பக்கங்கள்

19 ஜூலை 2014

‘தலைவர்-தம்பி-நான்’ புத்தக வெளியீடு நாளை!

கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் எழுதிய ‘தலைவர்-தம்பி-நான்’ புத்தக வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வடபழனி ஆர்கேஜி அரங்கில் மாலை
வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது . தலைவர் இந்தியாவில் இருந்த காலகட்டங்களில் நடைபெற்ற சம்பவங்களை பதிவாக்கியுள்ளார். 1984ல் மட்டக்களப்பு சிறையை உடைத்து மீட்கப்பட்ட தோழர்கள் நிர்மலா நித்தியனந்தன் மற்றும் அவரது கணவர், பேபி உள்ளிட்ட பலர் அய்யா.புலமைபித்தன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.இவர்களை அழைத்துவந்த தம்பி அவரது அண்ணியிடம் (புலமைப்பித்தனின் மனைவி) “ எங்களுக்கு சிற்றுண்டி தயார் செய்யுங்கள் “ என்றார். ரகு அண்ணிக்கு உதவி செய்தார். பின்னர் தம்பி “அண்ணன், நீங்க உமர்முக்தார் படம் பார்த்திருக்கிறீர்களா?” என்றார். ... (படம் பார்த்தபின்) எல்லோருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. வயிறு நிரம்ப உணவருந்தினார்கள். கொஞ்ச நேரம் அளவளாவி மகிழ்ந்தோம். என் பிள்ளைகளை அருகேஅமரவைத்து தம்பி பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே தம்பி திடீரென பால்கனிக்கு போனார். “ரகு.....” என்று சத்தம் போட்டு அழைத்தார். ’அண்ணே , நான் வெளிக்கிடுறேன்’ என்று சொல்லிவிட்டு அவசரமாக புறப்பட்டார். நான் ‘ தம்பி....’ என்றேன். அவர்,” அண்ணே மொசாத்,.... மொசாத்” என்று சொல்லியபடியே படிக்கட்டுகளில் எட்டிக்குதித்து ஜீப்பில் ஏறிப் புறப்பட்டார். தம்பியை கொல்வதற்கு இஸ்ரேல் மொசாத் படையை ஏவிவிட்டிருக்கிறார்கள்.எங்கள் வீட்டில் இருப்பதை மோப்பம் பிடித்து ஏறத்தாழ முற்றுகையிட்டது மாதிரி வந்திருக்கிறார்கள். அதைத் தம்பி மோப்பம் பிடித்து உடனே புறப்பட்டார்.இன்னும் பத்து-பதினைந்து நிமிடம் இங்கே அவர் தங்கி இருந்திருந்தால் எங்கள் வீடே ரணகளமாக ஆகிப்போய் இருக்கலாம்....இதைப்பற்றி விவரங்களை நாளை அவரிடமே நேரில் கேட்கலாம் என்று புத்தகம் தொடர்பில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.