பக்கங்கள்

19 நவம்பர் 2013

மிலிபான்டின் கேள்விகளும் கமரூனின் பதில்களும்!

டேவிட் கமரோனின் இலங்கை விஜயம் தொடர்பில் ஆற்றிய உரைக்கு ஈ.டி. மில்லிபாண்ட் பதிலளித்து பேசுகையில், 2009 இல் ஆயிரக்கணக்கான மக்களை முப்படைகளாலும் கொன்று குவித்ததால் 2011 CHOGM இனை இலங்கையில் நடாத்தவிடாது அப்போது ஆட்சியிலிருந்த தொளிலாளர் கட்சி தடுத்தபோதும் மனித உரிமையில் எந்த முன்னேற்றமும் இல்லாத போது நீங்கள் 2013 CHOGM இனை இலங்கையில் நடாத்த 2011இல் எதற்கு சம்மதித்தீர்களென்றும் கேட்டதோடு, இது தொடர்பாக மேலதிகமான கேள்விகளையும் தொடுத்தார் ஈ.டி. மில்லிபாண்ட். முதலாவதாக் தொடர்ச்சியாக இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகளை நிராகரித்து வருவதற்கு CHOGM இன் தலமை என்றவகையில் நீங்கள் செய்தது என்னவெனவும், அடுத்ததாக 2014 மார்ச்சில் இல் இலங்கையை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த கோரியதாகவும், ஆனால் அக்கோரிக்கையை சில தினங்களிலேயே இலங்கை நிராகரித்ததாகவும் அதற்காக என்ன செய்தீர்களென்றும், மற்றும்; கனடா, மற்றும் இந்திய நாட்டு தலைவர்கள் மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி CHOGM இல் பங்கேற்பதை தவிர்த்ததாகவும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த டேவிட் கமரோன்; ஏற்கனவே முடிவுசெய்யப்பட்ட மகாநாட்டை நடத்தவிடாமல் தடுப்பது அவ்வளவு இலகுவானதல்ல எனவும் தமது நாடு CHOGM இன் முக்கிய உறுப்பினராகவும் தமது மகாராணி அதன் தலைவியாகவும் இருக்கும் போது இதனை புறக்கணித்து மற்றய நாடுகள் போல் விலகி இருக்க முடியாதெனவும் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு எனவும் 4000 மயில்களுக்கு அப்பாலிருந்து இலங்கையின் மனித உரிமைகள் பற்றி பேசமுடியாதெனவும் அதனால் தான் இதில் பங்கு பற்றி 'யுத்தக் குற்றம் குறித்து உண்மையான வெளிப்படையான சுதந்திர விசாரணையை ராஜபக்ஸவிடம் வலியுறுத்தினேன்' எனவும் கமரூன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.