பிரான்ஸின் தென்பகுதி நகரான நீஸ் நகரில், பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களின் போது குழுமியிருந்த கூட்டத்தினரின் மீது லாரி ஒன்று தாறு மாறாக மோதித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கூறியுள்ளார்.
மேலும், 18 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து இந்தத் தாக்குதலை "பயங்கரவாதத் தாக்குதல்" என வர்ணித்துள்ளார்.
"ப்ரோமனேட் தேஸாங்கிலே" என்றழைக்கப்படும் நிகழ்வில் வாண வேடிக்கைகளுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தது.
பிரான்ஸின் தேசிய தினமான பாஸ்டில் தினத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது.
லாரியின் டிரைவர் சுமார் 2 கிமீ தூரம் பெரும் கூட்டத்துக்குள் லாரியை ஓட்டியதாக அரச வழக்குரைஞர் ஷான் மிஷேல் ப்ரெத்ரை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று கூறியது.
லாரி ஓட்டுநர் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். இத்தாக்குதலுக்கு இது வரை எந்தக்குழுவும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.
பிரான்ஸில் ஏற்கனவே அமலில் உள்ள அவசர நிலை மேலும் மூன்று மாத காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போலிசார் இதை விசாரிப்பார்கள் என்று அரசவழக்கறிஞர்கள் கூறினர்.இந்தியா பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் நீஸ் தாக்குதல் குறித்து தனது கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்.நான் என்ற ஆணவம் அதர்மமாக விஸ்வரூபமெடுத்தாலும்-ஒருநாள் தர்மத்தின் காலடியில் விழும்.
15 ஜூலை 2016
பிரான்சில் இடம்பெற்ற தாக்குதலில் 84பேர் பலி!
பிரான்ஸின் தென்பகுதி நகரான நீஸ் நகரில், பாஸ்டில் தினக் கொண்டாட்டங்களின் போது குழுமியிருந்த கூட்டத்தினரின் மீது லாரி ஒன்று தாறு மாறாக மோதித் தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 84 பேர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் கூறியுள்ளார்.
மேலும், 18 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
பிரெஞ்சு அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து இந்தத் தாக்குதலை "பயங்கரவாதத் தாக்குதல்" என வர்ணித்துள்ளார்.
"ப்ரோமனேட் தேஸாங்கிலே" என்றழைக்கப்படும் நிகழ்வில் வாண வேடிக்கைகளுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தது.
பிரான்ஸின் தேசிய தினமான பாஸ்டில் தினத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது.
லாரியின் டிரைவர் சுமார் 2 கிமீ தூரம் பெரும் கூட்டத்துக்குள் லாரியை ஓட்டியதாக அரச வழக்குரைஞர் ஷான் மிஷேல் ப்ரெத்ரை மேற்கோள் காட்டி செய்தி நிறுவனம் ஒன்று கூறியது.
லாரி ஓட்டுநர் பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டார். இத்தாக்குதலுக்கு இது வரை எந்தக்குழுவும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.
பிரான்ஸில் ஏற்கனவே அமலில் உள்ள அவசர நிலை மேலும் மூன்று மாத காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போலிசார் இதை விசாரிப்பார்கள் என்று அரசவழக்கறிஞர்கள் கூறினர்.இந்தியா பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் நீஸ் தாக்குதல் குறித்து தனது கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்.13 ஜூலை 2016
இலங்கையின் பிரபல கலைஞர் மரிக்கார் எஸ்.ராமதாஸ் காலமானார்!
![]() |
| மரிக்கார் எஸ்.ராமதாஸ் |
12 ஜூலை 2016
சிறுமியின் உடல் பனையோலையால் மூடப்பட்டிருந்தது!
கிளிவெட்டியில் இருந்து குமாரபுரத்துக்கு சுட்டவாறு சென்ற படையினர் எனது கடைக்குள் தஞ்சம் புகுந்திருந்தவர்களை சுட்டனர். இதில் பலர் இறக்க, பலர் காயமடைந்தனர். அத்துடன் கடைக்குள் இருந்த 16 வயது பெண்ணை இழுத்து சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தினர். மறுநாள் அவரின் உடலை பனையோலையால் மூடப்பட்ட நிலையில் மீட்டோம். இவ்வாறு கிளிவெட்டிப் படுகொலை குறித்து சாட்சியமளிக்கப்பட்டது. திருகோணமலை, கிளிவெட்டியில் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணை, 10ஆவது நாளாக நேற்று திங்கட்கிழமை அநுராதபுரம் மேல் நீதிமன்றில் இடம்பெற்றது.இதன்போது சாட்சியமளித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து சாட்சியளிக்கையில் தெரிவித்தவை வருமாறு: "நான், எமது கிராமத்தில், கிளிவெட்டி - மூதூர் பிரதான வீதியில் கடை ஒன்றை நடத்தி வந்தேன். சம்பவ நாளன்று வீதியில் படையினர் சுட்டுக் கொண்டு வந்தனர். இதனால் அச்சமடைந்த சுமார் 20 இற்கும் மேற்பட்டவர்கள் எனது கடைக்குள் தஞ்சம் புகுந்தனர். அச்சமடைந்திருந்த நாம் கடையை பூட்டினோம். இதன்போது கபில என்ற சிப்பாய் கதவு ஓட்டைக்குள்ளால் முதலில் சுட்டார். பின்னர் கதவை உடைத்து கொண்டு வந்து சுட்டார். அதன் பின்னரும் சுட்டார். இதன்போது பலர் இறந்தனர். கடைக்குள் 5 பேர் வரை இறந்தனர்.இந்தச் சம்பவத்தில் சீரழிக்கப்பட்ட 16 வயதுப் பெண் பிள்ளையும், எனது கடைக்குள் ஒளிந்திருந்தார். அவ்வேளை, இறந்தவர்களைத் தவிர நாங்கள் பலர் காயம்பட்டிருந்தோம். அந்நிலையிலேயே கடையை விட்டு வெளியேறினோம். ஆனால் அந்தப் பெண் பிள்ளை, கடைக்குள்ளேயே இருந்துள்ளார். அவரைக்கண்ட படையினர், அருகிலிருந்த பாழடைந்த பால்சேகரிப்பு நிலையக் கட்டடத்துக்குள் கொண்டு சென்று வன்புணர்வு செய்தனர். அது எமக்கு உடன் தெரியாது, மறுநாள் காலை வந்து பார்த்தபோது அந்தப் பெண் பிள்ளையின் உடல், பனையோலையால் மூடப்பட்டிருந்தது. இறந்தவர்களின் உடல்களும் பலரால், வீடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தன' எனத் தெரிவித்தார்.நேற்றைய விசாரணைகளின் போது அன்றைய சூழலில் கிராமத்தில் பணியாற்றிய கிராம சேவகர் சுப்பிரமணியம் இராசலிங்கமும், சாட்சியமளித்தார். 'குறித்த கிராமத்தில் 74 குடும்பங்கள் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும், தற்காலிகக் கொட்டில்களிலேயே வசித்தனர். முகாமில் இருந்து 600 மீற்றர் தூரத்திலேயே கிராமம் அமைந்துள்ளது' என அவர் விவரித்தார். மாரிமுத்து துரைராஜா (வயது 63) என்பவர் சாட்சிமளிக்கையில், 'நான், கிளிவெட்டியில் தேநீர்க்கடை வைத்திருந்தேன். அன்றைய தினம், கிளிவெட்டி முகாமிலிருந்த படையினர்10 ஜூலை 2016
பெண்களிடம் பாலியல் கையூட்டு கேட்டதாக புகார்!
இலங்கையில் காணமால் போயுள்ளவர்களின் உறவினர்களான பெண்களிடம் கையூட்டு மற்றும் பாலியல் கையூட்டு கோரப்பட்டுள்ளதாக பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பைச் சேர்ந்த ஸ்ரீன் ஸரூர் என்ற பெண்மணி தெரிவித்துள்ளார்.மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறும் விடயத்தில் காணமால் போயுள்ளவர்கள் பற்றி நம்பகமான விசாரணை நடத்துவதற்காக, அரசாங்கத்தினால் புதிதாக அமைக்கப்படவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம் குறித்து பொது அமைப்புக்களிடம் கருத்துக்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
இதற்காக நடத்தப்பட்ட அமர்வொன்றில் காணாமல் போயுள்ள தமது உறவுகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளின் போது, தங்களிடம் கையூட்டாக பணம் கோரப்பட்டதாகவும், பணம் இல்லாத நிலையில் பாலியல் கையூட்டு கோரப்பட்டதாகவும் காணாமால் போயுள்ளவர்களின் உறவினர்களான பெண்கள் தம்மிடம் தெரிவித்துள்ளதாக ஸ்றீன் ஸரூர் கூறியுள்ளார்.இத்தகைய சுமார் 300 பெண்களிடம், அவர்கள், காணாமல் போயுள்ள தமது உறவுகளைத் தேடிக் கண்டறிய முற்பட்டபோது எதிர்நோக்கிய சவால்கள் குறித்த தகவல்களைத் தங்களிடம் கூறியதாகவும், அதில் ஒரு விடயமாக இவ்வாறு கையூட்டு கோரப்பட்டமை தொடர்பான விவரங்களும் தங்களிடம் தெரிவிக்கப்பட்டதாக ஸ்ரீன் ஸரூர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
அரச படையினரின் புலானய்வு பிரிவினர் மற்றும் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகள் மீதும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றன என்றார் ஸரூர்.
அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம் இவ்வாறு பெறப்பட்ட கையூட்டு பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன், பாலியல் கையூட்டு கோரிய அதிகாரிகள் அரசியல்வாதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தமது விண்ணப்பத்தில் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பினர் கோரியிருக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சம் மற்றும் சொந்த பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறையினரிடமோ அல்லது மனித உரிமைகள் அமைப்புக்களிடமோ முறையிடவில்லை.
இந்தத் தகவலைப் பெற்றுக்கொண்ட பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பானது, இது குறித்து அரச உயர் மட்டத்தின் கவனத்திற்கு ஏற்கனவே கொண்டு வந்துள்ளது என அந்த அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீன் ஸரூர் கூறினார்.08 ஜூலை 2016
டல்லஸ் துப்பாக்கிதாரி "வெள்ளை அதிகாரிகளை கொல்ல விரும்பினார்"
அமெரிக்க நகரான டல்லஸில் ஐந்து காவல் அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கருப்பின ஆண்கள் காவல்துறை அதிகாரிகளால் தொடர்ச்சியாக கொல்லப்படுவதை எதிர்க்கும் அமைதி ஊர்வலத்தின் முடிவில் இது நடந்தது.
இத்தாக்குதலை நான்கு பேர் ஒருங்கிணைத்ததாக காவல்துறை கருதுகிறது. இரண்டுபேர் துப்பாக்கியால் சுட்டனர். மற்ற இருவர் உயரமான இடங்களில் இருந்து தாக்குதல் தொடுத்தனர்.
இந்த சம்பவத்தில் கைதான சந்தேக நபர் ஒருவர், வெள்ளை இனத்தவரை, குறிப்பாக காவல்துறை அதிகாரிகளை கொல்ல விரும்பியதை தம்மிடம் ஒப்புக்கொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் கொடூரமானது, திட்டமிடப்பட்டது, அறுவெறுக்கத்தக்கது என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.நன்றி:பிபிசி தமிழ்
30 ஜூன் 2016
மல்லாவியிலும் ஆசிரியர் அராஜகம்!
முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விகற்று வருகின்ற மாணவியை அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததாக குறித்த மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மேற்படி மாணவியை அச்சுறுத்தி கடந்த 4 மாதங்களாக ஆசிரியர் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கி வந்துள்ளார். இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (26) மாணவிக்கு துன்புறுத்தல் கொடுத்த நிலையில், மாணவி எழுத்து மூலம் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஊடாக அதிபரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
அதிபர் இந்த விடயத்தை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்ததையடுத்து, வலயக் கல்விப் பணிமனையால் புதன்கிழமை (29) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஆசிரியரை பாடசாலை வளாகத்தில் இயங்குகின்ற கோட்டக்கல்வி அலுவலகத்தில் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளரிடம் தொடர் கொண்டு இவ்விடயம் தொடர்பாக கேட்டபோது,‘பாதிக்கப்பட்ட குறித்த மாணவியால் பாடசாலை அதிபருக்கு எழுத்து மூலமாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து, எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்திய நிலையில் விசாரணைக்குழு ஒன்றினை அமைத்து உடனடியாக விசாரணை செய்ய பணிக்கப்பட்டிருந்தது. அதன்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு குறித்த ஆசிரியர் தற்காலிகமாக துணுக்காய் கோட்டக்கல்வி அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளார்’ என்றார்.கடந்த வாரங்களில் யாழ்ப்பாணத்தின் இரண்டு பாடசாலைகளில் மாணவிகள், அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களால் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த நிலையில், தற்போது, முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளது.நீதிபதி இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இசம்பவம் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.27 ஜூன் 2016
மண்கும்பானில் கிணற்றில் வீழ்ந்து யுவதி மரணம்!
வேலணை 5ம் வட்டாரம், மண்கும்பான் பகுதியில் கிணற்றில் வீழ்ந்த வாளியை எடுக்க முற்பட்ட இளம் பெண் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸாரை மேற்கோள் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.இன்று நடந்த இச்சம்பவத்தில் சோமசேகரம் கோசலா (வயது 20) என்ற இளம் பெண்ணே நீரில் மூழ்கி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து உயிரிழந்தவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.மரண விசாரணைகளை தீவகத்துக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.தியாகராஜா மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.24 ஜூன் 2016
புளியங்கூடல் அம்பாள் ஆலய இரதோற்சவம் நாளை!
புளியங்கூடல் செருத்தனைப்பதியில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ இராஜ மகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 10ம் திகதி ஆரம்பித்து பக்தர்கள் புடைசூழ வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.நாளை(25.06.2016)சனிக்கிழமை மகாமாரி அம்பாள் இரதத்தில் அமர்ந்து வீதியுலா வரும் பெருவிழா காலை 8:00மணிக்கு ஆரம்பமாகி பக்தர்களின் ஆனந்தப் பெருவெள்ளத்தினூடே வெகு சிறப்பாக நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.அடியவர்தம் வேண்டுதல்களை அன்னை நிறைவேற்றிக் கொடுப்பதால் பல பகுதிகளில் இருந்தும் அடியவர்கள் வருகை தந்து அன்னையின் தேர்த்திருவிழாவிலே கலந்து தாயவளின் ஆசிகளை பெற்றுய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
22 ஜூன் 2016
ஆசிரியர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் உதவாக்கரைகள்!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த ஆசிரியர் தொடர்பில் வலையக் கல்விப்பணிமனை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் ஏழாம் வகுப்பில் கற்று வரும் மாணவிகள் சிலருடன் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டுள்ளார்.இந்தச்சம்பவம் தொடர்பாக அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரும் மாணவிகளின் பெற்றோரும் இணைந்து அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்த போதும்,அதிபர் இவ்விடயத்தை மறைக்க முயன்றதாக தெரியவருகிறது.இதையடுத்து அதிபருக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு தோன்றியுள்ளது.இதேவேளை இச்சம்பவம் குறித்து கல்விப்பணிப்பாளரும் நீதிமன்றமும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்களும் பெற்றோர்களும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அண்மையில் வரணிப்பகுதியிலும் இத்தகையதொரு சம்பவம் இடம்பெற்றதும் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் அதிபர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.புலிகளின் ஆளுமை இருந்த காலங்களில் தமிழர் பகுதிகளில் நீதி நிர்வாகம் சிறந்த முறையில் விளங்கியது.பெண்கள் இரவு நேரங்களிலும் தன்னந்தனியாக நடமாட முடிந்தது.இன்று நல்லாட்சி என்ற பெயரில் கலாச்சார சீரழிவுகளே முடுக்கி விடப்பட்டுள்ளது.தமிழின அழிப்பும்,சிங்களக் குடியேற்றமும் தொடர்கதையாக உள்ளது.
19 ஜூன் 2016
நயினாதீவு கடலில் இளைஞர் மூவர் பலி!
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழாவுக்கு சென்ற இளைஞர் குழுவொன்று கடலில் நீராடிய போது, அதில் மூவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். நயினாதீவு தேர்த்திருவிழாவில் கலந்துகொள்ள சென்ற எட்டுப் பேர் கொண்ட இளைஞர் குழு அங்கு கடலில் நீராடியுள்ளது.அந்த எட்டுப் பேரும் நீர்ச்சுழியில் அகப்படுள்ளனர். இதில் ஐவர் காப்பாற்றப்பட்ட போதும் ஏனைய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்த மூவரும் யாழ்ப்பாணம், கோண்டாவில் நாராயணன் கோயிலடியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.17 ஜூன் 2016
இலங்கை அகதிகள் படகில் பெண்கள் மீது துப்பாக்கிச்சூடு!
இலங்கை அகதிகள் படகில் இருந்து இந்தோனேசிய கரையில் இறங்கிய பெண்களை எச்சரிக்கும் வகையில் அந்நாட்டு பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்தியாவில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கிச் சென்ற இலங்கைத் தமிழ் அகதிகள் படகு இந்தோனேசியாவின் அச்சே பிராந்திய கடற்கரையில் கடந்த சனிக்கிழமை கரையொதுங்கியது.
படகிலுள்ள அகதிகளை தரையிறங்க விடாமல் அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். இந்நிலையில், படகில் இருந்த சிறுவன் ஒருவனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, தம்மை தரையிறங்க அனுமதிக்குமாறும் அகதிகள்கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், அதற்கு அதிகாரிகள் மறுப்பு வெளியிட்டுள்ள நிலையில், நேற்று படகில் இருந்த ஐந்து பெண்கள் கடற்கரையில் குதித்தனர். இதனால் அவர்களுக்கு சிறியளவில் காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, அகதிகள் தரையிறங்குவதை தடுக்கும் நோக்கில் வானத்தை நோக்கி இந்தோனேசிய பொலி்சார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அத்துடன், தரையிறங்கிய பெண்கள், மீண்டும் படகில் ஏற்றப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், படகின் இயந்திரத்தை திருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.14 ஜூன் 2016
இரகசியத்திட்டத்துடன் ஜெனீவா பயணமாகும் கஜேந்திரகுமார்!
இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கும் பல இரகசிய திட்டங்களுடன் ஜெனீவா பயணமாகவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர், நேற்று ஜெனீவாவில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட சமூகத்தின் சார்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஜெனீவா நோக்கி பயணிக்கவுள்ளார்.
கடந்த வருடம் நடைபெற்ற ஐ.நா கூட்டத்தொடரின்போது முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து பகிரங்கமாக அறிவித்துவிட்டுச்ப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இம்முறை அவ்வாறு இடம்பெறு சென்றதால், அவற்றை முறியடிக்க பல சூழ்ச்சிகள் மேற்கொள்ளவதை தடுக்கும் நோக்கிலேயே தமது திட்டங்களை இரகசியமாக வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.11 ஜூன் 2016
'காற்றே காத்திரு…. !'பேரறிவாளன் தந்தை கண்ணீர் கவிதை!
காற்றே!
உன்னை வேண்டுகிறேன்.
இன்னும் சிறிது காலம் உடலோடு ஒத்துழைத்து
உதவ வேண்டுகிறேன்.
என் மகனை நான் தழுவும்வரை……
என் கண்ணுக்குத் தெரியாமல்
நான் அழுகின்றேன்.
கால் நூற்றாண்டுகளாக…
இமயத்தில ஏற நான் பயின்றபோது
இமயத்துப் புலி டென்சிங் நார்கே
எனதொரு காலை அவர் தோள்மீதும்
மறுகாலை அவர் உள்ளங்கையாலும் தாங்கிட
இமயம் ஏறிய என் கால்களோ
இன்று வேலை நிறுத்தம் செய்கின்றன!
மூளையோ எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால்...
என்று தடைபோடுகிறது! தடுமாறுகிறது!
ஈரல்கள் அவ்வப்போது உன் வரவைத் தடுத்து
இரண்டகம் செய்கின்றன!
அச்சம் ஊட்டுகின்றன!
சில பற்களோ பாவம் எழுபத்து நான்கு ஆண்டுகள்
எனக்காக உழைத்து இறுதியாகப் பிரிந்தே விட்டன.!
உணவுப் பாதையோ குண்டும் குழியுமாக உள்ள
சிற்றூர் பாதையாக…..!
என் இறுதி காலத்தில்
எனக்குத் துணையாக இருக்க வேண்டிய
என் மனைவியோ அவளின் இறுதிக் காலத்தில்
தன்னையும் மறந்து என்னையும் மறந்து
தனித்து விட்டுவிட்டு இன்னும் எங்கள் மகனைத் தேடி அலைந்துகொண்டு இருபத்தைந்து ஆண்டுகளாய்……! ஊழிக்காற்றே! நான் எதைத்தான் தாங்கிக்கொள்வது?
எப்படி?எத்தனைக் காலம்?
இதற்காக நான் என்னை அழித்துக் கொள்ள நேர்ந்தாலும்
அது எம் இனத்திற்குப் பயன்படுவதாக அமையுமே யன்றி
வீணாக இல்லை.
மானிடத்திற்கு என் பங்களிப்பு ஏதுமில்லாப்
பயனற்ற வாழ்வை நானும் விரும்பவில்லைதான்.
எனவே என்னைவிட்டு நீ விடுதலை பெற
எண்ணுவது சரியானதுதான்.
ஆனால் சற்றே பொறு நான் பொறுத்திருப்பதுபோல.
நீதியை அடைகாத்துவரும் சூது
உண்மையைப் பொறுத்து
வானில் விடுதலையைப் பறக்கவிடும்வரை.…..
இதுநாள்வரை நான் இப்புவியில் இருக்க
உதவிய உனக்கும் எங்களுக்காகப்
பேச்சாலும் செயலாலும் மனிதத்தை
வெளிப்படுத்திய மனிதா;
அனைவருக்கும் என் நன்றியைப் படைக்கின்றேன்.
-அன்புடன் குயில்தாசன்
இன்னும் சிறிது காலம் உடலோடு ஒத்துழைத்து
உதவ வேண்டுகிறேன்.
என் மகனை நான் தழுவும்வரை……
என் கண்ணுக்குத் தெரியாமல்
நான் அழுகின்றேன்.கால் நூற்றாண்டுகளாக…
இமயத்தில ஏற நான் பயின்றபோது
இமயத்துப் புலி டென்சிங் நார்கே
எனதொரு காலை அவர் தோள்மீதும்
மறுகாலை அவர் உள்ளங்கையாலும் தாங்கிட
இமயம் ஏறிய என் கால்களோ
இன்று வேலை நிறுத்தம் செய்கின்றன!
மூளையோ எப்போதும் தொடர்பு எல்லைக்கு அப்பால்...
என்று தடைபோடுகிறது! தடுமாறுகிறது!
ஈரல்கள் அவ்வப்போது உன் வரவைத் தடுத்து
இரண்டகம் செய்கின்றன!
அச்சம் ஊட்டுகின்றன!
சில பற்களோ பாவம் எழுபத்து நான்கு ஆண்டுகள்
எனக்காக உழைத்து இறுதியாகப் பிரிந்தே விட்டன.!
உணவுப் பாதையோ குண்டும் குழியுமாக உள்ள
சிற்றூர் பாதையாக…..!
என் இறுதி காலத்தில்
எனக்குத் துணையாக இருக்க வேண்டிய
என் மனைவியோ அவளின் இறுதிக் காலத்தில்
தன்னையும் மறந்து என்னையும் மறந்து
தனித்து விட்டுவிட்டு இன்னும் எங்கள் மகனைத் தேடி அலைந்துகொண்டு இருபத்தைந்து ஆண்டுகளாய்……! ஊழிக்காற்றே! நான் எதைத்தான் தாங்கிக்கொள்வது?
எப்படி?எத்தனைக் காலம்?
இதற்காக நான் என்னை அழித்துக் கொள்ள நேர்ந்தாலும்
அது எம் இனத்திற்குப் பயன்படுவதாக அமையுமே யன்றி
வீணாக இல்லை.
மானிடத்திற்கு என் பங்களிப்பு ஏதுமில்லாப்
பயனற்ற வாழ்வை நானும் விரும்பவில்லைதான்.
எனவே என்னைவிட்டு நீ விடுதலை பெற
எண்ணுவது சரியானதுதான்.
ஆனால் சற்றே பொறு நான் பொறுத்திருப்பதுபோல.
நீதியை அடைகாத்துவரும் சூது
உண்மையைப் பொறுத்து
வானில் விடுதலையைப் பறக்கவிடும்வரை.…..
இதுநாள்வரை நான் இப்புவியில் இருக்க
உதவிய உனக்கும் எங்களுக்காகப்
பேச்சாலும் செயலாலும் மனிதத்தை
வெளிப்படுத்திய மனிதா;
அனைவருக்கும் என் நன்றியைப் படைக்கின்றேன்.
-அன்புடன் குயில்தாசன்
03 ஜூன் 2016
சுவிஸ் குமாரின் தாயாருக்கும் விளக்கமறியல்!
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை மிரட்டிய இரு பெண்களையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, ஊர்காவற்துறை நீதிமன்ற பதில் நீதிவான் கருப்பையா ஜீவராணி நேற்று உத்தரவிட்டார். கடந்த மாதம் 4ஆம் திகதி ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தன்னை சந்தேக நபர்களின் உறவினர்கள் மிரட்டுவதாக புங்குடுதீவு மாணவியின் தாயார், நீதவானின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.இதையடுத்து, அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு மாணவியின் தாயாருக்கு நீதவான் அறிவுறுத்தி இருந்தார். அதற்கமைய, தாயாரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. குறித்த முறைப்பாட்டின் பிரகாரம், மே மாதம் 18ஆம் திகதி மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எனும் சந்தேக நபரின் தாயார் அவரின் மற்றுமொரு உறவினர் ஆகியோரிடம் பொலிஸார் வாக்கு மூலம் பெற்றுக் கொண்டனர்.அதனைத் தொடர்ந்து, மாணவியின் தாயாரை மிரட்டியவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்களை நேற்று ஊர்காவற்துறை பொலிஸார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போதே அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.மதம் மாறிய மகளை அடித்துக்கொன்ற தாய்!
அம்பாறை மத்தியமுகாம் பிரதேசத்தில் 21 வயதுடைய மகளை அடித்து கொலைசெய்து வீட்டின் பின்னால் நிலத்தில் புதைத்த சம்பவம் தொடர்பாக அவரது தாயாரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக மத்தியமுகாம் பொலிசார் பொலிசார் தெரிவித்தனர். மத்தியமுகாம் 6ஆம் பிரிவு 11ஆம் கொலனியைச் சேர்ந்த 21 வயதுடைய செல்வநாயகம் ஜனனி என்பவரே இவ்வாறு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்டவர் திருமணம் முடித்து கணவனின் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளதுடன் கணவர் வெளிநாட்டிற்கு சென்றுள்ள நிலையில் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார். இதனை உயிரிழந்தவரின் தாயார் கேள்விப்பட்டுள்ளார் சம்பவ தினமான கடந்த 31ஆம் திகதி இரவு உயிரிழந்தவர் தாயாரின் வீட்டிற்குச் சென்று அங்கு தங்கிவிட்டு வருவதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில் தனியாக வாழ்ந்துவரும் தாயாருக்கும் மகளுக்கும் மதம் மாறியது தொடர்பாக வாய்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து தாயார் கட்டில் பலகையால் மகள் மீது தாக்கியதையடுத்து மகள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உயிரிழந்த மகளின் உடலை தூக்கிச் சென்று வீட்டின் பின்பகுதியில் உள்ள நிலத்தில் கிடங்குவெட்டி புதைத்துள்ளார். இதன் பின்னர் மகளை காணவில்லை என புரளியை கிளப்பிவிட்டுள்ள நிலையில் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து பொலிசார் நேற்று மாலை 5 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்று நடத்திய விசாரணையின்போது தாயார் தான் கொலை செய்து வீட்டின் பின்பகுதியில் புதைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தாயாரை பொலிசார் கைதுசெய்துள்ளதுடன் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டுவதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதுவரை சடலம் புதைக்கப்பட்ட பகுதியில் பொலிசார் காவற்கடமையில் ஈடுபட்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.31 மே 2016
நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்று!
2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும்.
யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார்.
நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர்.இவரது பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது (2000), ஆளுநர் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை, அவரது ஊடகப் பணிக்கு கிடைத்த சான்றுகளாகும். இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர்கூட தனது தலைசிறந்த ஊடகப்பணிக்காக மதிப்பளிக்கப்பட்டவர்.
20 வருடங்களுக்கு மேலாக கொழும்பு வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளராகவும், ‘நெல்லை நடேசன்’ என்ற பெயரில் பத்தி எழுத்தாளராகவும் இருந்த இவர், 1997ஆம் ஆண்டு முதல் லண்டனை தளமாகக் கொண்டு இயங்கிவரும் ஐ.பி.சி வானொலி, கொழும்பு சக்தி தொலைக்காட்சி உட்பட ஏனைய பல ஊடகங்களுக்கு தனது இறுதி மூச்சுவரை பணியாற்றியவர்.மட்டக்களப்பு மக்கள் மட்டுமன்றி, இன அழிப்பை அதிகம் எதிர்கொண்ட தென் தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலைகள் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த இவர், அந்த மக்கள் நினைவுகூரப்பட வேண்டும் என்பதிலும், அந்தப் படுகொலை பற்றிய விபரங்களை ஏனையவர்கள், குறிப்பாக இளையோர் அறிந்திருக்க வேண்டும் என்பதிலும் கரிசனை கொண்டிருந்தவர்.
இனப் படுகொலைகள் மட்டுமன்றி மட்டக்களப்பு பற்றியும், தென் தமிழீழம் பற்றியும் எப்பொழுது எந்தத் தகவல் கேட்டாலும் உடனே சொல்லும் ஆற்றல் கொண்டிருந்த இவர், சொல்வதுடன் நிறுத்தி விடாது அவற்றை எழுதி தொலைநகலில் அனுப்பியும் வைப்பார். ஏதாவது ஒரு படுகொலை அல்லது முக்கிய விடயங்கள் பற்றி ஊடகங்கள் கேட்க மறந்து விட்டால்கூட அதனை ஞாபகம் ஊட்டி உடனே அனுப்பி வைப்பார். எதனையும் நேருக்கு நேர் பேசும் இவரது நடைமுறை காரணமாக, உண்மையை அல்லது மக்களிற்கு பாதகமான விடயங்களைக் கடியும் இவரது குணாம்சம் காரணமாக, பல தடவைகள் பல்வேறு எதிர்புகளையும், இன்னல்களையும் எதிர்கொண்டவர்.பல தடவைகள் நேரடியாகவும், தொலைபேசி ஊடகவும் கொலை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த போதிலும், ஏன் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் (2000ஆம் ஆண்டு) இடம்பெற்ற போதிலும்கூட, அஞ்சாது தனது குடும்பத்துடன் இறுதிவரை மட்டு மண்ணில் இருந்து மக்களிற்காகக் குரல்கொடுத்த ஒரு சிறந்த ஊடகன்.
மட்டக்களப்பில் சிறீலங்கா படையினரது கட்டுப்பாட்டில் இருந்த நகர் பிரதேசத்தல் வாழ்ந்த போதிலும், அவ்வப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிருவாகக் கட்டமைப்புக்குள் ஏனைய தென் தமிழீழ ஊடகவியலாளர்களுடன் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளையும், கஸ்ரங்களையும் வெளிக்கொண்டு வந்தவர்.
பல இக்கட்டான காலங்களில்கூட இவர் போன்ற ஊடகவிலாளர்கள் (தற்பொழுது நாட்டில் வாழ முடியாது புலம்பெயர்ந்துள்ளவர்கள் உட்பட) மக்களிற்காகவும், அவர்களில் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காவும் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பணிகளை புலம்பெயர்ந்த மக்கள் மறந்துவிடக்கூடாது.நாட்டுப்பற்றாளர் என ஐய்யத்துரை நடேசன் அவர்கள் மதிப்பளிக்கப்பட்டதன் மூலம் அவர் ஆற்றிய பணியை நாம் எடைபோட முடியும்.
ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன், மாமனிதர் சிவராம், மயில்வாகன் நிமலராஜன், லசந்த விக்கிரதுங்க என டிச்சர்ட் டி சொய்சா முதல் இன்றுவரை முப்பதிற்கும் மேற்பட்ட ஊடகர்கள் இதுவரை படுகொலை செயப்பட்டுள்ளனர். இவர்களைப் படுகொலை செய்தவர்கள் யார் என்று தெரிந்திருந்தும், அவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை. இழக்கப்பட்ட உயிர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவும் இல்லை.
28 மே 2016
வசதியான நாளில் சந்திக்கலாம் என ஜெயலலிதா பதில்!
![]() |
| ஜெயலலிதா ஜெயராம் |
25 மே 2016
பண்ணைக் கடலுக்குள் பாய்ந்தது பயணிகள் ஊர்தி!
அல்லைப்பிட்டிச் சந்திக்கும் மண்டைதீவுச் சந்திக்கும் இடையே பண்ணை வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் ஊர்தி வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இன்று புதன்கிழமை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகம் மற்றும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என 16 பேர் காயமடைந்தனர்.ஊர்தியின் ரயர் வெடித்ததில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஊர்தி,வீதி எல்லைக் கற்களை உடைத்துக் கொண்டு கடலில் பாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றது. இந்த ஊர்தியில் 45 பயணிகள் வரை பயணித்தனர் எனவும் காயமடைந்த அனைவரும் யாழ்,போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.21 மே 2016
புளியங்கூடல் மகாமாரி அம்பாள் கொடியேற்றம்!
புளியங்கூடல் செருத்தனைப்பதி ஸ்ரீ இராஜமகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 10.06.2016 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி பதினெட்டு தினங்கள் விழா பெரும் பக்தி நயத்துடன் இடம்பெறவுள்ளது.கொடியேற்றத்திற்கு முதல் தினமான 09.06.2016 வியாழக்கிழமை விநாயகர் வழிபாடும்,கிராமசாந்தியும் இடம் பெறும்.அதைத்தொடர்ந்து மறுநாள் வெள்ளிக்கிழமை 10.06.2016 அன்று காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 18 தினங்கள் விழா சிறப்புற நடைபெறும்.14ம் திருவிழாவாகிய 23.06.2016 வியாழக்கிழமை வேட்டைத்திருவிழாவும்,16ம் திருவிழாவாகிய 25.06.2016 சனிக்கிழமை காலை 08:00 மணிக்கு இரதபவனியும்,26.06.2016 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவமும் இடம்பெற்று 18ம் திருவிழாவாகிய மறுநாள் 27.06.2016 திங்கட்கிழமை பூங்காவனத்திருவிழாவுடன் ஆலய வருடாந்த மகோற்சவம் இனிதே நிறைவுறும்.14 மே 2016
சந்திரிகா விசாரணைக்கு தயாரா என சிவாஜிலிங்கம் கேள்வி!
![]() |
| சந்திரிகா |
12 மே 2016
மைத்திரிக்கு எதிராக லண்டனில் போராட்டம்!
மைத்திரிபால சிறிசேனவின் பிரித்தானிய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து லண்டனில் நேற்று பிரித்தானிய தமிழர் பேரவை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. லண்டனில் அமைந்துள்ள பொதுநலவாய அலுவலகத்திற்கு முன்பாக நேற்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி இந்த போராட்டம் நடைபெற்றது.
இறுதிக்கட்ட போரின் இறுதி ஐந்து மாதங்களில் 70 ஆயிரம் தமிழ் மக்கள் படையினரால் படுகொலை செய்யப்பட்டமைக்கு முன்னாள் மஹிந்த ராஜபக்ச மாத்திரமன்றி போரின் இறுதி நாட்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் பொறுப்புக்கூற வேண்டுமென பிரித்தானிய தமிழர் பேரவை கூறுகிறது. யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் தற்போதைய அரசாங்கமும், தமிழர்களுக்கான உரிய தீர்வுத் திட்டங்களையோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதியையோ வழங்க மறுத்துவருவதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
புதிய அரசாங்கமும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கும் பிரித்தானிய தமிழர் பேரவை அதனாலேயே அவற்றுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாக தெரிவித்துள்ளது.11 மே 2016
ஊர்காவற்றுறையில் பெண்ணுடன் சேஷ்டை மூவர் கைது!
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியருடன் சேஷ்டை விட்ட மூவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஊர்காவற்றுறையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:- வழமைபோன்று வீதியால் கடமைக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஊழியருடன் மதுபோதையில் வந்த மூவர் சேஷ்டை விட்டுள்ளனர். இதையடுத்து உடனடியாகவே வைத்தியசாலைப் பணிப்பாளரூடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.இது தொடர்பில் அந்தப் பெண் ஊழியரை அழைத்துக்கொண்டு அவர்கள் தப்பிச்சென்ற வழியால் விரைந்த பொலிஸார், அங்குள்ள ஆலய அன்னதான மண்டபத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அவர்களை பெண் ஊழியர் அடையாளம் காட்டியதை அடுத்து கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 3 போத்தல் கள்ளும் பொலிஸாரால் மீட்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.10 மே 2016
சுவிஸ் குமார் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு நீதிபதி கடும் உத்தரவு!
யாழ்,புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்ட வழக்கில், சந்தேகநபர்களில் ஒருவரான சுவிஸ் குமார், யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்படும் நிலையில், அவர் என்ன அடிப்படையில் கொழும்பு சென்றார்? அவர் யாருடன் அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்? என்பது பற்றியும், அவர் தொடர்பான தகவல்கள் தொடர்பிலும் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று உத்தரவிட்டுள்ளது. ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதிவான் எம்.எம்.றியால் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதன்போது சந்தேகநபர்கள் 10 பேர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியும் முன்னிலைகியிருந்தார். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தனர். அங்கு சமர்ப்பணம் செய்த சட்டத்தரணி கே.சுகாஸ், "வழக்கில் சந்தேகநபராகக் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள 9ஆவது சந்தேக நபரான சுவிஸ் குமார் யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் எனவும், பின்னர் கொழும்பில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார் எனவும் அறிந்தோம். குறித்த நபர் யாழ்.பொலிஸ் நிலையத்தல் சரணடைந்திருந்தால் பின்னர் எவ்வாறு கொழும்புக்குச் சென்றார்? கொழும்பில் எவ்வாறு கைதுசெய்யப்பட்டார்? இவை தொடர்பில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட வேண்டும்" - என்று கோரினார். சட்டத்தரணி வி.மணிவண்ணன், "வித்தியாவின் குடும்பத்தினர் நீதிமன்றுக்கு வந்து செல்லும்போதெல்லாம் சந்தேக பர்களின் உறவினர்கள் வித்தியாவின் குடும்பத்தினரை இகழ்கின்றனர். அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர். அதனால் நீதிமன்றுக்கு வருவதற்கு அச்சமாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே, சாட்சிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்" - என்று கோரினார். அதன்பின்னர் நீதிவான் பல கட்டளைகளைப் பிறப்பித்தார். அதில், "சுவிஸ் குமார் யாழ்.பொலிஸ் நிலையத்தில் நின்றமையானது, கைது செய்யப்பட்டாரா? அல்லது சரணடைந்தாரா? அவர் தானாகச் சென்று சரணடைந்தாரா? அல்லது வேறு யாராவது பாரப்படுத்தினார்களா? வேறு நபர்கள் பாரப்படுத்தியிருப்பின் அவர்களின் பெயர் விவரங்கள் என்ன? வேறு நபர்கள் எனின் அவர்களுக்கும் சுவிஸ் குமாருக்கும் இடையிலான சம்பந்தம் என்ன? வேறு நபர்கள் எனின் அவர்கள் இந்த வழக்கில் அவ்வாறு செயற்பட வேண்டிய சட்ட தேவைப்பாடு அல்லது காரணம் உள்ளனவா? சுவிஸ் குமார் சம்பவ இடத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தால் அவர் எவ்வாறு கொழும்பு சென்றார்? அதற்கு யாராவது உதவியிருந்தால் அவர்களது பெயர் விவரங்கள் என்ன? யாழ். பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்திருந்தால் அதற்கான சட்ட ரீதியான குறிப்புக்கள் உள்ளனவா? அந்தக் குறிப்புக்கள் பேணப்பட்டனவா?சரணடைந்திருந்தால் அவர் ஏதாவது நீதிமன்றில் முற்படுத்தப்பட்டாரா? அவர் கொழும்புக்குச் சென்றது பொலிஸ் கட்டுக்காவலிலா அல்லது சாதாரணமாகவா? சாதாரணமாகச் சென்றிருந்தால் அவர் பொலிஸாரால் விடுதலை செய்யப்பட்டாரா? அவர் அவ்வாறு விடுதலை செய்யப்பட்டால் யாரால், எந்தச் சட்டப்படி, எந்த ஏற்பாட்டில் விடுதலை செய்யப்பட்டார்? சுவிஸ் குமார் எத்தனை அலைபேசிகள் பயன்படுத்தினார்? அவரது அலைபேசிக்குரிய அறிக்கைகள் பொலிஸாரால் பேணப்பட்டுள்ளதா? சம்பவம் இடம்பெறுவதற்கு ஒருவாரத்துக்கு முன்னர் வரையும் சம்பவம் நடந்த பின்னரான ஒரு வாரம் வரைக்கும் அவர் தொடர்பு கொண்டிருந்த அலைபேசிகளின் ஒலிப்பதிவு, ஆவணங்கள் பொலிஸாரால் திரட்டப்பட்டதா? யாராவது அவருடன் தொடர்புகள் கொண்டிருந்துள்ளனரா? அவ்வாறான தொடர்புகள் இருந்திருப்பின் சாதாரண வழக்குப் போன்று பொலிஸார் குறித்த அலைபேசி நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு அந்தத் தகவல்களைப் பெற்றிருந்தனரா? இந்த விடயங்கள் தொடர்பில் அதன் பின்னர் பொலிஸாரால் அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டதா? விசாரணை செய்யப்பட்டிருப்பின் பொலிஸ் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? அவ்வாறு ஏதாவது இருப்பின் அவற்றை அடுத்த வழக்கு விசாரணையில் நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் கேள்விகளுக்குக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தனித்தனியே பதிலளித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்" - என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிவான் உத்தரவிட்டார். தவிர வித்தியாவின் குடும்பத்தினர் அச்சுறுத்தப்படும் விடயத்துக்கு அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ய முடியும். பொலிஸார் அந்த விடயத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் நீதியாகச் செயற்பட வேண்டும் என்றும் நீதிவான் அதில் தெரிவித்தார். அதனையடுத்துச் சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு நீடிக்கப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதேவேளை, மாணவி வித்தியா படுகொலை முதலில் கைதுசெய்யப்பட்ட 9 சந்தேகநபர்களினதும் விளக்கமறியலை நீடிப்பது தொடர்பான விசாரணை யாழ்.மேல்நீதிமன்றில் நாளை புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.03 மே 2016
நாம் தமிழர்,பாமக இரண்டுமே இனி பிரதான கட்சிகள்!
தமிழகத்தின் தேர்தல் களம் மிகவும் சூடு பிடித்துள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்,திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டுமே தமிழக மக்களை ஏமாற்றி ஊழல் புரிந்து ஆட்சி செய்து வந்த கட்சிகள்.இன்றுவரை இவை இரண்டு கட்சிகளையுமே பிரதான கட்சிகள் என ஊடகங்கள் பறைசாற்றி நிற்கின்றன.ஆனாலும் இன்று தமிழக மக்கள் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துவரும் கட்சிகளாக நாம் தமிழர் கட்சியும்,பாட்டாளி மக்கள் கட்சியும் நோக்கப்படுகின்றன.அதற்கான காரணம் யாதெனில்,அவை இரண்டும்தான் உண்மையான தமிழ்க்கட்சிகள் ஆகும்.திராவிடக்கட்சிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டுள்ள மற்றைய கட்சிகளை தமிழக மக்கள் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை என்பதே உண்மை.ஊழல் கட்சிகளான இரண்டு திராவிடக் கட்சிகளில் ஏதாவது ஒன்றை மீண்டும் ஆட்சியில் அமரவைத்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன தமிழகத்தில் இருந்து வெளிவரும் சில ஊடகங்கள்.உட்கட்சி மோதல்களாலும்,வாக்காளர்கள் மீதான மக்களின் எதிர்ப்பினாலும் திணறிக் கொண்டிருக்கின்ற இந்த திராவிடக்கட்சிகள் எப்படியாவது வென்று விடவேண்டும் என்ற அவாவில் பல வழிகளிலும் முயன்றுகொண்டிருக்க,தமிழக மக்களின் மனங்களை வென்று வருகின்ற நாம் தமிழர் கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் தமிழகத்தின் இரு பிரதான கட்சிகள் என்ற இடத்தை பிடிக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.28 ஏப்ரல் 2016
புலம்பெயர் தேசங்களில் புலிகளின் முக்கியஸ்தர்களை கைது செய்யும் முயற்சி தோல்வி!
பன்னிரண்டு நாடுகளில் இருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்கள் 67 பேர் அந்த அமைப்பிற்கு புத்துயிரூட்டும் செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்வதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. விநாயகம், கபில் மாஸ்டர், முகுந்தன், தேவன் மற்றும் சிரஞ்சீவி மாஸ்டர் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்கள் 67 பேர் 12 நாடுகளில் வாழ்கின்றனர்.பிரான்ஸ், பிரித்தானியா, கனடா, இந்தியா, ஜேர்மனி, தென் ஆபிரிக்கா, நோர்வே, மலேசியா, டென்மார்க், கட்டார், நெதர்லாந்து மற்றும் சுவிற்சலாந்து ஆகிய பன்னிரண்டு நாடுகளிலேயே மறைந்து வாழ்கின்றனர். வெளிநாடுகளுக்குத் தப்பித்துச் சென்ற எந்தவொரு விடுதலைப் புலி முக்கியஸ்தரையும் இதுவரை கைது செய்ய முடியவில்லை. இவர்கள் தங்களுக்குள் ஒரு வலையமைப்பை ஏற்படுத்திக் கொண்டு விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு மீண்டும் புத்துயிரளிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்கள் சிலரின் உதவியுடன் இராணுவத்தினர் மேற்கொண்ட ஒபரேசன் டபள் எட்ஜ் புலனாய்வு நடவடிக்கையின் போது இவர்கள் தங்களையறியாமல் இராணுவத்தின் வலையில் வீழ்ந்திருந்தனர். எனினும் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவப் புலனாய்வாளர்கள் தொடர்பான விபரங்கள் வெளியானதன் காரணமாக தற்போது இந்த நடவடிக்கையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
27 ஏப்ரல் 2016
தொடர்ந்து கைது செய்யப்படும் முன்னாள் போராளிகள்! - சிவாஜிலிங்கம் சந்தேகம்!
எதிர்வரும் மே-18ம் திகதி அனுஷ்டிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை குழப்பவே முன்னாள் போராளிகள் கடத்தப்படுவதும் விசாரணைக்கு அழைப்பதும் இடம்பெறுவதாக, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். “படைத்தரப்பினராலும் பொலிஸாராலும் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவதும் சட்டரீதியாக கைது செய்யப்படுவதற்கு அப்பால் கடத்தப்பட்டு பின்னர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படுவதும் மிகப் பெரிய அச்சுறுத்தல்.
இம்மாதம் 30ம் திகதி பல நூற்றுக் கணக்கானவர்களை கொழும்பிற்கு வாருங்கள், விசாரணைக்கு ஆஜராகுங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டமையானது எதிர்வரும் மே 18ம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை தடுக்கும் முயற்சிகாகவே பார்க்க வேண்டியுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் எனக்கூறும் இந்த அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் செயற்பாட்டையே தொடருகின்றது என்ற குற்றச்சாட்டை நாம் முன்வைக்கின்றோம். கடந்த காலங்களில் ஒரு கோரமுகத்துடன் முன்னாள் ஜனாதிபதி மேற்கொண்ட விடயங்களை சிரித்த முகத்துடன் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் மேற்கொள்கிறார்கள்.
இப்போது அவர்கள் இறுக்கமான முகத்தோடு எமது இனத்தை அழிக்க, பழிவாங்க முற்படுகிறார்களா என்ற சந்தேகம் எம்மில் எழுகிறது. இதற்குப் பிரதான விடயம் யாதெனில், அரசியல் தீர்வு விடயங்களில் தமிழ் மக்கள் தமது உள்ளக் குமுறல்களை, வெளிப்பாடுகளை வெளியே சொல்ல முடியாதவாறு ஒரு அச்சமான சூழலை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு அரைகுறையான தீர்வை எங்கள் மீது திணிப்பதாகவே பார்க்கின்றோம். வடமாகாண பிரேரணை தொடர்பில், தீர்வுத்திட்டம் முன்யோசனைகள் தொடர்பில் வடமாகாண சபையில் முழுமை பெறமுன்னமே தென்னிலங்கையில் இருக்கக்கூடிய இனவாதிகளிடமிருந்து கூச்சல், குழப்பங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
இதேவேளை இரத்த ஆறு ஓடும் என்று பொதுபலசேனா, இராவணா பலய போன்ற அமைப்புக்களின் கருத்துக்களை நாம் முழுமையான இனவெறி கூற்றுக்களாகவே பார்க்கின்றோம். முஸ்லிம் மக்கள் 1974ம் ஆண்டு புத்தளத்திலுள்ள பள்ளிவாசலில் கொல்லப்பட்ட போது முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் கருத்துக்கள் முன்வைக்கவில்லை. தந்தை செல்வாவே கருத்துக்களை முன்வைத்தார். அதாவது முஸ்லிம் மக்களுக்கும் மலையக தமிழ் மக்களுக்கும் சுய உரிமையை கேட்டு நிற்கின்றோம்.ஆகவே இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள்தான் இருந்தது என்பதை எங்களுடைய தலைவர்கள் கூறியுள்ளார்கள்.
முஸ்லிம் மக்கள் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் முஸ்லிம் சுயாட்சி பிராந்தியம் அதேபோல் மலையக தமிழ் மக்களுக்கான மலையக தமிழ் சுயாட்சி சபை ஆகியவற்றை வடமாகாண சபை முன்வைத்துள்ளது. இது இன்று நேற்று அல்ல தந்தை செல்வா காலத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துகின்றேன் எனத் தெரிவித்தார்.
26 ஏப்ரல் 2016
துருக்கியில் இறந்த இளைஞனின் தாயும் அதிர்ச்சியில் மரணம்!
கள்ள வழியால் சுவிற்ஸர்லாந்த் செல்வதற்காக சென்று கடத்தல்காரர்களிடம் அகப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு இறந்த முல்லைத்தீவு வட்டுவாகலைச் சேர்ந்த காண்டீபனின் தாயாரும் மகன் இறந்த காரணத்தால் இன்று அதிர்ச்சியுற்று மரணமாகியுள்ளார்.நாகராசா புவனேஸ்வரி 65 வயது என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். மகன் இறந்ததை அறிந்து தாயார் மரணமான சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் தாய், மகனின் பாசம் நெகிழ வைப்பதாக அப்பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். தற்போது காண்டீபனின் சடலத்தை இலங்கைக்குக் கொண்டு வருவதற்காக உறவினர்கள் துருக்கித் துாதரகத்தில் காத்திருப்பதாக தெரியவருகின்றது.
நன்றி.NEW JAFFNA
நன்றி.NEW JAFFNA
20 ஏப்ரல் 2016
பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவிஸ் குமார் எவ்வாறு தப்பினார்?
புங்குடுதீவு மாணவி கொலையுடன் தொடர்புடையவர் என பொதுமக்களால் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எவ்வாறு பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்றார் என்பது தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பதினோராம் மற்றும் பன்னிரெண்டாம் சந்தேக நபர்கள் இன்று(புதன் கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் எம்.எம்.றியாழ் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.
இதன் போது நீதவான் குறித்த வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. எனவே இதுவரை நடைபெற்ற விசாரணை தொடர்பிலான அறிக்கையையடுத்த வழக்கு தவணையில் மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தின் பேரில் பொது மக்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் கொடுக்கப்பட்ட நபர் எவ்வாறு பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சென்றார் என்பது தொடர்பிலான விசாரணை அறிக்கையை அடுத்த தவணையின் போது சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மாகாலிங்கம் சசிக்குமார் யாழ். பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி சுவிஸிற்கு தப்பி செல்வதற்காக கொழும்பில் இருந்த வேளை மீண்டும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் யாழ் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பி செல்வதற்கு அப்போதைய வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் சட்டத்துறை விரிவுரையாளர் தமிழ் மாறன் ஆகியோர் உதவினார்கள் என பொது மக்களால் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதில் சட்டத்துறை விரிவுரையாளரான தமிழ் மாறனையும் பொலிசார் கைது செய்ய வேண்டும் என கோரி புங்குடுதீவு மக்கள் தமிழ் மாறனை சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் சுற்றி வளைத்து போராட்டம் நடாத்தி இருந்தனர்.
அதன் பின்னர் தாம் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துவோம் என பொலிசார் கடற்படை மற்றும் இராணுவத்தினர் உறுதியளித்ததன் பின்னரே மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டனர்.
இருந்த போதிலும் தமிழ் மாறன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.17 ஏப்ரல் 2016
சுவிஸ் கிறென்சனில் லிங்கநாதருக்கு திருமுழுக்கு விழா!
சுவிற்சர்லாந்தின் கிறென்சன் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சித்தர் பீடத்தில் நூற்றியெட்டு(108)லிங்கநாதருக்கும் திருமுழுக்கு விழா மிகவும் பக்திபூர்வமாக சிறப்பான முறையில் நடைபெற திருவருள் கூடியுள்ளதால் அந்நாளில் அனைவரும் வருகைதந்து மெய்யருளை பெற்றுய்யுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கிறார்கள்.
காலம்:22.05.2016 ஞாயிற்றுக்கிழமை
நேரம்:காலை 7:30க்கு விழா ஆரம்பமாகி விசேட பூசைகள் இடம்பெறும்.
இடம்:Marien str-06
2540 Grenchen
Switzerland
காலம்:22.05.2016 ஞாயிற்றுக்கிழமை
நேரம்:காலை 7:30க்கு விழா ஆரம்பமாகி விசேட பூசைகள் இடம்பெறும்.
இடம்:Marien str-06
2540 Grenchen
Switzerland
09 ஏப்ரல் 2016
சிந்தாமணி பத்திரிக்கை ஸ்தாபகர் அமரர் சிவநாயகத்தின் பாரியார் காலமானார்!
பத்திரிகை உலகின் ஜாம்பவானும் 'தினபதி', 'சிந்தாமணி', 'சூடாமாணி', பத்திரிகைகளின் ஸ்தாபக ஆசிரியருமான அமரர் எஸ்.டி.சிவநாயகத்தின் துணைவியார் மங்களாவதி சிவநாயகம் தமது 88ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறும். எல்லோராலும் 'மங்களம் அக்கா' என அழைக்கப்பட்ட அவர் 35 வருட ஆசிரிய சேவைக்குப் பின்னர் கடைசியாக கொழும்பு விவேகானந்தாக் கல்லூரியில் இருந்து ஓய்வுபெற்றார். மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட மங்களம் ரீச்சர் நீண்ட காலம் திருகோணமலையிலும் கொழும்பிலும் வாழ்ந்தவர்.07 ஏப்ரல் 2016
ம.ந.கூத்தணியில் கோழைலட்சுமி!
![]() |
| வை.வீ.வி |
உலகத் தமிழர்களின் நம்பிக்கை ஒளி.
29 மார்ச் 2016
சுவிஸ் குமாருக்கு தலையில் காயம்!உள் நடந்த மோதலா?
![]() |
| சுவிஸ் குமார் |
26 மார்ச் 2016
இன அழிப்பு என்றால் என்ன?
![]() |
| சிங்களத்தின் கொடூரம்! |
´´அட பாவிகளே....!இலங்கையில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக சிங்களவர்களால் கொல்லப்பட்டார்களே இது உங்களுக்கு இன அழிப்பாக தெரியவில்லையா?அட...உங்களின் எழுத்தில் கூட இல்லையே சமதர்மம்''.
18 மார்ச் 2016
பொட்டம்மான் குறித்து எதுவும் தெரியாது என்கிறார் சரத்பொன்சேகா!
![]() |
| சரத்பொன்சேகா |
26 பிப்ரவரி 2016
புலிகளின் கட்டமைப்பு இருந்த காலத்தில் கேவலமான சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டா?
சர்வதேச நாடுகளாலும் பயங்கரவாதிகள் என்று சொல்லப்பட்ட தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பு இயங்கிய காலத்தில் இவ்வாறான கேவலமான சம்பவங்கள் தமிழர் தாயகத்தில் எங்கேயாவது நிகழ்ந்ததுண்டா?
அவர்களால் மட்டும் இக்கட்டமைப்புக்களை சரியாக செயற்படுத்த எப்படி முடிந்தது என்பதை நீங்கள் ஆராய வேண்டும்.என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பாலியல் வன்புணர்வின் பின் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலையை கண்டித்து மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மகஜரிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டிலே அண்மைக்காலமாக ஜனநாயக அத்துமீறல்களும் தான்தோன்றித்தனமான தன்னதிகாரச் செயற்பாடுகள் வரன்முறைக்குட்பட்ட நிர்ணய நிலையியலுக்கு அப்பால் எல்லை மீறி தொல்லை கொடுக்கும் துயரச் சம்பவங்கள் தூபமிடுகின்றன.இவை சட்ட நிர்வாகக் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிக் கட்டமைப்பை ஆட்டம் காண வைக்கிறது. மனித உரிமைகள் விவகாரம் சர்வதேச ரீதியாக தங்களை அச்சுறுத்துகின்ற நிலை காணப்படும் சூழலில் இவ்விதமான சம்பவங்கள் மேலும் தங்களை கேள்விக்குட்படுத்துகின்றது. ஜனநாயகத்தின் முதல் படியே சட்ட ஆட்சி அது இலங்கையில் சரியாக நடை முறைப்படுத்தப்படுகிறதா எனும் விவகாரத்திற்குட்பட்ட கேள்வி பல தசாப்தத்தை தாண்டி எம்மத்தியில் உண்டு என்பதை நீங்கள் மறுக்க முடியாது. கடந்த வருடத்தில் நடைபெற்ற புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வன்கொடுமை மரணம் நிகழ்ந்தது ஒரு வருடம் அண்மித்த நிலையில் உங்கள் சட்ட ஆட்சி அல்லது நல்ல ஆட்சி சாதித்தது என்ன? உங்கள் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் எனும் வாக்குறுதி கானல் நீராகி கரையேறி விட்டதா? எனவே உங்கள் வாக்குறுதிகளை எதிர்காலத்தில் நாம் எப்படி நம்புவது? சிறுவர் துஸ்பிரயோகமும் பாலியல் வன் கொடுமைகளும் நாளொன்றுக்கு பல நூறு சம்பவங்கள் இடம்பெறுகின்றன. வெளிவருபவை ஒரு சிலதே. இதை தடுக்க வேண்டிய சட்டம் இருட்டறையில் நித்திரை கொள்கிறதா? வித்தியாவின் வழக்கிற்கே இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாத உங்களின் சட்டக் கட்டமைப்பு சேயாவின் படுகொலையிலும் இதுவே தொடர்கிறது.ஹரிஸ்ணவியின் கொலையாளியை இதுவரை கண்டுபிடிக்க முடியாத அளவில் மிகப் பலவீனமான முறையிலா தங்களின் புலனாய்வுக் கட்டமைப்பு இயங்குகின்றது. இவையெல்லாம் தமிழ்மக்களுக்கு புதிதும் அல்ல, வேடிக்கையும் அல்ல. எத்தனை வழக்குகளையும் விசாரணைகளையும் ஆணைக்குழுக்களையும் சந்தித்து அலுத்துப்போனவர்கள்.எனவே அவசரமாக நடைமுறையில் உள்ள குற்றவியல் தடுப்புச்சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து இவ்விதமான சிறுவர் வன்கொடுமைக் கொலைகளிற்கு விரைவாக தண்டனை கிடைப்பதற்கு வழிவகுப்பதுடன் அத்தண்டனை வினோதமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு வலுவேற்ற வேண்டும். ஆகவே அவ்விதமான அதி பயங்கரமான தண்டணை வழங்காவிட்டால் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகவே போய்விடும்.எனவே உங்களாலும் சில சர்வதேச நாடுகளாலும் பயங்கரவாதிகள் என்று சொல்லப்பட்ட தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய விடுதலைப்புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பு இயங்கிய காலத்தில் இவ்வாறான கேவலமான சம்பவங்கள் தமிழர் தாயகத்தில் எங்கேயாவது நிகழ்ந்ததுண்டா? அவர்களால் மட்டும் இக்கட்டமைப்புக்களை சரியாக செயற்படுத்த எப்படி முடிந்தது என்பதை நீங்கள்; ஆராய வேண்டும். ஆகவே வழமைபோல் பாராமுகமாகவும் கேளாச் செவியாகவும் எமது நியாய பூர்வமான வேண்டுகோளை உதாசீனம் செய்பவர்களாக இருக்காதீகள். ராஜபக்ச ஆட்சிக்கும் உங்கள் ஆட்சிக்கும் பெரிய இடைவெளி இருப்பதாக எமக்கு தெரியவில்லை.எனவே எமது வேண்டுகோளை ஏற்றுணர்ந்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவீர்கள் என நம்புகின்றோம். அவ்வாறு இல்லையெனில் எதிர்காலத்திலும் இன்னும் பல பெண்களிற்கு இவ்வாறான நிலை ஏற்படுவதற்கு மேலும் வழிவகுக்கப் போகின்றீர்கள் எனும் வாதத்தையும் முன்வைக்க விரும்புகின்றோம்.என குறிப்பிடப்பட்டுள்ளது.
22 பிப்ரவரி 2016
கலப்புத்திருமணம் செய்துகொண்டால் கலப்பு நீதிமன்றம் தேவைப்படாது!
![]() |
| யாழில் ரெஜினோல்ட் கூரே |
11 பிப்ரவரி 2016
சிங்கள சிப்பாய் நயினாதீவில் உபதேசம்!
நயினாதீவுக்கு சென்ற சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாகவும், அவர்களிடம் சிங்கள மக்கள் கற்றக்கொள்ள வேண்டிய பாடடங்கள் குறித்தும் இராணுவச் சிப்பாய் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ள காணொளி சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. அதில் குறித்த இராணுவச் சிப்பாய் பின்வருமாறு சிங்கள மக்களுக்கு உபதேசம் பண்ணுகிறார்.“30 ரூபாய் கொடுத்தால் போட்ல (boat) கொண்டு போய் நாகதீபவில் இறக்கிறார்கள். நீங்கள் அங்க இருந்து வந்து புத்த சிலைக்கு முன்னால் போய் இருந்து போட்டோ பிடிச்சு பேஸ்புக் ல போடுறீங்கள். நீங்கள் பூ வைக்கும்போதும், விளக்கு கொழுத்தும் போதும் போட்டோ பிடிச்சு பேஸ்புக்ல போடுறீங்கள். உங்களுக்கு கிடைத்த பெரிய சுதந்திரம் இதுதான் என நினைக்கிறீர்கள். நீங்கள் கோயில்களுக்கும் பள்ளிவாசல்களுக்கும் போய் பாருங்கள். அங்கு ஒவ்வொரு சட்டங்கள், ஒழுங்குகள் இருக்கு. அதனை முக்கியமாக தமிழ் மக்கள் கடைப்பிடிக்கிறார்கள்.உங்களின் மனட்சாட்சியைக் கேட்டுப் பாருங்கள். 30 வருடமாக நாங்கள் சண்டை பிடித்தோம். எத்தனை பேர் விகாரைகளில் இந்த சட்ட திட்டங்களை கடைப்பிக்கிறீர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் எந்த விரோதமும் இல்லை. நல்வழிப்படுத்தவே இதனைச் சொல்கிறேன். யாரையும் குத்திக் காட்டவில்லை. இலங்கையில் பெரிய கோயில்களில் ஒன்று நல்லூர் கோயில். அங்கு இப்பவும் அதே சட்டங்கள் கடைப்பிக்கப்படுகின்றன. இப்போது கொழும்பு விகாரைக்கு போனால் வெள்ளைச் சீலையும் வெள்ளைத் துண்டும் வைத்துள்ளார்கள். அது போல இந்து கோயில்களில் செய்கிறார்களா? வேறுபாட்டை புரிந்து கொள்ளுங்கள்.இங்கு இரண்டு நாள் வந்துவிட்டு போவீர்கள். நாங்கள் இங்கு தொடர்ந்து இருக்கின்றோம். கலாச்சாரத்தை பேண வேண்டும். நாகதீபவில் 162 தமிழ் குடும்பங்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களை பார்ப்பார்கள். உங்களுடைய கலாச்சாரத்தை என்னவென்று புகட்டபோகிறீர்கள். பிரபாகரனின் வீட்டை உடைக்க இதுவே காரணம். நீங்கள் அங்கேயும் வந்து இதைத்தான் செய்யப் போகிறீர்கள். யுத்தம் முடிவடைந்து விட்டது. அவர்களின் மனங்களில் இருந்து அதனை எடுத்துப் போட வேண்டும். நீங்கள் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் தெற்கு சிங்களவர்களுக்கு வடக்கு தமிழர்களுக்கு என்று. இது ஒரு நாடு. எந்த இடத்திற்குச் சென்றாலும் அவர்களின் கலாச்சாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.மாவீர்ர்களின் தூபிகளை அழித்தோம். ஏனென்றால் நீங்கள் கொழும்பிலிருந்து 10 பேர் வருவீர்கள். நாங்கள் அதே இடத்தில் எங்களுடைய வீரர்களின் தூபிகளை உருவாக்கி இருந்தால் நீங்கள் வணக்கம் செலுத்துவிர்களா? இல்லை. ஆனால் பிரபாகரன் உருவாக்கிய மாவீரர் இல்லங்களுக்கு அனைவரும் வணக்கம் செலுத்தித் தான் போவார்கள். அப்படித் தான் இருந்தது. அதனால் நான் நாங்கள் அழித்தோம். இந்தவேறுபாட்டினை புரிந்து கொள்ள வேண்டும் அதற்காகவே சொல்கிறேன். நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் வந்து சந்தோசமாக இருந்து போறீங்கள். எதனை கற்றுக் கொண்டு போகிறீர்கள். நாங்கள் இங்கு இருந்து இவர்களுடன் பழகுகின்றோம். நான் பயமில்லாமல் சொல்வேன்.சிங்களவர்களால் தான் அழிவு கூடுதலாக உள்ளது. எந்த தமிழனோ, முஸ்லிமோ தன்னுடைய தாயையோ தங்கையையோ கற்பழிக்கவும் இல்லை. கழுத்தை வெட்டவும் இல்லை.செய்யிற எல்லாம் சிங்களவன் தான். நானும் ஒரு சிங்களவன் தான். பயம் இல்லாமல் சொல்லுவன். நீங்கள் இங்கு பிள்ளைகளைக் கூட்டி வருகிறீர்கள். இங்கு உள்ள கலாச்சாரத்தை கற்றுக் கொடுங்கள். வேறுபட்ட கலாச்சாரத்தை சொல்லிக் கொடுங்கள்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.07 பிப்ரவரி 2016
வந்தார் பார்த்தார் நடக்கப்போவது என்ன?
![]() |
| பான் கீ மூன் |
![]() |
| சைத் அல் ஹுசைன் |
04 பிப்ரவரி 2016
கண்ணீர் விட்டாராம் சம்பந்தர்!!!
தமிழர்களை நெடுங்காலமாகவே ஏமாற்றி அரசியல் செய்து பழக்கப்பட்டு விட்ட சம்பந்தனுக்கு தனது இராஜதந்திரத்தை எண்ணி ஆனந்தக்கண்ணீர் வந்து விட்டதோ?!!!செய்தி கீழே:
இலங்கையின் 68வது சுதந்திரதின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இன்றைய சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் கண்கள் பனித்து கண்ணீர் முட்டியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திர நாள் நிகழ்வில் பங்கெடுத்த அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டியே ஆங்கில ஊடகம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றில், சுதந்திர நாள் நிகழ்வு ஒன்றில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது இது இரண்டாவது முறையாகும். முதல் தடவை 1949ஆம் ஆண்டு டி.எஸ்.சேனநாயக்க பிரதமராக இருந்த போது, முதலாவது சுதந்திர நாள் நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டிருந்தது.இன்று தமிழில் தேசிய கீதம் பாடப்பட்ட போது, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
02 பிப்ரவரி 2016
தனித்தேசக் கொள்கையினை கைவிடப்போவதில்லை-கஜேந்திரகுமார்
போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச பங்களிப்போ,ஒத்துழைப்போ,தலையீடோ இருக்காதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அமைச்சர்களும் தெரிவித்து வருவதானது, பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அனைத்தும், அமெரிக்க, இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் தங்களின் பூகோள அரசியல் நிலைமையை பாதுகாத்துக் கொள்வதற்காகவே அன்றி, தமிழ் மக்களின் அடிப்படை நலன்களுக்காகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயங்களை பெற்றுக் கொடுப்பதற்காவும் அல்ல. பாதிக்கப்பட்ட மக்களே தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த காலத்தை போலல்லாது, நடக்கும் எல்லா விடயங்களையும் மக்கள் விமர்சன கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டியது அவசியம்.
தமிழர்களுக்கு தனித்தேசம் என்ற கொள்கையினை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒருபோதும் கைதுவிடாது. தமிழர்களுக்கு தனிதேசம் என்ற கொள்கையினை கைவிடுவதானது தமிழ் மக்களின் இருப்பிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விடயமாகும். இதன்காரணமாக நாம் ஒருபோதும் தமிழர்களுக்கு தனிதேசம் என்ற கொள்கையினை கைவிடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.31 ஜனவரி 2016
யோஷித்த ராஜபக்ஷ கைது!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரை 14 நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு கடுவளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, இன்று காலை பெரும் நிதிமோசடிகள் தொடர்பான சிறப்பு பொலிஸ் பிரிவினர் கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் அவரிடம் விசாரணை நடத்தினர்.மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிஎஸ்என் ஊடக நிறுவனத்தின் மூலம் நடந்ததாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பிலேயே அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
யோஷித்த ராஜபக்ஷ கடுவளை மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, யோஷித்த ராஜபக்ஷவின் தந்தை மகிந்த ராஜபக்ஷ, மூத்த சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அவரது தாயார் ஷிரந்தி ராஜபக்ஷ ,முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் பலரும் அங்கு சென்றிருந்தனர்.ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் யோஷித்த ராஜபக்ஷ கடற்படை அதிகாரியாக நியமனம் பெற்றமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே, சிஎஸ்என் நிறுவனத்தின் தலைவரான ரொஹான் வெலிவிட்ட மற்றும் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி நிஷாந்த ரணதுங்க ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிபிசியின் கொழும்பு செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரை கைதுசெய்வதன் மூலம் தங்களின் நடவடிக்கைகளை தடுக்க முடியாது என்று மாத்தளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
'நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம். யுத்தம் இருந்திருந்தால் நிதி மோசடிகளை விசாரிக்கும் பொலிஸ் குழுக்களோ ஜனாதிபதி ஆணைக்குழுக்களோ உருவாகியிருக்காது' என்றும் கூறியுள்ளார் மகிந்த ராஜபக்ஷ.
24 ஜனவரி 2016
மகா காவியம் படைக்கப்போகிறாராம் வைரமுத்து!!!
![]() |
| கிளிநொச்சியில் வைரமுத்து |
22 ஜனவரி 2016
வாக்குறுதியிலிருந்து மைத்திரி பின்வாங்குகிறார்!
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிபிசிக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில் வெளிப்படுத்திய கருத்துக்கள் தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் என்ற தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பு பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான நீதி விசாரணையில் 'சர்வதேசத்தின் தலையீட்டை' அனுமதிக்கப் போவதில்லை என்று மைத்திரிபால சிறிசேன பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்த விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பையும் உள்ளடக்குவதாக ஜனாதிபதி சிறிசேன ஜெனீவாவில் ஏற்கனவே உறுதி அளித்திருந்ததாகவும் அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கும் விதத்தில் அவர் பிபிசியிடம் வெளியிட்ட கருத்து அமைந்துள்ளதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதி வேலைத்திட்டம் (ஐடிஜேபி) கூறியுள்ளது.'இலங்கையில் உள்ளூர் விசாரணை பொறிமுறைகள் நீண்டகாலமாக தோல்வியடைந்த வரலாறு உள்ள நிலையில், சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நீதி நடைமுறையில் நம்பிக்கை வைப்பதற்கு சர்வதேசத்தின் பங்களிப்பு அவசியம் என்றும் அந்த அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் யஸ்மின் ஸூக்கா தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்படும் இராணுவ வீரர்களின் பெயர் விபரங்களை ஐநா வெளியிடவில்லை என்று மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதையும் ஸூக்காவின் அறிக்கை விமர்சித்துள்ளது.
கடத்தல்களும் சித்திரவதைகளும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களும் புதிய ஆட்சியின் கீழும் தொடர்வதாக வெளியாகியிருந்த குற்றச்சாட்டுக்களையும் ஜனாதிபதி சிறிசேன பிபிசியிடம் மறுத்திருந்தார்.
அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் 'விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்களிடமிருந்து' வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.ஆனால், 2015ம் ஆண்டில் நடந்த அவ்வாறான 20 சம்பவங்களை தாங்கள் ஆவணப்படுத்தியுள்ளதாகவும் ஃபிரீடம் ஃப்ரம் டார்ச்சர் என்ற அமைப்பும் அவ்வாறான வேறு சில சம்பவங்களை பதிவுசெய்துள்ளதாகவும் ஐடிஜேபி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான சம்பவங்களை மறுத்துள்ள இலங்கை ஜனாதிபதியின் போக்கில் மாற்றம் வரும் என்று நம்புவதாகவும் யஸ்மின் ஸூக்கா கூறியுள்ளார்.
இதனிடையே, தனது ஆட்சியின் கீழ் கடத்தல்களும் சித்திரவதைகளும் நடக்கவில்லை என்ற மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களை ஃப்ரீடம் ஃப்ரம் டார்ச்சர் அமைப்பும் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.நன்றி:பிபிசி தமிழ்
14 ஜனவரி 2016
புலிகள் தடை செய்யப்பட்டமை தவறு-எரிக் சொல்கைம்
ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது தவறானதொரு முடிவு என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதானது தவறானதொரு முடிவானதாகும்.ஐரோப்பிய ஒன்றியத்தின் இவ்வாறான செயற்பாடானது புலிகளுக்கு கடும் கோபத்தினை ஏற்படுத்தியிருந்தது. இது சமாதானத்தினை ஏற்படுத்துவதற்கு தடையாக இருந்தது. சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிப்பதில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் முக்கிய பங்காற்றியிருந்தார். கதிர்காமரின் இந்த நடவடிக்கை தவறானது என்றே கருதுகின்றேன். விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் அரசியல் தலைவர்கள், இராஜதந்திரிகள் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால், அரசியல் தீர்வுத் திட்டமொன்றை எட்ட வழியமைக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.09 ஜனவரி 2016
ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையை வடக்கு முதல்வர் சந்தித்தார்!
07 ஜனவரி 2016
இலங்கை பெரும் அனர்த்தங்களை சந்திக்கும்!
இந்த ஆண்டில் எல் நினோ (El Nino) எனப்படும் காலநிலை தாக்கத்தினால் இலங்கையில் பெரும் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா எச்சரித்துள்ளது. புயல், வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற அனர்த்தங்களை இலங்கை இந்த வருடத்தில் எதிர்நோக்குமென நாசா குறிப்பிட்டுள்ளது.
எல் நினோ எனப்படும் இந்த காலநிலை மாற்றத்தால் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைவடைவதால் கடலின் வெப்பநிலையில் அதிகரி்ப்பு ஏற்படும் எனவும், இதனால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


















