பக்கங்கள்

25 ஜூலை 2014

முன்னாள் பெண் போராளிகள் நடத்தும் அரச சார்பற்ற நிறுவனம்!

முன்னாள் பெண் போராளிகள் அரச சார்பற்ற நிறுவனமொன்றை நடத்தி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த அரச சார்பற்ற நிறுவனத்திற்கு கொழும்பிலும், கிளிநொச்சியிலும் அலுவலகங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலி ஆதரவாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த அரச சார்பற்ற நிறுவனம் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கக் கூடிய பிழையான தகவல்களை இந்த அரச சார்பற்ற நிறுவனம் திரட்டி வருவதாகக் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் கிளிநொச்சி வேராவில் இந்து வித்தியாலயத்தில் இவ்வாறு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது. இந்த அரச சார்பற்ற நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் முன்னாள் புலிப் போராளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைம்பெண்கள், ஊனமுற்றவர்கள், விவாகரத்தானவர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பற்றிய விபரங்களை திரட்டும் போர்வையில் இந்த அரச சார்பற்ற நிறுவனம் இயங்கி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த நிறுவனம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.