பக்கங்கள்

24 நவம்பர் 2013

தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு விடுத்துள்ள அறிக்கை!

தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு மாவீரர் நாள் தொடர்பாக எமக்கு அனுப்பி வைத்த அறிக்கையின் முழு விபரத்தையும் அப்படியே இங்கு தருகிறோம்!

அன்பான தமிழ் மக்களிற்கு,
தேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை புனிதமான எங்கள் தேசிய மாவீரர்களை ஒட்டுமொத்த தமிழினமும் ஒருசேர நின்று,மெய்யுருகி  வணங்கும் மாவீரர் நாளை எதிர்கொண்டு நிற்கும் இக்காலத்தே இந்நிகழ்வு தொடர்பாக எமது நிலைப்பாட்டை மக்களுடன் பகிர்ந்துகொள்ள விளைகின்றோம்.
தமிழீழ விடுதலையை நேசிக்கும் அனைத்து தமிழர்களினதும் ஒற்றுமையை கருத்திற்கொண்டு புலம்பெயர் நாடுகளில் தமிழர் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்பங்களிற்கும்,முரண்பாடுகளிற்கும் தீர்வுகாணும் முகமாக நடத்தப்படும் ஒற்றுமை முயற்சிக்கு ஆதரவு வழங்கும் முகமாக தமிழர் இறையாண்மைக்கான அமைப்பினால் நடாத்தப்பட்டு வந்த மாவீரர் நாள் நிகழ்வு தவிர்க்கப்பட்டுள்ளது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.இந்நாளை சடங்காகவும்,சம்பிரதாயமாகவும்,ஆடம்பரமாகவும் கொள்ளாமல் காலத்தை கருத்திற்கொண்டு உணர்வெழுச்சியுடன் எம்முன்னால் இருக்கின்ற மாபெரும் கடமையை கூடிச்சுமக்கின்ற பொறுப்பை உணர்வோம்.மாவீரர்களின் நினைவுகள் அற்பத்தனங்களை அகற்றி ஆன்மாவை சுத்தப்படுத்தட்டும்.நான் பெரிது நீ பெரிது என்ற சிறுமதி தொலைத்து நாடும்,இனமும் பெரிதென்ற எண்ணத்தை விதைக்கட்டும்.மாவீரர்கள் எல்லோருக்கும் உரித்துடையவர்கள்.அவர்கள் விட்டுச்சென்ற பணியும் எல்லோருக்கும் உரித்தான தேசியக்கடமை.அவர்தம் புனிதம் கெடாமல் தூய்மையான அகத்துடன் நினைவேந்துவோம்.

தமிழர் இறையாண்மைக்கான அமைப்பு 
ஜெர்மனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.