பக்கங்கள்

15 ஜூலை 2010

புலிகளின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினர் நகுலன் இந்தியா சென்றுள்ளார்.


முன் நாள் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினரும், ராமுடன் சேர்ந்து இலங்கை புலனாய்வுத்துறைக்காக இயங்கிவரும் நகுலன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியா சென்றுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. சென்னை விமானநிலையத்தில் இருந்து இவர் புறப்பட்டவேளை அவரை நேரடியாகப் பார்த்த சிலர் கொடுத்த தகவல்களே இவை. இலங்கை புலனாய்வுப் பிரிவு நகுலனை ஏன் சென்னைக்கு அனுப்பிவைத்துள்ளது என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை.இருப்பினும் இறுதி யுத்தத்திலும், அதன் பின்னரும் புலிகளின் பல உயர்மட்ட உறுப்பினர்கள் இலங்கையை விட்டு தப்பிச் சென்றனர். அவர்கள் சிலவேளை இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களை இனம் கண்டு கைதுசெய்ய, அல்லது அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவதற்காக நகுலன் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது இவ்வாறிருக்க, இந்தியாவில் உள்ள தமிழ் இளைஞர்கள் சிலரிடம் பணத்தைப் பெற்று, அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு கப்பலில் அனுப்புவதாகக் கூறி கும்பல் ஒன்று, இளைஞர்களை ஒரு சிறிய படகில் ஏற்றி இலங்கை திருகோணமலைக்கு அனுப்பி வைத்துள்ளதாம்.தாம் அவுஸ்திரேலியா செல்கிறோம் என நினைத்துக்கொண்டிருந்த இளைஞர்களுக்கு, அதிர்ச்சிதான் மிச்சம். அவர்கள் அனைவரும் இலங்கை இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. இதனை பாப்பாவின் உதவியாளர்கள் செய்துவருவதாக சென்னை தகவல்கள் கூறுகின்றன. தமிழ் நாட்டில் தற்போது இலங்கை புலனாய்வுத்துறையினர், கணிசமான அளவு ஊடுருவியுள்ளனர். பணத்தையும் பெற்றுக்கொண்டு, இளைஞர்களை இலங்கை இராணுவத்தின் வலையில் சிக்கவைக்கும் பல நடவடிக்கைகள் திட்டமிட்டபடி கபில ஹந்தவிதாரனவின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழர்கள் விழிப்போடு இருப்பது நல்லது.
செய்தி:அதிர்வு.கொம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.