பக்கங்கள்

08 செப்டம்பர் 2013

நவநீதம்பிள்ளையை "றோ"உளவு பார்த்ததாம்!

அண்மையில் சிறிலங்கா சென்றிருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, அங்குள்ள மனித உரிமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தார். இந்நிலையில், ஐ.நா ஆணையாளரின் சிறிலங்கா விஜயத்திற்கு இணைவாக இந்தியாவின் ரோ புலனாய்ப் புலனாய்வுப் பிரிவினரும் சிறிலங்காவில் செயற்பட்டிருந்தமை தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் நவிபிள்ளை அம்மையார் தெரிவித்த கருத்துகள், அவர் சந்தித்த அமைப்புகள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளவே ரோ அமைப்பினர் சிறிலங்காவில் முகாமிட்டிருந்ததாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. தமிழர் தாயகப் பகுதியில் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் நடவடிக்கையே ரோ அமைப்பினால் திரட்டப்பட்ட தகவல்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு திரட்டப்பட்ட தகவல்கள் அனைத்தும் இந்திய மத்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக சிங்கள ஊடகமான திவயின தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.