பக்கங்கள்

01 நவம்பர் 2013

இராஜதந்திரம் வாக்களித்த மக்களை ஏமாற்றுவதல்ல!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தாம் இந்திய பிரதமரை மாநாட்டில் கலந்துகொள்ளும் வகையில் அழைக்கவில்லை என விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார். இந்திய ஊடகங்கள் தவறாக கற்பிதம் கொடுத்துள்ளன எனவும் கூறியுள்ளார். இது விக்னேஸ்வரனின் இரண்டாவது ஊடக விளக்கம் ஆகும். முன்னரும் சிங்களவரும் நாமும் சம்பந்திகள் எனவும் தமிழக தலைவர்கள் இந்த விடயத்தில் தலையைப்போடக்கூடாது என்றும் கூறி பின்னர் அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்தார். இப்போது இந்திய பிரதமரை தான் அந்தக் கருத்துபட அழைக்கவில்லை என கூறுகின்றார். நீண்ட அனுபவமும் மொழித்திறனும் இலங்கை இந்திய வரலாறும் அரசியல் நிலைப்பாடும் தெரிந்த விக்னேஸ்வரனுக்கு ஓர் அறிக்கை எப்படி கருத்துப்படும் கையாளப்படும் என தெரியாதா என்ன. இப்போது அவர் கொடுத்த விளக்கத்தைப் பாருங்கள். முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமருக்கு தனிப்பட்ட ரீதியில் நன்றியறிதலை தெரிவிக்கும் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இக்கடிதத்திற்கும் பொதுநலவாய உச்சி மாநாட்டிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இலங்கைக்கு விஜயம் செய்யும் வேளையில் யாழ்ப்பாணத்திற்கு வரவேண்டும் என்று மன்மோகன்சிங்கிற்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அக்கடிதத்தில் பொதுநலவாய உச்சிமாநாடு பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மன்மோகன்சிங் இதுவரை இலங்கைக்கு வரவில்லை இப்போது பொது நலவாய மா நாட்டிற்கு வரவுள்ளதான சூழல் இருக்கின்றது. இந்த சூழலில் வந்தால் யாழ்ப்பானத்திற்கும் வாருங்கோ என எழுதினால் இதன் அர்த்தம் என்ன? ஏன் இந்த நன்றிக் கடிதத்தில் இதனைச்சேர்க்கவேண்டும்.? இந்த கடிதத்தினை மையமாக வைத்து தமிழக போராட்டங்களை கொச்சைப்படுத்தும் இந்திய நடுவண் அரசு என்ன கூறுகின்றது பாருங்கள். அதாவது மன்மோகன் சிங்கின் செயலர் இது பற்றி இன்று கூறுகையில் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் இந்திய பிரதமரை யாழ்ப்பாணத்துக்கு வருமாறு விடுத்த அழைப்பு கடிதம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அக்பருதீன், விக்னேஸ்வரனி
ன் கடிதம் கடந்த 28 ஆம் திகதி இந்திய பிரதமருக்கு கிடைத்ததாக தெரிவித்தார் இந்தநிலையில் பிரதமரின் இலங்கை பயணம் விக்னேஸ்வரனின் அழைப்பையும் மையமாகக்கொண்டு அமையும் என்று அக்பருதீன் தெரிவித்தார் விக்னேஸ்வரனின் இந்தக் கடிதம் சுயமாகவோ அல்லது கருத்து விளக்கம் தெரியாமலோ எழுதப்பட்டது அல்ல. இது இலங்கை இந்திய தலைவர்களால் திட்டமிட்டு எழுதி தருமாறு கேட்கப்பட்டது. தமிழக மற்றும் உலகத்தமிழர்களின் வேண்டுகோளை புறக்கணிப்பதற்கு விக்னேஸ்வரனின் இந்தக் கடிதம் ஒன்றே போதும் என்பதே டில்லியின் நிலைப்பாடு. கூடவே இதனூடாக ஈழத்தமிழர்களிற்கு இடையேயும், தமிழக-உலகத் தமிழர்களிற்கு இடையேயும் இடைவெளியினை ஏற்படுத்தும் ஒரு சதியாகவும் இந்த கடிதம் அமையலாம். இந்திய- சிறிலங்கா நலன்களுக்கு ஏற்ப செயற்பட்டுக்கொண்டு அதற்கு ராயதந்திரம் என கற்பிதம் கொடுத்து வருகின்றார் விக்னேஸ்வரன். உண்மையை ஏற்றுக்கொள்வது வேறு ஆனால் அரசல் புரசலாக கருத்துக்களைக் கூறி தனக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்குப் பெயர் ராஜதந்திரம் அல்ல. இவர் மட்டுமல்ல இவருக்கு ஆலோசனை கூறுபவர்கள் [முன்னாள் ஐ. நா. திட்ட ஊழியர்கள், அரச திணைக்களச் செயலர்கள்.] எல்லோரும் சமாதான காலத்தில் விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தில் வந்து தமது பதவி நீடிப்பிற்காக சிபார்சு செய்யுமாறு தவம் இருந்தவர்கள்தான். ஆனால் விடுதலைப்புலிகள் அதனைச் செய்யவில்லை. ஆகவே இவர்கள் இந்தியா, கொழும்பு கேட்டால் எதனையும் செய்யத் தயாராகவே உள்ளார்கள். ஆனால் வெளியாக செய்யமுடியாது இப்படித்தான் [மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியது போல] செய்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.