பக்கங்கள்

21 அக்டோபர் 2013

ஊர்காவற்றுறையில் இளைஞர் மீது தாக்குதல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காகவும் முதல்வரின் வெற்றிக்காகவும் பாடுபட்ட ஆதரவாளர்கள் பலரும் தொடர்ந்தும் பழிவாங்கப்படுவது தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. அவ்வகையில் யாழ்.தீவகப்பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை (21.10.13) சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதலுக்கு இலக்காகிய நிலையில் கூட்டமைப்பு ஆதரவாளரான இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஊர்வாவற்றுறை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய அல்பிட் கனிவூட் என்பவரே இந்தச் சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த இளைஞர் நடந்து முடிந்த வடக்குமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தவரென தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கூட்டமைப்பிற்கு ஆதரவான கூட்டங்களையும் இவரே தீவகப்பகுதியில் ஒழுங்கமைத்து இருந்தவரெனவும் கூறப்படுகின்றது. இதன் காரணமாகவே அவர் பழிவாங்கும் வகையில் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே பல தடைவைகள் படைப் புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இதனிடையே வன்னிப்பகுதியிலும் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பயமுறுத்தல்களுக்கு உட்படுவதோடு படையினரின் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கும் உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.விக்னேஸ்வரன் சம்மந்திகளுடன் கும்மாளம் அடிக்கிறார் அவரது வெற்றிக்கு பாடுபட்டவர்களோ வதைகளுடன் துடிக்கிறார்கள்!நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.