பக்கங்கள்

22 அக்டோபர் 2013

கனடாவில் மோதலில் பலியான தமிழ் மாணவர் அடையாளம் காணப்பட்டார்!

வின்சர் பொலிசார் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் பலியானவர் யார் என்பதை அடையாளம் கண்டுள்ளனர். நகர மத்தியில் கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றது. வின்சர் பல்கலைக்கழக மாணவரான ஸ்காபறோ குடும்பம் ஒன்றைச் சேர்ந்த கௌத்தம் (கெவின்) குகதாசன் என்ற 19 வயது மாணவரே கொல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். பெலிசிய ஸ்றீற் – யுனிவேசிற்றி அவனியூவில் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து கத்தியால் குத்தப்பட்ட கௌத்தம் குகதாசன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் அங்கு உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. மொத்தமாக 5 பேர் காயமடைந்தனர்.
இருவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை தேறுமென்றே எதிர்பார்க்கப்படுகிறது. படிப்பதற்காக வந்த இந்த மாணவர் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகத்தின் அருகே வாழ்ந்து வந்ததையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. ஏதாவது தகவல் தெரிந்தவர்களை தம்முடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கேட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.