பக்கங்கள்

20 அக்டோபர் 2013

மாவீரர் துயிலும் இல்லங்களை சுற்றி முள்வேலி அமைக்கிறது படைத்தரப்பு!

இலங்கை படைத்தரப்பினை பிடித்து ஆட்டிவரும் மாவீரர் துயிலுமில்ல காய்ச்சல் இரவோடிரவாக முட்கம்பி வேலிகளை அமைத்துக்கொள்வது வரை சென்றுள்ளது. வன்னியிலுள்ள தேராவில் வன்னிவிளாங்குளம் முழங்காவில் மற்றும் கனகபுரம் மாவீரர் துயிலுமில்ல காணிகளிற்கு எல்லையிடும் நடவடிக்கைகளை படைத்தரப்பு இரவோடிவாக அமைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கில் படையினர் குவிக்கப்பட்டு பெருமளவு வாகனங்கள் சகிதம் முட்கம்பிகள் எடுத்து வரப்பட்டு இவ்வேலிகள் அமைக்கப்பட்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வட-கிழக்கிலுள்ள படையினரால் இடித்தழிக்கப்பட்டுள்ள மாவீரர் துயிலுமில்லங்களை மீளக்கட்டியெழுப்ப வேண்டுமென்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியுள்ளது. பிரதேச சபைகளுள் சாவகச்சேரி மற்றும் கரைச்சி பிரதேசசபை என்பவை இடித்தழிக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களை மீளக்கட்டியெழுப்ப தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையினில் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றிய பிரதேச சபைகளை இலங்கைப்புலனாய்வு பிரிவுகள் வேட்டையாடத் தொடங்கியுள்ள நிலையில் அதற்கு ஆதரவாக கூட்டமைப்பின் அனைத்துவுள்ளூராட்சி மன்றங்களும் தீர்மானங்களை நிறைவேற்ற தீர்மானித்துள்ளன. அத்துடன் வடக்கு மாகாண சபையிலும் இத்தீர்மானத்தை கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையினில் அவசர அசவரமாக வன்னியிலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களை தம் வசம் கையகப்படுத்த ஏதுவாகவே படைத்தரப்பு புதிய எல்லைகளை அமைப்பதிலும் முகாம்களை அமைப்பதிலும் முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.