மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மனித புதைகுழி உள்ள பிரதேசத்தில் பாதுகாப்பு பிரிவினர் என சந்தேகிக்கப்படும் சிலர் நடமாடியதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. நேற்று (10) இரவு வேளையில் இக்குழுவினர் இடையிடையே நடமாடியதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பொலிஸ் மாஅதிபரிடம் முறையிட்டுள்ளதாக அக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்று (10) இரவு எட்டு மணியளவில் ஜீப் ஒன்றில் இராணுவ சீருடையைப் போன்ற உடை அணிந்த 10 பேர் கொண்ட குழு மனித பதைகுழி உள்ள இடத்தில் நடமாடியதாக தமது கட்சியின் மாத்தளை மாவட்ட உறுப்பினர் தகவல் வழங்கியதாக சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு சோமவன்ச அமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து சோமவன்ச அமரசிங்க பொலிஸ் மாஅதிபரிடம் தொலைபேசி மூலமாக முறையிட்டுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
150க்கும் மேற்பட்ட மனித உடல் எச்சங்கள் மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்டுள்ளன.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
11 ஏப்ரல் 2013
மாத்தளை மனித புதைகுழி அருகே கோத்தாவின் அடியாட்கள் நடமாட்டம்!
மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மனித புதைகுழி உள்ள பிரதேசத்தில் பாதுகாப்பு பிரிவினர் என சந்தேகிக்கப்படும் சிலர் நடமாடியதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. நேற்று (10) இரவு வேளையில் இக்குழுவினர் இடையிடையே நடமாடியதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க பொலிஸ் மாஅதிபரிடம் முறையிட்டுள்ளதாக அக் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்று (10) இரவு எட்டு மணியளவில் ஜீப் ஒன்றில் இராணுவ சீருடையைப் போன்ற உடை அணிந்த 10 பேர் கொண்ட குழு மனித பதைகுழி உள்ள இடத்தில் நடமாடியதாக தமது கட்சியின் மாத்தளை மாவட்ட உறுப்பினர் தகவல் வழங்கியதாக சோமவன்ச அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு சோமவன்ச அமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து சோமவன்ச அமரசிங்க பொலிஸ் மாஅதிபரிடம் தொலைபேசி மூலமாக முறையிட்டுள்ளதாக அக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
150க்கும் மேற்பட்ட மனித உடல் எச்சங்கள் மாத்தளை வைத்தியசாலை வளாகத்தில் மீட்கப்பட்டுள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.