பக்கங்கள்

24 ஜூலை 2010

யாழ்,மாவட்ட பொது சுகாதார வைத்திய பிரிவுகளில் இரகசிய குடும்பக்கட்டுப்பாடு!



யாழ்.மாவட்டத்தில் உள்ள சகல பொதுச்சுகாதார வைத்திய பிரிவுகளிலும் சுமார் 40 பேருக்கு கட்டாய குடும்பக்கட்டுப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் மிகவும் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கென தென்னிலங்கையில் இருந்து வைத்தியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுபோன்ற சம்பவங்கள் முன்னர் மலையகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மிகவும் இரகசியமான முறையில் யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்தத் தகவல்கள் மாவட்டத்தின் முக்கியமான நிலைகளில் உள்ள வைத்தியர்களினாலேயே கசியவிடப்பட்டுள்ளது. எனினும் உத்தியோகபூர்வமான கடிதங்கள் எவையும் கிடைக்கப் பெறவில்லை என அவர்கள் பூசிமெழுகிக் கொள்கின்றனர்.
ஏற்கனவே யாழ்.மாவட்டத்தில் பிறப்பு விகிதம் குறைவடைந்துள்ளது. வருடத்திற்கு 7 தொடக்கம் 8 ஆயிரம் வரையே உள்ளது.
இந்நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் இனத்தின் பெரும்பான்மையை பாதிக்கும் ஒரு செயற்பாடாக அமையும் என மாவட்டத்தின் சமூக ஆர்வலர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.