பக்கங்கள்

12 நவம்பர் 2013

சனல்4 ஊடகவியலாளர்களை தேநீர் விருந்துக்கு வருமாறு மஹிந்த அழைப்பு!

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் செய்திசேகரிப்பு உள்ளிட்ட ஊடகப் பணிகளுக்காக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களை தேநீர் விருந்துக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைத்துள்ளார். பொதுநலவாய மாநாட்டின் இணை அமர்வான பொதுநலவாய வர்த்தக பேரவை மாநாட்டினை கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்துவிட்டு தன்னுடைய வாகனத்தில் ஏறுவதற்காக சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சனல் 4 ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர். ஆனாலும், அவற்றை கண்டுகொள்ளாத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை தேநீர் விருந்துக்கு வருமாறு அழைத்துள்ளதாக அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பிலான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் எதிர்காலத்திலும் ஆவணப்படங்களை எடுக்கவுள்ளதாக சனல் 4 நிகழ்ச்சி தயாரிப்பாளரும், கொலைக்களம் ஆவணப்படத்தின் இயக்குனருமான கெலம் மக்ரே கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.