பக்கங்கள்

08 நவம்பர் 2013

அழகுராணிப் போட்டிக்கு சிறிலங்கா சொர்க்கபுரியல்ல!

இரு ஊடகர்களை இழந்து நிற்கும் பிரென்சு தேசத்துக்கு தங்கள் தோழமையினை தெரிவித்து ஒன்றுகூடிய பிரான்ஸ் தமிழர்கள், இசைப்பிரியா போல் பல தமிழ்பெண்களின் குருதிபடிந்த இலங்கைத்தீவானது, பிரென்சு அழகுராணிப் போட்டிக்கு சொர்க்கபுரியல்ல என முழக்கமிட்டுள்ளனர். 2014ம் ஆண்டுக்குரிய பிரான்ஸ் அழகுராணிப் போட்டியின் (Miss France 2014) அலங்கார அணிவகுப்புக்கு சிறிலங்கா தனது அனுசரணையினை வழங்கியுள்ள நிலையில், 33 பிரென்சு அழகிகள் 25க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் சகிகதம் சிறிலங்காவுக்கு பயணமாகவுள்ளனர். இந்நிலையில் அழகுராணிப் போட்டியின் அலங்கார அணிவகுப்புக்கு சிறிலங்கா சிறந்ததொரு தேர்வல்ல என்ற முழக்கத்துடன் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள AFP சர்வதேச செய்திநிறுவனத்துக்கு முன்னால் ஒன்றுகூடியிருந்தனர். தமிழர் தாயகத்தில் பெண்களின் நிலைகுறித்து சர்வதேச அமைப்புக்களினால் வெளியிடப்பட்ட கூற்றுக்களை மையக்கருவினைத் தாங்கிய வரைகலை அட்டைகள், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்ததோடு துண்டுப்பிரசுர பரப்புரையும் இடம்பெற்றிருந்தன. AFP செய்திநிறுவனத்தின் சர்வதேச செய்திசேவை விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி ஒன்றுகூடலுக்கான காரணத்தினை கேட்டறியும் பொருட்டு தமிழர் தரப்பு பிரதிநிதிகளை தங்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று உரையாடியிருந்தார். ஆபிரிக்காவின் மலி நாட்டில் தீவிரவாதிகளினால் இரு ஊடகர்களை இழந்து நிற்கும் பிரென்சு தேசத்துக்கு தோழமையினை பிரான்ஸ் தமிழ் சமூகத்தின் சார்பில் எடுத்துரைத்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள், சிறிலங்கா அரச பயங்கரவாத்தினால் இசைப்பிரியா எனும் ஊடகரை தமிழர் தேசம் இழந்து நிற்கின்றது என் விடயத்தினை சுட்டிக்காட்டியிருந்தனர். பிரென்சு அழகுராணிப்போட்டிக்கான அலங்காரபவனி சிறிலங்காவில் இடம்பெறுவதன் ஊடா,க தன்மீதான இனஅழிப்பு புரிந்த தனது இரத்தம் தோய்ந்த முகத்தினை சிறிலங்கா மூடிமறைக்கின்றதென சுட்டிக்காட்டிய தமிழர் தரப்பு பிரதிநிதிகள், இவ்விவகாரத்தினை சிறிலங்கா செல்லும் 25க்கு மேற்பட்ட பிரென்சு ஊடகவியலாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கோரியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.