பக்கங்கள்

17 ஆகஸ்ட் 2010

ஈழத்தமிழர்கள் பற்றி இலங்கை ஜெயராஜ் பேச்சு: கண்கலங்கிய ரஜினி.



சென்னை கம்பன் விழாவில், இலங்கை தமிழர் பற்றிய பேச்சை கேட்டு நடிகர் ரஜினி கண்கலங்கினார்.
கம்பன் கழகம் சார்பில், 36வது ஆண்டு கம்பன் விழா சென்னை மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
இறுதி நாளன்று, கம்பன் புலமை, திருவள்ளுவர் வழியில் பெரிதும் வெளிப்படுவது அறத்திலா, பொருளிலா, இன்பத்திலா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
பட்டிமன்றத்தில் பேசிய இலங்கை ஜெயராஜ்,
நான் தமிழன் ஆனால் அயல்நாட்டுக்காரன். நான் சுதந்திரமானவனா?. ஒருவன், மற்றொருவரை சுதந்திரமாக நடமாடவிடும்போதுதான், சுதந்திரமாக பேச, செயல்பட விடுவதுதான் உண்மையான சுதந்திரம். அந்த சுதந்திரமில்லாத நாட்டின் குடிமகன் நான். ஆனாலும், என் எல்லையை உணர்ந்து, உங்கள் சுதந்திரத்தை வாழ்த்துகிறேன்.
ஒருவன் கோடிக் கோடியாக சம்பாதிக்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் அறமில்லாத வெற்றி தூக்கத்தை தராது. அறமாக வாழ்ந்தால் சொர்க்கத்துக்கு போகலாம். ஆனால், சொர்க்கத்துக்கு போனவர்கள் யார் யார் என்று யாருக்கு தெரியும். காந்தி, அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். என்று நாமாக சொல்லலாம். ஆனால் பார்த்தவர்கள் யார்? என்று இலங்கை ஜெயராஜ் பேசினார்.
இதை மேடையின் முன்வரிசையில் இருந்து இலங்கை தமிழர்களின் நிலை பற்றிய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நடிகர் ரஜினி கண்கலங்கினார்.

ஐ.நா.நோக்கி அணிதிரளுங்கள் மக்களே: ஜெயானந்தமூர்த்தி.



ஐ.நாவை நோக்கி மனிதநேய நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தனின் உணர்வுபூர்வமான உறுதிமிக்க போராட்டத்தின் இறுதிநாள் நிகழ்வில் ஐரோப்பிய புலம் பெயர் தமிழ் உறவுகள் பெருமளவில் கலந்து கொள்வதன் மூலம் எமது ஒற்றுமையையும் பலத்தையும் மீண்டும் சர்வதேசத்திற்கும் சிறிலங்கா அரசுக்கும் காண்பிக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் லண்டன் பிரதிநிதியுமான எஸ்.nஐயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். சர்வதேச செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.'இன்று எமது புலம் பெயர் தமிழ் மக்கள் சற்று சோர்ந்துபோன நிலையில் உள்ளனர். இதற்கு புலம் பெயர் நாடுகளில் உள்ள ஒரு சிலரின் நடவடிக்கைகளும் காரணமாக உள்ளன. முன்பு விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சிலர் தற்போது சிறிலங்கா அரசுடனும் சிறிலங்கா அரசின் பாதுகாப்பில் இருப்போருடனும் தொடர்புகளைப் பேணி வருகின்றனர். இது அவர்களின் சுயலாப நோக்காக இருக்கலாம். அது மாத்திரமின்றி புலம் பெயர் நாடுகளில் சில குழு நிலை வாதங்களும் காணப்படுகின்றன. இதனால் மக்கள் மத்தியில் சில குழப்பங்கள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான குழப்பங்களை நாம் சந்தித்தே தீரவேண்டும். இதன் மூலம்தான் நாம் எமக்கு எதிரான சக்திகளை இனங்காண முடியும். எமது தேசியத் தலைவர் எமக்கிட்ட பணிகளையும் கட்டளைகளையும் அவர் அமைதிகாக்கும் இவ்வேளையில் நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். அவர் போராட்டத்தை புலம் பெயர் தேசத்திற்கு நகர்த்தியதை நாம் மறந்துவிட முடியாது. எனவே மக்கள் இந்நிலையில் விழிப்பாக இருக்க வேண்டும். எமது உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இந்நிலையில்தான் சிவந்தனின் மனித நேய நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டது. எமது மக்கள் மீண்டும் பலத்துடன் நிமிர்ந்தெழ சிவந்தன் வழிசமைத்துள்ளார். உயிரைப் பணயம் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்நடைப்பயணம் எதிர்வரும் 20 ஆம் நாள் nஐனிவாவில் ஐ.நா. மன்றத்திற்கு முன்னால் முடிவடைவதுடன் அங்கு எழுச்சி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இவ் எழுச்சி நிகழ்வில் எமது மக்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எமது உறுதி, ஒற்றமை, பலம் என்பனவற்றை மீண்டும் நாம் சர்வதேசத்திற்கும் சிறிலங்கா அரசுக்கும் காண்விக்க முடியும். முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் பின் புலம் பெயர் மக்கள் பலமிழந்து விட்டார்கள், ஒற்றுமையின்றி உள்ளனர் என நினைத்திருக்கும் சிறிலங்கா அரசுக்கு ஓங்கி முகத்தில் அறைவதுபோன்று இந்நிகழ்வு அமைய வேண்டும். எனவே எமது பலத்தையும் ஒற்றுமையையும் ஐ.நாவுக்கு முன்னால் மீண்டும் நாம் நிருபித்துக் காட்ட வேண்டும்' என தெரிவித்துள்ள nஐயானந்தமூர்த்தியிடம் நாடு கடந்த அரசாங்கம் பற்றிக் கேட்டபோது 'நாடுகடந்த அரசாங்கம் தற்போதும் ஒரு குறைப்பிரவசம்போன்றே உள்ளது. அது இன்னமும் முழுமையடையவில்லை. தேர்தல் முடிவடைந்து முதலாவது அமர்வு நடந்து மூன்று மாதங்கள் முடிவடையும் நிலையில் இன்னமும் முன்னேற்றமில்லை என்பதே உண்மை. என்னைப் பொறுத்த வரையில் என்னை மக்களே வேட்பாளராக நிறுத்தினார்கள் அதுபோன்று மக்களே தெரிவும் செய்தனர். இதில் நான் போட்டியிடாவிட்டிருந்தாலும் எனக்கென்றொரு தளம் உள்ளது. அதிலிருந்து நான் மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்யமுடியும். கடந்த காலங்களில் போராட்டத்திற்கு என புலம் பெயர் நாடுகளில் ஆதரவு தெரிவிக்காத மற்றும் எந்தவொரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாத ஒரு சிலர் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் வெளியே வந்துள்ளனர். இவர்களே மக்களுக்கு இன்று அரசியல் செய்கின்றனர்' என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஜெயானந்தமூர்த்தி.

நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்.



பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணியைக் கைது செய்துள்ளது மிகவும் பாசிசமான போக்கு ஆகும் என்று நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர் செய்தி தொடர்பாளர் கூத்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இன்று தமிழ்நாட்டு மக்களின் கருத்துரிமைக்கு மிகப்பெரும் சவாலாக விளங்குகிறது.
உள்நாட்டு அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே, காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் உள்ளூர் மக்கள் மீது நடத்தி வரும் அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணியைக் கைது செய்துள்ளது.இது மிகவும் பாசிசமான போக்கு ஆகும்.இதனை நாம் தமிழர் இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையிடம் கூட்டமைப்பினர் உரிய முறையில் அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டுள்ளது.அதனை மீறி பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 8 பெண்கள் உட்பட 59 பேரையும் தமிழக அரசு கைது செய்து வேலூர் மற்றும் புழல் சிறைகளில் அடைத்துள்ளது. சென்னையில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் இடங்களில் சைதாப்பேட்டை பனகல் மாளிகையும் ஒன்றாகும்.ஆனால் திட்டமிட்டு அனுமதி மறுப்பதும் பின் கைது செய்வதும் தமிழ்நாட்டில் கருத்துரிமைக்கு எதிரான போக்கு தொடர்ச்சியான நிலவுவதைக் காட்டுகின்றது.
மீனவர் பிரச்சனையா,ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடையாது.உள்ளூர் விவசாயிகளின் பிரச்சனையா,போராட்டத்திற்கு அனுமதி கிடையாது.டாஸ்மாக் தொழிலாளியின் கூலி உயர்வுக்கான போராட்டமா,அனுமதி கிடையாது.தொப்புள் கொடி தமிழர்களின் உயிர்ப் பிரச்சனையா போராட்ட அனுமதி கிடையாது.
சரி இங்கு உள்ள பிரச்சனைக்குத்தான் அனுமதி கிடையாது,எங்கோ உள்ள காஷ்மீர் மக்களின் பிரச்சனை என்றாலும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடையாது என்றால் இது ஜனநாயகம் கடைபிடிக்கப்படும் நாடா அல்லது கருணாநிதியின் தலைமையில் மன்னராட்சி நடைபெறும் நாடா என்று சந்தேகம் எழுகின்றது.நாடு முழுவதும் மக்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் கண்டித்தும் உலகிற்கு எடுத்துச் சொல்லவும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கும் காவல்துறையும் அதிகார வர்க்கமும்,தமிழர்களை வதைக்கும் முதல்வருக்கு யாராவது பாராட்டு விழாக்கள் நடத்தி குத்தாட்டம் போட்டால் ஆதரவாக முழு வீச்சில் இயங்குகின்றன.இந்த நிலை ஜனநாயகத்தில் மிகவும் இழிவான போக்கு ஆகும். இதற்கு எம் தமிழ் மக்கள் விரைவில் நல்ல பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

16 ஆகஸ்ட் 2010

எம்.வி.சன்.சியில் இரு வாரங்களுக்குமுன் ஈழ இளைஞன் மரணம்,கடலில் சடலம் அடக்கம்!



எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவுக்கு புறப்பட்டு இருந்த ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் இக்கடற்பயணத்தின்போது இரு வாரங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். 37 வயது உடைய இளைஞர் ஒருவரே கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார். ஆயினும் இவரின் மரணத்துக்கான காரணம் தெரியாமல் உள்ளது. சடலம் கடலில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் மனைவியும், ஒரு குழந்தையும் இலங்கையில் இருக்கின்றார்கள்.
கனேடிய தமிழ் பேரவையின் பேச்சாளர் மஞ்சுளா செல்வராசா கப்பலில் வந்திருந்த தமிழர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அவரை மேற்கோள் காட்டியே கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதே நேரம் இந்த ஈழ அகதிகள் கனேடியர்களின் உதவியைப் பெற்றுக்கொண்டுதான் புறப்பட்டு வந்து சேர்ந்தார்களா? என்கிற கோணத்திலும் கனேடிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

தேசியத் தலைவரை ஹெலி மூலம் வெளியேற்ற நினைத்தாராம் கே.பி!



மே 18ம் திகதிக்கு பின்னர் ஆரம்பமான தமிழ் இணையம் பொங்கு தமிழ். ஈழத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உணர்ச்சிபூர்வமான பொங்கு தமிழ் விழாவின் பெயரை தமது இணையத்தின் பெயராகச்சூட்டி வலம்வரும் இவ் இணையம் தமிழர்களை பொங்கவைக்கவில்லை! மாறாக அதே அடுப்பில் தமிழர்களை வேகவைக்க நினைக்கிறது. பொங்கு தமிழ் நடாத்தும் இணைய அன்பர்களுக்கும், பொங்கு தமிழ் நிகழ்வை நடத்தியவர்களுக்கும் எத் தொடர்பும் இல்லை. இவர்கள் எவரும் அப்பக்கம் தலைவைத்துப் படுத்ததே இல்லை, மழைக்கு அப்பக்கம் ஒதுங்கியவர்களோ அல்லர்.பிரித்தானியாவில் இருக்கும் ரஞ்சித், இந்தியாவில் இருந்து திரு என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு, நோர்வே பேர்கனில் இருந்து ஹேமா, என்போராலும் வேறு சிலராலும் பொங்கு தமிழ் இணையம் நடாத்தப்பட்டுவருகிறது. இந்த ஞானசூனியங்கள் கே.பி என்பரை ஒரு பெரும் தலைவராகச் சித்தரிக்க முற்படுவதை முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். தேசிய தலைவர் எடுத்த முடிவுகள் பிழையானவை என்று ஏற்கனவே வாதிட்டுவந்த இவர்கள், தற்போது கே.பி சொல்வதை தெய்வ வாக்காக எடுத்து கைகளில் வேப்பிலை கட்டி ஆடுவது, வேடிக்கையான விடயம்! வெட்கி நாணவேண்டிய விடயமும் கூட. இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கும் கே.பி, தான் சொல்லவருவதை டி.பி.எஸ் ஜெயராஜ் கேட்பது போலவும், அதற்கு தான் ஆத்மார்த்தமாக பதில்சொல்வது போலவும் ஒரு நேர்காணல் நாடகம் ஆட, அதனை அரசு ஆதரவு இணையமான டெய்லிமிரர் பக்கம் பக்கமாக வெளியிட்டு வருகிறது. இதன் தமிழாக்கம் மிக நீளமானது. அதில் கே.பியை நல்லவர் என்று கருதும்படியான வாசகங்கள் அடங்கிய பகுதிகளை மட்டும் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்த பொங்குதமிழ் ஆசிரியர்கள், அதனை மட்டும் பிரசுரித்துள்ளனர், மிகவும் இலகுவான நடையில், அதாவது பாமர மக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் இது சுருக்கி பிரசுரமாகியுள்ளதாக பொங்கு தமிழ் இணையமே தெரிவித்துள்ளது. கே.பியின் முழுப்பேட்டியையும் போடாது, குறிப்பிடப்பட்ட சில விடயங்களை மட்டும் ஏன் பொங்குதமிழ் போடவேண்டும்? இவர்கள் தமிழ் மக்களுக்கு சொல்லவரும் கருத்துதான் என்ன என்கின்ற கேள்விகள் இங்கு எழுகின்றன. அப்படியானால் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலின் கீழ் தான் இவர்கள் இயங்குகிறார்களா என்ற சந்தேகமும் வலுப்பெறுகிறது.

தேசியத் தலைவரை ஹெலி மூலம் காப்பாற்ற நினைத்தாராம் கே.பி:

யுத்த காலத்தில் ஹெலி மூலம் தேசிய தலைவரை தான் காப்பாற்ற நினைத்ததாக கே.பி கூறியுள்ளார். அதற்காக ஒரு ஹெலியை வாங்க தாம் முயற்சித்ததாகவும் கூறியுள்ளார். உண்மையில் போர்க்களத்தில் உள்ள தேசிய தலைமையைக் காப்பாற்ற ஒருவர் எண்ணியிருந்தால் காசுகொடுத்து உலங்குவானூர்தி ஒன்றை வாங்கித்தான் செயல்படுத்தவேண்டும் என்று இல்லை. அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்! சமாதான கால கட்டத்தில், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மாலைதீவு சென்று, அங்கிருந்து சிறிய ரக விமானம் மூலம் இரணைமடு குளத்தில் சென்று இறங்கினார். அதற்கு அவர் அவ் விமான ஓட்டிக்கு செலுத்திய பணம் 5,000 டாலர்களுக்கும் குறைவானது.அப்படி இருக்கும்போது, தாய்லாந்து, இந்தோனேசியா, மற்றும் மாலைதீவுகளில் பணம் கொடுத்தால் நூற்றுக்கணக்கான விமானிகளை வாடகைக்கு அமர்த்த முடியும் என்பது, ஐரோப்பாவில் இருக்கும் எமக்கே தெரியும் போது, அந்த நாடுகளின் காவல்துறைக்கே கண்ணில் விரலைவிட்டு ஆட்டிய கே.பிக்கு தெரியாதா என்ன? யார் காதில் பூ சுற்றப் பார்க்கிறார்கள்? இதோ இங்கு உள்ள இணையத்தைப் பாருங்கள்,(http://www.aircraftdealer.com/) இங்கே 50,000 டாலர் தொடக்கம் விமானங்கள் விற்பனைக்கு உண்டு, அவற்றில் ஒன்றை அல்லது இரண்டை வாங்கி வாடகைக்கு விமானிகளை அமர்த்தி சென்றிருக்க முடியாதா அல்லது அது சாத்தியம் இல்லையா?அனுராதபுரம், கொழும்பு மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலேயே இலங்கை இராணுவம் விமான எதிர்ப்பு ஆயுதங்களை நிலைநிறுத்தியிருந்தது. முள்ளிவாய்க்காலில் அல்ல. எனவே ஒரு இரவில் இலகுவாகச் சென்று நந்திக்கடலில் தரையிறங்கி குறிப்பிட்ட சில தலைவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டிருக்கமுடியும். ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தினால் கூட மீதமுள்ள விமானம் பிழைத்திருக்கும். அவ்வாறு செய்யாது மௌனம் காத்தது யார்? இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி பணம் சேர்த்தது யார்? இறுதியில் ஏன் இது நடக்கவில்லை?விடுதலைப் புலிகளின் தலைமை தன்னை விலக்கியது என்பதை கே.பி பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். திரும்பவும் தேசியத் தலைவர் 2008ம் ஆண்டு தன்னோடு தொடர்புகொண்டு மீண்டும் ஆயுதக் கப்பல்களை அனுப்பும்படி கூறியபோது, கே.பியின் வலையமைப்பு கலைக்கப்பட்டுவிட்டதே என்ற காழ்ப்புணர்வை தேசிய தலைவருக்கே எடுத்துரைத்துள்ளார் கே.பி. அதனை அவர் இங்கு சொல்லியும் உள்ளார். போர் உக்கிரம் அடைந்துவரும் நிலையில், புலிகள் பல இழப்புக்களைச் சந்தித்தவேளை, தேசிய தலைவர் கே.பியிடம் உதவிகேட்டபோது, தனது வலையமைப்பைக் கலைத்துவிட்டீர்களே என்று கே.பி சொல்லுவாரேயானால் அவர் மனதில் என்ன இருந்திருக்கும் என்பதை நாம் அறிவோம்!அத்தோடு மீண்டும் தனது வலையமைப்பைக் கட்டி எழுப்ப 1 வருடம் ஆகும் எனக் கே,பி கூறியபோது அது மிகவும் காலதாமதம் ஆகியிருக்கும் என தேசியத் தலைவர் கூறியதாக கே.பியே ஒத்துக்கொள்கிறார். அப்படியாயின் இக்கட்டான நிலையை அறிந்து அவசரமாக உதவமுடியாத ஒருவர் எவ்வாறு எமது இனத்தை பாதுகாக்க முடியும். பெரும் பணத்தோடும், செல்வாக்கோடும் உலாவந்த கே.பி, அப்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இல்லாதபோதே முடியாததை இப்போது எப்படி செய்வார் என்று எதிர்பார்ப்பது.? தமிழீழ தேசியத் தலைமையையோ அல்லது தேசியத் தலைவரையோ விமர்சிக்கும் தகுதி இங்கு யாருக்கும் இருப்பதாக நாம் கருதவில்லை. போர்களம், அதன் வியூகங்கள், களநிலைகளை வெறுமனவே வெளிநாட்டில் இருந்து அனுமானிக்க முடியாது. அங்கு உள்ளவர்களே தீர்மானிக்க முடியும்! எனவே தேசியத் தலைவரை ஒரு பகடைக்காய் போலப் பாவிப்பதும், புலிகள் மீது சேறுபூசுவதும் முதலில் நிறுத்தப்படவேண்டும்! தலைவரைக் காப்பாற்ற நினைத்தேன், அவர் குடும்பத்தை காப்பாற்ற நினைத்தேன் என்று அம்புலிமாமா கதைகளைச் சொல்லி மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டாம்! தேசிய தலைவர் வசனங்கள் பேசி மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை! எனவே வெட்டிப் பேச்சுக்களையும், உதவாத விவாதங்களையும் நிறுத்திவிட்டு, இலங்கை அரசின் போர்குற்றங்களை, இன அழிப்பை, வெளிக்கொண்டுவந்து, தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, வலுப்பெற பாடுபடுவதே தமிழர் விடிவுக்கு வழிசமைக்கும்!

செய்தி:அதிர்வு.கொம்

15 ஆகஸ்ட் 2010

"திருக்குவளை தீயசக்தி': கருணாநிதிக்கு புதிய பெயரிட்டார் ஜெயலலிதா.


கருணாநிதியை திருக்குவளை தீயசக்தி என்றே இனிமேல் அனைவரும் குறிப்பிடுவோம் என்றார் ஜெயலலிதா.
இதுதொடர்பாக அவர் மேலும் பேசியது:
"ஒருவரின் பெயரைச் சொல்லி அழைப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். கருணாநிதி என்று பெயரைச் சொல்லி அழைக்கிறேன் என்று வருத்தப்பட்டிருக்கிறார் கருணாநிதி.
என்னை ஜெயலலிதா என்று அழைத்தால் நான் தவறாகக் கருதமாட்டேன். ஜெயலலிதா என்பது பெற்றோர் வைத்த பெயர். அதைச் சொல்லி அழைப்பதில் தவறில்லை.
நேருவையும், இந்திராவையும், காமராஜரையும் பெயரைச் சொல்லித்தானே குறிப்பிடுகிறோம். அதனால் அவர்களின் மதிப்பு ஒன்றும் குறைந்துவிடவில்லையே? நாடாளுமன்றத்தில் பேசும்போது அதிமுக எம்பிக்கள், புரட்சித் தலைவி என்றோ, அம்மா என்றோ குறிப்பிட்டுப் பேச வேண்டாம் எனக் கூறியிருக்கிறேன். அவ்வாறு சொல்லுவதால், பிற்காலத்தில் அவைக் குறிப்புகளைப் படிக்கும்போது, உண்மையான பெயர் வரும் சந்ததிக்குத் தெரியாமலே போய்விடலாம்.
இருப்பினும், பெயரைச் சொல்லி அழைப்பது கருணாநிதிக்கு வருத்தத்தை அளிப்பதால், அவருக்கு எம்ஜிஆர் சூட்டிய "தீயசக்தி' என்ற பெயரைச் சூட்டுவோம். திருக்குவளை தீயசக்தி என்றே கருணாநிதியை அழைப்போம். இந்த தீய சக்திகளை அகற்ற, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் அனைவரும் "கை' கோர்த்து செயல்பட வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. வெற்றி நம்மை அழைக்கிறது. களப்பணி ஆற்றத் தயாராகுங்கள்' என்றார் ஜெயலலிதா.
அழுந்தச் சொன்ன "கை': "குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நாம் அனைவரும் கை கோர்த்து செயல்பட வேண்டிய தருணம் நெருங்கி விட்டது' எனக் குறிப்பிடும்போது "கை' என்ற ஒற்றைச் சொல்லை அழுந்தச் சொன்னார். ஜெயலலிதா பேசியபிறகு, அந்தப் பேச்சின் பிரதி பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்டது. அந்தப் பிரதியில் "கை' என மேற்குறியிடப்பட்டிருந்தது.

அந்த நாற்பது நாட்கள் மிகவும் கொடூரமானவை!



அந்த நாற்பது நாட்கள் மிகவும் கொடூரமானவை.. ஆனால் நான் எனது உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்றமைக்காகவே எனது நாட்டை விட்டு வெளியேறினேன் - இப்படி கூறினார் ஓசியன் லேடி கப்பல் மூலம் கடந்த வருடம் கனடாவை வந்தடைந்த ஈழத் தமிழர்கள் 76 பேரில் ஒருவரான 21 வயது இளைஞன்.
அவர் பாதுகாப்புக் காரணங்களாக பெயரை வெளிப்படுத்த மறுத்து விட்டார். ஆயினும் அக்கடல் பயணத்தின்போது எதிர்கொண்ட பேராபத்துக்கள் பற்றி பகிர்ந்து கொண்டார்.
அவர் தெரிவித்தவை வருமாறு:-
”நான் மூன்று இலட்சம் தமிழர்களில் ஒருவராக வவுனியாவில் முட்கம்பி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்தவன்.ஒருவாறு அங்கிருந்து தப்பினேன். உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்றமைக்காகவே கடற்பயணத்தில் ஈடுபட்டேன்.
அந்த நாற்பது நாட்கள் கொண்ட கடல் பயணம் மிகவும் கொடூரமானது.பேராபத்துக்கள் நிறைந்தது. அந்த நாற்பது நாட்களும் நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன்.நான் கப்பலில் உயிரைக் குடிக்கும் கடுங்குளிரில் தூங்க வேண்டித்தான் இருந்தது.
காலநிலையுடன் போராட வேண்டி இருந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கத்தான் முடிந்தது. கடல் அடிக்கடி பயங்கரமாக ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தது.கடுங்காற்றும் வீசியது. கப்பல் ஒருவாறு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா தீவை கடந்த ஒக்டோபர் மாதம் வந்தடைந்தது.
இப்பயணிகள் அனைவருமே எமது அகதிக் கோரிக்கை தொடர்பாக கனேடிய அரசினால் இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை கனடாவில் தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டோம். என்னை அதிகாரிகள் கேள்விகளை அடிக்கடிக் கேட்டு அரித்துக்கொண்டே இருந்தனர்.
ஐந்து மாதங்கள் சிறையில் போட்டனர். விடுவிக்கப்பட்டேன். தற்போது தலைநகர் ரொரன்ரோவில் வாழ்கின்றேன். எனது அரசியல் தஞ்சக் கோரிக்கைக்கான பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.
எனது தற்போது தொழில் பார்க்கும் உரிமை கிடையாது.எனது ஆங்கில அறிவை விருத்தி செய்ய வகுப்புகளுக்குச் செல்கின்றேன்.என்னை மனிதாபிமான தொண்டர்கள் சிலர்தான் ஆதரித்து வைத்திருக்கின்றார்கள்.
கணனித் துறையில் ஒரு மேதாவியாக வந்து சாதனைகள் நிலைநாட்ட வேண்டும் என்பது எனது இலட்சியக் கனவு. எனது தந்தை இறந்து விட்டார். எனது தாய், எனது சகோதரர்கள் இப்போதும் வவுனியா முட்கம்பி முகாம்களுக்குள்தான் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
எனது வாழ்க்கை கனடாவில் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இந்நாட்டுக்கு அரசியல் தஞ்சம் கோரி வருகின்ற ஈழத் தமிழர்கள் உண்மையிலேயே அப்பாவிகளும், பாதிக்கப்பட்டவர்களும்,ஆதரிப்பார் யாரும் இல்லாதவர்களுமே ஆவர்.
ஓசியன் லேடி கப்பலில் வந்த எம் மீது கனேடிய அரசு ஓரளவு கருணை காட்டி நடந்து கொண்டது. அக்கருணையை எம்.வி.சன்.சி கப்பலில் வந்திருப்பவர்கள் மீதும் காட்டுதல் வேண்டும்.கனடா அப்படி நடந்து கொள்ளும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை.ஆகவேதான் நாம் நாட்டை விட்டு வெளியேறி பேராபத்துகளுக்கு மத்தியில் வேறு நாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கோரி வர வேண்டி இருக்கின்றது.”

கனடா வந்தவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில்!



எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவைச் சென்றடைந்திருக்கும் ஈழத் தமிழர்களில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கு இடமாக உள்ளது.
அவர் உயிருக்குப் போராடிய நிலையில் விக்டோரியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இப்பயணிகளில் சுமார் எட்டுப் பேர் வரையானோர் இவ்வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இவர்களில் இரு கர்ப்பிணிப் பெண்களும், ஒரு ஆறு மாதக் குழந்தையும் அடங்குவர்.

14 ஆகஸ்ட் 2010

தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து: வைகோ.


தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். பாளையங்கோட்டை வண்ணாரபேட்டையில் நே‌ற்று தொடங்கிய ஓவியர் புகழேந்தியின் "போர் முகங்கள்'' என்ற இலங்கைப் போரில் தமிழர்களின் பாதிப்புகள் குறித்த ஓவியக் கண்காட்சியை தொடக்கி வைத்து வைகோ பேசுகை‌யி‌ல், இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் குறித்து எனது பேச்சு ஏற்படுத்தும் தாக்கத்தைவிட இங்கே ஓவியர் புகழேந்தி வரைந்து வைத்துள்ள ஓவியங்கள் ஆயிரம் மடங்கு அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இலங்கை போர் நிகழ்வுகள் குறித்த இந்த ஓவியங்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட வேண்டும். ஒளி நாடாக்களாகவும், புத்தகங்களாகவும் தயாரிக்கப்பட்டு தமிழர் வீடுகள் தோறும் இடம்பெற வேண்டும். தமிழீழம் மலர்ந்தே தீரும். தமிழீழத்தை உருவாக்க இந்த ஓவியக் கண்காட்சி பயன்படும். இலங்கையில் தமிழர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது. 1989இல் பிரபாகரனை சந்தித்தேன். மீண்டும் சந்திப்பேன். காலம் கடந்தாலும் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி. இலங்கை அதிபர் ராஜபக்ச தப்ப முடியாது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும்போது இங்குள்ள சிங்களவர்களுக்கு என்ன பாதுகாப்பு? இதைத்தான் சீமான் கூறினார். இங்கே கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அடக்குமுறைக்கு நாங்கள் அடங்க மாட்டோம் என்று வைகோ கூ‌றினா‌ர்.

13 ஆகஸ்ட் 2010

கொட்டாஞ்சேனைத் தமிழர்களையும் பதியும்படி போலீஸ் அறிவிப்பு.



கொழும்பில் தங்கியிருக்கும் தமிழர்கள் மீது சந்தேகப் பார்வையை வைத்துள்ள போலீசார் தற்போது கட்டம் கட்டமாக அவர்கள் மீது சில வரையறைகளை விதித்து வருகின்றனர். இதன்படி வெள்ளவத்தைப் பகுதியில் தங்கியுள்ள தமிழர்கள் அனைவரும் போலீசில் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை அண்மையில் அமுல்படுத்தப்பட்டது. இதேபோல, கொட்டாஞ்சேனைப் பகுதியை நேற்று அதிகாலை சுற்றி வளைத்த போலீசார், தமிழ்மக்களை போலீஸ் நிலையத்தில் பதிவுசெய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். எதற்காகப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேள்வி எழுப்பிய சில தமிழர்களைப் போலீசார் தம்முடன் போலீஸ் நிலையத்துக்குக் கூட்டிச் சென்றனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. "தமிழ்மக்கள் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற ஷரத்து அவசரகாலச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. பின்னர் ஏன் நாங்கள் பதிவுசெய்யவேண்டும்?" என சிலர் கேள்வி எழுப்பினர் என்றும் அதற்குப் போலீசார் வெளிநாடுகளிலுள்ள புலிகள் கொழும்பில் ஊடுருவியிருக்கலாம் எனத் தெரிவித்தனர் என்றும் கூறப்படுகிறது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலர் போலீஸ் நிலையத்துக்குக் கூட்டிச் செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஓரு தமிழருக்குத் தடுமன் ஏற்பட்டால் உலகத் தமிழருக்கு எல்லாம் தும்மல் வரவேண்டும் – பேராசிரியர் தீரன்.



நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு வருவது குறித்து சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் மூலம் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல் தமிழக தி.மு.க, அ.தி.மு.க உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட பகைமையைத் தீர்த்துக்கொள்வது போல் மீனவர் பிரச்சனையிலும் வெளிப்படையாக நடந்து கொண்டுள்ளனர். அரசுத் தரப்பில் உருப்படியாக எந்தப் பதிலும் கிடைக்காமல் ஒப்புக்கான விவதாமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினர் து.இராஜா குறிப்பிட்டது போல் எப்போது இலங்கை சம்மந்தமான விவாதம் நடந்தாலும் ஒரே மாதிரியான அறிக்கையை மத்திய அரசு தருகிறது எனச் சாடியுள்ளார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, விவாதத்திற்குப் பதிலளிக்கையில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் போகக்கூடாதென அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும், மீனவர்கள் குறித்து ஒப்பந்தம் போட்ட பிறகு தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளது என்றும் இராஜபக்சே மன்மோகன் சிங்கிற்கு இனிமேல் தமிழக மீனவர்களைத் தாக்க மாட்டோம் என வாக்குறுதி தந்துள்ளார் என்றும், கச்சத்தீவைப் பொறுத்தவரை அது முடிந்து போன விவகாரம், திரும்பப் பெறுவது சாத்தியமற்றது எனவும் கூறி இந்திய அரசின் இயலாமையை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார். அமைச்சர் கிருஷ்ணாவின் பதில் இலங்கை அரசின் வெறிச் செயலை ஊக்கப்படுத்துவதாகவும், தமிழர் நெஞ்சங்களை ஊனப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
சிங்கள மீனவர் எல்லை தாண்டி வந்தாலும் சுடாமல் இந்தியக் கடற்படை அவர்களைப் பத்திரமாகக் கைது செய்து திருப்பியனுப்புகிறது. நமது நட்பு நாடு எனக் கூறிக் கொள்ளும் இலங்கை மட்டும் இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை ஏன் அடித்தும் சுட்டும் கொன்று வருகிறது எனக் கேட்டால் இலங்கை என்ன தனது தூதரக உறவை முறித்துக் கொண்டு இந்தியாவுக்கு நெருக்கடியா தந்துவிடப் போகிறது? இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்களைக் காப்பாற்ற முடியாத மத்திய அரசுக்கு நமது வரிப்பணத்தில் ஒரு கப்பற்படை தேவையா? இவர்கள் இலங்கைக்கு நிதியுதவி, நெருக்கடியான நேரங்களில் இராணுவத் தளவாட உதவி, இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி உதவி போன்று முறைவாசல் வேலை செய்தாலும் செய்வார்களே தவிர, சுட்டுக்கொல்லப்படும் நமது தமிழக மீனவர்களைக் காப்பாற்றும் கடமையை மட்டும் செய்யமாட்டார்களாம்!
நாளுக்கு நாள் நடைப்பிணமாகி வரும் காங்கிரசைத் தூக்கிச் சுமக்க தமிழக அரசியல் கட்சிகள் பல போட்டிபோட்டுக் கொண்டு இருக்கும் போது, மத்தியில் ஆளும் காங்கிரசு தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதற்கு என்ன தடுப்பு நடவடிக்கைகள் உருப்படியாக இதுவரை எடுத்து இருக்கிறது என்று துணிச்சலாய் கேட்கும் ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் இல்லாமலிருப்பது மாபெரும் மானக்கேடு ஆகும்.
கடலில் எல்லைக்கோடு பார்ப்பது கடினம். மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதோ சர்வசாதாரணம். ஆனால் சர்வதேசத்தில் எங்குமே எல்லை தாண்டினார்கள் என்பதற்காக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் கொடுமைகள் நடப்பது கிடையாது. அப்படியிருக்க இந்தியாவும் இலங்கையும் சார்க் நாடுகளின் உறுப்பு வகிக்கும் நாடுகளாக உள்ள போது, அங்குத் தமிழக மீனவர் பிரச்சினையை எழுப்பத் தயங்குவது ஏன்? தேசத்தின் மதிப்பு அதன் குடிமக்களைக் காப்பதில் இருக்குமா? அல்லது அண்டை நாடான இலங்கை நம் குடிமக்களை அழித்து வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால் நமது தேசத்தின் மதிப்பு உயருமா?
கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்டு முடிந்த விவகாரம் அதைத் திரும்பவும் பரிசீலனை செய்ய முடியாது என்கிறார் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா. 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்குக் கச்சத்தீவின் அருகே மீன் பிடிக்கவும் வலைகளை உலர்த்தவும் புனித அந்தோணியார் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு நடத்தவும் உரிமை வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்த உரிமை தற்போது நடைமுறையில் நமக்கு உள்ளதா? இல்லையா? இருந்தால், ஒப்பந்தப்படி இலங்கை நடக்காதபோது கச்சத்தீவை மீட்பது குறித்து எப்படி நம்மால் முடியாமல் போகும்? கச்சத்தீவில் நமக்கு உரிமை இல்லையென்றால், சீனர் கச்சத்தீவில் முகாம் அமைப்பதற்கும், உளவுப்பார்க்க தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கும் இலங்கை அனுமதித்திருப்பது மட்டும் ஒப்பந்தத்தை மீறிய செயல் அல்லவா? இந்தியப் பாதுகாப்பிற்கு இது ஆபத்தை விளைவிக்குமா, இல்லையா? இலங்கை நமக்கு எதிராகத் தந்திரமாகச் செயல்படும்போது நாம் மட்டும் உயிரிழப்புகளை தடுப்பதற்குக்கூட வாய்தா கேட்டுக் கொண்டிருக்கலாமா?
கச்சத்தீவு தமிழ்நாட்டின் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு உரிமை உடையதாக இருந்தது என்பது வரலாறு. கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல், கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது மத்திய அரசு தமிழர்களுக்கு செய்த பெருந்துரோகமாகும்.
தமிழக மக்களைக் கேட்காமல் நமக்கு உரிய கச்சத்தீவை இலங்கைக்குத் தந்துவிட்டு, இன்று தமிழக மீனவர்கள் மீது தவறிருப்பதுபோல், எல்லை தாண்டுவதால்தான் இலங்கை சுட்டுக் கொல்கிறது என்று முன்பு இந்திய தென்பிராந்தியக் கடற்படைத் தளபதியும், தற்போது வெளியுறவு அமைச்சரும் கூறுவது மிகவும் வேதனைக்கு உரியதாகும். மனித உயிர்களைவிட வெறும் காகித ஒப்பந்தங்கள் என்ன உயர்வானவையா? துணிவிருந்தால் கச்சத்தீவைக் கொடுத்தது சரியா, தவறா என தமிழகத்தில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தயாரா? சர்வதேச மீன்பிடி உரிமைகளை மீறி தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதைத் தடுக்க முடியாததற்குக் காரணம் ஒன்று இந்தியாவின் இயலாமையாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக மீனவர்களின் உயிர் உடமைகளை மிகவும் மலிவானதாக கருதும் மத்திய அரசின் மெத்தனப்போக்கு காரணமாய் இருக்க வேண்டும். நமது இந்திய அரசியல் சாசனப்படி பாரபட்சமின்றி இந்தியக் குடிமக்களைப் பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்து பதவிக்கு வருகிறவர்கள் தனது குடிமக்களைப் பாதுகாக்க இயலாது என்பதை பகிங்கரமாக மாநிலங்களவையில் அறிவிக்கும்போது, உறுதிமொழியைக் காப்பாற்றத்தவறிய எஸ்.எம்.கிருஷ்ணாவின் பதவியைக் குடியரசுத் தலைவர் பறிக்க வேண்டும்.
இலங்கை அதிபர் இராஜபக்சே இந்திய பிரதமருக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம். எந்த வாக்குறுதிகளை இலங்கை இதுவரை காப்பாற்றி வந்துள்ளது? இலங்கையில் வடக்கு கிழக்கு மாநிலங்களை இணைக்கும் இநதிய-சிறிலங்கா ஒப்பந்தத்தை இதுவரை நிறைவேற்றினார்களா? ஒருதலைபட்சமாக இலங்கை உச்சநீதிமன்றத்தின் மூலமாக சர்வதேச உடன்பாட்டைக் குப்பையில் தூக்கி வீசினார்கள். பாதுகாப்பு வளையத்திற்குள் வந்தால், ஈழத்தமிழர்களைக் கொல்லமாட்டோமென இந்தியாவுக்கும் ஐ.நாவுக்கும் தந்த வாக்குறுதிகளை மீறி 2009 மே போரில் சுமார் 50,000 அப்பாவித் தமிழர்களைக் குண்டு வீசிக் கொன்ற இன்றைய ஹிட்லர்தானே அதிபர் இராஜபக்சே. வெள்ளைக் கொடியோடு சமாதானம் பேசவரும் போராளிகளைக் கொல்லமாட்டோமென வாக்குறுதி தந்துவிட்டு அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட தலைவர்களை ஈவிரக்கமில்லாமல் நொடிப்பொழுதில் சுட்டுக்கொன்ற இக்கால இடிஅமீன்தானே இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய இராஜபக்சே. பேர்ர் முடிவுற்ற பிறகு ஈழத்தமிழர்களின் புனரமைப்புப் பணிக்காக இந்தியா தந்த ரூபாய் 500 கோடியைச் சொன்னபடி அதற்காக செலவிட்டார்களா? அதைக்கூட பார்க்காமால் தற்போது வேறு 1000 கோடி ரூபாய் இந்தியா இலங்கைக்கு வழங்கியிருப்பது தமிழின அழிப்பிற்காக இந்தியா தரும் கௌரவ விருதுகளா? அல்லது சன்மானமா?
ஐ.நா.மன்றம் நியமனம் செய்துள்ள இலங்கையின் போர்க்குற்ற விசாரணை பற்றி ஆராய அமைக்கப்பட்ட மர்சுகி தரூஷ்மன் தலமையிலான குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என இலங்கை அரசு அடாவடி செய்கிறது. இதைக்கூட இதுவரை இந்தியா தட்டிக்கேட்க முடியவில்லை. தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மட்டும் இவர்கள் எங்கே தடுக்கப்போகிறார்கள்? அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணா வாக்குறுதி தந்த 10ஆம் தேதியே, தமிழக மீனவர்களை இந்திய எல்லைக்குள்ளேயே வந்த இலங்கைக் கடற்படை, தனுஷ்கோடி அருகே கல்லால் அடித்து காயப்படுத்தி விரட்டியுள்ளது. இலங்கை கடற்படை பலமுறை நமது எல்லையில் வந்து தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ளது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் மத்திய அரசு யார் வீட்டில் இழவு விழுந்தால் எங்களுக்கென்ன என்பதைப் போல் மெத்தனமாய் இருக்கிறது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சீக்கியர்களின் தலைமுடி காக்கும் டர்பனுக்காக பிரான்ஸ் அரசிடம் வாதாடி அவர்களுக்குப் பாதுகாப்பைப் பெற்றுக்கொடுத்தார். ஆனால் நூற்றுக்கணக்கான மீனவத் தமிழரின் உயிர்களை பாதுகாக்க மட்டும் இந்தியா தயங்குவது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தட்டிக் கேட்டால், அவரைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கிறார்கள். தமிழர்களைக் கொல்பவனுக்குச் சன்மானம்: தடுக்கச் சொல்பவனுக்கோ சிறைவாசமாம்!
சாதிகளாய், சமயங்களாய், கட்சிகளாய்த் தமிழர்கள் கண்மூடித்தனமாக பிளவுற்று செயல்படுவதை விட்டுவிட்டு நாமனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு செயல்பட்டாக வேண்டும். இது மீனவர்களின் பிரச்சனை என்று பிற தமிழர்கள் ஒதுங்கி வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
சாதிகள், மதங்கள், கட்சிகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும்தான் இருக்கின்றன. ஆனால் பிற மாநிலத்தவர், அவை எல்லாவற்றையும் கடந்து மலையாளி, தெலுங்கர், வங்காளி, காஷ்மீரி என்று இன உணர்வுக்கு முன்னுரிமை தந்து ஒன்றுபட்டு குரல் கொடுப்பதால் அவர்களுக்குப் பிரச்சனை ஏற்படுவது மிகமிகக் குறைவு. ஆனால் தமிழர்களிடம் இனஉணர்வுகளைவிட பிறஉணர்வுகள் மேலோங்கியிருப்பது ஒரு சாபக்கேடு!
ஆளும் கூட்டணியில் இருந்த போதிலும் மத்திய இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி மாவோயிஸ்டுகளுக்காக- ஆசாத் போன்ற அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த சமாதானத் தூதுவர்களாக இருக்கக்கூடியவர்களை மத்திய அரசு சுட்டுக்கொன்றது தவறு என்றும் அதற்காக நீதிவிசாரணையையும் துணிவுடன் கோரியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக மம்தா அப்படி பேசியிருந்தாலும் அவரிடம் மேலோங்கியிருப்பது, தான் ஒரு வங்காளி என்ற உணர்வுதான். ஆனால் தமிழ்நாட்டிலோ ஊழல் தலைவர்களிடம் அதிகாரம் உள்ளது, உணர்வுள்ள தமிழர்களுக்கோ சிறைவாசம் என்ற நிலைதான் உள்ளது.
அரசியல் ஆதாயத்திற்காகக் கூட, இங்கே அப்பாவித் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்பட, சுயநலத் தேர்தல் அரசியலையும் தாண்டி செயல்படுவதற்குத் தமிழகத்தில் யாரும் தயாராக இல்லை. தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக ஈழத்தமிழர்கள் அங்கே முள்ளிவாய்க்கால் போரில் ஒரு இலட்சம் பேருக்கு மேல் இலங்கை இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். கேட்க நாதியில்லை. தடுக்க யாருமில்லை. தமிழன் என்கிற அதே காரணத்திற்காக இந்தியாவிலும் வந்து சிங்களக் கடற்படை எம் மீனவத் தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்களைப் படுகொலை செய்து வருகிறது. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள மீனவர்களின் உடமைகளைச் சூறையாடிக் களிக்கிறது. கேட்க நாதியில்லை. தடுக்க யாருமில்லை. பறவை, விலங்குகளைவிட தமிழனின் உயிர் மிகமிக மலிவாகப் போய்விட்டது இன்று.
ஊரடங்கு உத்தரவு போடுமளவிற்கு வீதிக்கு வந்து போராடியதால் காஷ்மீரிகள் விருப்பப்படி இன்றைக்குச் சுயாட்சி தந்தேனும் அவர்களைத் திருப்திப்படுத்தப் பார்க்கிறது இந்திய அரசு. தேர்தல் மூலமும், போராட்டம் மூலமும் காங்கிரசுக்குச் சரியான பாடம் புகட்டியதால், தெலுங்கானா தனி மாநிலம் தரவும் முன்வந்துள்ளது மத்திய அரசு. ஒருவேளை புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் பாடியதுபோல், “இனமல்லடா, அவன் பகைவன், இனியும் ஏமாற வேண்டாம் தமிழா! மனமொன்று செயலொன்று அன்னோர்க்கு, கெட்ட வஞ்சகரைக் கண்ட இடமெல்லாம் தாக்கு!” என்று தமிழர் கூட்டம் வெகுண்டு எழுந்தால்தான் அங்கு ஈழத்தமிழர்க்கு மட்டுமல்ல, இங்குள்ள தமிழர்க்கும் பாதுகாப்பு உறுதியாய் கிடைக்கும். கன்னியாகுமரியில் ஒருவர்க்குத் தேள் கொட்டினால், காஷ்மீரில் இருப்பவர்க்கு நெரி கட்டுகிறது என்பார்களே, அதுபோல இங்கு ஒரு தமிழனுக்குத் தடுமன்(சலதோசம்) ஏற்பட்டால், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு உடனே தும்மல் வரவேண்டும். அன்றுதான் தமிழினத்திற்கு விடியல் பிறக்கும் நாள்!
—-
பேராசிரியர் தீரன்மாநில ஒருங்கிணைப்பாளர்,

நாம் தமிழர் கட்சி

12 ஆகஸ்ட் 2010

ஏழாலையில் கடத்தப்பட்ட இளைஞர் சாதுரியமாகத் தப்பிவந்தார்.



குடாநாட்டில் தொடர்ந்தும் பல கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றவண்ணம் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் ஏழாலையில் உள்ள அம்மன் கோயில் சப்பரத் திருவிழாவுக்குச் சென்று விட்டு ஒரு இளைஞர் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை அவரை இனந்தெரியாத இருவர் கடத்திச் சென்றுள்ளனர். 21 வயதான கஜன் எனப்படும் குறிப்பிட்ட இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குப் புறப்படத் தயாரானபோது, அவரது மோட்டார் சைக்கிளில் பின்புறமாக ஏறிய கடத்தல்காரர் இருவரும் குறித்த இளைஞனின் வாயைப் பொத்திக் கட்டியதுடன் மோட்டார் சைக்கிளை உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திற்கு அண்மையாக உள்ள கட்டுவன்புலம் பாடசாலைக்கு அருகில் கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர்.பின்னர் அவரது கழுத்தை "வயர்' கொண்டு திருக முயற்சித்தவேளை இளைஞர் தனது கைக்கட்டையும் வாய்க்கட்டையும் ஒருவாறு அவிழ்த்துக் கொண்டு சத்தமிட்டுள்ளார். சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் உள்ளவர்கள் ஓடிவரவே குறித்த நபர்கள் இருவரும் தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்த தகவல் அறிந்த தெல்லிப்பழை பொலிஸார் இளைஞனை மீட்டு சுன்னாகம் பொலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.

11 ஆகஸ்ட் 2010

போலீஸ் பாதுகாப்புடன் அசின் படப்பிடிப்பு.


இலங்கை சென்றதால் சர்ச்சையில் சிக்கிய நடிகை அசின் ரகசியமாக சென்னை வந்தார். மலையாளத்தில் ஹிட்டான பாடிகார்ட் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. சித்திக் இயக்குகிறார். இதில் விஜய், அசின் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிகட்டப் படப் பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதில் நடிப்பதற்காகவே அசின் கடந்த திங்கட்கிழமை அன்று சென்னை வந்தார். கிழக்குகடற்கரை சாலையில் ஒரு பங்களாவில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க பங்களா வெளியே போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். படப்பிடிப்பு முடிந்து செல்லும் போது அசின் காரை பின் தொடர்ந்து தனியார் பாதுகாவலர்கள் இன்னொருகாரில் சென்றார்கள். இன்று எண்ணூரில் படப்பிடிப்பு நடந்தது. அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நடிகர் நடிகைகள் இலங்கை செல்லக் கூடாது என்று திரைப்பட சங்கங்கள் தடை விதித்திருந்தது. இந்த தடையை மீறி அசின் இந்தியில் தயாராகும் ரெடி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றார். இலங்கை அதிபர் ராஜபக்சே மனைவியுடன் தமிழர் பகுதிகளில் சுற்றுப் பயணமும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அசினுக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் விபச்சாரத்துக்காக இலங்கைச் சிறுமிகள் விற்பனை.



சிங்கப்பூரில் நடக்கும் நடனக் கச்சேரிக்காகக் கொண்டு செல்வதாகக் கூறி அங்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைச் சிறுமிகள் விபச்சாரத்துக்காக விற்கப்படுவதாக இலங்கை குற்றப் புலனாய்வுப் போலீசார் கண்டுபிடித்துள்ளனராம். இந்த விவகாரம் குறித்து கொழும்பு குற்றவியல் நீதிமன்றத்திற்குப் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரிலுள்ள இலங்கைத் தூதரகம் கொடுத்த ஒரு முறைப்பாட்டினை அடுத்தே போலீசார் இந்த விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.விசாரணைகள் மூலம் ஒரு சந்தேக நபரைத் தாம் கைது செய்துள்ளதாக நீதிமன்றில் கூறியுள்ள போலீசார், இந்நபர் விபச்சாரத்துக்காகச் சிறுமிகளை தலா 50 டொலர் பெற்றுக்கொண்டு சிங்கப்பூரில் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளதாகக் கூறினர். இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள பிற நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் தற்போது போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைக்கு வலியுறுத்துமாறு அமெ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை.




சிறீலங்காவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த சுயாதீன அனைத்துலக விசாரணைகள் அவசியம் என அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் பராக் ஓபாமாவை வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த சுயாதீனமான அனைத்துலக விசாரணைகள் அவசியம் என்பதை வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்; அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் கிலாரி கிளிங்டனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
சிறீலங்கா அரசு உருவாக்கியுள்ள குழு நம்பகத்தன்மை அற்றது. அது போர்க்குற்ற விசாரணைகளை தாமதப்படுத்துவதுடன், பல சந்தர்ப்பங்களில் இந்த குழுவின் செயற்பாடுகள் மீது அரசின் தலையீடுகளும் இருந்துள்ளன.
போரின் போது இரு தரப்பினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உண்டு. எனவே சிறீலங்காவில் நடைபெற்ற இறுதிப்போரில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமான முழு விசாரணைகள் அவசியம் என அவர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் நாள் அனுப்பப்பட்ட இந்த கடிதத்தில் 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

10 ஆகஸ்ட் 2010

மேர்வின் சில்வா பதவி நீக்கப்பட்டார்.



பிரதியமைச்சர் மேர்வின் சில்வா அரசாங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேர்வின் சில்வா தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையொன்றின் பின்னர் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
டெங்கு ஒழிப்பு நிகழ்வில் பங்குபற்றாத சமுர்த்தி ஊழியர் ஒருவரை மேர்வின் சில்வா கடந்தவாரம் மரத்தில் கட்டிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு எதிராக நாடெங்கிலும் சமுர்த்தி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மேர்வின் சில்வாவுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அரசாங்கத்தை அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இத்தாலியிலிருந்து இலங்கை சென்ற யுவதி வெள்ளை வான் கும்பலினால் கடத்தல்!



அண்மையில் இத்தாலியிலிருந்து இலங்கைக்குச் சென்ற யுவதி ஒருவர் வெள்ளை வான் கும்பலினால் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வென்னப்புவ வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான அனுஷீகா மிலானி பீரிஸ் என்ற யுவதியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த யுவதி ஆறு நாட்களுக்கு முன்னர் இத்தாலியிலிருந்து இலங்கை சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் தேவாலயமொன்றிற்கு அருகாமையில் இருந்த போது வெள்ளை வான் கும்பலினால் குறித்த பெண் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வான் கொழும்புப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானதென விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

09 ஆகஸ்ட் 2010

14 வயதுச் சிறுமியின் தமிழ் உணர்வு!40 கிலோமீற்றர் வரை சலிக்காமல் நடை.



ஐ.நா . மனித உரிமைகள் சபையை நோக்கி புறப்பட்டிருக்கும் மனித நேய நடைப் பயணி சிவந்தனுடன் இணைந்து 14 வயதுச் சிறுமி ஒருவர் நேற்று 40 கிலோமீற்றர் தூரம் நடந்துள்ளார். நேற்று 70 இற்கும் மேற்பட்ட மக்கள் இவரோடு இணைந்து நடந்தனர்.
11 மணித்தியாலங்களில் 40 கிலோமீற்றர் நடந்திருந்தார்.குறிப்பாக சிவந்தனுடன் 14 வயதுச் சிறுமி ஒருவர் இந்த 40 கிலோமீற்றர் தூரம் வரை நடந்தார். சிவந்தன் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு உணவு எதுவும் உட்கொள்ளாமல் விரதம் இருந்தவாறே 17 ஆம் நாளாக ஐ.நா நோக்கிய பயணத்தை முன்னெடுக்கின்றார்.
கடந்த வருடம் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களில் சிவந்தனின் தந்தையும் அடங்குவார். இதனால் அவரது தந்தையையும் கொல்லப்பட்ட அத்தனை தந்தைமாரையும் நினைத்து இன்று நோன்பு இருந்தவாறே பயணிக்கின்றார் சிவந்தன்.
இன்று 8 பேர் இவருடன் இணைந்து நடக்கின்றார்கள். மேலும் சில பொதுமக்கள் இன்றும் இந்த மனிதநேய நடை பயணத்தில் இணைந்துகொள்ள இருக்கின்றனர். சிவந்தனுக்கு துணையாகச் செல்லும் இலக்கியன், பொஸ்கோ, ஹரி, வினோத், தினேஸ், ராஜ் போன்றவர்களும் அவ்வப்பொழுது கூடவே நடக்கின்றார்கள்.

செய் அல்லது செத்துமடி-வைகோ பேச்சு.



ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் புத்தகத்திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சிக்கு கணேசமூர்த்தி எம்.பி.தலைமை தாங்கினார்.
இந்த விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு ’எழுத்து எனும் கருவறை’ என்ற தலைப்பில் பேசினார்.
அவர், ‘’தமிழர்களின் எழுத்துக்களால் மறுமலர்ச்சி ஏற்பட்டது. சாக்ரடீஸ் சாதிக்க முடியாததைதந்தை பெரியார் எழுத்தில் சாதித்தார். நூல்கள் சமூகமாற்றத் திற்கும் மனிதநேயத்திற்கும் பயன்பட்டிருக்கிறது.
எழுத்துக்கள் வீர உணர்ச்சியை தட்டி எழுப்பும். நூல்கள் மிகப்பெரிய சக்தி. வால்டர், ரூசோ போன்ற அறிஞர்களின் நூல்கள் விடுதலை பற்றிய தாக்கத்தை ஏற்படுத்தின. ராபர்ட் பேன்ஸ் என்ற கவிஞனின் செய் அல்லது செத்துமடி என்ற கவிதை தொகுப்பு தான் ஸ்காட்லாந்து விடுதலைக்கு வித்திட்டது. போர்க்களத்தில் வீரன் சிந்தும் ரத்தத்தை விட அறிஞனின் பேனா மை புனிதமானது. காரல் மார்க்ஸ் முதலாளித்துவம் என்ற புத்தகத்தை எழுதும்போது வறுமையில் வாடினார். இன்றும் எழுத்தாளர்கள் வறுமையில் வாடிக்கொண்டு இருக்கின்றனர்.
அவர்கள் தங்கள் குடும்பத்திற்காக வாழவில்லை. வருங்கால சந்ததிக்காக வாழ்கின்றனர். காரல்மார்க்ஸ் போன்ற மாமேதைகளின் புத்தகங்களை படிக்கும்போது நம்பிக்கை பிறக்கும்’’என்று பேசினார்.

பிரபா கணேசன் எம்.பி யின் தலையெழுத்து?



அரசுடன் இணைந்திருக்கும் பிரபா கணேசன் எம்.பி அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு இருக்கின்றார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக இவர் எவருடனும் அரசின் முன் அனுமதி பெறாமல் தொடர்பு கொள்ள முடியாத வகையில் உள்ளார் என்று அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிலும் இவர் ஜனநாயக மக்கள் சுதந்திர முன்னணியினருடன் தொடர்பு கொள்ள முடியாத வகையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார் என்றும் அச்செய்திகள் கூறுகின்றன.
பிரதி அமைச்சர் டிலான் பெரேராவின் கட்டுப்பாட்டில் இவர் வைக்கப்பட்டிருக்கின்றார் என்று இச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று மாலை இவர் ஜனநாயக மக்கள் சுதந்திர முன்னணியினரைச் சந்திக்க இருந்தார் என்றும் ஆனால் இச்சந்திப்பு தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது என்றும் ஒரு ஊடகவியலாளர் பிரபாவின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்தபோது மறுமுனையில் டிலான் பெரேராவே பேசினார் என்றும் இச்செய்திகள் தெரிவிக்கின்றன.

புகலிடம் கோரி வரும் ஈழத் தமிழர்களை குற்றவாளிகள் போல் நடத்தவே கூடாது!



வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் பெறுகின்றமைக்காக எம்.சி.சன்.சி கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களை யுத்தக் குற்றவாளிகளைப் போல் நடத்தக் கூடாது என்று சர்வதேச மன்னிப்புச் சபை கோரி உள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபையின் அமெரிக்கக் கிளையைச் சேர்ந்த உயரதிகாரியும்,இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்களில் மிகவும் கை தேர்ந்த நிபுணருமான ஜேம்ஸ் மக்டொனால்ட் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் உயரதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி த வொஷிங்டன் போஸ்ட் கடந்த 04 ஆம் திகதி செய்தி ஒன்றை பிரசுரித்திருந்தது. இந்த கப்பல் வட அமெரிக்கா நோக்கி வருகின்றது என்றும் அவ்வாறு வந்தால் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்திருந்தார் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பத்திரிகைக்கு ஜெம்ஸ் மக்டொனால்ட் எழுதி அனுப்பிய குறிப்பு ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதில் முக்கியமாகத் தெரிவித்துள்ளவை வருமாறு:
”இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றமை இந்தத் தமிழர்களுக்குப் பேராபத்துக்களை ஏற்படுத்தி விடும்.எனவே அமெரிக்காவின் நிலைப்பாடு ஏற்க முடியாதது ஆகும். கடந்த கால யுத்தத்தின்போது அரசு-புலிகள் இரு தரப்பினருமே யுத்தக் குற்றங்களைப் புரிந்துதான் இருக்கின்றார்கள். இந்த யுத்தக் குற்றவாளிகள் தப்பிவிடக் கூடாதுதான்.
ஆனால் தமிழர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லர்.அத்துடன் புலிகள் இயக்கத்தில் கட்டாயப்படுத்தப்பட்டு சேர்க்கப்பட்டவர்களும் இருக்கின்றார்கள். இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் இந்த தமிழர்களுக்கு தீங்குகள் நேர்ந்து விடும்.
இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் புலிகள் இயக்கத்தினர் என்கிற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாமல் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.தடுப்புக் காவலில் சித்திரவதை செய்யப்பட்டும் வருகின்றார்கள்-சிலர் இறந்தும் இருக்கின்றார்கள்.
அரசியல் தஞ்சம் தேடி வருபவர்கள் எந்த நாடுகளுக்குச் செல்கின்றார்களோ அங்கு அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகவும், நீதியாகவும் செவிமடுக்கப்படுதல் வேண்டும்.
இது அவர்களின் உரிமையாகும். எனவே இந்தத் தமிழர்களை யுத்தக் குற்றவாளிகள் போல் நடத்த வேண்டாம்.இவ்வாறு செவிமடுக்காமல் அவர்களை உடனடியாக திருப்பி அனுப்புகின்றமை அநீதி ஆகும்.”

இலங்கை போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச குழுவொன்று அமைக்கிறார் பினாங்கு முதல்வர்.



இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குறித்த விடயங்களைக் கையாள்வதற்காக சர்வதேச குழுவொன்றை அமைக்கும் நடவடிக்கையை மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வரும் ஜனநாயக செயற்பாட்டுக்கட்சியின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் பி.ராமசாமி துரிதப்படுத்தியுள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள்,, அரசியல்வாதிகள் ஆகியோரையும் கொண்ட இக்குழு சில மாதங்களுக்குள் செயற்படும் எனவும் ஐநா. மனித உரிமைகள் குழுவிடம் கையளிப்பதற்காக இனப்படுகொலை குறித்த சாட்சியங்களை இக்குழு திரட்டவுள்ளதாகவும் பேராசிரியர் ராமசாமி தெரிவித்ததாக மலேசியாவிலிருந்து வெளியாகும் ‘த சன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கை ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளிக்கப்படும் என பேராசிரியர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை, இந்திய அரசாங்களிலுள்ள தலைவர்கள் உட்பட இனப்படுகொலைக்குப் பொறுப்பான அனைவரும் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மனித உரிமைகள் எங்கு மீறப்பட்டாலும் அதற்கு எதிராக இக்குழு போராடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

08 ஆகஸ்ட் 2010

இலங்கையில் ஆயுத மோதலின்போது இடம்பெற்ற கற்பழிப்புகள் குறித்து தகவல்கள் சேகரிக்கிறது ஐ.நா!



இலங்கையில் கடந்த கால ஆயுத மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தகவல்களை சேகரித்து வருகின்றது.
ஐ.நா செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதியாக நியமிக்கப்பட்டு ஆயுத மோதல்களின் போதான பாலியல் வன்செயல்கள் குறித்து ஆராய்ந்து வரும் சர்வதேச நிபுணரான மார்கொட் வோல்ஸ்ரொம் தலைமையிலான அணியினரால் இத்தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை,மியன்மார், கொலம்பியா ஆகிய நாடுகளில் ஆயுத மோதல்களின்போது இடம்பெற்ற பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் குறித்து அவருடைய அணியினரால் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.
இவரது அணியால் சேகரிக்கப்படும் தகவல்கள் ஐ.நா செயலாளர் நாயகத்துக்கும், பாதுகாப்புச் சபைக்கும் சமர்ப்பிக்கப்பட உள்ளன. பாலியல் வன்முறை என்பது கலாசாரத்தின் ஒரு அம்சம் அல்ல, ஒரு குற்றச் செயலாகும். இக்குற்றச்செயலை தடுத்து நிறுத்துவதற்கு குற்றவாளிகளுக்கு தவறாமல் தண்டனை வழங்க வேண்டும், அவர்கள் தப்பி விடவோ, மன்னிப்புப் பெறவோ அனுமதிக்கக் கூடாது என்று மார்கொட் வோல்ஸ்ரொம் இன்று நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

காஸ்ட்ரோவைப்போலத்தான் சீமானைப்பார்க்கிறோம்: ம.நடராஜன்.



இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த கைதுக்கான முதல் கண்டன பொதுக்கூட்டத்தை புதுக்கோட்டையில் நடத்துவது என, நாம் தமிழர் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாலை மாலை 7 மணி அளவில், புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் திறந்த மேடையில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேடையில் தேசியத்தலைவர் வே.பிரபாகரன், சீமான், எம்.நடராஜன் படங்கள் வைக்கப்படிருந்தன. புதிய பார்வை ஆசிரியர் நடராஜன், திருச்சி வேலுச்சாமி மற்றும் நாம் தமிழர் இயக்கத்தின் நிர்வாகிகள் இப்பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். இக்கூட்டத்திற்கு இரவு 8.30மணி வரைதான் காவல்துறை அனுமதி வழங்கியிருந்தது. ஆனால் 9.45க்குத்தான் கூட்டம் முடிந்தது.
கூட்டத்தில் சசிகலா கணவர் எம்.நடராஜன், ”அண்ணா கண்ட ஆட்சியில்தான் சீமானுக்கு சிறை வெட்கமாக இருக்கிறது. சீமான் எதற்காக போராட்டம் நடத்தினார். தொடர்ந்து தாக்கப்படுவது நம் மீனவன் என்றுதானே போராட்டம் நடத்தினார். இது தவறா? அன்றே ஆர்ப்பாட்டம் செய்த எங்களையும் (வைகோ,நெடுமாறன், நடராஜன்) கைது செய்தார்கள்.
கடலூரில் அடைத்தார்கள். வெளியில் கூட்டத்தில் பேசக்கூடாது என்றுதான் எங்களை சிறையில் அடைத்தார்கள். வெளியில் பேசத்தானே நேரம் இல்லையென்று உள்ளேயே கூட்டத்தை நடத்தினோம். நிறைய பேசினோம். இதை பொறுக்க முடியாமல் எங்களை விடுதலை செய்துவிட்டார்கள்.
எங்களை விடுதலை செய்ததால் சிறை அதிகாரிகளையும் மாற்றிவிட்டார்கள். நாங்கள் கூட்டாக இருந்தோம் வெளியேறிவிட்டோம். ஆனால் சீமான் தனியாக இருக்கிறார். அதனால்தான் அவர் தனிமைச்சிறையில் சிறைப்பட்டுவிட்டார். நாங்கள் சீமானைச்சென்று பார்த்தபோது, இன்னமும் அவர் தளர்ந்து போகவில்லை. அஞ்சாநெஞ்சனாகத்தான் இருப்பதை பார்த்தோம்.
நிமிர்ந்து நிற்கிறார் சீமான். கியூபா விடுதலைக்காக போராடிய பிடல் காஸ்ட்ரோவைப்போலத்தான் சீமானைப்பார்க்கிறோம். சீமானை வெளியே கொண்டுவர சட்ட நுணுக்களை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் கொண்டுவருவோம். சீமானின் புகழ் வெளிநாடுகளிலும் பரவிக்கிடக்கிறது. உலகத்தின் கடைக்கோடி தமிழன் கூட தமிழனுக்காக போராடிய சீமானுக்காக பேசுகிறான்.
இன்னும் வெளியே இருப்பது திருச்சி வேலுச்சாமி மட்டும்தான். அவரையும் உள்ளே அனுப்ப உறுதி எடுத்துக்கொள்வோம். என்னையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ள ஆலோசனை நடந்துவருகிறது. என் மீது தே.பா.சட்டம் போட அவர்களுக்கு அச்சம். ஏன் அச்சம் என்பதும் அவர்களுக்கே தெரியும். என்னை எதையும் தாங்கும் இதயம் என்று கலைஞர் சொல்லியிருக்கிறார். அண்ணாவின் இயத்தை தாங்கிக்கொண்டிருந்த கலைஞர் அந்த இதயத்தை என்னிடம் கொடுத்திருப்பதில் மகிழ்கிறேன்”என்று பேசினார்.

07 ஆகஸ்ட் 2010

நாம் தமிழர் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம்.



புதுக்கோட்டையில் மீனவர்கள் படுகொலையை கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் பொதுக்கூட்டத்தில் நடைபெறுகிறது.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த கைதுக்கான முதல் கண்டன பொதுக்கூட்டத்தை புதுக்கோட்டையில் நடத்துவது என, நாம் தமிழர் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் அறிவித்திருந்தனர். அதன்படி ஈழத்தமிழர்கள் ஆதரவு தலைவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். ஆனால் இதில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் கலந்து கொண்டு பேசுவதாக, சில நாட்களுக்கு முன்பு சிறையில் சீமானை சந்தித்து ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில், புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. சீமான் கைதை கண்டித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தை மீனவர் தாக்கப்படுவதை கண்டித்து, கண்டன பொதுக்கூட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
கூட்டத்தில் திருச்சி வேலுச்சாமி மற்றும் நாம் தமிழர் இயக்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

திருமலையில் இரு மாணவிகளை காணவில்லை.



திருகோணமலையில் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவிகள் இருவர் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் காணாமல் போயுள்ளதாகத் தெரியவருகிறது. இரு மாணவிகளும் யாழ். பொலிஸ் நிலையத்தில் இருப்பதாக திருகோணமலை பொலிஸாருக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தவணையின் இறுதி நாளான நேற்று பாடசாலைக்குச் சென்ற மேற்படி மாணவிகள் இருவரும் நேற்று மாலை வரையில் வீடு திரும்பாததை அடுத்து, இது தொடர்பில் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் பெற்றோரினால் முறையிடப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவிகள் இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுகின்றது.
சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துரைரட்ணசிங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேற்படி மாணவிகள் இருவரும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சக மாணவியொருவரின் தந்தையைப் பார்வையிடச் சென்றதாக தனக்குத் தகவல் கிடைத்துள்ளது என்றும் அவர் சொன்னார்.
நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாம் தவணையின் இறுதிநாள் என்பதால் பாடசாலை வழமையை விட நண்பகல் 12.00 மணிக்கு முன்னதாக விடப்பட்டது. ஆனாலும், குறித்த இரண்டு மாணவியரும் பிற்பகல் 3 மணியாகியும் வீடு திரும்பவில்லை. இதன் பின்னரே பெற்றோர் மாணவிகளைத் தேட ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து பாடசாலைக்கே சென்று விசாரித்ததுடன், பல்வேறு இடங்களிலும் மாணவிகளைத் தேடிப் பார்த்துள்ளனர். இந் நிலையில், இருவரும் மூதூருக்குச் செல்வதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும், அது ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.
அத்துடன், இது தொடர்பில் பெற்றோர் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், மூதூர் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மாணவிகள் இருவர் தொடர்பிலும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என திருகோணமலை, மூதூர் பொலிஸார் நேற்று இரவு தெரிவித்தனர்.
பிந்திய செய்தி :

திருமலை மாணவிகள் யாழ். பொலிஸ் நிலையத்தில்
காணாமல் போனதாக புகாரிடப்பட்ட, திருகோணமலை மகளிர் கல்லூரியொன்றில் தரம் 6 இல் கல்வி பயிலும், இரு மாணவிகளும் யாழ். பொலிஸ் நிலையத்தில் இருப்பதாக திருகோணமலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பாடசாலைக்கு சென்ற இவர்கள் வீடு திரும்பவில்லை என திருகோணமலை பொலிஸில் மாணவிகளின் பெற்றோர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். இம்மாணவிகள் கடத்தப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டிருந்தது.
அதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் மூலம் மாணவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். தாம் கடத்தப்பட்டிருக்கவில்லை என்றும், பரீட்சை புள்ளி குறைவு காரணமாக வீட்டுக்கு செல்லாமல் பஸ் மூலம் புறப்பட்டு வந்ததாகவும் அவர்கள் பொலிஸில் தெரிவித்துள்ளனர்.

06 ஆகஸ்ட் 2010

நாம் போராடித் தமிழீழம் பெறுவோம். அதனைத் தலைவர் கையில் தருவோம்!: கவிஞர் தாமரை.



உலகத்தின் கண் பார்க்க… ஈழமே வீழ்ந்துவிட்டது. சுதந்திரத்துக்காக சொந்த மண்ணில் வாழ்ந்த தமிழினம் கருவறுக்கப்பட்டுவிட்டது. இனி போராடி எந்தப் பலனும் இல்லை என முடங்கிக்கிடந்த உணர்வாளர்களில் நானும் ஓர் ஆள்தான். சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை, பத்திரிகைகளைப் படிக்கும் எண்ணம்கூட இல்லை. அந்த அளவுக்கு ஈழத்தின் வீழ்ச்சி என்னை வீழ்த்திப்போட்டது.
ஆனால், நம்மை வீழ்த்திய சிங்களக் கொடூரத்துக்கு எதிராக இன்றைக்கு உலகத் தமிழினமே சங்கிலிபோல் கோத்துக்கொண்டு நிற்கிறது. ராஜபக்ஷே ஒரு போர்க் குற்றவாளியாக கூண்டில் ஏற்றப்பட அத்தனை விதமான முன்னெடுப்புகளையும் தமிழ் இரத்தங்கள் செய்துகொண்டு இருக்கின்றன.
இந்த நேரத்தில் ஈழத்தின் வீழ்ச்சி குறித்து மனம் வெதும்பிக் கிடப்பது மூடத்தனம்.அதனால்தான், அடிபட்ட புலியாய் மறுபடியும் ஆர்த்தெழத் தொடங்கி இருக்கிறது தமிழினம். 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் நாடு கடந்த தமிழீழ அரசு அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றன. சட்டத்துக்கு உட்பட்டு தமிழர்கள் எடுக்கும் இத்தகைய ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகள் சிங்களத்தின் கழுத்தில் கயிறு வீசி இருக்கின்றன. இந்த நேரத்தில், ஒருசேர நாம் திரள்வதுதான் நம்மை சதிராடியவர்களுக்கு சம்மட்டி அடியாக இருக்கும். இதை தமிழகத் தமிழர்களும் தணியாத வேகத்தோடு கையில் எடுக்க வேண்டும்! ” என, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு 30 நாட்கள் பயணம் சென்று வந்திருக்கும் கவிஞர் தாமரை தான் இப்படி தகிக்கிறார். உலகத் தமிழர்களின் உணர்வுகள் குறித்து அவரிடம் பேசினோம்.
சிறப்புத் தூதர் அனுப்பச் சொல்லியும், மீள் குடியேற்றத்துக்கு உதவக் கோரியும் முதல்வர் கருணாநிதி எடுக்கும் முயற்சிகளை ஈழத் தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?
கருணாநிதியை வசைபாடுகிறார்கள். ‘அவருக்கு நாங்க என்ன பாவம் பண்ணினோம்? அவர் நினைச்சிருந்தா, இந்த அழிவைத் தடுத்திருக்கலாமே! இத்தனை மக்கள் செத்தும் அவர் மனசில் இரக்கமே சுரக்கலையா?’ எனத் தாய்மார்கள் என் கைகளைப் பிடித்துக்கொண்டு கதறினார்கள். ஜெயலலிதாவை ஒரு பொருட்டாகவே அவர்கள் கருதவில்லை. கடைசி நேரத்திலாவது எப்படியாவது தலையிட்டு கருணாநிதி போரை நிறுத்திவிடுவார் எனப் புலம்பெயர் தமிழர்கள் நம்பி இருந்தனர். ஆனால் , வெறுமனே உண்ணாவிரதம், கடிதம் என கருணாநிதி நடத்திய நாடகங்கள் அவர்களைப் பொங்கவைத்துவிட்டது. தமிழர்களுக்கு சம்பந்தமே இல்லாத பல உலக நாடுகள் ராஜபக்ஷேயை போர்க் குற்றவாளியாக அறிவிக்கச் சொல்லி போராடி வரும் நிலையில், தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம்கூட இயற்றாமல், இன்னமும் கடிதம் எழுதுவதை உலகத் தமிழர்கள் நம்பத் தயாராக இல்லை. இதற்கிடையில், தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைத் திருப்பி அனுப்பிய சம்பவம் உலகத் தமிழர்களைப் பெரிதாகக் கொந்தளிக்கவைத்திருக்கிறது. அவர்களின் அகராதியில் கருணாநிதி என்கிற பெயரைக்கூட இனி வைத்திருக்க மாட்டார்கள்!
முதல்வர் நடத்திய செம்மொழி மாநாட்டுக்கு உலகளாவிய தமிழர்களிடம் என்ன எதிர்வினை?
செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாடு வாழ் தமிழர்களையும் நான் சந்தித்தேன். கவியரங்கம் என்ற பெயரில் நடந்த புகழார வைபோகங்களைச் சொல்லி, ‘இதுதான் செம்மொழிக்கான சிறப்பா?’ என வேதனைப்பட்டனர். தனது கறையைத் துடைக்க கருணாநிதி எடுத்த முயற்சியாகவே செம்மொழி மாநாட்டைப் புலம்பெயர் தமிழர்கள் பார்த்தார்கள்.
அந்த மாநாட்டின் மொத்த நிகழ்ச்சிகளையும் குற்றம் சொல்ல நான் விரும்பவில்லை. மாநாட்டில் எனக்குத் தெரிந்து இரண்டே இரண்டு குறைகள்தான். தமிழனின் சாதனைச் சின்னங்களாக 40 ஊர்திகளை அணிவகுக்கச் செய்தார்கள். அதில் 41-வது ஊர்தியாக ‘இப்படி எல்லாம் வாழ்ந்த தமிழனை எப்படி எல்லாம் காட்டிக்கொடுத்தோம்’ என்பதையும் அணிவகுக்கச் செய்திருந்தால், தமிழின வரலாறு முழுமை பெற்றிருக்கும். அடுத்து, மாநாட்டை முடித்துவைக்க ராஜபக்ஷேயை அழைத்திருக்க வேண்டும். தமிழினத்தை முடித்துவைத்ததுபோல், தமிழ் மாநாட்டையும் அவர் முடித்துவைத்திருந்தால் பொருத்த மாக இருந்திருக்கும். விட்டுத்தள்ளுங்கள் அந்த வீண் கச்சேரியை..!
சீமானின் கைது ஏதேனும் கவனிப்பைப் பெற்றிருக்கிறதா?
உலகளாவிய தமிழர்கள் சீமானைத் தீரம் மிகுந்த நாயகனாகப் பார்க்கிறார்கள். அவர் வெளியில் இருந்து தொடர்ந்து போராட வேண்டும் என எண்ணுகிறார்கள். நான் சென்ற பல இடங்களிலும் அவருக்கு அபரிமிதமான ஆதரவு இருக்கிறது.
நடிகை அசின் தொடங்கி கருணாஸ் வரையிலான விவகாரங்களுக்காக புலம்பெயர் தமிழர்கள் உங்களிடம் குமுறியதாக இணையதளங்களில் செய்தி வந்திருக்கிறதே?
ஈழத்தில் போர் நடந்தபோது இந்த அசின் எங்கே போனார்? இந்திப் பட சூட்டிங்குக்காக இலங்கைக்குப் போனதாகச் சொல்லும் அசின், அங்கே தமிழர்களுக்குக் கருணையோடு உதவியதாகவும் படங்கள் வெளியிட்டிருக்கிறார். ராஜபக்ஷேயின் மனைவியோடு கை குலுக்கியபடி அவர் கருணைத் தாயாக மாறிய மர்மம்தான் தெரியவில்லை. சூட்டிங் என்கிற பெயரில் இலங்கைக்கு செல்வதாகச் சொல்லும் திரைப்படத் துறையினர் ஓர் உண்மையைத் தயவுகூர்ந்து புரிந்துகொள்ள வேண்டும். ஈழப் படுகொலைகளுக்கு தக்க விளைவாக இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பதுதான் உலகத் தமிழர்களின் ஒருமித்த கோரிக்கை.
இலங்கை அரசுக்குப் பிரதான வருமானம் சுற்றுலாதான். சூட்டிங்குக்காகத் திரைத் துறையினர் அங்கே போனால், அது இலங்கையின் பொருளாதாரத்துக்கு நாமே உதவுவது போன்றதாகிவிடும். இந்த உலகில் சூட்டிங் நடத்த வேறு இடமே இல்லையா? அசின் இந்திப் படத்தில் நடிக்கும் தைரியத்தில் தன் தரப்பை நியாயப்படுத்துகிறார். ஆனால், அவர் தமிழ்ப் படத்தில் தலைகாட்ட முடியாத அளவுக்குத் தக்க பதிலடி கிடைக்கும். சிங்களத்துக்குத் துணைபோகும் அத்தனை நட்சத்திரங்களையும் அடியோடு புறக்கணிக்க உலகத் தமிழர்கள் தயாராகிவிட்டார்கள்!
கலைக்கு மொழி கிடையாது என்றும், நட்சத்திரங்கள் இலங் கைக்குச் செல்லும் விவகாரத்தில் அவரவர் எடுக்கும் தனிப்பட்ட முடிவுகளில் தலை யிடுவது தவறு என்றும் அசினுக்கு ஆதரவாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சொல்லி இருக்கிறாரே?
கலைக்கு மொழி கிடையாது எனச் சொல்லும் சரத்குமாரை இந்தியில் போய் நடிக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். கலைக்கு மொழி இல்லை என எவரும் சொல்ல முடியாது. தமிழ்ப் படத்தை தமிழர்கள்தானே பார்க்கிறார்கள். அசினுக்கு ஆதரவாக சரத்குமார் சொன்ன கருத்தில் உலகத் தமிழர்கள் ஒருவருக்கும் உடன்பாடு இல்லை. அவர் தன்னல நோக்கில் செயல்படுவதாக அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அசின், கருணாஸ் உள்ளிட்டவர்கள் இலங்கைக்குச் செல்வதில் இவ்வளவு தீவிரமாக இருப்பது ஏன் என்கிற பின்னணியை உலகத் தமிழர்கள் நன்றாக உணர்ந்துவைத்திருக்கிறார்கள். தமிழ் நட்சத்திரங்களை இலங்கைக்கு அழைத்து பொருளாதார மேம்பாடு அடையத் துடிக்கும் சிங்கள சதிக்கு சரத்குமார் ஆளாகி விடக் கூடாது என்பதுதான் என் பதற்றம்.
தமிழ் ஒருங்கிணைப்பைக் குலைக்கும்விதமாக கோடான கோடிகளைக் கொட்டி வரும் இலங்கைத் தூதர் அம்சா, தமிழ் நட்சத்திரங்கள் சிலரை லண்டனுக்கு வரவழைக்கப்போகிற விஷயத்தையும் உலகத் தமிழர்கள் என்னிடம் பகிர்ந்துகொண்டார்கள். அவர்களின் பெயர்களை வெளியிட நான் விரும்பவில்லை. ஆனால், நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் சரத்குமார் இந்த விவகாரத்தில் மிகுந்த எச்சரிக்கையோடும், இன உணர்வோடும் செயல்பட வேண்டும். காரணம், அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல… நடிகர் சங்கத் தலைவர்… ஒரு கட்சியின் தலைவர். அவர் மூலமாக தமிழ்த் திரையுலகையே இரண்டாக்க முடியும் என்பது சிங்கள அரசு போட்டுவைத்திருக்கும் திட்டங்களில் ஒன்று. அதற்கு சரத்குமார் ஒருபோதும் உடன்படக் கூடாது! கொல்லப்பட்ட மக்களின் பக்கமா… கொடூர ஆட்டம் போட்ட சிங்களத்தின் பக்கமா என்பதை தமிழ் நட்சத்திரங்கள் தெளிவுபடுத்த வேண்டிய நேரம் இது!
சுப.தமிழ்ச்செல்வனின் சகோதரர் தொடங்கி ஈழப் பிரதிநிதிகள் பலரையும் சந்தித்தபோது, பிரபாகரன் உள்ளிட்ட புலித் தலைவர்களின் நிலைமை குறித்து தெரியவந்ததா?
தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். மே – 17 வரை போர்க்களத்தில் இருந்து, எப்படியோ தப்பி வந்த சிலரும் இதனை மறுக்கவில்லை. அதே நேரம், ‘தலைவர் வருவார், தமிழீழம் பெற்றுத் தருவார்’ என்கிற முழக்கத்தைத் தவிர்த்து, ‘நாம் போராடித் தமிழீழம் பெறுவோம். அதனைத் தலைவர் கையில் தருவோம்!’ என முழங்கும்படி நான் வேண்டினேன். உலகளாவிய அளவில் இப்போது உருவாகி இருக்கும் ஆக்கப்பூர்வமான கைகோப்பு கண்டிப்பாகத் தலைவர் கையில் தமிழீழத்தை ஒப்படைக்கும்!” – நரம்புகளில் நம்பிக்கை தெறிக்கச் சொல்கிறார் கவிஞர் தாமரை.

தனது இரு பிள்ளைகளுக்கு நஞ்சூட்டி தானும் தற்கொலை முயற்சி; சிறுமி பலி!



தனது இரு பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டிய தாயொருவர் தானும் நஞ்சை அருந்தி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று நாவுல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடவல பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த கோரச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,
நஞ்சூட்டப்பட்ட நிலையில் இருந்த ஒரு பிள்ளை உயிரிழந்ததுடன் மற்றைய பிள்ளையும் தாயும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் போது 5 வயதான ரோஜா என்ற தமிழ் சிறுமியொருவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 10 வயதுடைய சிறுவன் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கான காரணம் உடனடியாகத் தெரிய வரவில்லை என்று கூறிய பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி, இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

இன்று 06-08-2010 லண்டனில் பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகளுடனான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.


இன்று 06-08-2010 லண்டனில் பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகளுடனான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளது.
வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள பிறண்ட் ரவுண் ஹோலில் இடம்பெறவுள்ள இந்த பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் தமிழ் பாடசாலைகளுடன் சந்திப்பொன்றை ஏற்பாடுசெய்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கல்வி, விளையாட்டுத்துறை மற்றும், கலைபண்பாட்டுக் குழுவினதும், நிதிக்குழுவினதும் பிரதிநிதிகளில் ஒருவரான திருமதி. லலிதசொரூபினி பிரதீபராஜ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் புலம்பெயர் மக்களின் கல்வித்துறையை மேம்படுத்துவது, மற்றும் புலத்தில் உள்ள எம் உறவுகளில் கல்விக்காக ஏங்கும் மாணவ சமூகத்திற்கு எவ்வாறு உதவிகள் செய்து அவர்களின் கல்வித்துறையை மேம்படுத்துவது போன்ற விடையங்கள் பேசப்படவுல்ளதாகவும், அது தொடர்பாக அனுபவமுள்ளவர்களான பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், தமிழ்பாடசாலை பிரதிநிதிகள் மற்றும் கல்விமாங்கள், மாணவர்கள் என அனைவரிடமும் ஆலோசனைகளயும், கருத்துக்களையும் கேட்டறிந்து அனைவரும் புரிந்துணர்வோடு ஒன்றிணைந்து செயற்பட இந்த ஒன்றுகூடல் வழிசமைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்த ஒன்றுகூடலில் கலந்துகொள்ள பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், தமிழ்பாடசாலை பிரதிநிதிகள், கல்விமாங்கள், மற்றும் மாணவர்களை வந்து கலந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஒன்றுகூடல் இடம்பெறும் இடம்:
CHAMBER HOUSE,Brent Town Hall,Forty Lane, Wembley, HA9 9BR
காலம்: 06-08-2010 Friday
நேரம்: 7:00pm – 9:3pm

05 ஆகஸ்ட் 2010

சென்னையில் நாளை மாலை 5.30 மணிக்கு கருத்துரிமை களம் என்ற அமைப்பு சார்பில் மாபெரும் மக்கள் எழுச்சி பொதுக்கூட்டம் நடக்கவிருக்கிறது.



தமிழர்களின் கருத்து சுதந்திரத்தை மறுப்பதற்கும் இலங்கை இனவெறி அரசால் நடத்தப்பெற்ற போர் குற்றங்களை மறைக்கவும் முழுவீச்சாக இறங்கியிருக்கும் அரசை கண்டிக்கும் மக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் இணைகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புரசைவாக்கம் தாணா தெருவில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் நல்லக்கண்ணு தலைமையேற்கிறார். புலவர் புலமைபித்தன் முன்னிலை வகிக்கிறார்.
தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் தொடக்க உரையாற்றுக்கிறார்.
கொளத்தூர் மணி, தமிழருவி மணியன், பழ.கருப்பையா, டாக்டர் கே.கிருஷ்ணசாமி, ப.அப்துல்சமது, சி.மகேந்திரன், பெ.மணியரசன், தீரன், தியாகு, அஜிதா ஆகியோர் பல்வேறு தீர்மானங்களை முன்வைக்கின்றனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தீர்மானங்களை நிறைவேற்றக்கோருகிறார்.

தமிழ் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த பிரபா கணேசன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்: மனோ கணேசன் அறிக்கை!



எனக்கும், எமது கட்சிக்கும் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்து, அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனை கட்சியில் இருந்து இடை நிறுத்தியுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு தற்போது விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர், தாம் பிரபா கணேசனை கட்சியில் இருந்து இடைநிறுத்துமாறு கட்சியின் செயலாளர் நல்லையா குமரகுருபரனுக்கு தாம் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
ஜனாதிபதியுடன் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரபா கணேசன் அனுமதி கோரியதாகவும் அதற்கு அனுமதியளித்ததாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.
எனினும் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கோ அல்லது அரசாங்கத்தில் இணைவதற்கோ தாம் அவருக்கு அனுமதியளிக்கவில்லை என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பிரபா கணேசன் தமது முதுகில் குத்திவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கை
பிரபா கணேசன் எமது கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டார்:

ஜனநாயக மக்கள் முன்னணி

தலைவர் மனோ கணேசன்,
அரசாங்கத்திற்கு ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதன் மூலம் பிரபா கணேசன் எம்பி எமது கட்சிக்கும், தமிழ் இனத்திற்கும் துரோகம் இழைத்துவிட்டார். அத்துடன் கடந்த 10 வருடங்களாக நான் முன்னெடுத்துவரும் நேர்மையான அரசியல் நிலைப்பாட்டிற்கு விரோதமாக நடந்துகொண்டதன் மூலம் அவர் என் முதுகில் குத்தியுள்ளார்.
எமது கட்சியின் அடிப்படைச் சட்டம், கட்சி தலைவர் என்ற முறையிலே எனக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் எமது பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரனின் உடன்பாட்டுடன் பிரபா கணேசன் எம்பியை தமது கட்சியிலிருந்து உடனடியாக இடைநிறுத்தம் செய்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு தற்சமயம் பயணம் மேற்கொண்டுள்ள மனோ கணேசன் தமது பயணத்தை இடை நிறுத்திவிட்டு நாடு திரும்புவதற்கு முன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது. உத்தேச உள்ளூராட்சி தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பிலான எமது கட்சியின் ஆலோசனைகளை அரசாங்கத்தின் உயர்பீடத்திடம் வழங்குவதற்கு அலரி மாளிகைக்கு செல்லவிருப்பதாக பிரபா கணேசன் நேற்று காலை தொலைபேசியில் என்னிடம் தெரிவித்திருந்தார். எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஜனாதிபதியையோ அல்லது வேறு எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரையோ சந்திப்பதற்கு எமக்கு இருக்கின்ற உரிமை அடிப்படையில் இதற்கான ஒப்புதலை நான் அவருக்கு வழங்கியிருந்தேன்.
ஆனால் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு இன்னுமொரு மலையக பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து அரசிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து, பாராளுமன்றத்திலே அரசாங்கத்துடன் இணைந்துகொண்டுள்ள பிரபா கணேசனின் செயற்பாடு எமது கட்சி கொள்கைக்கு திட்டவட்டமாக முரணானதாகும்.
இதன் மூலம் பிரபா கணேசன் எம்பி, கட்சி தலைவர் என்ற முறையிலே எனக்கும், எமது கட்சிக்கும் ஒட்டு மொத்த தமிழ் மக்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். கடந்த தேர்தலிலே வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்ல முடியாமல் போன நிலையிலும் நான் மனம் வருந்தவில்லை. ஆனால் இன்று நான் நாட்டில் இல்லாதவேளையில் அரசுடன் இணைந்து கொண்டு எனது முதுகில் குத்தியதன் மூலம் என் மனதை பிரபா கணேசன் எம்பி மிகவும் மோசமான முறையிலே வேதனைக்கு உள்ளாக்கியுள்ளார்.
பெரும்பான்மை கட்சிகளுடனான முரண்பாட்டிற்கு ஒரே தீர்வு தமிழ் பேசும் கட்சிகளும், முற்போக்கு சக்திகளும் ஒன்று சேர்வதாகும். இதுவே எமது கட்சியின் கொள்கை நிலைப்பாடாகும். ஐக்கிய தேசியக் கட்சியுடன் எமது கட்சிக்கு கடந்த தேர்தலுடன் ஏற்பட்டுள்ள முரண்பாட்டை காரணமாக வைத்துக்கொண்டு அரசுடன் இணைவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சுயநலவாத துரோகமாகும்.
தமிழ் மக்களை வரலாறு காணாத துன்பத்திற்கு உள்ளாக்கியிருக்கக்கூடிய இந்த அரசாங்கத்துடன் பிரபா கணேசன் இணைந்து கொண்டுள்ளார் என்ற செய்தி எனது நெஞ்சில் இடியாக விழுந்துள்ளது.
ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிலிருந்தும் பிரபா கணேசனின் அங்கத்துவம் உடனடியாக இடை நிறுத்தம் செய்யப்படுகின்றது.
அவருடன் எந்தவித தொடர்புகளை பேணவேண்டாம் என எமது கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும், அலுவலர்களையும் கோருகின்றேன்.

புத்த பிக்கு சாகும்வரை உண்ணாவிரதம்.


கிழக்கு மாகாணத்திலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களை மீள்குடியேற்ற வேண்டும் என்று கோரியும், மட்டக்களப்பு விகாரையை புனரமைக்க வேண்டும் என்று கோரியும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெறுகின்றது.
மட்டக்களப்பு மங்கள ராம ராஜ மகா விகாரையின் விகாராதிபதியானஅம்பிட்டிய சுமணரத்ன தேரர் தலைமையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
50 இற்கும் அதிகமான சிங்களவர்களும், 05 இற்கு மேற்பட்ட பிக்குகளும் இப்போராட்டத்தில் பங்குபற்றுகின்றார்கள். சுமணரட்ன தேரர் சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழர் உரிமை நிலை நாட்டப்படவேண்டும்.




இலங்கையில் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்டுவது தொடர்பாக உலக நாடுகளுக்கு அளித்துள்ள உறுதிமொழியை நிறைவேற்றுமாறு, ராஜபக்சே அரசை வலியுறுத்தும்படி உலகப் பெருந்தலைவர்கள் குழு இந்தியா மற்றும் அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.
2007ம் ஆண்டு உலகின் புகழ்பெற்ற பெருந்தலைவர்கள் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இதில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபிஅனான், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் உள்ளிட்ட தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த உலகப் பெருந்தலைவர்கள் குழு தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்தும் இலங்கை அரசை கடுமையாக குறை கூறி இருக்கிறார்கள். தமிழர்களுக்கு எதிராக மனித உரிமைகள் மீறப்படுவது தடுத்து நிறுத்தப்பட இலங்கை அரசை சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற அதன் நட்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்றும் இக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுதல் போன்ற பிரச்சனைகளில் சர்வதேச சமுதாயம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்ளக்கூடாது என்றும் இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தண்டனையில் இருந்து விலக்கு அளிப்பதுதான் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு கடுமையான போர் குற்றங்கள் புரிந்திருப்பதாக பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வரும் நிலையில், உலகப் பெருந்தலைவர்கள் குழுவும் இலங்கை அரசுக்கு எதிராக தங்கள் வேதனையை வெளிப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
போரின் போது அமல் படுத்தப்பட்ட நெருக்கடி நிலை இன்னும் இலங்கையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதற்கும் இக்குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர். போர் முடிந்து ஓராண்டு காலம் முடிந்த பிறகும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் ரீதியாக தீர்வுகாண இலங்கை அரசு இதுவரை நடவடிக்கை எதையும் எடுக்காததையும் இக்குழுவினர் வேதனையோடு சுட்டிக்காட்டியுள்ளனர்.

04 ஆகஸ்ட் 2010

மேர்வினால் தண்டிக்கப்பட்ட உத்தியோகஸ்தர் தலைமறைவு.

பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவால் நேற்று மரத்தில் கட்டிப் போடப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்,அவரின் குடும்பத்தினர் சகிதம் காணாமல் போய் உள்ளார்.
அவர்கள் உயிராபத்துக் கருதி வீட்டை விட்டு வேறு எங்கோ சென்று மறைந்திருக்கின்றார்கள் என்று அந்த உத்தியோகத்தரின் உறவினர்கள் நம்புகின்றார்கள்.
நேற்று நடந்த அந்தச் சம்பவத்தால் சமுர்த்தி உத்தியோகத்தர் மிகவும் மன ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார் என்றும் அவர் எந்தவொரு தவறும் செய்திராத நிலையில் தண்டிக்கப்பட்டு இருக்கின்றார் என்றும் அவரின் உறவினர்கள் குறிப்பிட்டார்கள்.

சீமான் வழக்கு,பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு.


நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானை, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது குறித்து, 6 வாரத்தில் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சீமான் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதாக கைது செய்யப்பட்டார். பின்னர் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து சீமான் சார்பில் அவரது சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் நாகப்பன், சிவக்குமார் ஆகியோரது முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சீமான் சார்பில் மூத்த வக்கீல் நடராஜன் ஆஜராகி வாதாடினார். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் மட்டுமே உத்தர விட முடியும். ஆனால் சீமானுக்கு கூடுதல் கமிஷனர் உத்தர விட்டுள்ளார். மேலும், சட்ட விரோத தடுப்பு சட்டம் குறித்த அரசு ஆணை காலாவதியாகி விட்டது. எனவே, அரசின் உத்தரவு செல்லாது என வாதிட்டார். இதையடுத்து 6 வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்கு மாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

அதிகரித்து செல்லும் சிறிலங்கா அமைச்சர்களின் வன்முறை.


சிறீலங்கா அரசின் அமைச்சர்களின் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளை அவர்களின் அலுவலகத்திற்குள் சிறைவைத்த அமைச்சர் விமல் வீரவனசாவின் அராஜகம் அடக்கும் முன்னர், மற்றுமெரு பிரதி அமைச்சரான மேர்வின் சில்வா சமுர்த்தி அலுவலகர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில் மரத்தில் கட்டிவைத்து தனது வன்முறையை அரங்கேற்றியுள்ளார்.
உலகில் மிகவும் வன்முறை மிக்க நாடாக மாற்றம் பெற்றுவரும் சிறீலங்காவில் தினம் தினம் புதிய புதிய வடிவங்களில் வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.
கடந்த வாரம் களனியில் நடைபெற்ற டெங்கு தடுப்பு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளத் தவறிய சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவரை பிரதியமைச்சர் மேர்வின் சில்வா நேற்று (3) பிற்பகல் மா மரமொன்றில் கட்டி வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் சமுர்த்தி அதிகாரியொருவரை மரத்தில் கட்டிவைத்த பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளும்வரை நாடாளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டங்களில் பங்குபற்றாதிருப்பதற்கு சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர்.
சமுர்த்தி அதிகாரசபையுடன் இணைந்த அனைத்துச் சங்கங்களும் இந்த புறக்கணிப்புக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் நிஷாந்த உடவத்த தெரிவித்துள்ளார்.

03 ஆகஸ்ட் 2010

சமுர்த்தி உத்தியோகஸ்தரை மரத்தில் கட்டிவைத்த மேர்வின்.




பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை கடந்த வாரம் முன்னெடுக்கத் தவறிய சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை இன்று மாமரம் ஒன்றில் கட்டிப் போட்டார்.
அவர் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் அழைப்புக் கொடுத்து ஊடகவியலாளர்களின் முன்னிலையிலேயே இந்த தண்டனையைப் பகிரங்கமாக வழங்கினார்.
களனிப் பிரதேசசபை எல்லைக்கு உட்பட்ட இடங்களில் பொறுப்பான அதிகாரிகள் எவராவது டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை ஒழுங்கான முறையில் முன்னெடுக்கத் தவறினால் அவர்களை மரத்தில் கட்டிப் போடுவார் என்று பிரதி அமைச்சர் கடந்த வாரம் எச்சரித்திருந்தார்.
பிரதி அமைச்சர் மேர்வின் சில்வாவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு இரு பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்த இரு பெண்களுக்கும் இதே கதிதான் ஏற்பட்டு விடும் என்று பிரதி அமைச்சர் எச்சரித்தார்.
கொஞ்ச நேரம் கழித்து அந்தச் சமுர்த்தி உத்தியோகத்தரை பிரதி அமைச்சர் அவிழ்த்து விட்டார். மகளுக்கு சுகவீனம் ஏற்பட்டிருந்தமையாலேயே கடந்த வாரம் இடம்பெற்றிருந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் பங்குபற்ற முடியாமல் போய் விட்டது என்று அந்த சமுர்த்தி உத்தியோகத்தர் கூறினார்.

வெட்டுக்காயங்களுடன் பொலிஸ்காரரின் சடலம்.


வெட்டுக் காயங்களுடன் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. கொழும்பு கொலொன்னாவைப் பகுதியிலிருந்து இவரது சடல்ம் கண்டெடுக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இன்று காலை பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலொன்றுக்கு அமைய கொலொன்னாவை ஐ. டி. எச் பிரதேசக் கால்வாய் ஒன்றின் அருகிலிருந்து இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.சடலத்தினருகே கையடக்கத் தொலைபேசியொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பொலிஸ் சார்ஜண்ட், பன்னலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றுபவரெனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் (பொலிஸ் அத்தியட்சகர்) பிரிசாந்த ஜயகொடி தெரிவித்தார். நேற்று மாலை கடமையை முடித்துக் கொண்டு பொலிஸ் நிலையத்திலிருந்து அவர் வெளியேறிச் சென்றிருந்தார் எனக் கூறப்படுகிறது. அவர் எவ்வாறு கொலைசெய்யப்பட்டார் என்ற விசாரணைகளை பொலிசார் முடிக்கிவிட்டுள்ளனர்.

தடுப்பு முகாம்களில் திடீர் சோதனை.


வன்னியில் உள்ள இரு புனர்வாழ்வு முகாம்களில் இராணுவ புலனாய்வுப் பிரிவினர் நேற்று திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். தர்மபுரம் புனர்வாழ்வு முகாம், நெலுக்குளம் புனர்வாழ்வு முகாம் ஆகியவற்றிலேயே அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர்.அவர்கள் இத்தேடுதலில் தர்மபுரம் புனர்வாழ்வு முகாமில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள்-02 , கையடக்கத் தொலைபேசிகளுக்கான பற்றறிகள் -03,கையடக்கத் தொலைபேசிச் சார்ச்சர்-01,சிம் கார்ட்-01 ஆகியவற்றைக் கண்டுபிடித்திருக்கின்றனர். அவ்வாறே நெலுக்குளம் புனர்வாழ்வு முகாமில் கையடக்கத் தொலைபேசிகள்-05,கையடக்கத் தொலைபேசிகளுக்கான பற்றறிகள் -06,கையடக்கத் தொலைபேசிச் சார்ச்சர்-04, சிம் கார்ட்டுகள்-04ஆகியவற்றைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

02 ஆகஸ்ட் 2010

வழக்கின்றியே சரத்தை தூக்கில் போட முயற்சியாம்.


முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா எம்.பி , பொன்சேகாவின் செயலாளர் என்று கூறப்படும் சேனக டீ சில்வா ஆகியோருக்கு எதிரான வழக்குகளை நடத்தாமலேயே, அவர்களைத் தூக்கில் போட சட்ட மா அதிபர் முயற்சிக்கின்றார் என்று இருவரையும் ஆதரித்து இன்று மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திரந்த வரலியத்த நீதிமன்றில் தெரிவித்தார்.
படை விட்டோடிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்கிற வழக்கு இருவருக்கும் எதிராக இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. அப்போதே, சேனக டீ சில்வாவும் பொன்சேகாவும் ஒருவரை ஒருவர் ஒரு மணித்தியாலம் வரை சந்தித்து இவ்வழக்கு சம்பந்தமாக உரையாட இந்நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கோரினார்.
அவர் அங்கு தெரிவித்தவை வருமாறு:
”தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கச் சந்தேகநபர்கள் கூட உறவினர்களுடன் உரையாடுகின்றமைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.எனவே இந்நீதிமன்ற வளாகத்திலோ,பொன்சேகா தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கடற்படை தலைமைக் காரியாலயத்திலோ இருவரும் சந்தித்து உரையாட அனுமதிக்க வேண்டும்.”
ஆனால் சட்டமா அதிபரின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி தமித் தோட்டவத்த இந்த அனுமதியை நீதிமன்றம் வழங்கவே கூடாது என்றார். அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றும் கூறினார். அப்போதே வழக்கை நடத்தாமலேயே அவரது கட்சிக்காரர்கள் இருவரையும் தூக்கில் போட சட்ட மா அதிபர் முயற்சிக்கின்றார் என்று ஜனாதிபதி சட்டத்தரணி பதிலுக்கு சொன்னார்.
இவ்வழக்கை விசாரித்த கொழும்பு பிரதான நீதிவான் ரஸ்மி சிங்கப்புலி சந்தேகநபர்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்து விட்டார் இவ்வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் இடம்பெறும்.

போராளிகளை இல்லாதொழிக்க சிங்கள அரசு முயற்சி.





இராணுவத்திடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் 1,350 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே இவர்களுக்கு எதிரான வழக்குகள் தொடரப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இவ்வாறு வழக்கு தொடர்வதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 650பேர் வவுனியா தடுப்பு முகாமிலும் ஏனைய 700பேரும் காலி, பூஸா முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறித்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.இதேவேளை இராணுவத்திடம் நூற்றுக்கணக்கான போராளிகள் சரணடைந்த போதிலும் அவர்கள் குறித்த விபரங்கள் எதுவும் எந்தப் பதிவிலும் இல்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் மக்களிடம் தெரிவித்திருகின்றனர். சரணடைந்தவர்களையும் உறவுகளைத் தேடுவோரையும் தொடர்புபடுத்தும் நடவடிக்கையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டுவருகின்றமை தெரிந்ததே. இதன் அடிப்படையில் செஞ்சிலுவைச் சங்கத்தினரை நாடிய நூற்றுக்கணக்கான போராளிகளின் உறவினர்கள், போராளிகள் எந்த இடத்தில் இராணுவத்திடம் சரணைந்தனர் என்ற விபரங்களை வழங்கி அவர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுத் தருமாறு கேட்டிருந்தனர்.குறித்த விபரங்களைக் கொண்டு தேடுதல் நடத்திய செஞ்சிலுவைச்சங்கம், அவர்கள் பற்றிய விபரங்கள் எந்தப் பதிவிலும் இல்லை என இராணுவத் தரப்புத் தெரிவித்ததாக மக்களுக்கு கூறியுள்ளது. ஏற்கனவே சில ஆயிரம் போராளிகளை விடுதலை செய்துள்ள இராணுவம் தற்போது நீதிமன்றத்திற்கு 1,350 போராளிகளைக் கொண்டு செல்லவுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சர்வதேசத்திற்கு முன்பாக தம்மை நியாயப்படுத்த முற்படும் அரசு மறுபக்கத்தில் ஏனைய போராளிகளை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்க முனைவதை உணர முடிவதாக பொன்சேகாவிற்கு நெருக்கமான பெயர் குறிப்பிட விரும்பாத பழ அரனடைந்த தெரிவித்திருக்கின்றார்.

01 ஆகஸ்ட் 2010

பான் கி மூனின் நடவடிக்கைகள் அரசியலிலேயே நிறைவடைகிறது.



ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தற்போது எந்த தீர்மானத்தை எடுத்து எதனை தெரிவித்தாலும் இறுதியாக அது அரசியல் நோக்கத்திலேயே சென்று நிறைவடையும் என இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது.
இலங்கை போர் குற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க தொடர்ந்தும் தாமதம் காட்டி வரும் நிலையில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழு, நியமிக்கப்பட்டதே தவிர பின்னர் எந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பது குறித்த தகவல் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.
எது எவ்வாறாயினும் எல்லா பொது செயலாளர்களைப் போலவே பான் கீ மூனின் செயற்பாடுகளும் அரசியல் நோக்கத்திலேயே நிறைவடைந்து விடும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.