ஜேர்மனி ஹம் அம்மன் கோவில் குருக்களின் வீட்டில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஐரோப்பாவில் மிகவும் பிரபல்யமான இந்து ஆலயமான ஹம் அம்மன் கோவில் பூசகர் சிவசிறி பாஸ்கரகுருக்களின் வீட்டில் ஐந்து பேர் கொண்ட குழு புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் பொருள்களையும் சேதப்படுத்தி பணம் நகை மற்றும் பெறுமதியான பொருள்களை கொள்ளையடித்து சென்றுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 11மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
ஆலய விடுதியில் புகுந்த இந்நபர்கள் மிளகாய் தூளை அங்கிருந்தவர்களின் முகத்தில் வீசி தாக்குதல் நடத்தி பணம் மற்றும் நகைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு பணித்துள்ளனர். இச்சம்பவம் நடைபெற்ற போது குருக்களின் விடுதியில் 9பேர் தங்கியிருந்துள்ளனர்.
ஒரு இலட்சம் ஈரோ பெறுமதியான நகைள், பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு ஹம் ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் பின்னர் தனியான காணியில் மூர்த்தி தலம் தீர்த்தம் ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாக நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. ஐரோப்பாவில் மிகப்பெரிய இந்து கோவிலாக இது விளங்குகிறது.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
12 நவம்பர் 2012
ஹம் அம்மன் கோவில் பூசகரின் வீட்டில் கொள்ளை!
ஜேர்மனி ஹம் அம்மன் கோவில் குருக்களின் வீட்டில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஐரோப்பாவில் மிகவும் பிரபல்யமான இந்து ஆலயமான ஹம் அம்மன் கோவில் பூசகர் சிவசிறி பாஸ்கரகுருக்களின் வீட்டில் ஐந்து பேர் கொண்ட குழு புகுந்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் பொருள்களையும் சேதப்படுத்தி பணம் நகை மற்றும் பெறுமதியான பொருள்களை கொள்ளையடித்து சென்றுள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு 11மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
ஆலய விடுதியில் புகுந்த இந்நபர்கள் மிளகாய் தூளை அங்கிருந்தவர்களின் முகத்தில் வீசி தாக்குதல் நடத்தி பணம் மற்றும் நகைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு பணித்துள்ளனர். இச்சம்பவம் நடைபெற்ற போது குருக்களின் விடுதியில் 9பேர் தங்கியிருந்துள்ளனர்.
ஒரு இலட்சம் ஈரோ பெறுமதியான நகைள், பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
2002ஆம் ஆண்டு ஹம் ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் பின்னர் தனியான காணியில் மூர்த்தி தலம் தீர்த்தம் ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாக நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. ஐரோப்பாவில் மிகப்பெரிய இந்து கோவிலாக இது விளங்குகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.