பக்கங்கள்

25 ஜூலை 2010

ஜெனீவா நோக்கிய நடை பயணத்திற்கு ஆதரவு கோருகிறார் சிவந்தன்.

இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் சுதந்திரமான, நீதியான போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், முட்கம்பி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதி கேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள கால்நடைப் பயணம் 42 மைல்களை எட்டியுள்ளது.


இப்போது தொடர்ச்சியாக ஜெனிவா நோக்கி நடந்து கொண்டிருக்கும் சிவந்தன் அவர்களோடு தற்போதைய நிலை சம்பந்தமான நேர்காணலிலிருந்து...


அவருடைய நடைப் பயணம் தொடர்பாக பதிலளிக்கையில் ஏராளமான வெள்ளையின மக்கள் அவரின் பயணம் வெற்றி பெற வாழ்த்துகின்றனர் என்றும் பல்வேறு வழிகளிலும் உதவிகள் செய்கின்றனர் என்றும் கூறினார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களிடமிருந்து உரிய ஆதரவு அவருக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்று கவலையை தெரிவித்த சிவந்தன் தமிழ் ஊடகங்களும் இந்த விடயத்தை உலகறியச் செய்ய பாடுபட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 6 ஆம் திகதி ஜெனிவாவை வந்தடைந்து விடுவார் என்றும் அப்போது அங்கு புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் ஐ.நா முன்றலில் அணி திரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.