முன்னாள் பெண் போராளிகள் அரச சார்பற்ற நிறுவனமொன்றை நடத்தி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த அரச சார்பற்ற நிறுவனத்திற்கு கொழும்பிலும், கிளிநொச்சியிலும் அலுவலகங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலி ஆதரவாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த அரச சார்பற்ற நிறுவனம் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கக் கூடிய பிழையான தகவல்களை இந்த அரச சார்பற்ற நிறுவனம் திரட்டி வருவதாகக் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் கிளிநொச்சி வேராவில் இந்து வித்தியாலயத்தில் இவ்வாறு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது. இந்த அரச சார்பற்ற நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் முன்னாள் புலிப் போராளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைம்பெண்கள், ஊனமுற்றவர்கள், விவாகரத்தானவர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பற்றிய விபரங்களை திரட்டும் போர்வையில் இந்த அரச சார்பற்ற நிறுவனம் இயங்கி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த நிறுவனம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
25 ஜூலை 2014
24 ஜூலை 2014
கொன்சலிற்றா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா?
யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா
பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். யாழ். குருநகர்ப் பகுதியியைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (வயது 23) கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பெற்றோர், அது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு ஏற்கனவே நடைபெற்றிருந்த நிலையில் மீண்டும் இன்று யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் பொ.சிவகுமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிவான், குறித்த பெண் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அதேவேளை, அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் பொலிஸாரை விசாரணை செய்து அடுத்த வழக்கு விசாரணையின் போது அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அடுத்த விசாரணை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

23 ஜூலை 2014
இறுதிக்கிரிகை நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காயம்!உடலம் மருத்துவமனையில்!
இறுதிச் சடங்குகள் செய்யப்பட்ட சடலமொன்று, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், தொண்டமனாறு பகுதியில் நேற்று திங்கட்கிழமை (21) இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலனின் உத்தரவிற்கமையே இந்த சடலம், யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
தொண்டமனாறு, கொட்டியாங்காட்டுப் பகுதியினைச் சேர்ந்த துரைராசா சின்னராசா (வயது 55) என்பவர் நேற்று திங்கட்கிழமை (21) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
உயர்குருதி அமுக்க நோய் அவருக்கு இருந்த காரணத்தினால், அதனாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என நினைத்த உறவினர்கள், அவருடைய சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்காமல் இறுதிச் சடங்குக் கிரியைகளை நேற்று (21) அவரது வீட்டில் நடத்தியுள்ளனர்.
இதன்போது, சடலத்தினைக் குளிப்பாட்டுகையில் சடலத்தின் முதுகில் காயங்கள் இருந்ததுடன், மர்மஉறுப்பு றப்பர் நூலினால் கட்டப்பட்டு இருந்ததுமையும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரது மரணத்தில் சந்தேகம் கொண்ட உறவினர்கள், வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு இது தொடர்பில் தகவல் வழங்கினர்.
இந்நிலையில், பருத்தித்துறை நீதவானுடன் சம்பவ இடத்துக்கு வருகை தந்த வல்வெட்டித்துறைப் பொலிஸார் நீதவானின் உத்தரவிற்கமைய சடலத்தினை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைத்தனர்.
லண்டனில் தமிழ் மாணவன் அறிவுத்திறனால் பெற்ற வெற்றி!
இங்கிலாந்தில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று ஈழத்தாய் திருனாட்டுக்கு பெருமை சேர்த்த இளவல் குறிஞ்சிகன்! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரமேக்ஷ் தனலக்ஷ்மி தம்பதிகளின்புதல்வன் செல்வன் குறிஞ்சிகன் ஒன்பது வயதுடையவர். இவர் பிரித்தானியாவில் பீச்சோம் ஆரம்பப் பாடசாலையில் (Beecholme Primary School) நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார்.
அங்கு பிரித்தானிய எரிவாயு (British Gas) நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பசுமை பேணல் சம்பந்தமான பசுமை வீடு கட்டுதல் , வீடு வடிவமைத்தல் போட்டியில் தனது மிகவும் சிறந்த சிந்தனையால் வீட்டின் உள்ளக, வெளிப்புற அமைப்பை வடிவமைத்திருந்தார். அதனால் இவரது பாடசாலை முதலாவது இடத்தைப் பெற்று 150,000 பெளண்ட்ஸ் பெறுமதியான பரிசினைத் தட்டிக்கொண்டது.இளைய தலைமுறையினரிடையே எரிவாயு சேமிப்பு, பசுமை பேணல் என்பன சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இங்கு ஐந்நூறுக்கு மேற்ப்பட்ட பாடசாலைகள் பங்கு பங்குபற்றியிருந்தன . ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர் . முழுமையாக ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். அவர்களில் ஆறு பேர் முதற்சுற்றில் தெரிவு செய்யப்பட்டு இறுதிச் சுற்றில் இவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவரது இச்சாதனையால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாக எம்தமிழ் சமூகமும் பெருமைகொண்டு குறிஞ்சிகனை வாழ்த்துகின்றது. 22 ஜூலை 2014
எழிலன் தொடர்பிலான வழக்கை சிறப்பு நீதிபதி விசாரிப்பாராம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்து, இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்ததன் பின்னர் தகவல் தெரியாதுபோன எழிலன் உள்ளிட்ட 12 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள் சிறப்பு நீதவான் ஒருவர் முன்னிலையிலேயே முல்லைத்தீவில் நடத்தப்படும் என்று திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட இந்த வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சம்பவங்கள் முல்லைத்தீவிலேயே நடந்துள்ளமையால், அவை பற்றிய விசாரணைகளை நடத்தி விபரங்களை அறிவிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அந்த விசாரணைகள் சிறப்பு நீதவான் ஒருவர் முன்னிலையில் நடைபெறும் என்று அறிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் கணேசராஜா, அந்த விசாரணைகளை வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.எழிலனின் மனைவியான வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட வழக்காளிகள் இந்த வழக்கு விசாரணைக்காக அங்கு சென்றிருந்தனர்.அவர்களை புலனாய்வுத் துறையினர் என சந்தேகிக்கப்படுகின்ற பல நபர்கள் புகைப்படங்கள் எடுத்ததுடன், முல்லைத்தீவில் இருந்து பரந்தன் செல்லும் வீதியில் உள்ள முக்கிய சந்திகளில் ஆங்காங்கே காவல் இருந்து தம்மை அச்சுறுத்தும் வகைளில் சந்தேகத்திற்கு இடமாக நடந்துகொண்டதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.இவ்வாறான கண்காணிப்பு அச்சுறுத்தல்கள் புதுக்குடியிருப்பு நகருக்கு அப்பால் உள்ள வள்ளிபுனம் வரைக்கும் தொடர்ந்ததால், தாங்கள் மீண்டும் புதுக்குடியிருப்பு நகருக்குத் திரும்பி வந்து காவல்துறையினரிடம் முறையிட்டு பின்னர் யாழ் பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு காவல்துறையினரின் வழிப்பாதுகாப்பைப் பெற்றுச் சென்றதாகவும் அனந்தி சசிதரன் கூறினார்.
தாங்கள் தாக்கல் செய்துள்ள வழக்குகளைத் தொடரவிடாமல் நிறுத்தும் வகையிலேயே இவ்வாறான அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஏற்கனவே விசாரணைகள் மிகவும் தாமதமாக்கப்பட்டுள்ள இந்த வழக்குகளின் மூலம் தங்களுக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
21 ஜூலை 2014
காரைநகர் குற்றவாளிகளுக்கு மகிந்த அதரவு!
யாழ்ப்பாணத்தில் 11 வயது மற்றும் 9 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை வீரர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத வேண்டாம் என நாட்டின் ஜனாதிபதியும் முப்படைகளினதும் சேனாதிபதியுமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக லங்கா ஈ நியூஸ் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய அவரது பாராளுமன்ற விவகார இணைப்புச் செயலாளர்களில் ஒருவரான குமாரசிறி ஹெட்டிகே, காவல்துறையினருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் இரண்டு தடவைகள் குமாரசிறி ஹெட்டிகெ நெடுந்தீவு காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்புக்களை எடுத்துள்ளார்.
குறித்த கடற்படை வீரர்களை விளக்க மறியலில் வைத்தால் படையினரின் மனோ திடத்திற்கு களங்கம் ஏற்படக் கூடுமெனத் தெரிவித்து அவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாண பிராந்தியத்திற்கு பொறுப்பான காவல்துறை அத்தியட்சகர் ஆர்.டி.பீ. விமலசேன மற்றம் நெடுந்தீவிற்குப் பொறுப்பான கவால்துறை அத்தியட்சகர் எஸ்.பீ.சேனாநாயக்க ஆகியோருக்கும் இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார்.
காவல்துறை அத்தியட்சகர்களின் உத்தரவிற்கு அமைய நெடுந்தீவு காவல்நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பாளர் ஆர்.கே.பீ. சேனாரட்ன குறித்த கடற்படை வீரர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்துள்ளார்.
2014ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் திகதி 18-2014 என்ற முறைப்பாட்டு இலக்கத்தில் சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
“சிறுமியைக் கடத்திச் சென்று, கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர்” என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்களின் போது சிறுமியை வைத்தியசாலைக்கு அனுப்பி சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமானது என்ற போதிலும் அவ்வாறான அறிக்கை எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை.
11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஏழு கடற்படை உத்தியோகத்தர்களும் காரைநகா கடற்படை முகாமைச் சேர்ந்தவர்களாகும்.
1. அஜித் குமார
2. ருபசிங்க ஆராச்சிலாகே சாமர இந்திக்க
3. நதீர தில்சான் ரத்நாயக்க
4. குடாபாலகே ஜயவீர
5. இந்திக்க குமார விதானாரச்சி
6. ரணசிங்க சுமித் சுபாஸ்
7. விகும் சேனாக பியசிறி திசாநாயக்க
ஆகியோருக்கு எதிராகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக சிறுமி செய்த முறைப்பாட்டை கருத்திற் கொண்டு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்வதாக நெடுந்தீவு காவல் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சேனாரட்ன நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். பீ-64-2014 என்ற இலக்கத்தைக் கொண்ட அறிக்கையே இவ்வாறு சமர்ப்பிக்க்பபட்டுள்ளது, சிறுமியின் வாக்கு மூலத்தைக் கருத்திற் கொண்டு சந்தேகத்தின் பேரில் கடற்படை வீரர்களை கைது செய்வதாக பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். குறித்த கடற்படை வீரர்களை இலகுவில் விடுதலை செய்யும் நோக்கில் இவ்வாறு முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கடற்படை வீரர்களின் தலைகளை மறைத்து, சீருடை அணிந்த நிலையில் அடையாள அணிவகுப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனர், இவ்வாறான ஓர் நிலையில் சிறுமியினால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை. குறித்த சிறுமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் காரணமாகவும் சிறுமி எவரையும் அடையாளம் காட்டவில்லை. படையினரை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்ற இவ்வாறான பொய் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக படையினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும், சந்தேக நபர்களை பிரதான நீதவான் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்ட போதிலும், பதில் நீதவான் ஒருவரின் ஊடாக பிணை வழங்கப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கடற் படைவீரர்களுக்கு வெறும் 250 ரூபா ரொக்கப் பிணையிலும், 5000 ரூபா சரீரப் பிணை அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. 11 வயதான சிறுமியின் பாலியல் வன்கொடுமை தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற போதிலும் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட படைவீரர்களின் பணி விசாரைணகள் முடிவடையும் வரையில் இடைநிறுத்தப்படுவது வழமையானது என்ற போதிலும், தமது பிள்ளைகளை அருகில் வைத்துக் கொண்டு அண்மையில் கடற்படைத் தளபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட வைஸ்ட் அட்மிரால் ஜயந்த பெரேரா, இந்த சந்தேக நபர்களை காலி கடற்படை முகாமிற்கு இடமாற்றம் செய்துள்ளார்.

20 ஜூலை 2014
சீமான் மீது பொய் வழக்கு!விடுதலை செய்தார் நீதிபதி!
மதுரை மேலூர் அருகே உள்ள வெள்ளரிபட்டியில் உள்ள சுங்கச்சாவடி மேற்பார்வையாளரின் கூறிய குற்றச்சாட்டின்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். பின்னர் மதுரை ஜேஎம்-2 கோர்ட் நீதிபதி விசாரணையில், குற்றச்சாட்டில் உண்மையில்லை என தெரியவந்தது. இதையடுத்து சீமானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி பால்பாண்டி.
இதையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்த சீமான், ’’என் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு. புகார் தாரரே புகார் கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டார். இது என் சொந்த பிரச்சனை. இதுக்காக மக்கள் யாரும் போராடவேண்டாம். நானே சரி செய்துகொள்கிறேன். மக்கள் பிரச்சனைகளை மட்டும் தொடர்ந்து பேசுவேன்.
2016 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஆளூங்கட்சி அதிமுக உட்பட அனைத்து கட்சிகளையும் எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிடும்’’என்று தெரிவித்தவரிடம், ‘’பொய் வழக்கு ஏன் போடப்படுகிறது; இது அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கையா?’’என்று கேட்டதற்கு, ’’அதுபற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை’’ என்று கூறினார்.
அவர் மேலும், ‘’தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவோம். 7 நாள் திருநாளாக கொண்டாடு வோம்’’என்று தெரிவித்தார்.
19 ஜூலை 2014
‘தலைவர்-தம்பி-நான்’ புத்தக வெளியீடு நாளை!
கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் எழுதிய ‘தலைவர்-தம்பி-நான்’ புத்தக வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வடபழனி ஆர்கேஜி அரங்கில் மாலை
வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது . தலைவர் இந்தியாவில் இருந்த காலகட்டங்களில் நடைபெற்ற சம்பவங்களை பதிவாக்கியுள்ளார். 1984ல் மட்டக்களப்பு சிறையை உடைத்து மீட்கப்பட்ட தோழர்கள் நிர்மலா நித்தியனந்தன் மற்றும் அவரது கணவர், பேபி உள்ளிட்ட பலர் அய்யா.புலமைபித்தன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.இவர்களை அழைத்துவந்த தம்பி அவரது அண்ணியிடம் (புலமைப்பித்தனின் மனைவி) “ எங்களுக்கு சிற்றுண்டி தயார் செய்யுங்கள் “ என்றார். ரகு அண்ணிக்கு உதவி செய்தார். பின்னர் தம்பி “அண்ணன், நீங்க உமர்முக்தார் படம் பார்த்திருக்கிறீர்களா?” என்றார். ... (படம் பார்த்தபின்) எல்லோருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. வயிறு நிரம்ப உணவருந்தினார்கள். கொஞ்ச நேரம் அளவளாவி மகிழ்ந்தோம். என் பிள்ளைகளை அருகேஅமரவைத்து தம்பி பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே தம்பி திடீரென பால்கனிக்கு போனார். “ரகு.....” என்று சத்தம் போட்டு அழைத்தார். ’அண்ணே , நான் வெளிக்கிடுறேன்’ என்று சொல்லிவிட்டு அவசரமாக புறப்பட்டார். நான் ‘ தம்பி....’ என்றேன். அவர்,” அண்ணே மொசாத்,.... மொசாத்” என்று சொல்லியபடியே படிக்கட்டுகளில் எட்டிக்குதித்து ஜீப்பில் ஏறிப் புறப்பட்டார். தம்பியை கொல்வதற்கு இஸ்ரேல் மொசாத் படையை ஏவிவிட்டிருக்கிறார்கள்.எங்கள் வீட்டில் இருப்பதை மோப்பம் பிடித்து ஏறத்தாழ முற்றுகையிட்டது மாதிரி வந்திருக்கிறார்கள். அதைத் தம்பி மோப்பம் பிடித்து உடனே புறப்பட்டார்.இன்னும் பத்து-பதினைந்து நிமிடம் இங்கே அவர் தங்கி இருந்திருந்தால் எங்கள் வீடே ரணகளமாக ஆகிப்போய் இருக்கலாம்....இதைப்பற்றி விவரங்களை நாளை அவரிடமே நேரில் கேட்கலாம் என்று புத்தகம் தொடர்பில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

18 ஜூலை 2014
காரைநகரில் ஏழு காமுகப்படையினர் கைதாம்!
காரைநகரில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, 7 சிங்கள (கடற்)காமுகப்படையினர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தெரிய வருகின்றது.
காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் பாடசாலைக்குச் சென்ற போது, அவரைத் தடுத்து வைத்து தொடர்ச்சியாக பதினொரு நாட்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைநகரில் சிறுமிகள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
காரைநகர் ஊரிக் கிராமத்தில் சிங்கள கடற்படைக் காமுகனால் சிறுமிகள் இருவர் பாலியல் வல்வுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காரைநகர் பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் ஊரிக்கிராம மக்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான
மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், தமிழ்த் தேசியமக்கள் மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் என பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் தாங்கியவாறு கோஷங்களையும் எழுப்பினர்.

17 ஜூலை 2014
மலேசிய விமானத்தை உக்ரைனில் சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஆதரவுப்படை!
நெதர்லாந்தில் இருந்து 295 பேருடன் மலேசியா கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படையால் சுட்டுத் தள்ளப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 295 பேரும் பலியாகியுள்ளனர். மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 295 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு இன்று மதியம் 12.10 மணிக்கு கிளம்பியது. எம்.ஹெச். 17 என்ற அந்த விமானம் உக்ரைனில் ரஷ்ய எல்லைக்கு அருகே செல்கையில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படை தீவிரவாதிகள் பக் ஏவுகணை வீசித் தாக்கினர். இதையடுத்து விமானம் ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது. விமானத்தின் எரிந்த பாகங்கள் அந்த பகுதியில் சிதறிக் கிடக்கின்றன. இது குறித்த புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளன. உக்ரைன் விமானங்களை ரஷ்யாவும், ரஷ்ய விமானங்களை உக்ரைனும் தாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தான் மலேசிய விமானத்தை உக்ரைன் அல்லது ரஷ்யா தவறுதலாக நினைத்து தாக்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விமானம் எரிந்துவிட்டதாகவும் அதில் பயணம் செய்த 280 பயணிகள் மற்றும் 15 சிப்பந்திகள் என 295 பேருமே உடல் கருகி இறந்துவிட்டதாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுட்டுத் தள்ளப்பட்ட விமானம் போயிங் 777-200 ரகத்தைச் சேர்ந்தது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 71 என்ன ஆனது என்று தெரியாமல் உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஐ.நாவில் சாட்சியமளிக்க 10பேர் ஜெனீவா சென்றுள்ளனர்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காக பத்து பேர் சுவிட்சர்லாந்திற்கு பயணமாகியுள்ளதாக, சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நவனீதம்பிள்ளையினால் நிறுவப்பட்ட விசாரணைக்குழுவின் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளில் சாட்சியமளிக்கும் நோக்கில் பத்து பேர் சுவிட்சர்லாந்து சென்றுள்ளனர். பிரிட்டன் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை ஆகியனவே இவ்வாறு பத்து பேரை அனுப்பி வைத்துள்ளன. சாட்சியமளிக்க முன்வந்தவர்கள் வன்னிப் போரின் போது இலங்கையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா விசாரணைக் குழு ஜெனிவாவில் ஐந்து நாட்கள் விசாரணை நடத்தவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்படுகிறது.
16 ஜூலை 2014
திருமணமாகி 11ம் நாள் எயிட்ஸ்,யாழில் இளம்பெண்ணின் அவலம்!
நீண்ட காலமாகவே யாழில் உள்ள ஒரு எயிட்ஸ் நோயாளியிடம் சில கேள்விகளை கேட்க்கவேண்டும் என்று இருந்தேன். யாழில் சுமார் 2,000 எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் எவரும் முன் வந்து எந்த தகவலையும் தர தயார் இல்லை. ஒரு விழிப்புணர்வுக்காக நான் ஒரு நேர்காணலை எடுக்க விரும்பினேன். இது குறித்து அனைவரும் தெரிந்திருக்கவேண்டும் அல்லவா ? இதோ ஒரு இளம்பெண் தனது எண்ணங்களை எம்மோடு மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார்.
எப்படி உங்களுக்கு கலியாணம் நடந்தது ? உறவுமுறையான அவருக்கும் எனக்கும் பொருத்தம் பார்த்துப் பேசி திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார். திருமணத்தின் பின்னர் அவரது ஆண் உறுப்பில் சொறிச்சல் மாதிரி இருந்தது. காய்ச்சலும் இருந்தது. அது மாறவில்லை. அதனால், யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தோம். அவருக்கு ரத்தம் எடுத்துச் சோதித்துப் பார்த்தனர். அவருக்கு எயிட்ஸ் என்பதனை திருமணம் செய்து 11ஆவது நாளில் பரிசோதனை உறுதிப்படுத்தியது. அதனைச் சொல்லும்போது எனக்கு வயது 18 . என்ன செய்வது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சியில் அழுது புலம்பினேன்.
கணவரின் மனநிலை எப்படியிருந்தது ? அவருக்கு முதலிலேயே எயிட்ஸ் இருந்ததா என்பது தெரியாது. ஆனால், அவர் கூறினார், அநியாயமா உன் வாழ்க்கையையும் நாசமாக்கிவிட்டேன் என்று. அவர் அவ்வாறு கூறியது தனக்கு ஏற்கனவே இருக்கு என்பதனை மறைத்ததனால் கூறினாரா ? அல்லது தனக்கு எயிட்ஸ் இருப்பது தெரியாமல் திருமணம் செய்து, எனக்கும் அதனைப் பரப்பி விட்டேன் என்ற ஆதங்கத்தில் அவ்வாறு கூறினாரா என்பது தெரியாது. அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், நான் அதன் பின்னர் அது பற்றிக் கேட்பதைத் தவிர்த்து விட்டேன்.
கணவருக்கு எய்ட்ஸ் என்றபோது ? அவருக்கு எயிட்ஸ் என்ற விடயத்தை அவருடைய குடும்பத்தினருக்குச் சொன்னபோது அவர்களுக்கும் அதிர்ச்சிதான். திருமணம் செய்து 16 வருடங்களின் பின்னர்தான் அவர் பிறந்துள்ளார். அதனால், அவரை நல்ல செல்லமாக வளர்த்துவிட்டனர். நோய் வந்துவிட்டது. இனி என்ன செய்வது. அவர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகிவிட்டார். குடிக்காது இருந்தால் இன்னும் சிறிது காலத்துக்கு வாழமுடியும். குடிக்க வேண்டாம் என அவருக்கு நான் கூறிவந்தேன். நாளையிலிருந்து நான் குடிக்க மாட்டேன் என்று சொல்லுவார். ஆனால், அவருக்கு அந்தப் போதையில் இருக்கும் போதுதான் நிம்மதியாக இருக்க முடியும் என்ற நிலை இருந்தது. தனது நண்பர்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். நான் மட்டும் இப்படியாகிவிட்டேன். அவர்களைப் போல வாழ முடியவில்லையே என்ற கவலை இருந்தது. அதற்குச் சிகிச்சை பெறுமாறு கேட்டுப் பார்த்தோம். அவர் கேட்கவில்லை. முன்னர் அவர் எப்படி மற்றவர்களின் பேச்சைக் கேட்கமாட்டாரோ அவ்வாறுதான் இறுதியிலும் கேட்கவில்லை. அதனால், அவர் இறந்துவிட்டார்.
அதுக்குப் பிறகு ? எனக்கு முன்னரும் இக்கட்டான காலம்தான். நான் பிறந்து 6 மாதத்தில் எனது அப்பா இறந்துவிட்டார். அம்மா இரண்டாவது திருமணம் செய்து 6 பிள்ளைகள். அம்மாவிடம் இருந்து பாசம் கிடைக்கவில்லை. சீதனம் கேட்கவில்லை என்பதற்காக எனக்கு அவரைத் திருமணம் செய்து வைத்தனர். பிறகு எனது ரத்தம் எடுத்து சோதித்தனர். எனக்கும் அவர் மூலமாக எயிட்ஸ் பரவியமை உறுதிப்படுத்தப்பட்டது. என்னால் அதனை நம்பவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை. மீண்டும் அழுது புலம்புகிறேன். அந்தநேரம் நான் இருந்த நிலமையை என்னால் விபரிக்க முடியாதுள்ளது.
வீட்டுக்கு எப்பிடி சொன்னீங்கள் ? யாரிடம் சொல்வது ? என்னத்தைச் சொல்வது என்று மூளை எல்லாம் குழம்பிப் போய் ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் இருந்தேன். எச்.ஐ.வி. அவ்வாறு தான் வரும் என்று அப்போழுதுதான் தெரியும். அம்மாவிடம் போய் சொன்னேன். அம்மா சொன்னார், அது உன் தலையெழுத்து. நான் என்ன செய்யிறது ? என்றார். அதன் பின்னர் அம்மா என்னைத் தனது வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். பாசத்தில் கூட்டிச் செல்லவில்லை. கணவர் தந்த நகைகள் என்னிடம் இருந்தன. அதனைப் பெறத்தான் என்னைக் கூட்டிச் சென்றார்.
ஊருக்குள் என்ன பேசிக் கொண்டார்கள் ? அவர் இறந்தபோது பத்திரிகைகளில் செய்தி வந்துவிட்டது. பெயர் வரவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்தவர், முகவரி என்றெல்லாம் வந்துவிட்டது. அதனால், எனது இடத்து மக்கள் கண்டுபிடித்துவிட்டனர். அப்படி வந்ததனால் ஊரார் என்னை ஒதுக்கி விட்டனர். சிலர் நேரடியாக வந்து கேட்டனர், உனக்கு எயிட்ஸ் உள்ளதாம், உன்னுடன் பழகக்கூடாதாம் என்று சொல்றாங்க என்று. மிகவும் கவலையடைந்தேன். நோய் வந்த பிறகு நான் கொண்டாட்டங்களுக்குச் செல்வதில்லை. என்னைச் சமூகம் ஒதுக்கியது. அதனைவிட வீட்டில் எனது அம்மா கூட ஒதுக்கினார். வீட்டிலேயே நான் ஒதுக்கப்பட்டதால் சமுதாயம் ஒதுக்கியதனை நான் பெரிதாக கொள்ளவில்லை. நான் எந்தவொரு தவறும் செய்திருக்கவில்லை. வீட்டில் அம்மா சொல்வார், இப்படி இருப்பதால் தம்பி ஆக்களுக்கு கலியானம் செய்ய முடியாது. எங்காவது போ அல்லது செத்துப்போ என்றார். என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. (அழுகிறார்… அழும்போதெல்லாம் அவரது கையைப் பற்றிப் பிடித்து அவரை ஆறுதல்படுத்தி சாதாரண நிலைக்குக் கொண்டுவருகிறார் அவருக்கு அருகில் இருக்கும் அவரது தற்போதைய கணவர்)
அம்மா என்ன செய்திருக்கவேண்டும் ? திருமணத்துக்கு முன்னர் அவரைப் பற்றி எனது பெற்றோர் விசாரித்திருக்க வேண்டும். திருமணம் செய்து தள்ளிவிட்டால் சரி என்று அம்மா நினைத்து விட்டார்தானே. நோய் இருப்பது தெரியாதுவிட்டாலும் அவரது முன்னைய பழக்கவழக்கங்கள் பற்றியாவது விசாரித்திருக்கலாம் தானே ? அவர் ஏற்கனவே பெண்கள் விடயத்தில் பலவீனமானவராக இருந்துள்ளார். அதனை அவர் பின்னர் சொல்லியிருக்கிறார்.
அதுக்குப் பிறகு அம்மா ? அதன் பின்னர் என் மனதை நோகடிக்கும் வகையில் கதை சொல்வார். தொடர்ச்சியாக அவ்வாறு நடந்து கொண்டார். சின்னப் பிள்ளைகள் இருப்பதனால் என்னை வைத்திருக்க வேண்டாம். வெளியேற்று என்று கிராம அலுவலர் தெரிவித்ததாக அம்மா சொன்னார். எனக்குப் பத்தொன்பதரை வயதாக இருக்கும்போது அவர் இறந்து விட்டார். கிராம அலுவலர் சொல்கிறார் என்கிறீர்கள் ? நான் எங்கு போவது ? யாழ்ப்பாணத்தில் இடமும் தெரியாது. வீட்டில் எனக்குத் தொல்லையாக இருந்தது. அதனால் நான் தற்கொலைக்கு முயற்சித்தேன்.
தற்கொலையா ? ஆம், 700 தூக்கமாத்திரைகளை வாங்கி, 100 மாத்திரைகள் வீதம் பிரித்து வைத்து ஒவ்வொரு பிரிவாக 400 குழிசைகளை விழுங்கி விட்டேன். அதன் பின்னர் நான் மயங்க விட்டேன். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ஆனால், சாவும் வரவில்லை. கோமா நிலையில் இருந்து தப்பிவிட்டேன். நான் எங்காவது போக வேண்டும் என்று நினைத்து கிறிஸ்தவ நிறுவனம் ஒன்றுக்குச் சென்றேன். அங்கு போய், என்னை ஊரில் வாழ விடுகிறார்கள் இல்லை. கிராம அலுவலரிடம் சென்றால் குற்றம், வெளியில் சென்றால் குற்றம் என்கிறார்கள். நீங்கள் என்னை உயிர் பிழைக்க வைக்கவேண்டாம். எப்படியாவது சாகடியுங்கள் என்று அவர்களிடம் கேட்டேன்.
அவர்கள் என்ன சொன்னார்கள் ? அவர்கள் என்னை ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற பின்னர்தான் நான் தற்போதைய நிலைக்கு வந்தேன். தற்போது பேட்டி தரவும் முடிகிறது. பேட்டி தருவதன் நோக்கம், இந்நோய் அடுத்தவர்களுக்கு வராதபடி இருக்க வேண்டும் என்பதே. அதற்காக என்னால் இயன்றதை நான் சொல்லுவேன். அதனைக் கேட்டு அவர்கள் சந்தோசமாக வாழவேண்டும். எனக்கு வந்த நிலைமை என் எதிரிக்குக் கூட வரக்கூடாது.
இவருடனான (இப்போது திருமணம்) சந்திப்பு எப்படி ? பிறகு நான் ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் நிறுவனத்துக்குச் சென்றேன். அங்குதான் இவரைக் கண்டேன். (தற்போது திருமணம் செய்திருக்கும் இளைஞனைக் காட்டுகிறார்). கடந்த ஜனவரியில் தாம் இருவரும் சேர்ச்சில் திருமணம் செய்துகொண்டோம்.
எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவரின் மனநிலை எப்படியிருக்கும் ? எய்ட்ஸ் நோயாளர்கள் ஒதுக்கப்படுகின்றனர். ஆனால், எயிட்ஸ் நோயாளர்களை ஒதுக்கக் கூடாது. பாதிக்கப்படவர்கள் கவுன்சிலிங் எடுத்து எங்களைப் போல மாறமுடியும். தவறின் அவர்கள் 2 விதமான முடிவை எடுப்பர். ஒன்று தம்மை அழிக்க வேண்டும் என்று நினைப்பர் அல்லது இதனை இன்னும் பலருக்குப் பரப்ப வேண்டும் என்ற மனநிலை உருவாகிறது. இந்த இரண்டுமே ஆபத்துத்தான். அந்தச் சூழ்நிலைக்குத் தள்ளுவது சமுதாயம்தான்.
சரி, உங்களைப் பற்றிச் சொல்லுங்களன்? (கணவனை நோக்கித் திரும்பினோம்) எனது அம்மா மனநோய்வாய்ப்பட்டவர். அதனால், அம்மா சின்னப்பிள்ளை மாதிரி. தனது வேலைகளைக்கூட செய்துகொள்ளமாட்டார். அப்பா குடித்துவிட்டு வருவார். ஒரு அக்கா வீட்டில்.வறுமை. நான் பாடசாலைக்குப் படிக்கச் செல்லும்போது சிலர் (ஆண்கள்) எனக்கு உதவுவதாகக்கூறி என்னை தவறான வழியில் பயன்படுத்த முற்பட்டனர். தவறான உடலுறவுக்குப் பயன்படுத்த முற்பட்டனர். பணம் தந்து கேட்பார்கள். அதனால், ஒரு கட்டத்தில் மது, சிகரெட், கஞ்சா எல்லாம் குடிக்கத் தொடங்கி விட்டேன். வீட்டில் எவரும் கண்டித்திருக்கவில்லை. எவரும் ஆலோசனை செய்திருக்கவில்லை. கேட்டிருந்தால் நான் தப்பியிருப்பேன்.
பிறகு ? அதன் பின்னர் வெளிநாடு போக சந்தர்ப்பம் கிடைத்தது. அம்மா அப்பாவிடம் கிடைக்காத அன்பு அங்கு என்னுடன் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணிடமிருந்து கிடைத்தது. ஒரு வருடமாக அவளுடன் ஒன்றாகத் தங்கி வாழ்ந்தேன். உடலுறவு கொண்டேன். பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்தேன். அக்காவுக்குத் திருமணம் செய்து கொடுத்தேன். இரண்டாவது தடவை வந்துபோகும்போது மருத்துவப் பரிசோதணை செய்தனர். அதன்போதுதான் எனக்கு எயிட்ஸ் இருப்பது தெரியவந்தது. அவள் வேண்டுமென்றே எனக்கு எயிட்ஸ் நோயைப் பரப்பியமை பின்னர்தான் தெரிந்தது. அதுதான் சொன்னேனே சில பேர் தனக்கு தந்ததை 10 பேருக்குக் கொடுக்க வேண்டும் என்று பழிவாங்குவார்கள். அவர் என்னை நாஷமாக்கிவிட்டார். எனக்கு நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதனால் 6 மாதங்கள் சிறையிலிருந்தேன்.
எப்படி இலங்கை திரும்பினீர்கள் ? நவீனரக சூட்கேஸ் பெட்டியுடன் சென்ற நான், ஒரு சொப்பின் பையில் 2 சேட்டுடன் திரும்பி இலங்கைக்கு வந்தேன். வீட்டுக்கும் போகமுடியாது. முகம் கொடுக்க கஷ்டமாக இருந்தது. வெள்ளவத்தையில் தங்கியிருந்தேன். கடலில் விழுந்து செத்திடுவமா என்று யோசித்தேன். பின்னர் என்னிடம் உள்ள முழுப் பணத்தையும் கொண்டுசென்று கொழும்பில் பரிசோதித்தேன். எயிட்ஸ் என்பதனை உறுதிப்படுத்தினர். மருந்து எடுத்து வாழலாம் என்றனர். சில நாள்களின் பின்னர் இவரைச் சந்தித்தேன். (மனைவியைக் காட்டுகிறார்)
உங்கள் வீட்டுக்குத் தெரியாதா ? வீட்டுக்குத் தெரியவந்தது. அக்கா கேட்டதனால் அவருக்குக் கூறினேன். அவர் கதறி அழுதார். “எனக்கு நோய் வந்திட்டுது அக்கா. வீட்டில எவருக்கும் சொல்லாதே அக்கா. அம்மா அப்பாவைக் கஷ்டப்படுத்தக்கூடாது. நான் இதோட செத்திடுவன். நான் உனக்கும் கரைச்சல் கொடுக்கமாட்டேன்” என்றேன். (அழுகிறார். கண்ணீர் வழிந்தோடுகிறது, கண்ணீரைத் துடைத்துக் கொண்டே தொடர்கிறார்). அக்காவுக்கும் அதிர்ச்சி. சிறிது நாள் சென்றபின்னர், அதில் தொடாதே, இதில் தொடாதே என்று அவளும் சொல்லத் தொடங்கிவிட்டாள். பின்னர் எனது உடுப்புகளை எடுத்து வெளியே எறிந்து போ என்று கலைத்து விட்டார். இவருக்கும் உங்களுக்கும் இடையிலான உறவு ? (மனைவியைக் குறித்து) நடந்ததை இவருக்குச் சொன்னேன் (மனைவிக்கு). ஆறுதல் வார்த்தை கூறினார். நீங்கள் குடிக்க வேண்டாம் என்றார். அன்றிலிருந்து நான் குடிப்பதில்லை. கவுன்சிலிங் போனேன். தற்போது தனியார் நிறுவனத்தில் பொறுப்பு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறேன். பெண்ணால் ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். என் வாழ்க்கை அதற்கு சரியான ஆதாரம். இப்போது உங்கள் மனநிலை எப்பிடி ? நான் பாதிக்கப்பட்டபோது, எனக்கு வந்த எண்ணம் என்னுடன் இது அழிந்திட வேண்டும் என்பதே. ஆனால், சிலர் இதனை இன்னும் பலருக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். என்னை ஒரு பெண்தானே அழித்தார். அதனால், இன்னும் பத்துப் பெண்களை அழிக்காமல் சாகமாட்டேன் என்ற மனநிலை உருவாகிறது. அவ்வாறே பெண்ணின் மனநிலையிலும் எண்ணம் ஏற்படுகிறது. இந்த இரண்டையும் தவிர்த்து வாழமுடியும் என்பது பரப்பப்படவேண்டும். (இருவரிடமும் கேட்டோம்)
நீங்கள் எடுக்கும் மருந்துகள் பற்றி ? இந்த நோய் ஏற்பட்டால் இரண்டு வகைப்பட்ட 3 குளிசைகள் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு வகைக் குளிசை 1998ஆம் ஆண்டு 15 ஆயிரம் ரூபா. மற்றையது 10 ஆயிரம் ரூபா. 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் இவை 3 ஆயிரம் ரூபாவுக்கு வந்து தற்போது இலவசமாக வழங்கப்படுகிறது. இவை பயன்படுத்துவதன் நோக்கம் நோயைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கே. தற்போதுள்ள வைரஸ் கிருமிகளை அழிக்க முடியாது. ஆனால், கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு உள்ளவர்களுக்கு உறுப்புகள் கழற்றவேண்டிவரும். விரும்பிய உணவு உண்ண முடியாது. ஆனால், எமக்கு எந்த உணவுக்கட்டுப்பாடும் இல்லை.
நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வீர்களா ? எயிட்ஸ் நோயாளர்கள் இருவர் திருமணம் செய்வதென்றால் வெண்குருதி சிறுதுணிக்கை இருவருக்கும் சமமாக இருத்தல் வேண்டும். ஒருவருக்குக் கூடவும் மற்றையவருக்கு குறையவும் இருந்தால் கூடாது. ஏனெனில், உடலுறவில் ஈடுபட்டால் கிருமிகள் ஒருவரிடமிருந்து மற்றையவருக்கு மாறி அது ஆபத்தாகிவிடும். இப்போது என்ன செய்கிறீர்கள் ? எம்மை எவரும் கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால், விழிப்புணர்வு ஊட்டவேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் உள்ளதனால் நாமாகவே அதனைச் செய்கிறோம். கத்தியால் குத்தப்பட்டவருக்குத்தான் அதன் வலி தெரியும். அவ்வாறே பாதிக்கப்பட்டிருக்கும் நாம் விழிப்புணர்வு செய்துவருகிறோம். எந்தவகை விழிப்புணர்வும் பாதிக்கப்பட்டவர்களால் செய்யப்படும்போதுதான், முழுப்பயனையும் அடையமுடியும். நாங்கள் இந்த அபாயத்திலிருந்து தப்பிக் கொள்வதற்கான விழிப்புணர்வை மேற்கொள்ள எங்கும், எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அதற்கான உதவிகளைச் செய்யுங்கள் சுகதேகிகளே!
நிறுவனத்தின் இணைப்பாளர் என்ன சொல்கிறார் ? இங்குள்ள இளைஞர்கள் வெளிநாட்டுக்குப் போனால் வேலையை மட்டும் செய்து உண்டு உடுத்து இருக்க வேண்டுமே தவிர எந்தப் பெண்ணுடனும் உறவு கொள்ளக்கூடாது எனப் பணிவுடன் அறிவுறுத்துகிறோம். வெளிநாட்டுக்குச் செல்வோர் இந்த விடயத்தில் இனிமேலாவது மிகவும் அவதானமாக இருங்கள். யாழ்ப்பாணத்திலுள்ள நோயாளர்கள் பலர் சிகிச்சை பெறச் செல்வதில்லை. பிடித்து அடைத்து விடுவார்கள் என்ற பொய்யான அச்சம். ஆனால், எந்தவிதப் பயமும் இல்லை. சந்தேகம் இருந்தால்கூட பரிசோதிக்கமுடியும். வெளிநாடு செல்வோர்க்கு விழிப்புணர்வூட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஏற்பாடு செய்தல் வேண்டும். கொண்டம்(condom) பாவித்து உடலுறுவு வைத்துக் கொள்ளலாமே ? இந்த எண்ணம் தவறு. பொதுவாகவே ஒரு குழந்தை கிடைத்து குறித்த கால இடைவெளிக்குள் இன்னொரு குழந்தை கிடைக்கக்கூடாது என்ற குடும்ப கட்டுப்பாட்டுக்குத்தான் ஆணுறை (கொண்டம்) பயன்படுத்தப்படுகிறது. தவிர அதனைப் பயன்படுத்தி திருமணத்திற்கு முன்னர் பாலுறவில் ஈடுபடுதல் என்பதற்கல்ல. 1939ஆம் ஆண்டு அமெரிக்காவில் கொண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தயாரித்தவரது பெயரிலேயே தற்போது அது அழைக்கப்படுகிறது. ஆனால், அதனைப் பயன்படுத்தி எப்படியும் வாழலாம் என்ற கருத்தையே வியாபாரிகள், வியாபார நோக்கத்துக்காக பரப்பி வருகின்றனர். இது தவறு என்று இவர்கள் கூறுகிறார்கள். கொண்டத்திற்கு இவ்வாறு ஒரு உண்மையான விளக்கம் சொன்ன தம்பதிகள் இவர்களாக தான் இருக்க முடியும்.
நன்றி: ஜெரா
நன்றி: "மாற்றம்"

15 ஜூலை 2014
தமிழ்மக்களுக்கு எதிரான பிரித்தானியாவின் கறைபடிந்த போர்!
சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில், பிரித்தானியாவின் பங்களிப்பை விபரிக்கும், ஆய்வு அறிக்கை ஒன்று லண்டனில் வெளியாகியுள்ளது.
தமிழ்மக்களுக்கு எதிரான பிரித்தானியாவின் கறைபடிந்த போர் – 1979- 2009 என்ற தலைப்பில், பிரித்தானிய ஆய்வாளரான, பில் மில்லர் (Phil Miller ) இந்த ஆய்வறிக்கையை எழுதியுள்ளார்.
பிரீமென் அனைத்துலக மனித உரிமைகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, பிரித்தானிய தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் சுதந்திரமாக பெறப்பட்ட தகவல்கள், மற்றும் பொதுமக்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக, பில் மில்லர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையின் முதல் மூன்று பகுதிகளிலும், 1979ம் ஆண்டு தொடக்கம், 1989ம் ஆண்டு வரையான காலத்தில், சிறிலங்காப் படைகளுக்கு பிரித்தானியா வழங்கிய உதவிகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் முன்னாள் படையினர், காவல்துறையினர், அளித்த பயிற்சிகள் குறித்தும், 1987இல் இந்தியப்படைகளுக்கு ஆலோசனை வழங்கியது குறித்தும் இதில் விபரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த பகுதியில், 1990 தொடக்கம், 2002 வரையான காலப்பகுதியில், சிறிலங்கா படை அதிகாரிகளுக்கான பயிற்சி உதவிகள் பிரித்தானியாவினால் விரிவாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் சிறிலங்காவில் இராணுவ கட்டளை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி உருவாக்கப்பட்டதாகவும், அதில் பிரித்தானியாவின் தீவிரமான பங்கு இருந்ததாகவும், பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் சிலர் நிரந்தரமாக அங்கு தங்கியிருந்து பணியாற்றியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இறுதிப் பாகத்தில், 2002 தொடக்கம், 2009 வரையான காலப்பகுதியில், பிரித்தானியாவின் பங்கு குறித்து விபரிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த இந்தக் காலப்பகுதியில், ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடைசெய்வதற்கு பிரித்தானியா கருவியாக செயற்பட்டது குறித்தும், சிறிலங்காவுக்கு ஆயுதங்கள் விற்றது குறித்தும் இந்தப் பகுதியல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பிரீமென் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில், 2013ம் ஆண்டு டிசெம்பரில் பில் மில்லர் அளித்த சாட்சியத்தின் விரிவான விளக்கமாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
14 ஜூலை 2014
யாழில்,அனந்தியின் உறவினர்கள் கைதாகி விடுதலை!
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் உறவினர்கள் இருவர், தம்மை அவதூறாகப் பேசினர் என்று குற்றம்சாட்டி வட்டுக்கோட்டை பொலிஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் அலுவலகத்துக்கு முன்பாக அவருடைய உறவினர்கள் இருவர் நேற்று மாலை நின்றிருந்தனர். இதன்போது அங்கு சிவில் உடையில் சென்ற பொலிஸார் அவர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தினர் என்றும் இருவரையும் வாகனத்தில் ஏற்றி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்டு, அவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து இருவரும் இரவு 10 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். இது குறித்து அனந்தி சசிதரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர்கள் இருவரும் எனது உறவினர்கள், அரச உத்தியோகத்தர்கள். அவதூறு வார்த்தைகளைப் பேசினார்கள் என்று பொய்கூறியே பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர். திட்டமிட்டு என்னை பழிவாங்கும் நோக்கில் சிலர் பொலிஸாரை ஏவிவிட்டுச் செய்யப்பட்ட காரியம் இது என்றார்.
12 ஜூலை 2014
சேட்டை விட்டவனுக்கு வேலணையில் வைத்து சாட்டையடி!
நேற்று நயினாதீவில் இடம் பெற்ற தோ் உற்சவத்தின் பின்னா் தனது குடும்பத்தினருடன் யாழ்ப்பாணம் நோக்கி பேரூந்தில் பயணம் செய்து கொண்டிருந்த யுவதியுடன் அங்க சேஷ்டை செய்த இளம் நபா் பேரூந்தில் பயணம் செய்தவா்களால் இறக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.
வேலணைப் பகுதியை பேரூந்து அண்மித்துக் கொண்டிருந்த போதே இவா் பேரூந்தில் இருந்து இறக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். குறித்த நபா் பயணிகளின் நெருக்கத்தைப் பயன்படுத்தி யுவதியுடன் மிகவும் அங்க சேஷ்டை செய்யத் தொடங்கியதாகவும் இதனால் கோபமடைந்த யுவதி குறித்த நபரை அதற்குள் வைத்தே அடித்ததாகவும் தெரியவருகின்றது. இதனால் கோபமடைந்த நபா் யுவதியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அடிக்க முற்பட்டதாகவும் இதனையடுத்து யுவதியின் தாயும் அலறவே பஸ்சுக்குள் நின்ற இளைஞா்கள் குறித்த நபரைக் கீழே இறக்கி நையப்புடைத்துள்ளனா். இதன் போது குறித்த நபரின் பெறுமதி மிக்க கைத் தொலைபேசியும் நொருங்கியுள்ளது. இதன் பின்னா் இவரைப் பொலிசாரிடம் ஒப்படைக்க முயன்ற போது குறித்த நபா் அழுது புலம்பவே அவனை அங்கேயே விட்டு விட்டு பேரூந்து சென்றதாகத் தெரியவருகின்றது.
இந் நபா் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் வேலை செய்வதாக இளைஞா்கள் விசாரித்த போது தெரிவித்துள்ளதாக இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
யாழில்,வெட்டுக்காயத்துடன் இளைஞரின் சடலம்!
யாழ்.காக்கைதீவு பகுதியில் உள்ள சிறீலங்கா படை முகாமிற்கு பின்புறமாக இருந்து இளைஞர் ஒருவருடைய உடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.கொடிகாமம் பகுதியை சேர்ந்த என்.குகதீபன் எனும் இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சடலம் கழுத்து பகுதியில் பாரிய வெட்டுக் காயத்துடன் காணப்பட்டது என மேலும் அறியவருகிறது.சம்பவ இடத்திற்கு வந்த நீதிபதி ஜோய்மகிழ் மாகாதேவா விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.11 ஜூலை 2014
அல்லிராஜா குடும்ப பிறந்தநாள் விழாவுக்கு விஜய் லண்டன் செல்வதால் சர்ச்சை!
![]() |
| அல்லிராஜா(லைகா) |
10 ஜூலை 2014
உயிலங்குளம் மாணவர்கள் வீதி மறியல் போராட்டம்!
மன்னார் உயிலங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் இன்று காலை தனியார் பேரூந்து ஒன்றை இடை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் மன்னார்-உயிலங்குளம் பிரதான வீதியில் சிறிது நேரம் போக்கு வரத்து தடைப்பட்டிருந்தது.
பாடசாலை மாணவர்களை கடந்த சில தினங்களாக குறித்த தனியார் பேரூந்து ஏற்றாமல் செல்வதினை கண்டித்தே குறித்த வீதி மறியல் மேற்கொள்ளப்பட்டதாக குறித்த பாடசாலை மாணவர்கள் தெரிவித்தனர்.
மன்னாரில் இருந்து காலை 7.20 மணிக்கு மடு நோக்கி புறப்படும் குறித்த தனியார் பேரூந்து ஒன்று உயிலங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு வருவதற்காக
சிறுநாவற்குளம்,கள்ளிக்கட்டைக்காடு,நொச்சிக்குளம் ஆகிய கிராமங்களில் பேரூந்திற்காக காத்து நிற்கும் மாணவர்களை ஏற்றாது கடந்த சில தினங்களாக சென்றுள்ளது.
இதனால் நுற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதில் பாரிய சௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று வியாழககிழமை காலை 7.20 மணியளவில் மன்னாரில் இருந்து மடுவிற்கு குறித்த தனியார் பேரூந்து புறப்பட்ட போதும் மாணவர்களை ஏற்றாது சென்றுள்ளது.
இந்த நிலையில் உயிலங்குளம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த பேரூந்தை உயிலங்குளம் சந்தியில் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின் மன்னார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் கதைத்து மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர்.இதனால் சுமார் ஒரு மணித்தியாலம் தாமதத்தின் பின்பே குறித்த பேரூந்து மடுவை சென்றடைந்தது.09 ஜூலை 2014
தமிழகத்தில் ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் மூன்று அரசியல் பிரபலங்கள் அனுமதி!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரபல பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி என மூன்று முக்கியத் தலைவர்கள் ஒரே நாளில் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும மூன்று பேருமே ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.சோ. ராமசாமிக்கு சமீப காலமாகவே உடல் நலம் சரியில்லை. ஏற்கனவே அவர் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது உடல் நிலை மோசமாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் வைகோவும், விஜயகாந்த்தும் அதே அப்பல்லோவில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஜயகாந்த்து நெஞ்சுவலி என்று முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர் நெஞ்சு எரிச்சல் காரணமாக அவரை சேர்த்துள்ளதாக தகவல்கள் கூறின. அவருக்கு இருதய பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது. அதேசமயம், மதிமுக பொதுச் செயலாளர் கடும் வயிற்று வலி காரணமாக சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரும் அப்பல்லோவில்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்படி தமிழகத்தின் மூன்று முக்கியத் தலைவர்கள் ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.சிறீலங்காவுக்கு ரோந்துப்படகுகளை கையளித்தார் அவுஸ்த்ரேலிய அமைச்சர்!
ஆஸ்திரேலியாவின் குடிவரவு குடியகல்வுக்கான அமைச்சர் ஸ்காட் மாரிசன் இலங்கைக்கு வந்து ஆஸ்திரேலிய அரசின் சார்பில் இரண்டு கடற்படை ரோந்துப்படகுகளை இலங்கை அரசுக்கு கையளித்திருக்கிறார்.இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரி படகில் வருபவர்களை ஆஸ்திரேலிய அரசு சர்வதேச சட்டங்களை மீறி இலங்கையிடமே திரும்ப கையளிப்பதாக ஐநா மனித உரிமை கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆஸ்திரேலிய அரசை குற்றம் சுமத்திக்கொண்டிருக்கின்றன.இந்த பின்னணியில் ஆஸ்திரேலிய அரசின் குடிவரவு குடியகல்வு அமைச்சர் இலங்கைக்கு வந்திருப்பதும், ஆஸ்திரேலிய அரசின் சார்பில் இரண்டு கடல்ரோந்துக்கான நவீன படகுகளை இலங்கை அரசிடம் கையளித்திருப்பதும் சர்ச்சையை தோற்றுவிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.ஆஸ்திரேலிய அரசின் சார்பில் அளிக்கப்பட்ட இந்த படகுகளை இலங்கை அரசுக்கு கையளிக்கும் நிகழ்வு கொழும்பு துறைமுகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் இலங்கை சார்பில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும், அவரது சகோதரரும் பாதுகாப்புத்துறை செயலருமான கோதாபய ராஜபக்ஷவும், கடற்படை உயர் அதிகாரிகளும் ஆஸ்திரேலிய அமைச்சர் ஸ்காட் மோரிசன்னும் கலந்துகொண்டனர்.
இந்த இரண்டு படகுகளுக்கும் இலங்கை அரசு ரத்னதீப, நிஹிகத என்று பெயர் சூட்டியிருக்கிறது.
08 ஜூலை 2014
படகில் வந்தவர்கள் ஆஸ்திரேலிய கடற்படை கப்பலில்!
ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி படகில் சென்ற இலங்கையர்கள் 153 பேரை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று திங்கட்கிழமை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம், இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு தற்காலிக இடைக்காலத்தடை விதித்திருந்தது.
இந்த 153 பேர் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் இதுவரை பதில் சொல்லாமல் தட்டிக்கழித்து வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது இவர்கள் அனைவரும் தற்போது ஆஸ்திரேலிய கடற்படைக்கலனில் தங்க வைக்கப்படிருக்கிறார்கள் என்று முதல் முறையாக ஒப்புக்கொண்டது.
மேலும் இவர்களில் யாரும் மூன்றுநாள் முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என்றும் ஆஸ்திரேலிய அரசு நீதிமன்றத்தில் இன்று உறுதிமொழி அளித்திருக்கிறது.
இந்த 153 பேரில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். தாங்கள் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால் வழக்குகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே இதே போல ஆஸ்திரேலியாவிடம் தஞ்சம் கோரி வந்த 41 இலங்கையரை கடலிலேயே விசாரித்து, அவர்களின் அகதித்தஞ்சக் கோரிக்கைகள் நிராக்கப்பட்ட பின், தமது கடற்படையினர் அவர்களை இலங்கையிடம் ஒப்படைத்துவிட்டதாக ஆஸ்திரேலிய அரசு உறுதிசெய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 41 பேரும் நேற்று திங்களன்று இலங்கையை சென்றடைந்தனர். இவர்களில் 9 சிறார் உட்பட 27 பேரை நீதிமன்றம் செவ்வாயன்று பிணையில் விடுவித்தது. மீதமுள்ள 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவ்வாறு புகலிடம் கோரியவர்கள் நாட்டைவிட்டு சட்டவிரோதமாக வெளியேறியது குறித்த வழக்கை சந்திப்பார்கள் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆஸ்திரேலியாவால் திரும்ப அனுப்பப்பட்ட 41 பேரில் நான்கு பேர் மட்டுமே தமிழர்கள் என்று ஆஸ்திரேலியா கூறியிருந்தது.
07 ஜூலை 2014
வீட்டுக்குள் கூத்தடித்த மகனுக்கு மண்டையை பிளந்த தந்தை!
நயினாதீவு உற்சவத்திற்கு வீட்டில் உள்ளவா்கள் சென்றதைப் பயன்படுத்தி தென்பகுதியைச் சோ்ந்த தனக்குப் பழக்கமான யுவதி ஒருவரை வீட்டில் அழைத்து வந்து சல்லாபம் புரிந்த இளைஞா் ஒருவா் தந்தையால் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் கடந்த ஞாயிற்குக் கிழமை கொக்குவில் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தென்பகுதிப் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்றுவரும் யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த இளைஞன் ஒருவா் கடந்த வாரம் இறுதியில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அவா் யாழ்ப்பாணம் வரும் போது சிங்கள நண்பிகள் சிலரையும் அழைத்து வந்து இன்னொரு உறவினா் வீட்டில் தங்க வைத்துள்ளார். அவா்களும் நயினாதீவு செல்வதற்கு இளைஞனுடன் வந்ததாகத் தெரியவருகின்றது. தன்னுடன் வந்த சிங்கள யுவதிகளை தனது குடும்பத்தினருடன் நயினாதீவுக்கு அனுப்பி வைத்துவிட்டு தனக்கு வேலைகள் சில இருப்பதாகக் கூறி கோவிலுக்குப் போகாது இளைஞா் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இதே நேரம் இளைஞனுடன் வந்த யுவதிகளில் ஒரு யுவதியும் தான் யாழ்ப்பாணத்தில் உள்ள சிலரைச் சந்திக்கச் செல்ல வேண்டியிருப்பதால் கோவிலுக்கு வரமுடியாது எனத் தெரிவித்து குடும்பத்தினா் கோவிலுக்குச் சென்ற வாகனத்தில் ஏறி யாழ் நகரப் பகுதியில் இறங்கியுள்ளார்.
இதன் பின்னா் இளைஞன் குறித்த யுவதியை யாழ் நகரில் இருந்து ஏற்றி வந்து தனது வீட்டிற்குக் கொண்டு வந்துள்ளார். இளைஞனும் யுவதியும் மதுவும் அருந்தியுள்ளனா். இதன் பின்னா் இவா்கள் அடித்த கூத்து அயலில் உள்ளவா்களுக்கு தெரியும்படியாக இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் யுவதி மது போதையில் உச்ச குரலில் சிங்களப் பாட்டுப் பாடியபடி நிர்வாணமாக முற்றத்திற்கு வந்ததையும் அயலில் உள்ளவா்கள் அவதானித்துவிட்டு கோவிலுக்குச் சென்ற தந்தைக்கு தொலைபேசியில் தகவல் அனுப்பியுள்ளனா்.
கோவிலில் நின்ற குடும்பத்தினா் இடை நடுவில் வெளியேறி வீட்டுக்கு வந்தபோது அங்கு இருவரும் நிர்வாண நிலையில் கடும் போதையில் மயக்க நிலையில் கட்டிலில் கிடந்துள்ளனா். இதனால் கடும் கோமடைந்த தந்தை மகனை எழுப்பி தாக்குதல் நடாத்தியுள்ளார். மகனுக்கு அடி விழும் போது கண் விழித்த யுவதி நிர்வாணமாக வெளியே ஓடிவந்ததாகவும் இதனை மற்றைய சிங்கள நண்பிகள் தடுத்து நிறுத்தி அவா்களும் யுவதியைத் தாக்கி உள்ளே கொண்டு சென்றுள்ளனா்.
தாய் மற்றும் சகோதரிகள் தடுக்கத் தடுக்க மகனுக்கு தந்தை நடாத்திய அபிசேகத்தில் மகனின் தலையில் காயமேற்பட்டு இரத்தம் வழிந்துள்ளது. இதனையடுத்து அங்கு திரண்ட அயலவா்கள் தந்தையை மறித்து மகனை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனா்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.அவுஸ்ரேலியாவிலிருந்து அகதிகளை திருப்பி அனுப்ப தடை!
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதற்கு அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவதனை தடை செய்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கிறிஸ்மஸ் தீவு பகுதியை 153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் படகு மூலம் சென்றடைந்திருந்தனர்.
சிட்னி உயர் நீதிமன்றில் இன்று நடைபெற்ற விசாரணைகளின் போது உயர் நீதிமன்ற நீதவான் சுசான் கிரினானன் (ளுரளயn ஊசநnயெn) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டுமென சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
புகலிடக் கோரிக்கையாளர்களில் 45 பேரின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் ஏனைய 105 புகலிடக் கோரிக்கையாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
இந்த இடைக்கால தடையுத்தரவு நாளை மாலை 4.00 மணி வரையில் மட்டுமே அமுலில் இருக்கும் என நீதவான் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நாளைய தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடு என்ற ரீதியில் புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர்களை ஆபத்தில் விடக் கூடாது எனவும் சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.
06 ஜூலை 2014
சாவகச்சேரி மருத்துவமனைக்குள் வாள்வெட்டு!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்குள் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எட்டுப் பேர் படுகாயமடைந்துள்ளனர். அல்லாரைப் பகுதியில் இரண்டு குழுக்களுக்குள் இடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார். அதனையடுத்து குறித்த குழுவினர் வைத்தியசாலைக்குள் வந்து மீண்டும் தகராற்றில் ஈடுபட்டனர். இதனையடுத்த மீண்டும் வாள் வெட்டு இடம்பெற்றது. இதில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் மேலதிக சிகிச்சைக்கான யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
அதன்போது அல்லாரையை சேர்ந்த 25வயதுடைய அன்பழகன் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படும் வழியில். உயிரிழந்துள்ளார். சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றமையால் வைத்தியசாலையினர் பீதியில் உறைந்துள்ளதுடன் வைத்தியசாலை சூழல் பதட்டநிலையிலும் உள்ளது. தற்போது பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
05 ஜூலை 2014
யாழில் போலீஸ்காரனுக்கு செம அடி!
யாழ்.நகரப் பகுதியில் பெண்களிடம் அங்க சேட்டை புரிந்த சிறிலங்கா போலீஸ்காரன் ஒருவன் பொது மக்களால் நைய்யப்புடைக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,யாழ்.மத்திய கல்லூரியில் இன்று எல்லே போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கான பாதுபாப்புக் கடமைக்கு சிறிலங்கா பொலிஸார் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் சிவில் உடையில் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா போலீஸ்காரன் ஒருவன் இன்று மாலை 6 மணியளவில் யாழ்.பொது நூலத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதியால் சென்ற பெண் ஒருவரிடம் அங்க சேட்டை புரிந்துள்ளார்.
இதனை பார்த்து ஆத்திரமடைந்த பொது மக்கள் பெண்ணிடம் அங்க சேட்டை புரிந்து விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட குறித்த சிறீலங்கா போலீஸ்காரனை மடக்கிப் பிடித்து நைய்யப்புடைத்துள்ளனர்.இதனால் காயமடைந்த சிறீலங்கா போலீஸ் அதிகாரி சிசிக்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணையும் பிரித்தானியா நாடுகடத்துகிறது!
படையினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாக சனல்4 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. யுத்த வலயங்களில் பாலியல் வன்முறைகளை தடுக்க சர்வதேச ரீதியான பிரகடனமொன்று அண்மையில் லண்டனில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. இந்த விசேட பிரகடனத்தை பிரித்தானியாவே முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் நிலைமையில் ஆபத்துக்களை எதிர்நோக்கி வரும் பெண் ஒருவரை பிரித்தானியா நாடு கடத்த முயற்சித்து வருவதாக சனல்4 ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கைப் படையினரால் பல தடவைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்திருக்கும் நிலையிலும் அப்பெண்ணை நாடு கடத்த பிரித்தானியா தீர்மானித்திருக்கிறது. குறித்த பெண் கடந்த 2010ம் ஆண்டில் பிரித்தானியாவை வந்தடடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேணிய தொடர்பு, படையினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை மற்றும் உளவியல் பாதிப்புக்கு உள்ளானமை போன்ற காரணிகள் எடுத்துரைக்கப்பட்டும், அவை குறித்து பிரித்தானிய அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என சனல் 4 சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்த வலயத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானியா உறுதியளித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்திருந்தார். எனினும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வரும் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரங்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையும்
குற்றம் சுமத்தியுள்ளது.
குற்றம் சுமத்தியுள்ளது.
04 ஜூலை 2014
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம்!
சிறீலங்கா படைகளின் நில ஆக்கிரமிப்பை எதிர்த்து இரண்டாம் கட்டமாக இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி அரச செயலகத்துக்கு முன்பாக கவன யீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்தக் கவனஈர்ப்புப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளைக் கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
03 ஜூலை 2014
யாழ்,மாநகரசபை வாகனம் விபத்து!6பேர் இடைநிறுத்தம்!
யாழ். மாநகர சபை ஆணையாளரின் வாகனம் விபத்துக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மாநகர சபை பணியாளர்கள் 6 பேர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.
யாழ். மாநகர சபை ஆணையாளர் பிரணவநாதனின் வாகனத்தை அனுமதியின்றி திருட்டுத் தனமாக எடுத்துச் சென்று விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றது. இதனால் பல்வேறு தரப்புக்களில் இருந்தும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரும் பணியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் இவர்களுக்கு எதிரான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இதில் 2சாரதிகளும் 4 உத்தியோகத்தர்களும் அடங்குகின்றனர். இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 20 ஆம் திகதி யாழ். மாநகர சபை ஆணையாளரின் வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச் சென்றது மட்டும் அல்லாது குறித்த அறுவரும் போதையிலும் இருந்துள்ளனர். யாழ் மற்றும் தீவுப்பகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்தும் உள்ளனர்.
அதனையடுத்து அராலி சந்தியில் உள்ள மின்கம்பத்தோடு வாகனம் மோதுண்டமையினால் வாகனம் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
02 ஜூலை 2014
மனைவி மீது சந்தேகம் கொண்டு பிள்ளைகளை கொன்ற தந்தை!
வெளிநாடு சென்ற தன் மனைவி, அங்கு வேறொரு ஆணுடன் உறவு கொண்டுள்ளார் என்று ஏற்பட்ட சந்தேகத்தில், தனது பிள்ளைகளைக் கொன்று வீட்டிலேயே அந்தச் சடலங்களைத் தூக்கிட்டுவிட்டு தானும் தற்கொலை செய்ய முற்பட்டுள்ளார் ஒருவர். எனினும் குறித்த நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுக் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு ஹட்டன் வீதியின், எட்டியாந்தோட்டை வல்பொலகொடச என்ற இடத்தில் இன்று அதிகாலை நடைபெற்றுள்ளது. தந்தையால் கொலை செய்யப்பட்டுத் தூக்கிடப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 7 வயது சிறுமி மற்றும் 3 வயது சிறுவன் ஆகியோரின் சடலங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று அதிகாலை 2.08 அளவில் 119 என்ற அவசர அழைப்பு இலக்கத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, அங்கு சென்ற எட்டியாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன்போது தனது கைகளை வெட்டிக் கொண்ட குழந்தைகளின் தந்தை எனக் கூறப்படும் 35 வயதான ஒருவர், மனைவி வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளார் என்றும் அவர் அங்கு பிறிதொரு நபருடன் தொடர்பை வைத்துள்ளார் என்றும் இதன் காரணமாகவே குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முயன்றார் என்று பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
01 ஜூலை 2014
இலங்கையையும் கைப்பற்றப்போவதாக ஐ,எஸ்,ஐ,எஸ் தெரிவிப்பு!
ஐ.எஸ்.ஐ.எஸ்., என்ற முஸ்லீம் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த,அய்மன் மொகைல்தின் என்பவர்,ஒரு வரைபடம் மற்றும் 5 ஆண்டு திட்டத்தை டுவிட்டர்’ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதில் ஈராக் முழுவதையும், தாங்கள் கைப்பற்றியதன் பின்னர், அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளையும் கைப்பற்றும், ஐ.எஸ்.ஐ.எஸ்.,சின், ஐந்தாண்டு திட்டம் தயாராகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவ் வரைபடத்தில், ஈராக் மட்டுமன்றி, ஆபிரிக்க நாட்டின் ஒரு பகுதி, இஸ்ரேல் உள்ளிட்ட அனைத்து மத்திய கிழக்கு நாடுகள், துருக்கி, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேஷிய நாடுகள், மியான்மர், மற்றும் ஒஸ்ரேலிய நாடுகளும் கறுப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளதுடன் இக் கறுப்பு நிறப் பகுதிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக ISIS முஸ்லீம் பயங்கரவாத அமைப்பினால் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு பாகிஸ்தானின் உதவியுடன் சில முஸ்லீம்கள் ஆயுதப்பயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இலங்கை முழுவதையும் தாம் கைப்பற்றப் போவதாக இந்த முஸ்லீம் பயங்கரவாத அமைப்பு அறிவித்திருக்கிறது.
30 ஜூன் 2014
தீவகம் இருளில் மூழ்கியது!
காரைநகர்-பொன்னாலை பிரதான மின்மார்க்கத்தில் அமைந்துள்ள உயர் அழுத்த மின்கம்பங்கள் சூறைக்காற்றினால் முறிந்து வீழ்ந்ததில் தீவுப் பகுதி இருளில் மூழ்கியது.நேற்று மாலை 5 மணியளவில் வீசிய கடும் காற்றினால் காரைநகர்-பொன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த உயர் அழுத்த மின்கம்பங்கள் மூன்று முறிந்து வீழ்ந்து மின்சாரக் கம்பிகளும் அறுந்தன. இதனால் காரைநகர், ஊர்காவற்றுறை, வேலணை, புங்டுதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்டைதீவு போன்ற பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
யாழ்.ஊர்காவற்றுறை பிரதான வீதியில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் இந்த வேளையில் இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதால் வீதியால் பயணம் செய்தோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். தடைப்பட்டுள்ள மின்சாரத்தை மீள வழங்குவதற்கான துரித நடவடிக்யைில் இலங்கை மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.29 ஜூன் 2014
திரு,நடேசன் அவர்களின் ஆவியுடன் பேசினாராம் இந்தச்சாமி!
ஆவியோடு பேசுவதன் மூலம் பல பிரச்னைகளைத்
தீர்த்துவைப்பதாய் ரத்தினசாமி செய்த ஒரு விளம்பரத்தின் மூலம் அவரிடம் பேட்டி எடுத்தனர் இந்திய ஊடகமான விகடன் டைம்பாஸ் குழுவினர்.
”நான் ஆரம்பத்தில் லாட்டரி விற்பனையாளராக இருந்தேன். அப்போது என் தாயார் காலமாகிவிட்டார். அது பற்றிய கவலையில் இருந்தபோது, ஆவி உலக ஆராய்ச்சியாளர் விக்கிரவாண்டி ரவிச்சந்திரனின் புத்தகத்தைப் படித்து என் அம்மாவின் ஆவியுடன் பேச முயற்சி செய்தேன். முதல் முயற்சிலேயே வெற்றி கிடைத்தது. அதைத் தொடந்து நண்பர்கள், உறவினர்கள் ஆவியுடன் பேசத் துவங்கி, பின்னர் அதுவே முழு நேர வேலையாக மாறிவிட்டது’ என்று தன்னைப் பற்றி இன்ட்ரோ கொடுத்தவரிடம், நாங்களும் சில ஆவிகளிடம் பேச வேண்டும் என்றோம்.
”அதற்கென்ன ஜோரா பேசிடுவோம். யாரிடம் பேச வேண்டும். உங்க பாட்டியிடமா?” என்றார்.
”விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்கிட்ட பேசணும் என்றோம். ”அவர் உயிரோடதான் இருக்கார். ஏற்கெனவே ஒருமுறை எனது வழிகாட்டும் ஆவியிடம் அவரிடம் பேச வேண்டும் என்றபோது, அவர் ஆவி உலகத்துக்கு வரவில்லை. பூமியில்தான் இருக்கிறார் என்று தகவல் வந்தது. எனவே அவரிடம் பேச முடியாது’ என்றார். ”பின்லேடன்கிட்ட பேசுறீங் களா?” என்றார். ”பேசலாமே” என்றதும் பேப்பரை எடுத்துக்கொண்டு, ”கேள்விகளைச் சொல்லுங்கள். பின்லேடனின் ஆவி எனக்குள் புகுந்து பதில்களை எழுதும்’ என்றார். நாம் கேட்ட கேள்விகளும் அவருக்குள் புகுந்து பின்லேடனின் ஆவி(!) அளித்த பதில்களும்…
”இரட்டை கோபுரத் தாக்குதலை நீங்கள்தான் நடத்தினீர்களா?‘
”நாங்கள்தான் நடத்தினோம். எங்களின் லட்சியம் அந்தத் தாக்குதலில் நிறைவேறியது.’
”உங்களின் பாகிஸ்தான் இருப்பிடத்தை அமெரிக்காவிற்குக் காட்டிக்கொடுத்தது யார்?’
”அதுதான் எனக்கும் இன்னும் புரியவில்லை. ஆனால் என் உடன் இருந்தவர்களோ, என் குடும்பத்தினரோ காட்டிக்கொடுக்கவில்லை. அது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்.’ ”அடுத்து யாரிடம் பேச வேண்டும்?” என்றார். நம்முடன் வந்திருந்த நண்பரோ, ”சில்க் ஸ்மிதாவிடம் பேச வேண்டும்” என்றார். ”அந்தம்மாகிட்ட நிறைய முறை பேசியாச்சு சார். வேற யாரையாவது சொல்லுங்க” என்றார். ”விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான நடேசனின் ஆவியுடன் பேச முடியுமா” என்று கேட்டோம். யோசித்தவர், ”அவரின் படம் வேண்டுமே… படம் இல்லாமல் பேச முடியாது” என்றார். கூகுளில் இருந்து டவுண்லோட் செய்து நடேசனின் படத்தைக் காட்டினோம். அதன் பின் நமது கேள்விகளுக்கு நடேசனின் ஆவியிடம் இருந்து பெற்ற பதில்கள்…
”உங்களைச் சரணடையச் சொல்லியது யார்?’
”உங்களுக்கு என் வாழ்த்துகள். போரின் இறுதிக் கணத்தில் நாங்கள் யாருடனும் தொடர்புகொள்ள முடியாமல் இருந்தோம். ஒரே ஒருவரின் தொடர்பு மட்டும் கிடைத்தது. அவர் தமிழக அரசியல் தலைவர் ஒருவரின் வாரிசு. அவரின் மூலமாகப் போராளிகள் தவிர்த்து, அரசியல் பிரிவைச் சார்ந்தவர்களை மட்டுமாவது காப்பாற்றச் சொன்னோம். அவரின் தந்தையுடன் தொடர்புகொண்டு சொல்வதாகச் சொன்னவர், பின்னர் வெள்ளைக் கொடியுடன் சரணடையுமாறு சொன்னார். அவரின் பேச்சை நம்பி வெள்ளைக் கொடியுடன் வந்த எங்களை சுட்டுக் கொன்றுவிட்டனர்.’
”ராஜபக்ஷேவுக்கு எப்போது தண்டனை கிடைக்கும்?’
”ராஜபக்ஷேவை ஒரு மனிதப் பிறவியாகவே கருத முடியாது. அவர் செய்த அட்டூழியத்திற்கு, கண்டிப்பாக தண்டனை கிடைக்கும். மோடியிடம் அவரின் நரித்தந்திரங்கள் பலிக்காது. புலியைக் கண்ட நரிபோல், மோடி ஆட்சிக்கு வரவும் பயந்துபோய் கிடக்கிறார்.’
”பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?’ ‘தேசியத் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை. அவர் இறந்திருந்தால், இங்கு வந்திருப்பார். அவர், கடற்புலி தளபதி சூசை, பொட்டம்மான் மூவரும் நாங்கள் இறப்பதற்கு முதல் நாளே தப்பிவிட்டனர்.’ பேட்டி முடித்து கிளம்பும்போது, ”ஒருநாள் ஃப்ரீயா வாங்க தம்பி. சதாம் ஹூசன், கிருபானந்த வாரியார் ஆவிகளைக் கூப்பிட்டுப் பேசுவோம்’ என்றார்.

ஐ.நா முன் இரு இராணுவ அதிகாரிகளும் சாட்சியமளிக்கவுள்ளனர்!
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் இலங்கைக்கு எதிரான விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்கும் இலங்கையர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அரச இரகசிய காப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் இலங்கை படையினருக்கு எதிராகவும் சாட்சியமளிக்க பல்வேறு தரப்பினர் தயாராகி வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருப்பதாக ஞாயிறு திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது. சாட்சியாளர்கள் விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்க செல்வதற்கான விமானப் பயணச்சீட்டுக்கள், தங்குமிட வசதிகள் மற்றும் விசேட கொடுப்பனவுகளை வழங்க சில அரச சார்பற்ற நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் விசாரணைக் குழுவினர் ஜெனிவா உட்பட உலகின் 8 நகரங்களில் சாட்சியங்களை பதிவு செய்ய தீர்மானித்துள்ளனர். இதனிடையே விசாரணைக் குழுவின் முன் பொய்ச்சாட்சி வழங்கி அரசியல் புகலிடம் பெற சில தரப்பினர் முயற்சித்து வருவதாகவும் இவ்வாறு நாட்டை காட்டிக் கொடுக்க நபர்களின் சொத்துக்களை கூட அரசுடமையாக்க முடியும் எனவும் திவயின குறிப்பிட்டுள்ளது. இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் உட்பட 31 பேர் விசாரணைக் குழுவின் முன் சாட்சியமளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
28 ஜூன் 2014
முக்கொலையாளியை விடுவிக்க வேண்டாம்-மன்றில் கோரிக்கை!
அச்சுவேலியில் மூன்று கொலைகளைச் செய்த தனஞ்சயனை விடுவிக்க வேண்டாம் என்றும் அவனுக்கு உரிய தண்டனை வழங்கி சிறையில் அடைக்குமாறும் தனஞ்சயனின் வாள்வெட்டுக்கு இலக்காகிய யசோதரன் நேற்று நீதிமன்றில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் அச்சுவேலி கதிரிப்பாயில் கடந்த மே 4 ஆம் திகதி இடம்பெற்ற முக்கொலை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கொலையுண்ட மதுசாவின் கணவரான யசோதரன் மன்றில் சாட்சியமளித்தார்.
கொலைகள் நடைபெற்ற அன்று தான் பிறிதொரு அறையில் படுத்திருந்ததாகவும் ‘எங்களை வெட்டுகின்றான் காப்பாற்றுங்கள்” என்ற அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்தபோது தனக்கும் வெட்டு வீழ்ந்ததாகவும் இதனால் தான் சுயநினைவிழந்தமையினால் அதன் பின்னர் நடந்தமை தெரியவில்லையெனவும் தெரிவித்தார்.
மேலும் தனக்கும் தனஞ்சயனுக்கும் இடையில் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லாத போதும் எனது மனைவி குடும்பத்திற்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்தமையினைத்தான் அறிந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
முக்கொலை குற்றவாளியான தனஞ்சயனை எதிர்வரும் ஜூலை மாதம் 11ம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா நேற்று உத்தரவிட்டார்.
தர்மிகாவின் சகோதரியும் இந்த வாள்வெட்டில் பலியாகியிருந்தவருமான மதுசாவினை இரண்டாவதாகத் திருமணம் செய்ய முடியாத நிலையிலே தனஞ்சயன் (தர்மிகாவின் கணவர்) மேற்படி படுகொலையினைச் செய்திருந்தார். ஏற்கெனவே தனஞ்சயனின் மனைவியான தர்மிகா கடந்த 13ம் திகதி நீதிமன்றில் ஆஜராகி தனது முதலாவது சாட்சியத்தினைப் பதிவு செய்தார். இந்நிலையில் இன்று கொலையுண்ட மதுசாவின் கணவரான யசோதரன் தனது சாட்சியினைப் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.27 ஜூன் 2014
புளியங்கூடல் மகாமாரி அம்பாள் தேர்த்திருவிழா நாளை!
புளியங்கூடல் செருத்தனைப்பதிதனில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் சிறீ ராஜ மகாமாரி அம்பாள் ஆலய தேர்த்திருவிழா நாளை (28.06.2014)சனிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.13.06.2014-வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பித்து மிகுந்த பக்தி மயத்துடன் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.நாளை 16ம் நாள் அம்பிகை தேரேறி வந்து மக்களுக்கு அருள் பாலிக்க இருக்கிறாள்.நாளை மறுதினம் (29.06.2014)ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவமும் அதை தொடர்ந்து திங்கட்கிழமை பூங்காவனத் திருவிழாவும் இடம்பெறும்.அம்பாள் அருள்வேண்டி பல இடங்களிலிருந்தும் மக்கள் வருகைதந்தவண்ணமிருப்பதாக அறிய முடிகின்றது.மாணவியுடன் இருந்த இளைஞனுக்கு தர்ம அடி!
மானிப்பாய்ப் பகுதியில் தலை மற்றும் முகத்தில் காயமடைந்த நிலையில் இளைஞர் ஒருவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது காயத்தைப் பார்த்த மருத்துவர் இவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக அவதானித்து பொலிசாரிடம் தெரிவிக்க முற்பட்ட போது இளைஞர் தடுத்து நிறுத்தியதாகத் தெரியவருகின்றது.
சிறிது நேரத்தில் அங்கு வந்த இளைஞர்குழு ஒன்று குறித்த இளைஞனை பொலிசாரிடம் நாங்கள் அடித்ததாகத் சொல்லக்கூடாது என அவனை அச்சுறுத்தியுள்ளனர். இதன் பின்னர் வைத்தியர் அவர்களை விசாரித்த போதே அவர்கள் அவ் இளைஞனுக்கு ஏன் அடித்தது என வைத்தியருக்கும் அங்கு நின்றவர்களுக்கும் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் அரச அலுவலகம் ஒன்றில் சிற்றூழியர் எனவும் அத்துடன் மானிப்பாய்க்கு சற்றுத் தொலைவில் உள்ள இடமொன்றில் தொலைத்தொடர்பு நிலையம் ஒன்று நடாத்தி வருபவர் எனவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணமான குறித்த நபர் தொலைத் தொடர்பு நிலையத்திற்கு றீலோட் செய்ய வரும் பெண்களின் இலக்கங்களை எடுத்து அவர்களுக்கு காதல் மொழி கதைத்து வந்த போது ஒருதடவை பெண் ஒருவரின் சகோதரனால் தாக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது. தனது தொலைபேசி நிலையத்தில் வேலைக்கு நின்ற யுவதியையே திருமணம் முடித்துள்ளார். அதுவும் நான்கு மாத கர்ப்பிணியாக்கி பெண்ணின் பெற்றொரும் உறவினர்களும் கொடுத்த அழுத்ததினாலேயே திருமணம் முடித்ததாகவும் அவ் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில் கடந்த வாரம் நிறைமாத கர்ப்பிணியான மனைவியை ஆனைக்கோட்டையில் உள்ள அவளது தாய்வீட்டுக்கு அனுப்பிவிட்டு இவர் தனியே தனது வீட்டில் இருந்துள்ளார். தனது கடைக்கு வந்த நகரப்பகுதியில் உயர்தரம் படிக்கும் மாணவிக்கு இலவசமாக றீலோட் செய்து கொடுப்பதும் தனது தரமான கைத்தொலைபேசியை மாணவிக்கு சில நாட்கள் வைத்திருக்கும் படி கொடுத்தும் மாணவியை தனது பக்கம் இழுத்து தனது வீட்டிற்கு வரச் செய்து உல்லாசமாக இருந்துள்ளார். குறித்த மாணவி தனியே இருந்த இளைஞனின் வீட்டிற்கு செல்வதை அவதானித்த அப்பகுதி இளைஞர்கள் மாணவியுடன் இளைஞர் உல்லாசமாக இருந்த போதே கையும் மெய்யுமாகப் பிடித்து கடுமையாகத் தாக்கியதாகத் தெரியவருகின்றது.
தாக்குதலில் தலையில் காயமiடைந்த இளைஞனை அவர்களே வைத்தியசாலையின் அருகில் கொண்டு வந்து விட்டுச் சென்றதாகவும் அவர் பொலிசாரிடம் முறையிடாது இருக்க மீண்டும் வந்து தாம் எச்சரித்ததாகவும் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இயக்கச்சியை சேர்ந்தவர் மருத்துவமனையில் சடலமாக ஒப்படைப்பு!
மயக்கமுற்ற நிலையில் பளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டவேளை இடைவழியில் உயிரிழந்தார். பின்னர் இவரது சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் இயக்கச்சி கோவில்வயலைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின் தந்தையான பொன்னையா நவரத்தினம் (வயது - 56) என்பவரது சடலமே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாள்களுக்கு முன் வேட்டைக்கு சென்ற இவர் வீடு திரும்பாத நிலையில் இன்று முற்பகல் சங்கத்தாவயல் சுடலையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார் என்றும், வீட்டுக்கு அவரை அழைத்துச் சென்றபோது அவரது உடல் சோர்வடைந்ததால் பளை மருத்துவமனைக்கு தாம் கொண்டு சென்றனர் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அவரை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது இடைவழியில் உயிரிழந்துவிட்டார் என்றும் உறவினர் தெரிவித்தனர்.சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
26 ஜூன் 2014
இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கு முன் பயிற்சியில் ஈடுபடும் பிக்குகள்!
அளுத்கமை மற்றும் பேருவளை பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு பௌத்த துறவிகளுக்கு இலங்கை இராணுவம் வேறு நாட்டு இராணுவ உதவியுடன் ஆயுத பயிற்சி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புகைப்படங்களும் காணப்படுகின்ற நிலையில் இதனை முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை என எமது புலனாய்வுச் செய்தியாளர் லசந்த கலபதி தெரிவித்தார்.
மேலும் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மிகவும் பாதுகாப்பாக பாதுகாக்கப்பட்ட இப் புகைப்படம் வெளிவந்தது தொடர்பில் பொது பலசேனா அதிர்ப்தி அடைந்துள்ளதாகவும் பாரிய இரகசியங்கள் இனி வரும் காலங்களில் வெளி வர வாய்ப்புள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன என அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நன்றி:ஜேவிபி நியூஸ்
நன்றி:ஜேவிபி நியூஸ்
தமிழர் நிலங்கள் சிங்கள மயமாக்கப்படுவதை நேரில் பாருங்கள்!
"தமிழர் பாரம்பரிய நிலங்கள் இராணுவத்தினரின் பங்களிப்புடன் எவ்வாறு சிங்கள மயமாக்கப்படுகின்றது என்பதை முல்லைத்தீவின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிடுமாறு சுவிற்சர்லாந்தின் தூதுவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்." - இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த சுவிற்சர்லாந்து தூதுவர் தோமஸ் லிப்ரென் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார் இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் தொடர்ந்து இராணுவம் இருப்பதால் பொதுமக்களின் வாழ்க்கைக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் இராணுவத்தினரால் பொருளாதார, சமூக விருத்திகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பவை தொடர்பிலும் முதலமைச்சரால் தூதுவருக்கு எடுத்துக் கூறப்பட்டது. அத்துடன் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் பிரதேசங்களில் 450 சிங்களக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டிருப்பது தொடர்பிலும் அவர்களால் இரணுவத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
25 ஜூன் 2014
அனந்தி,கஜதீபன்,சுகிர்தன் ஆகியோரது பாதுகாப்பு வாபஸ்!
வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்படுவதாக வடக்கு மாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ் அறிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை உறுப்பினர்களது மெய்ப்பாதுகாவலர்களை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று தெரிவித்து றொஹான் டயஸ் கடிதம் ஒன்றை வடக்கு மாகாண சபையின் மூன்று உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- தங்களது பாதுகாப்புக்காக மெய்ப் பாதுகாவல் உத்தியோகத்தர்களைப் பெற்றுத் தருவதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பந்தமான அமைச்சின் மூலம் அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது பதவி நிலைக்குரிய அதிகார எல்லையின் பிரகாரம் தங்களுக்கு நெருங்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்களை பெற்றுத்தர போதுமான அதிகாரம் எனக்கு இல்லை. மேற்குறிப்பிடப்பட்ட அனுமதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். இது சம்பந்தமாக தங்களுக்கு இடையூறுகள் ஏற்படின் அதற்காக எனது மனவருத்தத்தைத் தெரிவித்துகொள்கிறேன் - என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், ச.சுகிர்தன், அனந்தி சசிதரன் ஆகியோரது பொலிஸ் பாதுகாப்பே இவ்வாறு திரும்பப்பெறப்பட்டுள்ளன. இது குறித்து தமக்கு கடிதங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று சுகிர்தன், கஜதீபன் ஆகியோர் உறுதிப்படுத்தினர். எனினும் தனக்கு இதுவரை உத்தியோகபூர்வ அறிவித்தல் கிடைக்கப்பெறவில்லை என்றும்,ஆனால் விடயம் சரியானதுதான் என்றும் அனந்தி தெரிவித்தார் என தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் இளம்குடும்பஸ்தர் குத்திக்கொலை!
கனடா மொன்றியலில் நேற்றையதினம் மாலை தமிழர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி கொலை 7745 Mountain Sights எனும் இடத்தில் அவரது வீட்டிற்கு பக்கத்தில் நடைபெற்றதாக அறியப்படுகிறது. ஜெயராசன் மாணிக்கராஜா (40) எனும் இளம் குடும்பஸ்தரான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார் . அவரது நண்பர்களில் ஒருவராக உள்ள அவரது ஊரை சேர்ந்த நபரே இக் கொலையை செய்ததாக காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் ஒருவரைக் கைது செய்துள்ளார்கள் . ஜெயராசன் மாணிக்கராஜா அவர்கள் மொன்றியலில் 2000 ஆம் ஆண்டு குடியேறியதிலிருந்து ஒரு சிறந்த சமூக சேவையாளராகவும் ஆலயத்தொண்டு மற்றும் விளையாட்டுக்களில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார் என தெரிவிக்கப்படுகிறது.
24 ஜூன் 2014
சதாமுக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி சுட்டுக்கொலை!
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான் புரட்சிப் போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. சதாம் ஹுசைனின் ஆதரவாளர்களான சுனி முஸ்லிம்கள் அல் - குவைதா தீவிரவாதிகளுடன் இணைந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முக்கிய நகரங்கள் பல அவர்களிடம் வீழந்துள்ளன. தற்போது அவர்கள் பாக்தாத்தைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சதாம் ஹுசைனின் உதவியாளர் இசாத் இப்ராஹிம்-அல்-நூரி என்பவர் தனது 'பேஸ்புக்' மூலமாக வெளியிட்ட செய்தியில், "இரசாயன குண்டுகள் பயன்படுத்தியதற்காக கடந்த 2006 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான், ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளால் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது". எனத் தெரிவித்திருந்தார். எனினும் இத்தகவல்கள் உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. கொல்லப்பட்ட நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான், குர்தீஸ் இனத்தைச் சேர்ந்தவர். தீர்ப்பு அளித்த அடுத்த ஆண்டே - 2007 இல் - தனதும், தனது குடும்பத்தினரதும் உயிருக்கு ஆபத்து நேரலாம் எனக் குறிப்பிட்டு அதனால் தங்களுக்கு அடைக்கலம் தருமாறு பிரிட்டன் அரசிடம் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஜோர்தான் நாட்டு எம்.பியான கலீல் அட்டியே தனது 'பேஸ்புக்'கில் எழுதியுள்ள கருத்துக்களின்படி புரட்சியாளர்களை எல்லாம் கைது செய்த காரணத்தாலும் சதாமுக்கு மரண தண்டனை விதித்தமையால் பதிலடியாகயும் இச்சம்பவம் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்றார். மேலும் ரவூப் அப்துல் ரஹ்மான், நடன கோலத்தில் மாறுவேடமிட்டு பாக்தாத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.23 ஜூன் 2014
இசைப்பிரியாவின் தாயார் உலகத் தமிழர்களுக்கு விடுத்த வேண்டுகோள்!
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த ஊடகப் போராளி இசைப்பிரியாவையும் அவர்போன்ற இசைப்பிரியாக்களையும் தத்தமது நலன்களுக்காக வியாபாரமாக்காதீர்கள் என சோபனா என்ற இசைப்பிரியாவின் தாயார் வேதரஞ்சனி குளோபல் தமிழ்ச் செய்திகள் ஊடாக உருக்கமான வேண்டுகோளை உலகத் தமிழர்களை நோக்கி முன்வைத்துள்ளார்.அவரின் வேண்டுகோளை நாமும் புளியங்கூடல்.கொம் ஊடாக உலகத் தமிழர்களிடம் கொண்டு வருகின்றோம்.(நன்றி:குளோபல் தமிழ் செய்தி)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)