பக்கங்கள்

29 நவம்பர் 2013

கணக்கெடுப்பில் தலைவரின் குடும்பம் சேர்க்கப்படாதாம்!

போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்‌ஷவின் கபட திட்டமான "போர்க்கால இழப்புக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டின் போது தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் குடும்பத்தைக் கணக்கெடுக்க முடியாது. அவரது குடும்பத்தில் யாரும் உயிருடன் இல்லை" இவ்வாறு நேற்றுத் தெரிவித்தார் புள்ளி விபரவியல் மற்றும் தொகை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டி.டபிள்யு.டி.குணவர்த்தன. போரில் ஏற்பட்ட இழப்புக்களை கணக்கெடுக்கும் நடவடிக்கை நேற்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியுள்ளது என்றும் அவர் கூறினார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக 1983 ஆம் ஆண்டு முதல் 2009 மே வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சொத்தழிவு, உயிரிழப்பு, காணாமற் போனவர்கள் தொடர்பில் கணக்கெடுக்கும் பணிகளை புள்ளிவிவரவியல் மற்றும் தொகை மதிப்பீட்டுத் திணைக்களம் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது.போரில் குடும்பம் குடும்பமாக தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆகவே அவர்களின் எண்ணிக்கை இந்த கணகெடுபிற்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.