பக்கங்கள்

12 செப்டம்பர் 2013

இவருக்கெல்லாம் எங்கே மானம் இருக்கிறது!

தயா 
விடுதலைப் போராட்டத்தினை கொச்சைப்படுத்தி வரும்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளர் தாயா மாஸ்ரருக்கு பசில் ராஜபக்ச பெரும் அவமானத்தை யாழில் உண்டுபண்ணியுள்ளதாக யாழிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் வடமாகாணசபை தேர்தல் பிரச்சார நடடிக்கைகளிற்காக யாழ்ப்பாணத்தினில் தங்கியுள்ள பசில் ராஜபக்சவை சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள தயாமாஸ்டர் மேற்கொண்ட முயற்சி பிசுபிசுத்துப்போயுள்ளது. அவரது கையினை தட்டிவிட்டு பசில் அங்கிருந்து வேகமாக வெளியேறிய அவமானகரமானதும் பரிதாபமும் அங்கு அரங்கேறியது.வடக்கு தேர்தல் தொடர்பான ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பிரச்சார பத்திரிகையாளர் மாநாடு நேற்று யாழ்ப்பாணத்தினில் நடந்திருந்தது. அங்கு பத்திரிகையாளர் மாநாட்டினை முடித்துக்கொண்டு பசில் ராஜபக்ஜ மேடையிலிருந்து இறங்க முற்பட, அங்கு அடித்துப்பிடித்துக்கொண்டு முன்னுக்குச்சென்றிருந்த தயா மாஸ்டர், நான் தயா மாஸ்டர் என அறிமுகப்படுத்திக்கொண்டு கைலாகு கொடுக்க கைகளை நீட்டினார்.எனினும் அதனை தட்டிவிட்ட பசில் சுற்றி வர பொதுமக்கள் நின்று பார்ப்பதாக தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.இதனால் தர்மசங்கடத்திற்குள்ளான தயாமாஸ்டர் சத்தமின்றி அங்கிருந்து வெளியேறினார். எற்கனவே வடக்கு மாகாணசபை தேர்தலினில் போட்டியிட ஆசனம் வழங்கப்படுமென ஆசைகாட்டப்பட்டு தயா மாஸ்டா கடைசி நேரத்தினில் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தாயா மாஸ்டருக்கு நடந்தது ஏனைய எட்டப்பர்களுக்கும் ஒரு பாடம் என யாழ் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த விரிவுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.