பக்கங்கள்

03 அக்டோபர் 2013

மகிந்த முன்னிலையில் சத்திய பிரமாணம் எடுக்க சம்பந்தன் முடிவு?

ஜனாதிபதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்ய தமிழத்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்துள்ளார் என குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்பு செய்தியாளருக்கு நெருக்கமான கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. ஜனாதிபதியின் செயலாளாளர் லலித் வீரதுங்க சம்பந்தனுடன் தொலை பேசியில் உரையாடியதாகவும் விக்னேஸவரன் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராக சத்தியப்பிரமானம் செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், விக்னேஸ்வரன் ஆகியோர் சம்பந்தனுடன் இது தொடர்பாக கலந்துரையாடி தீர்மானம் எடுத்துள்ளனர். ஆனால் தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று மாலை (02.10.13) கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்வதற்கு கட்சியின் செயலாளர் நாயகமும் பிரதித் தலைவருமான மாவை சேனாதிராஜா உட்பட அனைத்து பிரதிநிதிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கொழும்பு தகவல்கள் கூறுகின்றன. ஆனால் சம்மந்தன், சுமந்திரன்,விக்னேஸ்வரன் ஆகிய மூன்று பேரும் ஜனாதிபதி முன்னணிலையில் சத்தியப்பிரமானம் செய்வது என்ற முடிவில் மாற்றம் இல்லை என்றும் கூறியதாக கூறப்படுகின்றது. இதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சம்பந்தனை நாளை சந்திக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றி:குளோபல் தமிழ் செய்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.