பக்கங்கள்

25 நவம்பர் 2013

கஜேந்திரகுமார் எதிர் பீரிஸ். வென்றது யார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலட்சிய பாதை தவறாது தமிழீத தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்த போது அதில் சர்வதேச விவகாரங்களை கையாண்டவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரகுமார். கூட்டமைப்பு தமிழ் மக்களின் அபிலாசைகளை புறக்கணித்து செயற்படுவதால், அதிலிருந்து வெளியேறிய இவர் தற்போது தனது இராஜதந்திர செயற்பாடுகளை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளார். இதன் அங்கமாக நவர்பர் 3ம் திகதி தொடக்கம் அமெரிக்காவின் உயர் மட்ட தரப்புகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார். இதன் பின்னர் சிறீலங்காவுக்கும் அமெரிக்காவுக்குமான விரிசல் அதிகரித்தது. அதேவேளை, சர்வதேச சுதந்திர விசாரணை பொறிமுறை சிறீலங்கா தொடர்பாக உருவாகுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகரித்துள்ளது. அமெரிக்க சந்திப்பை நிறைவுசெய்து கொண்டு மொரிசீயல் விரைந்தார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள். அங்கு, மொரிசீயஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்ச்சின் உயர்மட்ட சந்திப்பினை மேற்கொண்டு சிறீலங்காவின் மனித உரிமை நிலைவரத்தை எடுத்துரைத்து, மொரீசியஸ் பிரதமர் சிறீலங்காவில் இடம்பெறும் கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றார். இவரது கருத்துக்களை உரிய முறையில் செவிமடுத்த மொரீசியஸ் உயர்மட்ட அதிகாரிகள், தமது பிரதமர் கொமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக அறிவித்தார்கள். இதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கடந்த 5 மாதங்களில் 44 நாடுகளுக்குப் பயணம் செய்து 150 மில்லியன் ரூபாவை விரயம் செய்துள்ளதாக சிறீலங்காவின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டியுள்ளது. சிறீலங்கா அரசின் வெளிவிவகார அமைச்சு தனது முழு பலத்தையும் திரட்டியும் இராஜதந்திர ரீதியாக பெரும் தோல்விகளைச் சந்தித்துள்ள போது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனி ஒருவராக பாரிய இராஜதந்திர வெற்றிகளை ஈட்டியது சிறீலங்காவுக்கு அதிர்ச்சையும் ஆத்திரத்தையும் உண்டுபண்ணியுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றது.

நன்றி:பரிஸ் தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.