பக்கங்கள்

27 அக்டோபர் 2013

மகிந்தவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

அமெரிக்க இராஜாங்கத் திணைக்கத்தின் கடுமையான எச்சரிக்கை செய்தி ஒன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், நேரடியாக கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்தவாரம், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிறப்புச் செய்தி ஒன்றுடன் அலரி மாளிகைக்குச் சென்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்தார். ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை சிறிலங்கா நிறுத்தத் தவறினால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அதில் எச்சரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதேவேளை, ஈரானுடன் சிறிலங்கா நெருக்கமான இராஜதந்திர உறவுகளை வைத்துள்ளது. அமெரிக்காவின் தடைகளை அடுத்து, ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்குவதை சிறிலங்கா நிறுத்தியுள்ளது. எனினும், அமெரிக்காவின் தடையை மீறும் வகையில், மூன்றாவது தரப்பு ஊடாக ஈரானிய மசகு எண்ணெயை சிறிலங்கா வாங்குவதாக, அமெரிக்காவுக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்தே, அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சிறிலங்கா அதிபரிடம் அமெரிக்கத் தூதுவர் சிசன் கையளித்த சிறப்புச் செய்தியில், ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை சிறிலங்கா உடனடியாக நிறுத்தத் தவறினால், பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இராஜதந்திர மொழியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.