதங்களை களைந்து சரணடைதல் ஆகிய கோரிக்கைகளுக்கு உடன்பட்டால் போர்நிறுத்தத்தை அமுல்படுத்த முடியும் என இந்தியா அறிவித்திருந்ததாகவும் இப்போது சிறீலங்காவின் கட்டுப்பாட்டிலுள்ள குமரன் பத்மநாதன் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் இறுதி நேரத்தில் ஒத்துழைக்கவில்லை என சிறீலங்காவின் கட்டுப்பாட்டிலுள்ள குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

21 ஆகஸ்ட் 2010

பொலிஸ் உத்தியோகஸ்தரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற நபர்கள்.



பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் துப்பாக்கியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலத்திற்கு முன்னால் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்த போது, அவர்களில் ஒருவரின் துப்பாக்கியை பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மாலை. 6.30 மணியளவில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு பாதுகாப்புக் கடமைக்காக சென்றுகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் துப்பாக்கியே பறிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. பொலிஸ் சார்ஜன்ட் செனவிரட்ன என்பவரின் துப்பாக்கியே இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியை பறித்த மோட்டார் சைக்கிள் நபர்கள் புகையிரத நிலைய ஒழுங்கைக்கூடாக தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு ரயில் நிலையப் பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

19 ஆகஸ்ட் 2010

எம்.வி.சன்.சி கப்பலில் வந்த குழந்தையின் தலையில் குண்டின் சிதறல்கள்!



எம்.வி.சன்.சி கப்பலில் கடந்த வாரம் கனடாவை வந்தடைந்திருக்கும் மக்கள் கூட்டத்திலிருந்த 2 வயது நிரம்பிய குழந்தையின் தலையில் குண்டின் சிதறல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த விடயத்தை அதிகாரிகள் தமது கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளார்கள். கப்பலில் வந்த மற்றொரு பெண் தனது கணவரின் சிறுநீரகத்தில் ஷெல் துண்டுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சம்பவங்கள் அகதிநிலை கூறி வந்துள்ள மக்கள் போர் இடம்பெற்ற பகுதிகளிலோ அல்லது அதற்கு அருகாமையிலேயோ இருந்திருப்பதை நிரூபிக்கின்றன.
இன்னும் ஏராளமான இப்படியான துயரச் சம்பவங்கள் தொடர்ச்சியான விசாரணையின் மூலம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விடயங்களை கனடியத் தமிழர் பேரவையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி.



தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையின் பொருள்களுக்கு இனி ஜிஎஸ்பி எனப்படும் வர்த்தகச் சலுகைகள் நிறுத்தப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.இலங்கையில் இருந்து இறக்குமதியாகி ஐரோப்பியச் சந்தையில் விற்கப்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.பி. என்றழைக்கப்படும் வர்த்தகச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வந்தது.
இதன்படி, இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதித் தீர்வைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மானியம் அளித்துவிடும். இதனால் இலங்கைப் பொருட்களை ஐரோப்பிய சந்தையில் குறைந்த விலையில் விற்கும் வாய்ப்பு கிடைத்தது.
இலங்கையைப் பொறுத்தவரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செய்யப்படும் ஏற்றுமதி அளவு ஆண்டிற்கு 3.7 பில்லியன் டொலர்களாகும். இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 20 சதவீதம். ஆனால் இந்த ஏற்றுமதியை நேற்று முதல் அந்நாடு இழந்துள்ளது.
இதனால் அந்த நாட்டின் நிறுவனங்களுக்கு, பொதுவாக ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு, பெரும் இழப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
இலங்கையின் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு பெறும் 3 பில்லியன் இலாபத்தில் 500 மில்லியன் இழப்பு, அதாவது 6ல் ஒரு பங்கு இழப்பு ஏற்படும் என்று அந்நாட்டு ஏற்றுமதி வர்த்தக அமைப்பு கூறியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய நெருக்கடியாகும்.
ஏற்கனவே அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மிகக் குறைந்த இலாப அளவுடன்தான் நடைபெறுகின்றன.
தமிழர் அமைப்புகள் செய்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, பல நிறுவனங்கள் இலங்கையின் பொருள்களை வேண்டாம் என்றும் மறுத்து வருகின்றன.
ஒன்றியம் வழங்கி வந்தது.
இதன்படி, இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதித் தீர்வைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மானியம் அளித்துவிடும். இதனால் இலங்கைப் பொருட்களை ஐரோப்பிய சந்தையில் குறைந்த விலையில் விற்கும் வாய்ப்பு கிடைத்தது.
இலங்கையைப் பொறுத்தவரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செய்யப்படும் ஏற்றுமதி அளவு ஆண்டிற்கு 3.7 பில்லியன் டொலர்களாகும். இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 20 சதவீதம். ஆனால் இந்த ஏற்றுமதியை நேற்று முதல் அந்நாடு இழந்துள்ளது.
இதனால் அந்த நாட்டின் நிறுவனங்களுக்கு, பொதுவாக ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு, பெரும் இழப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
இலங்கையின் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு பெறும் 3 பில்லியன் இலாபத்தில் 500 மில்லியன் இழப்பு, அதாவது 6ல் ஒரு பங்கு இழப்பு ஏற்படும் என்று அந்நாட்டு ஏற்றுமதி வர்த்தக அமைப்பு கூறியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய நெருக்கடியாகும்.
ஏற்கனவே அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மிகக் குறைந்த இலாப அளவுடன்தான் நடைபெறுகின்றன.
தமிழர் அமைப்புகள் செய்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, பல நிறுவனங்கள் இலங்கையின் பொருள்களை வேண்டாம் என்றும் மறுத்து வருகின்றன.

18 ஆகஸ்ட் 2010

வே.பிரபாகரன் ஏன் போராட்டத்தைத் தொடங்கினார்? ஆணைக்குழு முன் முன்னாள் எம்.பி நீண்ட விளக்கம்.



"வடக்கு மாகாணத்தில் ஆரம்ப நாட்களில் இடம்பெற்ற தேர்தல்கள் ஜனநாயக ரீதியில் நடந்திருக்குமானால் இளைஞர்கள் வன்முறைப் பாதைக்கு சென்றிருக்க மாட்டார்கள்.
அமைதியான வழியில் போராடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிங்கள இனத்தை சேர்ந்த காடையர்களும், புத்த பிக்குகளும் சேர்ந்து கடுமையாகத் தாக்கினர்.
இவை போன்ற நிகழ்வுகளே வே.பிரபாகரனும்,தமிழ் இளைஞர்களும் கைகளில்ஆயுதம் ஏந்தக் காரணம் ஆகி விட்டன.” இப்படி தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் நேற்று சாட்சியம் வழங்கினார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இலங்கைத் தூதுவராகப் பணியாற்றியவருமான மங்கள முனசிங்க.
அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:-
"தேச நலன் சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அரசியல்வாதிகள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர்.இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழர்களின் வாக்குரிமைகளை ஐக்கிய தேசியக் கட்சி பறித்து விட்டது.
பண்டா- செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியினர் செயல்பட்டனர். இதுவே 1983 ஆம் ஆண்டின் ஜூலைக் கலவரத்துக்கு காரணம் ஆனது. அரசின் தற்போதைய பேச்சாளர் தேசத்தின் ஓட்டு மொத்த நலனையும் மனதில் நிறுத்தி மனப்பக்குவம் , முன்யோசனை , விவேகம் ஆகியவற்றுடன் கருத்துக்களை வெளியிட வேண்டும்.
கடந்த கால போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வரப்படாமைக்கு பரஸ்பர நம்பிக்கையின்மையே காரணம். இந்த போரை இனப் போராகவோ, தீவிரவாதத்துக்கு எதிரான போராகவோ கருத முடியாது.
இது முற்றுமுழுதான அரசியல் நோக்கம் கொண்ட போர் ஆகும். முன்பொரு காலத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமையுடன் இணைந்தே வாழ்ந்தனர்,ஒன்றாகப் பணியாற்றினர். ஆனால் சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டின் தலைவர்கள் பொறாமையால் உந்தப்பட்டனர்.
தேச நலனை பற்றிய எண்ணம் எதுமின்றி அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற சிந்தனையோடு செயல்பட்டமையாலேயே பிரச்சினை ஏற்பட்டது.. இந்த எண்ணம் சிங்கள்-தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்தது. இன்னமும் இந்த நிலையே நீடித்துக் கொண்டிருக்கிறது.
தீவிரவாதம் காலப்போக்கில் ஏற்பட்ட ஒன்றுதான். இந்த நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளின் தலைவர்களுமே பொறாமையுடனும், ஒருவர் மீது ஒருவர் அதிகாரம் செலுத்துகின்றமை ஒன்றையே குறிக்கோளாக கொண்டும் செயற்பட்டனர். அவர்களின் அரசியல் பக்குவம் குறைந்து போனது.
இதன் பின்னர் வடக்குப் பகுதியில் நடந்த தேர்தல்களில் இளைய சமுதாயம் சோர்வுடன் உற்சாகமின்றி காணப்பட்டது. இதன் விளைவாகவே அனைத்து அரசியல் கட்சிகளையும் , தீவிரவாதக் குழுக்களையும் அகற்றி விட்டு பிரபாகரன் களமிறங்கினார்.
வடக்கு பகுதியில் இடம்பெற்ற தேர்தல்கள் ஜனநாயக ரீதியில் நடந்திருக்குமானால் இளைஞர்கள் வன்முறைப் பாதைக்கு சென்றிருக்க மாட்டார்கள். ஆனால் அனைத்துமே தலைகீழாகி இருந்தன.
தேச நலனில் அக்கறையின்றி செயற்படுகின்றமையையும், ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கிற நினைப்பால் சண்டையிடுகின்றமையையும் அரசியல்வாதிகள் விட்டு விட வேண்டும். நாட்டு மக்களுக்காக ஒற்றுமையுடன் உழைக்க முன்வர வேண்டும்.

சுவிற்சர்லாந்திற்குள் காலடி வைத்துள்ள சிவந்தனின் மனிதநேய நடை பயணம்.



தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி 26வது நாளாக மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் இன்று காலை சுவிற்சர்லாந்தின் எல்லைக்குள் காலடி வைத்திருக்கின்றார்.
சுவிஸ் எல்லையை அண்டிய La Cure என்ற இடத்தில் இருந்து இன்று காலை தனது நடை பயணத்தைத் தொடர்ந்த சிவந்தன், சுவிஸ் எல்லைக்குள் நுழைந்து ஜெனீவா நோக்கி நடந்து வருகின்றார். அவர் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 44 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.
நேற்று 9 மணித்தியாலங்களில் 20 கிலோமீற்றர் நடந்திருந்த சிவந்தனுடன் இன்று சுவிற்சர்லாந்தில் இருந்து சென்ற இருவர் உட்பட 12 பேர் இணைந்து நடந்து செல்லுகின்றனர்.
இவர்கள் நடந்து செல்லும் வழிகளில் தமிழ் மக்களின் நிலை மற்றும் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கல் செய்யப்பட்டு, பிரெஞ்சு மற்றும் டொச் மக்களிற்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, சிவந்தனது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து சுவிற்சர்லாந்து சூரிச்சில் இருந்து ஜெனீவா நோக்கிய 300 கிலோமீற்றர் தூர மனிதநேய நடை பயணத்தை தமிழின உணர்வாளர்கள் மூவரும் இன்று நான்காவது நாளாக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈகப்பேரொளி முருகதாசன் திடலிலான ஐ.நா முன்றலில் இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொள்ள ஐரோப்பிய தமிழர்கள் அணிதிரண்டு வருகின்றனர்.
சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் மேற்கொண்டு வருகின்றார்.