பக்கங்கள்

23 ஜூலை 2010

அசினின் படங்களுக்கு தடை விதிக்க மீனவர் அமைப்புக்கள் கோரிக்கை.


தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்க நிறுவனத்தலைவர் கபடிமாறன், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் மகேஷ், தென்னிந்திய மீனவர் பேரவைத்தலைவர் ஜெயபாலன் ஆகியோர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது, ‘’தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டித்து தமிழக மீனவர்களுக்காக பேசிய ஒரு காரணத்திற்காக கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
அவர்கள் மேலும், ‘’மீனவர் செல்லப்பன் கொலையை நியாயப்படுத்திய தென்னிந்திய கடலோர காவல்படை கமாண்டர் ராஜசேகரை கண்டிக்கிறோம்.
தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் இந்திய கடற்படையை கண்டிக்கிறோம்.
மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதை கண்டித்து இலங்கை திரைப்பட விழாவிற்கு தடை விதித்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ராஜபக்சே அரசின் விளம்பர தூதர்களாக செயல்படும் நடிகை அசின், விவேக் ஓபராய் மற்றும் இந்திய படவிழாவில் பங்கேற்ற திரைப்படங்களுக்கு திரைப்பட சங்கங்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.