பக்கங்கள்

18 அக்டோபர் 2013

சிறீதரன் கொழும்புக்கு வரக்கூடாது என்கிறார் தேரர்!

சிறிதரன் கொழும்பிற்கு வர அனுமதிக்கக் கூடாது – ராவனா பலயதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கொழும்பிற்கு வர அனுமதிக்கக் கூடாது என ராவனா பலய அமைப்பு கோரியுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து சிங்கள மக்கள் வெளியேற வேண்டுமென சிறிதரன் கோரியுள்ளதாகவும், அவ்வாறு கோரினால் அவர் கொழும்பு வர அனுமதிக்கக் கூடாது எனவும் ரவனா பலய அமைப்பின் செயலாளர் இத்தன்கந்த சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். சிங்கள மக்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றி, சிறிதரன் கொழும்பிற்கு வர முயற்சிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த முயற்சிக்கு தமது அமைப்பு ஒருபோதும் அனுமதியளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்க எவருக்கும் அனுமதியளிக்கக் கூடாது தமது அமைப்பு அதற்கான சந்தர்ப்பத்தை வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விக்னேஸ்வரன் சமாதானத்தை மதித்தால் இவ்வாறு இன முரண்பாட்டு கருத்தக்களை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சிங்கள மக்களை வெளியேறுமாறு தாம் கோரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நாவற்குழி பிரதேசத்தில் திடீரென சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதி வழியாக பயணம் செய்த போது, அங்கிருந்த சிங்கள மக்களை சந்தித்து தாம் உரையாடியதாகவும் அவர்களை அச்சுறுத்தவோ அல்லது வெளியேறிச் செல்லவோ தாம் உத்தரவிடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், திடீரென குறித்த பகுதியில் சிங்கள மக்கள் குடியேறியுள்ளமை குறித்து கவனம் செலுத்தி வருவதாக சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.