பக்கங்கள்

02 மே 2011

மகிந்தவை கூண்டில் ஏற்றிய நோர்வே வாழ் தமிழர்கள்.

நோர்வே தலைநகர் ஓசிலோவில், நடந்த மே தின ஊர்வலத்தில் வழமைக்கு மாறாக இம் முறை பல தமிழர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் ரஜபக்ஷவின் உருவச்சிலையை கூண்டில் ஏற்றி அதனைக் கட்டி இழுத்துச் சென்றுள்ளனர். மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல நோர்வே நாட்டவர்கள் இதனைக் கண்டு ஆச்சரியப்பட்டதோடு, இலங்கை நிலவரத்தைக் கேட்டும் அறிந்துள்ளனர். பலர் இதனைப் புகைப்படம் எடுத்ததோடு, நோர்வே நாட்டில் உள்ள பல ஊடகவியலாளர்களும் இதனைப் புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெருந்திரளாக நோர்வே மக்கள் கலந்துகொண்டு மே தின ஊர்வலத்தில் ரஜபக்ஷவின் இவ்வுருவ பொம்மை பலரது கவனத்தை ஈர்ந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொண்ற ராஜபக்ஷ ஒரு யுத்தக்குற்ற கைதி, அவரை கூண்டில் ஏற்றவேண்டும் என்பதில் நோர்வேத் தமிழர்கள் உறுதியோடு இருப்பது புலனாகியுள்ளதோடு, இந் நடவடிக்கையால் இலங்கை அரசு பெரும் விசனமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.