பக்கங்கள்

15 மே 2010

ஈழம் காணும் எங்கள் தாகம் தீராது!பெர்லினில் உறுதி மொழி.


உயிரோடு துடித்த எம் உறவுகளை மண்ணில் போட்டாலும், அவர்களுடைய உடல்களை எரித்து கடலில் கரைத்தாலும், எஞ்சியிருப்பவர்களை முட்கம்பி வேலிக்குள் முடக்கிப்போட்டாலும், விடுதலை காணும் எங்கள் வேகம் குன்றாது. ஈழம் காணும் எங்கள் தாகம் தீராது என்று ஈழத்தமிழர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இலங்கைப் போரின் கடைசிப் கட்டத்தில் முள்ளி வாய்க்கால் பகுதியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் முதலாமாண்டு நினைவுநாள் நிகழ்ச்சிகள் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நடத்தப்பட்டது.
அங்குள்ள தேவாலயம் ஒன்றில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தமிழர்கள் மட்டுமல்லாமல் ஏராளமான ஜெர்மனிய மக்களும் கலந்து கொண்டனர்.
தீபம் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டது. இலங்கையில் போர் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இன்னும் இலங்கை இனவெறி அரசால் எந்தவொரு அரசியல் தீர்வும் முன்வைக்கப்படவில்லை என்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்கள் குற்றம் சாட்டினார்கள்.
உயிரோடு துடித்த எம் உறவுகளை மண்ணில் போட்டாலும், அவர்களுடைய உடல்களை எரித்து கடலில் கரைத்தாலும், எஞ்சியிருப்பவர்களை முட்கம்பி வேலிக்குள் முடக்கிப்போட்டாலும்ட, விடுதலை காணும் எங்கள் வேகம் குன்றாது. ஈழம் காணும் எங்கள் தாகம் தீராது என்று உறுதிமொழியையும் எடுத்துக்கொண்டார்கள்.
வரும் 18ஆம் தேதி பெர்லினில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு சர்வதேச மனித உரிமை அமைப்புடன் சேர்ந்து கண்டன போராட்டத்தையும் நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.