பக்கங்கள்

19 அக்டோபர் 2013

சனால்4விடம் இன அழிப்பு காணொளி?

சிங்கள அரச படைகளினால் இறுதி சமரின் போது வெள்ளை கொடி பிடித்து வந்த அரசியற்துறை பொறுப்பாளர் நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட்ட பிரபல தளபதிகள் இராணுவத்தினரிடம் சரண் அடைந்தனர். இவர்களுடன் மேலும் 400 க்கு மேற்பட்ட முதன்மை மற்றும் சாதாரண போராளிகள் சரணடைதலில் உள்ளடங்குவார்கள். அரசியற்துறை பொறுப்பாளர் நடேசனும் புலித்தேவனும் வதைகள் செய்யபட்டு சுட்டு கொலை செய்யபட்டனர்,குறித்த காணொளி காட்சி சனல் போவிடம் சிக்கியுள்ளதாக பர பரப்பாக பேசப்பட்டது. இந்த காணொளி வெளியிடப்பட்டால் அது இலங்கை அரசுக்கு உலகளாவிய ரீதியில் பாரிய நெருக்கடியினை தோற்றுவிப்பதோடு இந்திய மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை தழுவ இது உதவும் என கூறபடுகிறது. அத்துடன் இலங்கையில் இடம்பெறும் கொமன்வெல்த் மாநாட்டையும் இது பாதிக்கும் என நம்பப்படுகிறது.அந்த தேர்தலை இலக்கு வைத்து இந்த காட்சிகள் வெளியாகலாம் என்பதும் இதில் இறுதி வேளை இலங்கையில் நின்று களமாடிய இந்தியச் சிப்பாய்களின் ஆவணமும் உள்ளடங்கபடுவதாக பேசப்படுகிறது. 1500 க்கும் மேற்பட்ட இந்தியப் படைகள் குறித்த புலிகளின் முற்றுகை திடீர் தாக்குதலில் உடல் சிதறி பலியான சம்பவங்கள் அந்த களத்தில் அரங்கேறின என முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தது இங்கே சுட்டி காட்டத்தக்கது. பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். வரப்போவது எது என்பது. ஆனால் வெளிவரும் காட்சிகள் உலக தமிழரை கொந்தளிக்க வைக்கும் என்பது அடித்து கூறபடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.