பக்கங்கள்

09 ஜூலை 2014

சிறீலங்காவுக்கு ரோந்துப்படகுகளை கையளித்தார் அவுஸ்த்ரேலிய அமைச்சர்!

ஆஸ்திரேலியாவின் குடிவரவு குடியகல்வுக்கான அமைச்சர் ஸ்காட் மாரிசன் இலங்கைக்கு வந்து ஆஸ்திரேலிய அரசின் சார்பில் இரண்டு கடற்படை ரோந்துப்படகுகளை இலங்கை அரசுக்கு கையளித்திருக்கிறார்.இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரி படகில் வருபவர்களை ஆஸ்திரேலிய அரசு சர்வதேச சட்டங்களை மீறி இலங்கையிடமே திரும்ப கையளிப்பதாக ஐநா மனித உரிமை கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆஸ்திரேலிய அரசை குற்றம் சுமத்திக்கொண்டிருக்கின்றன.இந்த பின்னணியில் ஆஸ்திரேலிய அரசின் குடிவரவு குடியகல்வு அமைச்சர் இலங்கைக்கு வந்திருப்பதும், ஆஸ்திரேலிய அரசின் சார்பில் இரண்டு கடல்ரோந்துக்கான நவீன படகுகளை இலங்கை அரசிடம் கையளித்திருப்பதும் சர்ச்சையை தோற்றுவிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.ஆஸ்திரேலிய அரசின் சார்பில் அளிக்கப்பட்ட இந்த படகுகளை இலங்கை அரசுக்கு கையளிக்கும் நிகழ்வு கொழும்பு துறைமுகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் இலங்கை சார்பில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும், அவரது சகோதரரும் பாதுகாப்புத்துறை செயலருமான கோதாபய ராஜபக்ஷவும், கடற்படை உயர் அதிகாரிகளும் ஆஸ்திரேலிய அமைச்சர் ஸ்காட் மோரிசன்னும் கலந்துகொண்டனர். இந்த இரண்டு படகுகளுக்கும் இலங்கை அரசு ரத்னதீப, நிஹிகத என்று பெயர் சூட்டியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.