பக்கங்கள்

05 நவம்பர் 2013

பொன்காந்தன் விடுதலை!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரனின் செயளாலரான பொன்னம்பலம் லட்சுமிகாந்தன் (பொன்காந்தன்) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான அருணாசலம் வேலமாலிதன் ஆகியவர்கள் குற்றங்கள் நிருபிக்கப்படாத நிலையில் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பொன்.காந்தன் அ.வேலமாலிதன் ஆகியவர்கள் சார்பில் சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி.தவராசா,கெலும் ஒபயசேகர மற்றும் கே.சயந்தன் ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர்களின் குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன் இவர்கள் உண்மைக்கு புறம்பான வகையில் கைது செய்யப்பட்டமையால் வழக்கிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுதலையின் பின்னணியில் கைது செய்யப்பட்டவர்களிடம் இது வரை குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்பட்டிருக்கவில்லை. இக்கைதுக்கான காரணத்தை பொலிசார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. அத்துடன் வெடி பொருட்கள் ஆபாச பொருட்களை கைப்பற்றிய முறையில் குழப்பம் ஆகிய காரணங்கள் இவர்களது விடுதலையில் தாக்கம் செலுத்தின. அத்துடன்; உடல், உள ரீதியாக பொன்.காந்தன் பல சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு பாதிப்புக்குள்ளாகியிருந்த நிலையில் இவர் தொடர்பில் சிரேஸ்ரசட்டத்தரணி கே.வி.தவராசா சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை கேட்டிருந்தார். இந் நிலையில் இவர்கள் இருவர் மீதும் வழக்குகள் ஏதும் தாக்கல் செய்யப்படாது கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி நிரோசா பெர்னான்டோ முன்னிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.